ஈஸா (அலை) இறந்து விட்டார்களா?
ஈஸா (அலை) இறந்து விட்டார்களா?
முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியேதிரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்குஅல்லாஹ் கூலி வழங்குவான்.
(அல்குர்ஆன் 3:144)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக முஸ்லி-ம்களின் ஒரே தலைவராகவும், வழிகாட்டியாகவும்இருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் இறைவனின் தூதரே தவிர இறைவனல்ல என்பதை இவ்வசனம்வலியுறுத்துகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டால் வந்த வழியே திரும்பிச் சென்று விடக் கூடாது;இறைவனது தண்டனைக்கு அஞ்சியும், இறைவனது பரிசுகளை எதிர்பார்த்தும் தான் இம்மார்க்கத்தில்இருக்க வேண்டுமே தவிர, முஹம்மத் (ஸல்) அவர்களுக்காக இம்மார்க்கத்தில் இருக்கக் கூடாதுஎன்றும் இவ்வசனம் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றது.
இந்தக் கருத்தைத் தெரிவிப்பதற்காக இவ்வசனம் அருளப்பட்டாலும் இவ்வசனத்தைச் சிந்திக்கும் போதுஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளதாகச் சிலர் வாதிடுகின்றனர்;முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன் வந்த ஈஸா நபி உள்ளிட்ட அனைத்துத் தூதர்களும் மரணித்துவிட்டனர் என்பது இவர்களின் வாதம்.
ஏற்கனவே வந்த தூதர்கள் மரணித்ததை முன்னுதாரணமாகக் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும்மரணிப்பார்கள் என்பதை இறைவன் அறிவிப்பதால், இக்கருத்து மேலும் வலுவடைகின்றது எனவும்கூறுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது, பெரும்பாலான நபித் தோழர்கள் அவர்களின்மரணத்தை நம்ப மறுத்தனர். அப்போது அபூபக்கர் (ரலி-) அவர்கள் இவ்வசனத்தை எடுத்துச் சொல்லி-த்தான் நபித் தோழர்கûளைச் சரியான வழிக்குக் கொண்டு வந்தனர்.
இந்த வரலாறு புகாரி (1242, 3670, 4454) மற்றும் பல ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளது. இந்தஹதீஸ்களையும் தங்களின் வாதத்துக்கு வலு சேர்ப்பதற்கு இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
ஈஸா நபி மரணிக்காமல் இருந்திருந்தால் அபூபக்கர் (ர-லி) அவர்களின் வாதத்தை நபித் தோழர்கள்ஏற்றிருக்க மாட்டார்கள். ஈஸா நபி மரணிக்காமல் இருப்பது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும்ஏன் மரணிக்காமல் இருக்கக் கூடாது என்று நபித் தோழர்கள் எதிர்க் கேள்வி கேட்டிருப்பார்கள். இதுஅவர்களின் வாதம்.
திருக்குர்ஆனை அணுக வேண்டிய விதத்தில் அணுகாதவர்கள் தான் இந்த வாதத்தை எடுத்து வைக்கமுடியும். ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு வசனத்தில் கூறப்பட்டதை வைத்து உடனேயே ஒரு முடிவுக்குவருவது குர்ஆனை அணுகும் வழி முறையல்ல.
இது பற்றி வேறு வசனங்களில் கூடுதல் விளக்கம் உள்ளதா? அல்லது விதி விலக்குகள் உள்ளனவா?என்றெல்லாம் தேடிப் பார்க்க வேண்டும். பல இடங்களில் அது குறித்து கூறப்பட்ட அனைத்தையும்ஒருங்கிணைத்து ஒரு முடிவுக்கு வருவதே குர்ஆனை அணுகும் முறையாகும்.
திருக்குர்ஆனில் எத்தனையோ வசனங்களில் பொதுவாகக் கூறப்பட்டதற்கு வேறு இடங்களில் விதிவிலக்குகள் கூறப்பட்டுள்ளன. இது தான் குர்ஆனின் தனி நடையாகும்.
இந்த இடத்திலேயே "ஈஸா நபியைத் தவிர'' என்று கூறப்படவில்லையே என்று கேட்பது குர்ஆனின்நடையைப் புரிந்து கொள்ளாதவர்களின் கேள்வியாகும்.
"முஹம்மதுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர்'' என்ற வார்த்தைக்குள் ஈஸா நபி அடங்கினாலும்அவர்களுக்கு வேறு இடங்களில் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதைக் கவனிக்காததால் தான் இவ்வாறுவாதிடுகின்றனர்.
ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளமாக இருக்கிறார்.
(அல்குர்ஆன் 43:61)
ஈஸா நபி மரணிப்பதற்கு முன் அவரை வேதக்காரர்கள் நம்பிக்கை கொள்வார்கள்.
(அல்குர்ஆன் 4:159)
இவ்விரு வசனங்களும் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்று அறிவிக்கின்றன.
எனவே "அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டார்கள்'' என்பதையும் இவ்விரு வசனங்களையும்இணைத்து "ஈஸா நபி தவிர மற்ற தூதர்கள் இவருக்கு முன் மரணித்து விட்டார்கள்'' என்று தான் முடிவுசெய்ய வேண்டும்.
இவ்வாறு முடிவு செய்யும் போது, எந்த வசனத்தையும் நாம் மறுக்கவில்லை. எல்லா வசனங்களும்சேர்ந்து எந்தக் கருத்தைத் தருகிறதோ அந்தக் கருத்தைத் தான் நாம் கொள்கிறோம்.
இவ்விரு வசனங்கள் மட்டுமின்றி மற்றொரு வசனமும் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லைஎன்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
மர்யமின் மகன் மஸீஹ் (ஈஸா) தூதரைத் தவிர வேறு இல்லை. அவருக்கு முன்னர் தூதர்கள் சென்றுவிட்டனர். அவரது தாய் அதிக நம்பிக்கையுடையவராவார். அவ்விருவரும் உணவைஉட்கொண்டவர்களாக இருந்தனர். நாம் அத்தாட்சிகளை எவ்வாறு தெளிவுபடுத்துகிறோம் என்றுகவனிப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக!
(அல்குர்ஆன் 5:75)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து "அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்'' என்றுஅல்குர்ஆன் 3:144 வசனம் குறிப்பிடுவது போலவே இவ்வசனம் ஈஸா நபியைக் குறித்துப் பேசுகிறது.இவ்வசனத்தைக் கவனமாகப் பார்த்தால் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்பது பளிச்செனவிளங்கும்.
இவ்வசனம் அருளப்பட்ட காலத்தில் ஈஸா நபி மரணித்திருந்தார்கள் என்று ஒரு வாதத்துக்காகவைத்துக் கொள்வோம். அவரைக் கடவுளாக நம்புகின்ற மக்களுக்கு மறுப்புக் கூறும் போது எவ்வாறுகூற வேண்டும்?
"ஈஸா தூதர் தான்; அவரே மரணித்து விட்டார்'' என்று கூறினால் அது தான் சரியான பதிலாக இருக்கமுடியும்.
மரணித்தவரை எப்படிக் கடவுள் எனக் கருதலாம் என்ற கருத்து இதனுள் அடங்கியிருக்கும். ஈஸா நபிமரணித்திருந்தால் அதைச் சொல்ல வேண்டிய இடம் இது தான். ஈஸா நபியைக்கடவுளாக்கியவர்களுக்கு மறுப்புச் சொல்லும் இந்த இடத்தில் இறைவன் பயன்படுத்திய வார்த்தையைக்கவனித்தீர்களா?
"ஈஸா தூதர் தான். அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்'' என்று அல்லாஹ் கூறுகிறான்.அல்லாஹ் ஞானமிக்கவன், நுண்ணறிவாளன், அவன் பொருத்தமற்ற சொற்களைப் பயன்படுத்துவதைவிட்டும் தூய்மையானவன். ஈஸா நபி மரணித்திருந்தால் இந்த வாசக அமைப்பு இறைவன் தெளிவாகக்கூறுபவன் அல்லன் என்ற கருத்தைத் தந்து விடும்.
அவரே இறந்திருக்கும் போது அதைக் கூறாமல் அவருக்கு முன் சென்றவர்கள் இறந்து விட்டார்கள்என்று விவேகமுள்ளவர் யாரேனும் பேசுவதுண்டா?
அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர் எனக் கூறி விட்டு அவர் பூமியில் வாழும் போதுசாப்பிட்டுக் கொண்டிருந்ததைக் காரணமாகக் காட்டி அவரது கடவுள் தன்மையை அல்லாஹ்மறுக்கிறான். அவர் மரணித்திருந்தால் அதையே காரணமாகக் காட்டி அவரது கடவுள் தன்மையைஇறைவன் மறுத்திருப்பான்.
முஹம்மதுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர் என்ற வசனம் அருளப்படும் போது முஹம்மத் (ஸல்)அவர்கள் உயிரோடு இருந்தனர் என்று புரிந்து கொள்கிறோம்.
அது போல் ஈஸாவுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர் என்ற வசனம் இறங்கும் போதும் ஈஸா நபிஉயிருடன் இருந்தனர் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரே மாதிரியாக அமைந்த இரண்டு இடங்களில் வித்தியாசமாகப் பொருள் கொள்வது ஏற்புடையதன்று.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது நபித் தோழர்கள் நடந்து கொண்ட முறையை அவர்கள்சான்றாகக் காட்டுவதும் சரியல்ல.
ஈஸா நபி வருவார்கள் என்ற ஏராளமான ஹதீஸ்களை நபித் தோழர்கள் தான் அறிவிக்கின்றனர். நாம்முன்னர் சுட்டிக் காட்டிய 43:61, 4:159 இரு வசனங்களையும் நபித் தோழர்கள் அறிந்திருந்தனர். ஈஸாநபிக்கு விதிவிலக்கு இருந்ததைச் சந்தேகமற அவர்கள் அறிந்திருந்தனர்.
நபிகள் நாயகத்துக்கும் அது போல விதிவிலக்கு இருக்கும் என்று அவர்கள் எண்ணியதால் தான் "நபிகள்நாயகம் மரணிக்கவில்லை'' என்று வாதிட்டனர். நபிகள் நாயகத்துக்கு விதிவிலக்கு இல்லை என்பதுஅபூபக்கர் (ரலி) அவர்களின் வாதத்தின் மூலம் தெரிந்ததும் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டார்கள்.
அனைவருக்கும் சர்வ சாதாரணமாகத் தெரிந்த விதிவிலக்குகளை யாரும் சான்றாகக் காட்டிப் பேசமாட்டார்கள்.
எனவே, இவ்வசனம் ஈஸா நபி மரணித்ததைக் கூறவில்லை. இது போல அமைந்த 5:75 வசனம்அவர்கள் இது வரை மரணிக்கவில்லை என்ற விதிவிலக்கைக் கூறுகிறது என்பதே சரியாகும்.
(பார்க்க அல்குர்ஆன் 3:144, 5:75)
திருக்குர்ஆனின் 4:157, 158 ஆகிய இரு வசனங்களும் ஈஸா நபியவர்களை அல்லாஹ் தன்னளவில்உயர்த்திக் கொண்டான் என்று அறிவிக்கின்றது.
ஈஸா நபி சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்கள் என்று கூறப்படுவதை இவ்வசனங்கள்நிராகரிக்கின்றன. ஆள் மாறாட்டம் செய்யப்பட்டு வேறொருவரைத் தான் யூதர்கள் கொன்றனர்.
இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள "உயர்த்திக் கொண்டான்'' என்ற சொல் அந்தஸ்து உயர்வைத் தான்குறிக்கும் என்று சிலர் வாதிடுவர். இது தவறாகும். "அவரை உயர்த்திக் கொண்டான்'' என்று மட்டும்கூறப்பட்டால் அந்தஸ்து உயர்வு என்று பொருள் கொள்ள சிறிதளவாவது இடம் இருக்கும். ஆனால்"தன்னளவில்' என்பதையும் சேர்த்துக் கூறுவதால் அவ்வாறு பொருள் கொள்ள வழியில்லை.
"ரபஅ' என்ற சொல்லுக்கு "அந்தஸ்து உயர்வு' என்று பொருள் கொள்வதாக இருந்தால் அந்தஸ்து, பதவி,புகழ், தகுதி என்பன போன்ற சொற்கள் அச்சொல்லுடன் சேர்க்கப்பட வேண்டும்.
"உயர்ந்த தகுதிக்கு அவரை உயர்த்தினான்'' என்று இத்ரீஸ் நபி பற்றி அல்லாஹ் கூறுகிறான்
(அல்குர்ஆன் 19:57)
ஆனால் ஈஸா நபியைப் பற்றி இங்கே கூறும் போது அவரையே உயர்த்திக் கொண்டதாகக் கூறுகிறான்.இதற்கு நேரடிப் பொருள் தான் கொள்ள வேண்டும்.
தொழுகையில் கைகளை நாம் உயர்த்திக் கட்டுகிறோம். இதைக் குறிப்பிடுவதற்கும் "ரபஅ' என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. கைகளின் அந்தஸ்தை உயர்த்துவது என்பது இதன் பொருளில்லை.கைகளையே உயர்த்துதல் என்பது தான் பொருள்.
அடுத்த வசனமும், ஈஸா நபி மரணிக்கவில்லை என்பதற்கான வேறு பல சான்றுகளும் இந்தக் கருத்தைஉறுதிப்படுத்துகின்றன. ஈஸா நபி உடலுடன் உயர்த்தப்பட்டார் என்பது தான் சரியான பொருள்.
ஈஸா (அலை) கைப்பற்றப் படுதல்
"மர்யமின் மகன் ஈஸாவே! "அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக்கொள்ளுங்கள்!' என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?'' என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, "நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறுகூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறியமாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்'' என்று அவர் பதிலளிப்பார்.
"நீ எனக்குக் கட்டளையிட்ட படி "எனது இறைவனும், உங்கள் இறைவனு மாகிய அல்லாஹ்வைவணங்குங்கள்!' என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன்இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயேஅவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களை யும் கண்காணிப்பவன்.அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்;ஞானமிக்கவன்'' (எனவும் அவர் கூறுவார்)
(அல்குர்ஆன் 5:116-118)
இவ்வசனங்கள் மறுமையில் ஈஸா நபியை விசாரிப்பது பற்றியும், அதற்கு அவர் அளிக்கும் பதில்பற்றியும் கூறுகின்றன.
இவ்வசனத்தில் "என்னை நீ கைப்பற்றிய போது'' என்று மொழி பெயர்க்கப்பட்ட இடத்தில் தவஃப்பைத்தனீஎன்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு "என்னை மரணிக்கச் செய்த போது' என்றுபொருள் கொள்வதா? "என்னைக் கைப்பற்றிய போது' என்று பொருள் கொள்வதா? என்பதில் கருத்துவேறுபாடு உள்ளது.
"என்னை மரணிக்கச் செய்த போது' என்று சிலர் பொருள் கொண்டு ஈஸா நபி மரணித்து விட்டார்கள்என்பதற்கு இவ்வசனத்தைச் சான்றாகக் காட்டுவர். "என்னை மரணிக்கச் செய்த பின் அவர்களின்நடவடிக்கைக்கு நீயே பொறுப்பு' என்று ஈஸா நபியே கூறியுள்ளதிலிருந்து அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்பதை அறியலாம் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.
அவர்கள் கூறுவது என்ன என்பதை அறிந்து விட்டு இதன் சரியான விளக்கத்தைக் காண்போம்.
தவஃப்பா என்ற சொல் திருக்குர்ஆனில் 25 இடங்களில் இடம் பெற்றுள்ளது. அவற்றில் 23 இடங்களில்மரணிக்கச் செய்தல் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த வசனத்திலும்அவ்வாறே பொருள் கொள்ள வேண்டும் என்பது இவர்களின் வாதம்.
இவர்களின் இந்த வாதம் அறிவுடையோரால் நிராகரிக்கப்பட வேண்டிய வாதமாகும். இவர்களின்வாதத்திலேயே இவர்களின் வாதத்துக்கு மறுப்பும் அமைந்திருக்கிறது.
இவர்களின் வாதப்படி 23 இடங்களில் மரணிக்கச் செய்தல் என்று பொருள் கொள்ளப்பட்டிருந்தும்இரண்டு இடங்களில் கைப்பற்றுதல் என பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவர்களின் வாதம் சரி என்றுவைத்துக் கொண்டால் 23 இடங்களில் செய்த பொருளையே மீதி இரண்டு இடங்களுக்கும் செய்திருக்கவேண்டும்.
எனவே, அந்தந்த இடங்களில் எந்தப் பொருள் சரியானது என்பது தான் கவனிக்கப்பட வேண்டுமே தவிர,பெரும்பான்மை அடிப்படையில் எல்லா இடங்களுக்கும் ஒரே அர்த்தம் செய்வது ஏற்கத்தக்கது அல்ல.
இது குறித்து நாம் விரிவாகவே ஆராய்வோம். தவஃப்பா என்ற சொல்-லின் நேரடிப் பொருள்மரணிக்கச் செய்தல் அல்ல; "முழுமையாக எடுத்துக் கொள்ளுதல்' என்பதே அதன் நேரடிப் பொருளாகும்.
மரணத்தின் மூலம் மனிதன் முழுமையாக எடுத்துக் கொள்ளப்படுவதால் மரணிக்கச் செய்வதைஇச்சொல் மூலம் குறிப்பிடுவது வழக்கத்துக்கு வந்தது.
திருக்குர்ஆனில் 2:234, 2:240, 3:55, 3:193, 4:97, 6:61, 7:37, 7:126, 8:50, 10:46, 10:104, 12:101, 13:40, 16:28, 16:32, 16:70, 22:05, 32:11, 40:67, 40:77, 47:27 ஆகிய இடங்களில் மரணிக்கச் செய்தல் என்றபொருளில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அவன் தான் உங்களை இரவில் கைப்பற்றுகிறான்
(அல்குர்ஆன் 6:60)
இவ்வசனத்தில் அதே சொல் இடம் பெற்றாலும் மரணிக்கச் செய்தல் என்று இங்கே பொருள் இல்லை.தூக்கத்தில் ஒருவரைக் கைப்பற்றுதல் என்பதே இதன் பொருளாகவுள்ளது.
அவர்களை மரணம் கைப்பற்றும் வரை வீட்டில் தடுத்து வையுங்கள்
(அல்குர்ஆன் 4:15)
மரணம், மரணிக்கச் செய்யும் வரை என்று இவ்வசனத்திற்குப் பொருள் கொள்ள முடியாது.
உயிர்கள், மரணிக்கும் போதும் மரணிக்காதவைகளை அவற்றின் உறக்கத்தின் போதும் அல்லாஹ்கைப்பற்றுகிறான்
(அல்குர்ஆன் 39:42)
கைப்பற்றுகிறான் என்று தான் அதே சொல்லுக்கு இந்த இடத்தில் பொருள் கொள்கிறோம். மரணிக்கச்செய்தல் என்று பொருள் கொள்வதில்லை.
இவை தவிர மறுமையில் முழுமையாகக் கூ-லி தரப்படும் என்பதைக் கூறும் 2:281, 3:161, 3:185, 16:111 ஆகிய வசனங்களிலும் இதே சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாகக் கூலி-தரப்படும் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். மறுமையில் சாகடிக்கப்படுவார்கள் என்று பொருள்கொள்ள முடியாது.
மரணிக்கச் செய்தல், கைப்பற்றுதல், முழுமையாக வழங்குதல் ஆகிய பொருள் இச்சொல்லுக்கு உண்டு.எந்தெந்த இடத்துக்கு எது பொருத்தமானதோ அதை அந்த இடத்தில் செய்ய வேண்டும்.
தொழுகையைக் குறிக்கும் "ஸலாத்' என்ற சொல்லும் அதி-லிருந்து பிறந்த சொற்களும் 109 இடங்களில்பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 102 இடங்களில் தொழுகையைக் குறிப்பதற்கும் 7 இடங்களில்அகராதியில் உள்ள அர்த்தத்துக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படி ஏராளமான சொற்களைக்காணலாம்.
இப்போது விவாதத்துக்கு எடுத்துக் கொண்ட வசனத்தில் இடம் பெற்ற தவஃப்பா என்ற சொல்லுக்குஎவ்வாறு பொருள் கொள்வது?
என்னை மரணிக்கச் செய்த போது என்று இந்த இடத்தில் நாம் பொருள் கொண்டால் "ஈஸா நபி கியாமத்நாளின் அடையாளமாக உள்ளார்'' (அல்குர்ஆன் 43:61) என்ற வசனத்துடனும், "ஈஸா நபிமரணிப்பதற்கு முன் வேதமுடையோர் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்'' (அல்குர்ஆன் 4:159) என்ற வசனத்துடனும் மோதுகின்றது. கைப்பற்றுதல் என்று பொருள் கொண்டால்அவ்விரு வசனங்களுடன் ஒத்துப் போகின்றது.
மரணிக்கச் செய்தல் என்பது எவ்வாறு தவஃப்பாவின் கருத்தாக இருக்கிறதோ அது போலவேகைப்பற்றுதல் என்பதும் அச்சொல்லுக்குரிய நேரடிப் பொருள் தான். அச்சொல்லுக்குரிய இரண்டுஅர்த்தங்களில் எந்த அர்த்தம் ஏனைய வசனங்களுடன் முரண்படாத வகையில் ஒத்துப் போகிறதோஅதைக் கொள்வது தான் சரியானதாகும்.
மேலும், ஈஸா நபி கூறிய வாசக அமைப்பும் இக்கருத்துக்கு வலு சேர்க்கின்றது. "நான் உயிருடன்இருந்த வரை அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்; என்னை நீ கைப்பற்றிய போது நீயேஅவர்களுக்குப் பொறுப்பாளன்'' என்று ஈஸா நபி கூற மாட்டார்கள்.
"நான் அவர்களுடன் இருந்த போது பார்த்துக் கொண்டிருந்தேன்; என்னை நீ கைப்பற்றிய போது நீயேஅவர்களுக்குப் பொறுப்பாளன்'' என்று தான் ஈஸா நபி கூறுவார்கள்.
"நான் உயிருடன் இருந்த போது' எனக் கூறாமல் "நான் அவர்களுடன் இருந்த போது' என்று ஈஸா நபிகூறுவார்கள். இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் சிந்திக்க வேண்டும்.
"நான் உயிருடன் இருந்த போது' என்று கூறி விட்டு "ஃபலம்மா தவஃப்பைதனீ' என்று அவர்கள்கூறினால், அந்த இடத்தில் "என்னை மரணிக்கச் செய்த போது' என்று தான் பொருள் கொள்ள முடியும்.அல்லாஹ் அந்த வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு "நான் அவர்களுடன் இருந்த போது' என்றமுற்றிலும் வித்தியாசமான வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளான்.
அதாவது ஈஸா நபியவர்கள் அவர்களுடன் இருந்து கண்காணிக்கும் நிலையையும் அடைவார்கள்;உயிருடன் இருந்தும் அவர்களுடன் இல்லாமல் இருக்கும் நிலையையும் அடைவார்கள் என்பது தான்இதன் கலிருத்தாகும்.
"தவஃப்பா' என்ற சொல்லுக்கு "என்னைக் கைப்பற்றிய போது' என்று பொருள் கொள்ள வேண்டும்என்பதை இவ்வாசக அமைப்பும் உணர்த்துகின்றது.
அந்த மக்களுடன் ஈஸா (அலை) இவ்வுலகில் வாழ்ந்த போது அம்மக்களைக் கண்காணித்தார்கள்.அம்மக்களை விட்டும் உயர்த்தப்பட்ட பின் கண்காணிக்க மாட்டார்கள் என்ற கருத்து, முன்னர் நாம்சுட்டிக் காட்டிய வசனங்களுடன் அழகாகப் பொருந்திப் போகின்றன.
ஏகத்துவம் மாத இதழ்
Comments
ஏகத்துவம் பதில் கூறட்டும்
ஏகத்துவம் சொல்ல மறந்த உண்மைகள்.