தொடரட்டும் நம்முடைய இஸ்லாமிய அழைப்பு பணி...

தொடரட்டும் நம்முடைய இஸ்லாமிய அழைப்பு பணி...

நபிகள் நாயகம் ஸல் அவர்களை தம் உயிரினும் மேலாக நினைப்பதில் எந்த முஸ்லிமுக்கும் இரண்டாம் கருத்து கிடையாது. இறைவன் மாபெரும் அதிசயத்தை தற்பொழுது நிகழ்த்திக் கொண்டிருக்கின்றான் என்றே கூறலாம் .

காரணம் பெரும்பாலான முஸ்லிம்கள் நபிகள் நாயகத்தை மறந்து வாழ்ந்து வரும் இச் சூழலில் தற்பொழுது முழு உலகமே இன்று நபிகள் நாயகத்தை பற்றி பேச வைக்கும் நிலையை ஏற்படுத்திவிட்டான் வல்ல ரஹ்மான்.

இது மக்காவின் பதின்மூன்று வருடமும் அல்ல...மதினாவின் பத்து வருடமும் அல்ல... அன்னாலாரின் மறைவுக்கு பின் வாழ்ந்து காட்டிய முதல் சமுதயாமும் அல்ல... எல்லா வற்றையும் உள் வாங்கி, நொடியில் முழு உலகையும் நபிகளாரின் தூதுத்துவ செய்தியான ஓர் இறைகொள்கையை சொல்ல, செயல் படுத்த இலகுவான யுகம் இது.... நீங்கள் தயாராகிவிட்டீர்களா சகோதரர்களே ? 

அண்ணலாரின் அறிவுப் பணியை கொண்டு செல்ல ! போராட்டம் என்ற பெயரால் பிறருக்கு சங்கடம் கொடுப்பதை அண்ணல் நபிகளார் அறவே விரும்ப மாட்டார்கள். உணர்ச்சி மயமான வன்முறையின்றி அமைதியான போராட்டம் ஒருபுறம் இருப்பினும் நம்முடைய பணி அதுமட்டுமல்ல நபிகளாரைப் பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் பிற சமுதாய மக்களிடம் எடுத்து கூறி அவர்களையும் சத்தியத்தின் பக்கம் கொண்டுவர முயற்சிப்பதே உண்மையான முஸ்லிம்களுடைய கடமை.

பார்க்கும் இடத்தில எல்லாம் நபிகளாரைப் பற்றி பேசுவோம், நபிகளாரின் வாழ்கை வரலாறு, நபிகளார் போதித்த கடவுள் கொள்கை போன்ற குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதர அடிப்படையில் உள்ள புத்தகத்தை பல ஆயிரகணக்கான பிரதிகள் எடுத்து இலவசமாக பல முஸ்லிம் அல்லாதவர்களிடம் நாம் ஏன் கொடுக்ககூடாது ??? இதுபோன்று நம்முடைய பணிகளை செய்ய இதுவே நல்ல தருணம்.

அது மட்டுமல்லது "அந்த படத்தை" எடுத்தவர்கள், நடித்தவர்கள், இன்றோ நாளையோ கலிமா சொல்ல மாட்டார்கள் என்று நினைக்க வேண்டாம் அல்லாஹ் நாடினால் அவர்களும் இஸ்லாத்தில் நுழைவார்கள். அவர்களையும் கலிமா சொல்ல வைக்க நாம் ஏன் முயற்சிக்க கூடாது ? தொடரட்டும் நம்முடைய இஸ்லாமிய அழைப்பு பணி...

Comments

Popular posts from this blog

பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை

பைபிளில் 50000 பிழைகள் – கிறிஸ்தவ இதழின் வாக்குமூலம்:

இந்து மதமும் பெண்களும்