அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் அறிவுரைகள்


அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் அறிவுரைகள்

ஹிஜ்ரி 470 ஆண்டு பிறந்த அப்துல் காதிர் ஜீலானி என்ற அறிஞரின் பெயரால் இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரான செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவர்களை இறைவன் அளவுக்கு உயர்த்தியும் அவர்களிடம் எதையும் கேட்கலாம் என்றும் அவர்கள் தம் தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என்றும் பல ஆதாரமற்ற கதைகளை முஸ்லிம்களுக்கு மத்தியில் உலாவரச் செய்துள்ளனர். ஆனால் அந்த அறிஞர்கள் இவர்களின் இந்த செயலுக்கு முற்றிலும் மாற்றமாக, ஓரிறைக் கொள்கை போதித்தவராகவும் திருக்குர்ஆனையும் நபிவழியை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியவராகவும் அவர்களின் நூல்களிலேயே தெளிவாக நாம் காணமுடிகிறது. அவர்களின் உண்மையாக கொள்கை விளங்கிக் கொள்ள அவர்களின் நூல்களிலிருந்து தொகுத்து தருகிறோம்.
இறைவனல்லாதவர்களிடம் நம்பிக்கை வைக்காதே!

இறைவன் அல்லாத மற்றவர்கள் மேல் நீ நம்பிக்கை வைத்தால் நீ இணை வைத்து விட்டாய்
இறைவனிடமே முறையிடு


படைத்தவனை விடுத்து படைக்கப்பட்டவர்களிடம் நீ முறையிடாதே! அல்லாஹ் தான் (அனைத்திற்கும்) சக்தி பெற்றவன். மற்றவர்களுக்கோ எந்தச் சக்தியுமில்லை' (நூல் : அல்பத்ஹுர்ரப்பானீ)
அல்லாஹ் அல்லாதவர்களிடம் அழைப்பவன் நயவஞ்கன் 


"என் சொல்லைக் கேளுங்கள்! நான் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பவன். அவனுக்கு வழிப்பட்டு நடப்பதற்கும், அவனது வாசலுக்கும் தான் உங்களை நான் அழைக்கிறேன். என் பக்கம் உங்களை நான் அழைக்கவில்லை. மக்களை அல்லாஹ்வின் பால் அழைக்காமல் தன் பக்கம் அழைப்பவன் முனாபிக் (எனும் வேஷதாரி) ஆவான்'' (நூல் : அல்பத்ஹுர்ரப்பானீ)
அல்லாஹ்வைத் தவிர உதவியாளன் யாரும் இல்லை

அவன் மூலமே எல்லாக் கவலைகளும் சோதனைகளும் விலகும்

வல்லமையும் கண்ணியமுமிக்க அல்லாஹ்வின் அச்சத்தை விட்டுவிடாதே! அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் நீ அஞ்சாதே! அல்லாஹ்வைத் தவிர எவரிடமிருந்தும் எதையும் எதிர்பாராதே! எல்லாத் தேவைகளையும் அல்லாஹ்விடமே ஒப்படைத்துவிடு! அவன் மீது மட்டுமே நம்பிக்கை வை! அவனிடமிருந்தே எல்லாத் தேவைகளையும் கேட்டுப் பெறு! அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் பற்றிப் பிடிக்காதே! தவ்ஹீத்! தவ்ஹீத்! (நூல் : அல்பத்ஹுர்ரப்பானீ)
விதியை மீறி யாரும் எதையும் தரமுடியாது


விதிப்பலகையில் இறைவனால் எழுதப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட விதியிலிருந்து தப்பிக்க எந்த வழியும் இல்லை. இறைவன் விதிக்காத ஒன்றை ஒரு மனிதனுக்கு வழங்க படைப்பினங்கள் அனைத்தும் முயன்றாலும் அதற்கு அவை சக்தி பெற்றிருக்கவில்லை. இறைவன் விதிக்காத ஒரு தீமையை ஒரு மனிதனுக்கு ஏற்படுத்தி விட படைப்பினங்கள் அனைத்தும் முயன்றாலும் அதற்கு அவை சக்தி பெறாது.(நூல் : குன்யத்துத் தாலிபீன்)


இறைவன் (மனிதர்களின்) உணவைப் பங்கிட்டு நிர்ணயித்து விட்டான்; அதைத் தடுப்பவன் எவனும் இல்லை. கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டது குறையப் போவதுமில்லை, குறைவாக நிர்ணயிக்கப்பட்டது கூடப் போவதுமில்லை. கஷ்டம் என நிர்ணயிக்கப்பட்டது சுகமளிப்பதாக மாறப் போவதில்லை. இன்பம் என நிர்ணயிக்கப்பட்டது துன்பமாக மாறப் பொவதுமில்லை. (நூல் : குன்யத்துத் தாலிபீன்)
நாளை நடப்பதை அறிவேன் என்று கூறுபவன் வழிகெட்டவன்


ஒரு பெரியார் நடந்ததையும், நடக்கவிருப்பதையும் அறிவார் என்ற கொள்கையும் வழிகெட்ட 72 கூட்டத்தினரின் கொள்கைகளில் ஒன்றாகும். (நூல் : குன்யத்துத் தாலிபீன்)
அல்லாஹ்வுக்கு நிகரான வார்த்தைகளை மனிதர்களுக்கு பயன்படுத்தக்கூடாது


அல்லாஹ்வின் திருப்பெயர்களுக்கு நிகரான பெயர்கள் சூட்டுவதும், பட்டப்பெயர்கள் சூட்டுவதும் கூடாத ஒன்றாகும். (நூல் : குன்யத்துத் தாலிபீன்)
வழிகெட்ட கொள்கை


இறந்தவர்கள் இந்த உலகத்துக்கு திரும்பி வருவார்கள் என்ற கொள்கை வழிகெட்ட ராபிஜியாக் கூட்டத்தாரின் கொள்கையாகும். (நூல் : குன்யத்துத் தாலிபீன்)
மத்ஹப் வழியை விட்டுவிடு, நபிவழியை மட்டுமே பின்பற்று


திருக்குர்ஆனின் அடிப்படையில் செயல்படுவது "அல்லாஹ்வின் அருகாமையில் உன்னை நிறுத்தும்! நபிவழியின் பிரகாரம் செயல்படுவது, நபியின் அருகே உன்னை நிறுத்தும்!

குர்ஆனை மனனம் செய்கிறாய்! அதன்படி செயல்பட மாட்டேன் என்கிறாய்! நபியின் சுன்னத்தை மனனம் செய்கிறாய்! அதன்படி செயல்படுகிறாய் இல்லை! ஏன் இவ்வாறு செய்கிறாய்? (நூல் : அல்பத்ஹுர்ரப்பானீ)

ஏழையே! பயனற்ற பேச்சுக்களை விட்டுவிடு! மேலும் மத்ஹபு வெறியையும் விட்டு விடு! (நூல் : அல்பத்ஹுர்ரப்பானீ)

குர்ஆனையும், நபிவழியையும் உனக்கு முன்னால் வைத்துக் கொள்! அதன்படி செயல்படு. அவர் சொன்னார்; அதில் சொல்லப்பட்டுள்ளது என்பது போன்ற கூற்றில் நீ மிரண்டு ஏமாந்துவிடாதே! (நூல் : குன்யத்துத் தாலிபீன்)

தீன்குல பெண்மனி மாத இதழ்
பி.ஜைனுல் ஆபிதீன்

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை