உன்னதப்பாட்டா? மன்மதப்பாட்டா???


உன்னதப்பாட்டு

பைபிளின் பழைய ஏற்பாட்டில் சாலொமோனின் உன்னதப்பாட்டு என்ற ஒரு ஆகமம் உள்ளது. அந்த உன்னத பாட்டில் போதிக்கப்படும் உன்னத (?) போதனைகள் :

என் நேசரின் இடதுகை என் தலையின் கீழுள்ளது. அவரது வலது கை என்னை அணைத்துக்கொள்கிறது. (2:6)

என் அன்பே! நீ அழகானவள். …ஓ நீ அழகானவள். உன் முக்காட்டின் நடுவே உனது கண்கள் புறாக்களின் கண்களைப் போன்றுள்ளன . உன் நீண்ட கூந்தல் கீலேயாத் மலைச்சரிவில் நடன மாடிக்கொண்டிருக்கும் வெள்ளாட்டு மந்தை போல அசைந்து கொண்டிருக்கிறது.(4:1)

உன் பற்கள் வெள்ளைப் பெண் ஆட்டுக் குட்டிகள் குளித்து கரையேறுவது போன்றுள்ளன . அவை இரட்டைக் குட்டிகள் போட்டு எந்தக் குட்டியையும் இழக்காத ஆட்டினைப்போன்றுள்ளன. (4 2)

உனது உதடுகள் சிவந்த பட்டுக் கயிற்றைப் போன்றுள்ளன. உனது வாய் அழகானது. உனது கன்னங்கள் முக்காட்டின் நடுவே வெட்டி வைக்கப்பட்ட மாதுளம் பழம்போல் உள்ளன.(4:3)

உன் கழுத்து நீண்டு மென்மையாக தாவீதின் கோபுரம்போல் உள்ளது.
அக்கோபுரத்தின் சுவர்கள் ஆயிரம் வீரர்களின் கேடயங்களால்
அலங்கரிக்கப்பட்டுள்ள து.(4:4)

உன் இரண்டு மார்பகங்களும் லீலி மலர்களை மேயும் வெளிமானின் இரட்டைக் குட்டிகளைப் போலுள்ளன. (4 :5)

நான் என் ஆடையைக் கழற்றிப்போட்டேன். நான் அதனை மீண்டும் அணிந்துக்கொள்ள விரும்பவில்லை.(5:3)

உன் பற்கள் வெள்ளைப் பெண் ஆட்டுக் குட்டிகள் குளித்து கரையேறுவது போலுள்ளன. அவை இரட்டைக் குட்டிகள் போட்டு, எந்தக் குட்டியையும் இழக்காத ஆட்டினைப் போலுள்ளது.(6:6)

உனது கன்னங்கள் முக்காட்டின் நடுவே வெட்டிவைக்கப்பட்ட மாதளம் பழங்களைப் போன்றுள்ளன.(6:7)

அறுபது ராணிகள் இருக்கலாம் எண்பது மறுமனையாட்டிகள் இருக்கலாம். எண்ண முடியாத அளவிற்கு இளம் பெண்கள் இருக்கலாம்.(6:8)

இளவரசியே! மிதியடியணிந்த உன் பாதங்கள் மிக அழகாயுள்ளன. உன் இடுப்பின் வளைவுகள் ஒரு தொழில் கலைஞனால் செய்யப்பட்ட நகை போன்றுள்ளது.(7:1)

உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டமான கிண்ணம்போல உள்ளது. உன் வயிறானது லீலிமலர்கள் சூழ்ந்த கோதுமைக்குவியல் போன்றுள்ளது.(7:2)

உன் இரு மார்பகங்களும் வெளிமானின் இரு குட்டிகள் போன்றுள்ளன.(7:3)

உன் கழுத்து தந்தக் கோபுரம் போலுள்ளது. உன் கண்கள் பத்ரபீம் வாயிலருகே உள்ள எஸ்போன் குளங்கள்போல உள்ளன.(7:4)

நீ மிகவும் அழகானவள். நீ மனதிற்கு மகிழ்ச்சியைத் தருபவள். நீ அன்பான, மகிழ்வளிக்கிற இளம் கன்னி.(7:6)

நீ பனை மரத்தைப்போன்று உயரமானவள். உன் மார்பகங்கள் அம்மரத்தில் உள்ள கனிகளைப் போன்றுள்ளன.(7:7)

நான் இம்மரத்தில் ஏறவிரும்புகிறேன். இதன் கிளைகளைப் பற்றிக்கொள்வேன். இப்போது உன் மார்பகங்கள் திராட்சைக் குலைகளைப் போலவும்,(7:8)

எங்களுக்கு ஒரு சிறிய சகோதரி இருக்கிறாள் அவளது மார்பகங்கள் இன்னும் வளரவில்லை. ஒருவன் அவளை மணக்க வரும்போது எங்கள் சகோதரிக்காக நாங்கள் என்ன செய்வோம்? (8:8)

அவள் ஒரு மதில் சுவராக இருந்தால் நாங்கள் அதைச்சுற்றி வெள்ளிக் கோட்டையைக் கட்டுவோம். அவள் ஒரு கதவாக இருந்தால் அவளைச் சுற்றி கேதுருமரப் பலகைகளை இணைப்போம். அவள் சகோதரர்களுக்குப் பதில்
கூறுகிறாள்.(8:9)

நான் ஒரு சுவர். எனது மார்பகங்களே என்னுடைய கோபுரங்கள். அவர் என்னில் திருப்தி அடைகிறார்.(8:10)

இவைகளெல்லாம் இறைவேதமாகக் கருதப்படும் பைபிளின் வசனங்கள். இவைகளெல்லாம் இறை வசனங்களாம். இதைப் படிப்பவர்கள் இதிலிருந்து என்ன படிப்பினை பெற முடியும்? நண்பர்களே சிந்தியுங்கள்…

பைபிளின் ஆபாசம் சம்பந்தமான முந்தைய பதிவுகளைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

nantri - bible solvathenna

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை