உழைத்து வாழ வேண்டும்.


உழைத்து வாழ வேண்டும்.

இந்த உலகில் நாம் வாழ்கின்ற காலத்தில் கண்டிப்பாக உழைத்து வாழ வேண்டுமே தவிர எந்த ஒரு நேரத்திலும் பிறர் உழைப்பில் வாழ்வதற்கு எத்தனித்துவிடக் கூடாது.இது தான் இஸ்லாம் மனித சமூகத்திற்கு எடுத்துக் கூறும் மிகப் பெரிய கவுரவ வாழ்க்கையாகும்.
ஏன் என்றால் அல்லாஹ் தனது மார்கத்தை இந்த உலகில் நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக பலரை தனது தூதர்களாக அனுப்பினான்.அந்த அனைவரையும் நாம் நபிமார்கள் என்று சொல்கிறோம்.இந்த நபிமார்கள் அனைவருமே இந்த உலகில் வாழ்கின்ற காலத்தில் தங்கள் கரத்தால் உழைத்து தாமும் தமது குடும்பத்தினரும் உயிர் வாழ்ந்துள்ளார்கள்.இவர்களில் ஒருவர் கூட தான் நபி என்ற அந்தஸ்தை மக்களிடம் முன்வைத்து தனக்கு வாழ்வாதார உதவிகள் செய்யும் படி கேட்கவில்லை.கேட்கவும் கூடாது.
ஆனால் இன்றைக்கு நமக்கு மத்தியில் இருக்கக் கூடிய எத்தனையோ பேர்கள் தங்கள் கரத்தால் உழைத்து உண்பதற்கு முடியுமாக இருந்தும் உழைத்து சாப்பிடாமல் அடுத்தவர்களிடம் கையேந்திக் கேட்கிறார்கள்.
இது அவர்களின் மானம்,மரியாதையை இழக்கக் கூடிய செயல் என்பது அவர்களுக்குத் தெரிந்தாலும்.அதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை.
இஸ்லாமிய மார்க்கம் இப்படி உழைத்து வாழாமல் பிறர் உழைப்பில் வாழுபவர்களைப் பற்றி என்ன கூறுகிறது என்பதை விரிவாக ஆராய்வோம்.

கூலி வாங்காத பிரச்சாரகர்கள்.
நபிமார்களைப் பற்றி திருமறைக் குர் ஆனிலே அல்லாஹ் கூறுகின்ற வசனங்களைப் பாருங்கள்.
உங்களிடம் கூலி கேட்காத நேர்வழி பெற்றோரை பின்பற்றுங்கள்.(36:21)
எந்த ஒரு நபிமார்களும் பிரச்சாரம்  தங்கள் வாழ்கையின் தேவையை நிவர்த்தி செய்து கொள்வதற்காக யாரிடமும் கையேந்தாமல் தாமாக உழைத்துத்தான் உண்டார்கள்.
உழைத்து உண்ட தோழர்கள்.
நபியவர்களின் தோழர்கள் அனைவரும் உழைத்து உண்டார்களே தவிர யாரிடமும் கையேந்தவில்லை.ஆனால் இன்று நமக்கு மத்தியில் பிரச்சாரம் செய்பவர்களாக இருந்தாலும் சாதாரணமானவர்களாக இருந்தாலும் பெரும்பாலானவர்கள் அடுத்வர்களை நம்பித்தான் திருமணமே முடித்துக் கொள்கிறார்கள்.
தமது உடம்பில் ஒரு சொட்டு வியர்வை வடிவதை கூட விரும்பமாட்டார்கள்.அது போல் அடுத்தவர்களிடம் கையேந்துவதற்கும் வெட்கப் பட மாட்டார்கள்.
அதிலும் கவலைக்குறிய விஷயம் ஆலிம்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளக் கூடியவர்களும் இதில் அடங்குகிறார்கள்.
ஒரு காலத்தில் ஐம்பது,நூறு என்று மவ்லிது ஓதியவர்கள் இருந்தார்கள் தற்காலத்தில் அது இரண்டாயிரத்துக்கு ஒரு பத்வா மூவாயிரத்துக்கு ஒரு பத்வா என்று மாறியிருப்பதை காண முடிகிறது.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். ஒருவர் தமது கையால் உழைத்து உண்பதை விட சிறந்த உணவை ஒரு போதும் உண்ண முடியாது.தாவுத் நபி அவர்கள் தமது கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தார்கள்.(புகாரி : 2072)
ஒருவர் உண்னும் உணவில் சிறந்த உணவு தமது கரத்தால் தாம் உழைத்து உண்பது தான் அடுத்தவர்களிடம் கையேந்தி உண்பதல்ல
நபியவர்களின் பாசறையில் வளர்ந்த தோழர்களைப் பற்றி அன்னை ஆயிஷா(ரலி)அவர்கள் கூறினார்கள்.
நபித்தோழர்கள் உழைத்து உண்பவர்களாக இருந்தனர்.இதனால் அவர்களிடம்(வியர்வை)வாடை வீசும்.இதன் காரணமாகவே நீங்கள் குழிக்கக் கூடாதா என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.(புகாரி :2071)
இன்னொரு சந்தர்பத்தில் கையேந்தி அடுத்தவர்களிடம் கேட்பவர்களைப் பற்றி நபியவர்கள் இப்படிக் கூறினார்கள்.
பிறரிடம் யாசகம் கேற்பதை விட ஒருவர் தமது முதுகில் விறகுக் கட்டைகளை சுமந்து(விற்கச்)செல்வது சிறந்ததாகும்.(ஏனெனில்) அவர் யாசிக்கும் போது யாரும் கொடுக்கவும் செய்யலாம்,மறுக்கவும் செய்யலாம்.(புகாரி : 2074,2075)
எந்த ஒரு மனிதனும் எக்காரணம் கொண்டும் தமது கவுரவத்தை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது.அவனுடைய மானத்தை அவன் சிறப்பாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதன் காரணத்தினால் தான் அடுத்தவர்களிடம் கையேந்துவதை விட விறகு விற்றாவது பிழைத்துக் கொள்வது சிறந்தது என்று நபியவர்கள் கூறுகின்றார்கள்.
ஆடு மேய்த்த ஆன்மீகத் தலைவர்.
இந்த உலகுக்கு அருட் கொடையாக அனுப்பப் பட்ட நபி(ஸல்)அவர்கள் தமது இளமைக் காலத்தில் ஆடு மேய்த்து அதில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் தமது வாழ்வைக் கழித்துள்ளார்கள்.
அபூஹ_ரைரா(ரலி)அவர்கள் கூறியதாவது.அல்லாஹ் அனுப்பிய எந்தத் தூதரானாலும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை.என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.அப்போது தோழர்கள் (நபியவர்களே)நீங்களுமாஎன்று கேட்டார்கள்.அதற்கு நபியவர்கள் மக்காவாசிகளின் சில கீராத்துகளுக்காக நான் மேய்ப்பவனாக இருந்தேன் எனக்கூறினார்கள்.(புகாரி : 2262)
அடுத்தவர்களிடம் ஆட்சியைச் சொல்லியோ அல்லது ஆன்மீகத்தை சொல்லியோ ஒரு முறை கூட நபியவர்கள் கையேந்தியலில்லை.
மாறாக மிகவும் கவுரவமாக ஆடு மேய்த்து உழைத்து உண்டுள்ளார்கள் என்பது மேற்கண்ட செய்தியில் இருந்து தெளிவாக தெரிகிறது.
ஆக அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! ஆலிம்களே!
எந்தக் காரணத்திற்காகவும் யாரிடமும் கையேந்த மாட்டேன் என்று உருதி எடுத்து நமது கரத்தால் உழைத்து உண்டு வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெருவோமாக.
rasmin misc

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை