ஆர்ப்பாட்டத்திற்கு தடை , ஃபிரான்ஸ் நாட்டு அரசின் அராஜகம்!


நபிகள் நாயகத்தின் கார்ட்டூன்: வெளியிட்ட பத்திரிக்கை மீது பாரீஸ் நீதிமன்றத்தில் வழக்கு!

ஃபிரன்ச் பத்திரிக்கையின் ஆசிரியன்
நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி படம் எடுக்கப்பட்டதை தொடர்ந்து உலகமும் முழுவதும் எதிர்ப்புகள் போராட்டங்கள் மூலம் வெடித்து கொண்டிருக்கையில் முஸ்லிம்களை மேலும் கொதிப்படைச் செய்யும் விதமாக எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றும் வகையில் பிரான்ஸ் நாட்டு பத்திரிக்கை நபிகள் நாயகத்தின் நிர்வாண கார்ட்டூனை கடந்த புதன் கிழமை தனது பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளது.
இதற்கான போராட்டங்கள் ஆங்காங்கே வெடித்து கொண்டிருக்கும் நிலையில் இந்த பத்திரிக்கையின் மீது கிரிமினல் வழக்கு பாரிஸ் நீதிமன்றத்தில் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அந்த பத்திரிக்கையின் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஃபிரான்ஸ் நாட்டு பிரதமர் Jean-Marc Ayrault கூறுகையில் , நாட்டின் கருத்துரிமை சட்டம் இது போன்ற கார்ட்டூன்களை அனுமதிக்கின்றது, இது யாருக்கேனும் பாதிப்பை ஏற்படுத்தினால் அவர்கள் இந்த பத்திரிக்கையின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம்.

பேசுவதற்கு சுதந்திரம் அளிக்கப்பட்ட நாட்டில் நாம் இருக்கின்றோம் , எப்படி கார்ட்டூனுக்கு அனுமதி இருக்கின்றதோ அதே போன்று அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டம் உள்ளது. இது சட்டத்தை மதிக்கும் நாடு. அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடரலாம்.
எனத் தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகளில் அதிக முஸ்லிம் மக்கள் தொகையை கொண்டது ஃபிரான்ஸ் நாடாகும்.
ஃபிரான்ஸ் நாட்டு பிரதமரின் பேச்சு கார்ட்டூனை ஊக்குவிக்கும் விதமாகவே உள்ளது. இந்த கார்ட்டூன் வெளியிட்ட பத்திரிக்கைக்கு பிரான்ஸ் நாட்டு அரசு கடும் பாதுகாப்பு அளித்து வருகின்றது. மேலும் பத்திரிக்கை அலுவலகத்தை நோக்கி சென்ற சிலரை ஃபிரான்ஸ் நாட்டு போலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.
கார்ட்டூனுக்கு அனுமதி , ஆர்ப்பாட்டத்திற்கு தடை , ஃபிரான்ஸ் நாட்டு அரசின் அராஜகம்!


ஃபிரான்ஸ் நாட்டின் உள்துறை மந்திரி
நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தும் விதமாக ஃபிரான்ஸ் நாட்டு பத்திரிக்கை ஒன்று கடந்த புதன் கிழமை அன்று முஹம்மது என குறிப்பிட்டு நிர்வாண கேலிசித்திரம் ஒன்றை வெளியிட்டது. இது ஃபிரான்ஸ் நாட்டில் முஸ்லிம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதை கண்டித்து போராட்டம் நடத்த ஃபிரான்ஸ் நாட்டு அரசு முஸ்லிம்களுக்கு தடை விதித்துள்ளது.
பேச்சு சுதந்திரம் , கருத்து சுதந்திரம் , நபிகள் நாகத்தின் கார்ட்டூனை தடை செய்ய முடியாது அதற்கு அனுமதி உள்ளது என சவடால் விட்ட ஃபிரான்ஸ் நாட்டு பிரதமர் இதை எதிர்த்து முஸ்லிம்கள் கருத்து தெரிவிக்க தடை விதித்துள்ளார். என்ன கொடுமை இது? ஆபாசத்தை அவிழ்த்து விட்டு நபிகள் நாயகத்தை அவமதிப்பதற்கு அனுமதி, அதை கண்டிப்பதற்கு தடை ? அமெரிக்காவை மிஞ்சும் அளவிற்கு ஃபிரான்ஸ் நாட்டு அரசு கடும் முஸ்லிம்கள் வீரோத போக்கை கடைபிடிக்கின்றது.
ஃபிரான்ஸ் நாட்டின் உள்துறை மந்திரி Manuel Valls இன்று கூறுகையில் , நபிகள் நாயக்தின் நிர்வாண கார்ட்டூனை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு திட்வட்டமாக தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் தெரிவித்துள்ளார்.
அப்படி எனில் முஸ்லிம்களுக்கு ஃபிரான்ஸ் நாட்டில் பேச்சு சுதந்திரம் கருத்து சுதந்திரம் கிடையாதா ? இவகைள் எல்லாம் ஒரு சாராருக்கு மட்டும் தானா ?

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை