உங்களை நான் திட்டியதற்கு என்ன பரிகாரம்


உங்களை நான் திட்டியதற்கு என்ன பரிகாரம்
நான் ஆரம்ப காலத்தில் உங்களை மிகவும் தவறாகப் பேசியுள்ளேன்தகாத வார்த்தைகளால்திட்டியுள்ளேன்கடுமையாக விமர்சித்துள்ளேன்நான் அல்லாஹ்வின் கிருபையால் தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்து விட்டேன்தற்போது நான் என்ன செய்ய வேண்டும்நீங்கள் என்னைமன்னிப்பதற்கும்குற்றம் பிடிக்காமல் இருப்பதற்கும்உங்களுடைய ஜனாஸா தொழுகையில் நான்கலந்து கொள்ளலாமாஅல்லது காயிப் ஜனாஸா தொழலாமா?

அப்பாஸ் ஷாஜி,
பிரச்சாரக் களத்தில் இது சர்வசாதாரணமான நிகழ்வு தான்நபிகள் நாயகம் (ஸல்அவர்களின்தோழர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் நபிகள் நாயகத்தைத் திட்டியவர்கள் தான்.அவர்களுக்குப் பல விதங்களில் இடையூறு செய்தவர்கள் தான்அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதேஅவர்களின் அனைத்து கொடுமைகளுக்கும் பரிகாரமாக ஆனது.
நபிகள் நாயகத்தைத் திட்டியதற்காக ஒவ்வொருவரும் வந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கவில்லை அது போல் தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களை நீங்கள் எவ்வளவு தரக்குறைவாகஏசி இருந்தாலும் நீங்கள் தவ்ஹீத் கொள்கையை ஏற்றவுடன் அனைத்தும் மன்னிக்கப்படும்.இக்கொள்கையை ஏற்றதால நாங்கள் மன்னித்து விடுவதால் அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். இன்ஷா அல்லாஹ்.
உங்களுக்கும், எங்களுக்கும் சொந்தப் பகை இருந்து அதற்காக எங்களுக்கு அநீதிஇழைத்திருந்தால்தான் எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்கொள்கையில் நீங்கள் உறுதியாகஇருக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்யாருடைய ஜனாஸாவிலும் கலந்து கொள்வதற்குஅனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லையாரும் ஜனாஸா தொழுகை நடத்தாமல் ஒருவர்அடக்கம் செய்யப்பட்டால் அல்லது நபிவழிப்படி ஜனாஸா தொழுகை நடக்காமல் இருந்தால் தான்காயிப் ஜனாஸா தொழுகை நடத்தலாம்.
onlinepj

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை