தூக்கத்தில் ஏற்படும் கனவுகள். – ஓர் அறிவியல் ஆய்வு.


தூக்கத்தில் ஏற்படும் கனவுகள். – ஓர் அறிவியல் ஆய்வு.


கனவுகள் மூன்று வகைப்படும். நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்செய்தியாகும். மற்றொரு கனவு ஷைத்தான் புறத்திலிருந்து கவலைவை ஏற்படுத்துகின்ற கனவாகும். மூன்றாவது தன் உள்ளத்திலிருந்து மனிதன் காண்கின்ற கனவாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி)    நூல்: முஸ்லிம் 4200
மேலுள்ள நபிமொழியிலிருந்து இந்த உலகில் பிறந்து வாழ்ந்து மடிந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற, வாழப்போகின்ற அனைவருக்கும் கனவு எனும் உணர்வு பொதுவானது. தூக்கத்தின்போது கனவு ஏற்படாத மனிதன் யாருமே இல்லை என்று உறுதியாகக் கூறும் அளவிற்கு கனவு எல்லா மனித வாழ்க்கையிலும் ஒரு பொதுவான அம்சமாக விளங்குகின்றது. 
விஞ்ஞானம் கனவுகள் பற்றி என்ன சொல்கின்றது?
மனோதத்துவயியலின் படி கனவின் வரைவிலக்கனமானது தூக்கத்தின் போது மனித மூளையில் ஏற்படும் ஒரு இரசாயன மாற்றமாகும். பௌதீக மனோதத்துவவியலில் பதிவு செய்யப்படும்; மூளையின் மின் அலைகள் (EEG)இ கண் அசைவுகள் (EEG), தசைகளின் இயக்கம் (EEG) ஆகியவற்றின் ஆதாரத்துடன் தூக்கத்தின் நிலைகள் நான்காகப் பாகுபடுத்தப்பட்டுள்ளது.

தூக்கத்தின் நிலைகள்.
தூக்கம் பற்றிய ஆய்வுலகில் மொத்தம் நான்கு நிலைகள் உள்ளன. 
1.விழிப்பு நிலை (wakefulness)
2.அதிவேக விழி அசைவுகளில்லாத தூக்க நிலை{non- REM(rapid eye movement)}
3.அதிவேக விழி அசைவு தூக்க நிலை (REM slee) - இது பெரும்பாலும் கனவுகளுடன் தொடர்புடைய நிலை.
4.ஆழ்ந்த தூக்க நிலை (deep sleep)
1.விழிப்பு நிலை (wakefulness)
இரண்டாவது நிலையை அடைவதற்கு சில நிமிடங்களிற்கு முன்னுள்ள நிலை. இந்த நிலையை விஞ்ஞான அறிவியலில் உலக இயல்பை மீறிய மாய சக்தியுள்ள நிலை என்று வர்ணிக்கின்றனர். அதிகளவான அல்லது குறைந்த தூக்கத்தை தூண்டக்கூடிய பிரதிமையாகவுள்ள ‘hypnogogic imagery’ எனும் தூக்க நிலையாகும்.
2.அதிவேக விழி அசைவுகளில்லாத தூக்க நிலை {non- REM (rapid eye movement)}
ஆழ்ந்த தூக்கத்திற்கு இட்டுச் செல்லும் நிலை. இந்த நிலையிலே இலேசான தூக்கத்திலுள்ளவர்களுக்கு கனவுகள் வருவதற்குரிய சாத்தியங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் குறைவான கண் அசைவும் (EOG)இ தசை இயக்கங்கள் குறைவாகவும் (EMG)இ மூளையின் மின் அலைகள் {non- REM(rapid eye movement)}
3.அதிவேக விழி அசைவு தூக்க நிலை (REM sleep)
இந்நிலையில் மூளையின் மின் அலைகள் 1-2Hz “delta” அலைகளாக மாறும். நான்காவது நிலையான ஆழ்ந்த உறக்க நிலை இதிலிருந்து ஆரம்பமாகும். விழி அசைவுகளற்றதாகவும், குறைந்த தசை இயக்கங்களும் காணப்படும். தூங்குபவர் திடீரென எழுந்தால் அவர் கனவு கண்டுகொண்டிருப்பாரேயானால் கனவு இந்நிலையில் ரத்து செய்யப்படும்.
4.ஆழ்ந்த தூக்க நிலை (deep sleep)
ஆழ்ந்த உறக்கம் நிலவும் நிலை. இந்நிலைகளைத் தாண்டி கிட்டத்தட்ட 90 நிமிடங்களுக்குப் பின் இந்நிலைகள் பின்னோக்கியதாக நடைபெறும். அதாவது கடைசியிலிருந்து முதல் நிலை வரை. இந்த வகையில் முதல் நிலையில் தசை இயக்கம் குறைவாகவும், விழி அசைவற்றதாகவும் இருக்கும். deep sleep என்ற விஞ்ஞானியின் கருத்துப்படி இந்த நிலை கனவு தெரிபடுவதற்கான உச்ச கட்ட நேரமாகும். இந்த நிலை 5-15 நிமிடங்கள் நீடிப்பதோடு அதி வேக விழி அசைவு தூக்க நிலை ஒரு மணித்தியால அளவிற்கு கூடுவதற்கு ஏதுவாக அமையும். அதி வேக விழி அசைவு தூக்க நிலையின் கால எல்லை கூடுதலாகவும், குறைவாகவும் அமையலாம். காலை நேரங்களிலே இந்த நிலையில் கூடுதலாக கனவுகள் தென்படும்.   
இஸ்லாம் கனவுகள் பற்றி என்ன சொல்கின்றது?
வஹீயின் மூலமோதிரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்ஞானமிக்கவன்.  (அல்குர்ஆன் 42:51)
இறைவனுடைய தூதர்களான நபிமார்களுக்கு நான்கு வழிகளில் இறைச் செய்திகள் கிடைத்தன. 
1.நேரடியாக இறைவன் தனது தூதர்களிடம் பேசுதல்.
2.வானவரை அனுப்பி அவர் வழியாக தனது செய்திகளைக் கூறி அனுப்புதல்.
3.தான் சொல்ல நினைக்கும் செய்தியைத் தனது தூதரின் உள்ளத்தில் உதிக்கச் செய்தல்.
4.கூற வேண்டிய செய்திகளைக் கனவின் வழியாகக் காட்டுதல்.
இந்த நான்கு வழிகளில் முதலிரண்டு வழிகள் இறைத்தூதர்களுக்கு மட்டும் உரியது. மூன்றாவது வகையான உள்ளுணர்வை ஏற்படுத்துதல் அவ்வப்போது இறைத் தூதர்கள் அல்லாத மனிதர்களிடமும் ஏற்படலாம்.
மூஸா நபியின் தாயாருக்கு இத்தகைய வஹீயை அனுப்பியதாக 20:38 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
அறிவிக்கப்பட வேண்டியதை உமது தாயாருக்கு நாம் அறிவித்ததை எண்ணிப் பார்ப்பீராக! (அல்குர்ஆன் 20:38)
தான் அறிவித்த செய்தியைப் பற்றி இவ்வசனங்களில் குறிப்பிடும் போது வஹீ என்ற சொல்லையே இறைவன் பயன்படுத்தியுள்ளான். இத்தகைய முன்னறிவுப்புக்களில் மார்க்கம் தொடர்பான முன்னறிவிப்புக்கள் நபிமார்களுக்கு மட்டும் உரியது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கடைசி நபியாக இருந்த காரணத்தினால், நபியவர்களின் மறைவிற்குப் பின் மார்க்கம் தொடர்பான முன்னறிவிப்புக்களின் வருகையும் நிறுத்தப்பட்டு விட்டது. மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்ற வசனமே இதற்குப் போதிய ஆதாரமாகும்.
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை நான் முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக நான் பொருந்திக் கொண்டேன்’  (அல்குர்ஆன் 5:3) 
எனவே, கனவின் மூலமோ, உள்ளுணர்வை ஏற்படுத்துவதன் மூலமோ அல்லாஹ் தான் நாடியதை (மார்க்கம் தவிர்ந்த) மனிதர்களுக்கு அறிவிப்பான்.
நபித்துவமும்தூதுத்துவமும் முற்றுப் பெற்று விட்டன. எனவே எனக்குப் பின் எந்த நபியும் இல்லை. எந்த ரஸ_லும் (தூதரும்) இல்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். இது மக்களுக்குக் கவலையளிப்பதாக இருந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனினும் நற்செய்தி கூறுபவை உள்ளன’ என்றார்கள். நற்செய்தி கூறுபவை என்றால் என்னஎன்று நபித்தோழர்கள் கேட்டபோது முஸ்லிம் காணும் கனவாகும். இது நபித்துவத்தின் ஒரு பகுதியாகும்’ என்று விடையளித்தனர். 
அறிவிப்பவர்: அனஸ்(ரலி)    நூல்: அஹ்மத் 13322
எனவே, இந்த நபி மொழியில் இருந்து கனவின் மூலமாகவும் மனிதர்களுக்கு அல்லாஹ் நற்செய்தி கூறுவான் என்பது புலனாகின்றது. அத்தோடு மனிதனுக்குத் தென்படும் கெட்ட கனவு பற்றியும் நபியவர்கள் தெளிவுபடுத்தவும் தவறவில்லை.
நல்ல கனவு அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படுவதாகும். கேட்ட கனவு ஷைத்தானிடமிருந்து ஏற்படுவதாகும். தனக்கு அச்சத்தை ஏற்படுத்தும் கெட்ட கனவை ஒருவர் கண்டால் தனது இடது புறத்தில் துப்பி விட்டு அதன் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். இவ்வாறு செய்தால் அதனால் அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)   நூல்: புகாரி 3292
கனவுகள் பற்றிய விஞ்ஞானஇஸ்லாமிய கருத்துக்களை ஒப்பிடுதல்.
இஸ்லாத்தைப் பொருத்த வரை தூக்கமும் ஒரு வித மரணமேயாகும். அதாவது அல்லாஹ் நாம் தூங்கும்போது நம் உயிரைக் கைப்பற்றுகிறான்.
உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும்மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.  (அல்குர்ஆன் 39:42)
அவனே இரவில் உங்களைக் கைப்பற்றுகிறான். பகலில் நீங்கள் செய்வதை அறிகிறான். நிர்ணயிக்கப்பட்ட தவணை நிறைவு செய்யப்படுவதற்காக பகலில் உங்களை எழுப்புகிறான். உங்கள் மீளுதல் அவனிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன் 6:60)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தூங்கும் போதும், தூங்க முன்னரும், தூங்கி எழுந்ததும் ஓதுவதற்குக் காட்டித் தந்த துஆக்கள் பின்வருமாறு:
தூங்கும் போது,
இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன் (தூங்குகிறேன்), உன் பெயரால் உயிர் பெறுகிறேன் (விழிக்கிறேன்). (புஹாரி 7395, முஸ்லிம் 4886)
தூங்கும் முன்,
இறைவா! நீயே என் ஆத்மாவைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றுகிறாய். அதன் மரணமும், வாழ்வும் உனக்குரியது. நீ அதை உயிர் வாழச் செய்தால் அதனைக் காத்தருள். அதை நீ மரணிக்கச் செய்தால் அதை மன்னித்து விடு! இறiவா! உன்னிடம் மன்னிப்பை வேண்டுகிறேன்.  (முஸ்லிம் 4887)
படுக்கையை உதறி விட்டு,
என் இறைவனே! உன் பெயரால் எனது உடலைச் சாய்க்கிறேன் (படுக்கிறேன்). உன் பெயரால் தான் அதை உயர்த்துகிறேன் (எழுகிறேன்). என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு அருள் புரிவாயாக! கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக! (புஹாரி 5845)
தூங்கி எழுந்ததும்,
எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.  (புஹாரி 6312, 6314, 6324, 6325, 7395)
மேலுள்ள ஹதீஸ்களின் படி நாம் தூங்கும் போது இறைவன் நம் உயிரைக் கைப்பற்றி தூக்கத்திலிருந்து எழும்போது நம் உயிரை மீள அளிக்கிறான். விஞ்ஞானமும் இதை ஊர்ஜிதம் செய்கின்றது. அதாவது தூக்கத்தை வர்ணிக்கும் விஞ்ஞான அறிவியல் தூக்கத்தின் போது மனித மூளையில் இரசாயன மாற்றம் ஏற்படுவதாகவும், தூக்கமானது உலக இயல்பை மீறிய நிலை எனவும் கூறுகின்றது. 
எனவேஇந்த இடத்திலும் விஞ்ஞானம் இஸ்லாத்தை உறுதிப்படுத்துகின்றது. 
ஆக்கம் : பாத்திமா ஷஹானா.
rasmin misc.com

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை