ஜெர்மன் ஜனநாயகம் என்றால் என்ன?



ஜெர்மன் ஜனநாயகம் என்றால் என்ன?

ஜெர்மன் ஜனநாயகம் என்றால் என்ன
விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் தான் நமது இலக்கு என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறுவதாக ஒரு நண்பர் கூறினார். ஆனால் அவரால் அதை விளக்கிச் சொல்ல முடியவில்லை. அதை விளக்க முடியுமா
?
பதில்
நமது இந்தியாவில் உள்ள தேர்தல் அமைப்பு பிரிட்டன் நாட்டில் உள்ள தேர்தல் முறையாகும். பிரிட்டன் ஜனநாயக முறை என்ற இந்தth தேர்தல் முறை ஒரு சூதாட்டம் போன்றதாகும்.பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஆட்சி அமைவதற்காகத் தான் ஜனநாயகம் தேவைப்படுகிறது. ஆனால் பிரிட்டன் ஜனநாயகத்தில் சிறுபான்மை மக்களின் விருப்பத்திற்கேற்ப பல நேரங்களில் ஆட்சி அமைந்து விடுவதுண்டு.
உதாரணமாக ஒரு தொகுதியில் ஆயிரம் வாக்காளர்கள் இருப்பதாகவும் இந்தத் தொகுதியில் ஐந்து பேர் போட்டி இடுகிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.
ஏ என்பவர் 210 வாக்குகள் வாங்குகிறார்.
பி என்பவர் 200 வாக்குகள் வாங்குகிறார்.
சி என்பவர் 200 வாக்குகள் வாங்குகிறார்.
டி என்பவர் 200 வாக்குகள் வாங்குகிறார்.
இ என்பவர் 190 வாக்குகள் வாங்குகிறார்.
ஆயிரம் ஒட்டுக்கள் மேற்கண்டவாறு பிரிந்தால் ஏ என்பவர் வெற்றி பெற்றவர் என்று நம்முடைய நாட்டில் உள்ள பிரிட்டன் ஜனநாயகத் தேர்தல் கூறுகிறது. ஆனால் இவர் ஆயிரம் ஓட்டுக்களில் 790பேரின் அதிருப்தியைப் பெற்றுள்ளார். 210 பேரின் ஆதரவை மட்டுமே பெற்றுள்ளார். இவர் பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின்படி தேர்வு செய்யப்படவில்லை. இந்த அடிப்படையில் இது போலி ஜனநாயகமாகவும் மறைமுக சூதாட்டமாகவும் ஆகி விடும். இரண்டு பேர் போட்டியிடும் போது தவிர மற்ற சந்தர்ப்பங்களில் இது போல் நடப்பதை நாம் காணலாம்.
மேலும் இந்தத் தேர்தல் முறை அனைத்து மக்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இல்லாமல் போய் விடுகிறது.
ஒரு மாநிலத்தில் 100 தொகுதிகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரம் வாக்காளர் என்றும் வைத்துக் கொள்வோம்.
ஒவ்வொரு தொகுதியிலும் 
ஏ கட்சி 
501 ஓட்டுக்களும் 
பி கட்சி 
499 ஓட்டுக்களும்
பெறுவதாக வைத்துக் கொள்வோம்.

இப்போது நூறு தொகுதிகளிலும் ஏ கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. பி கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றும் அறிவிக்கப்படுகிறது. இது நம்முடைய பிரிட்டன் ஜனநாயக முறை. அதாவது ஏ கட்சிக்கு 
100 எம் எல் ஏக்கள் கிடைக்கபி கட்சிக்கு ஒரு எம் எல் ஏ கூட இல்லை.
ஆனால் இரண்டு கட்சிகளும் வாங்கிய ஓட்டுக்களில் தொகுதிக்கு இரு ஓட்டு வீதம் இருநூறு வாக்குகள் தான் வித்தியாசம். 
ஏ கட்சி 
நூறு தொகுதிகளில் வாங்கிய ஓட்டுக்கள் 50100
பி கட்சி நூறு தொகுதிகளில் வாங்கிய ஓட்டுக்கள் 49900. 

ஆனாலும் பி கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. பி. கட்சிக்கு வாக்களித்த மக்களின் கருத்தைப் பிரதிபலிக்க சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லை. எனவே தான் இது போலி ஜனநாயகம் என்று கருதப்படுகிறது.
ஒவ்வொரு தொகுதியிலும் சிறுபான்மையாக உள்ள மக்களுக்கு ஒரே ஒரு பிரதிநிதித்துவம் கூட கிடைப்பதில்லை. கிடைக்க வேண்டுமானால் பெரிய கட்சிக்கு அடிமைச் சீட்டு எழுதிக் கொடுத்து ஜால்ரா போட்டால் தான் ஒன்றிரண்டு இடங்களில் வெற்றி பெற முடியும். அதுவும் மார்க்கத்தையும் மானத்தையும் விட்டு விட்டு சமுதாயத்தை மறந்து விட்டு ஜால்ராபோட்டால் தான் இது சாத்தியமாகும்.
இதை விட ஜெர்மன் நாட்டில் உள்ள ஜனநாயகம் பலவகைகளில் சிறந்து விளங்கும் ஜனநாயகமாகும். எல்லா மக்களுக்கும் உரிய பிரதி நிதித்துவம் தானாகவே கிடைத்து விடும். இந்த முறை தான் விகிதாச்சார பிரதிநிதித்துவம் எனப்படுகிறது.
அதாவது உதாரணத்துக்கு அதே நூறு தொகுதியை எடுத்துக் கொள்வோம். விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல்படி எப்படி பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
இந்தத் தேர்தலில் ஆட்கள் போட்டியிட மாட்டார்கள். சங்கம் கட்சி ஆகியவை தான் போட்டியிடும்.

ஒவ்வொரு ஆயிரம் ஓட்டுக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்று நிரணயிக்கப்படும். 

நூறு தொகுதியிலும் ஏ கட்சி மேலே நாம் சொன்ன அதே எண்ணிக்கையில் 
50100 வாக்குகள் வாங்கினால் ஆயிரத்துக்கு ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் அவர்கள் ஐம்பது உறுப்பினர்களை நியமித்துக் கொள்ளலாம். 

அது போல் 
49900 வாக்குகள் பெற்ற பி அணி 49 சட்டமன்ற உறுப்பினரை நியமிக்கலாம். 

இருவருக்கும் இடையில் ஓட்டு எண்ணிக்கையில் சிறிய வித்தியாசம் தான் உள்ளது. எனவே அதற்கேற்ப ஒரே ஒரு உறுப்பினர் தான் இரண்டு கட்சிக்கும் வித்தியாசம் இருக்கும். அனைத்து மக்களின் ஓட்டும் மதிப்பு மிக்கதாக ஆகின்றது. அனைவருக்கும் அவரவர் பலத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கிடைத்து விடுகிறது.
சிறுபான்மை சமுதாயத்துக்கும் சிறிய கட்சிகளுக்கும் யாருடனும் கூட்டணி சேராமல் அவர்களுக்கு உரிய பங்கு கிடைத்து விடுகிறது.
மேலே சொன்ன அதே நூறு தொகுதிகளை எடுத்துக் கொள்வோம். அந்த நூறு தொகுதிகளிலும் முஸ்லிம்கள் தலா 100 பேர் இருக்கிறார்கள். நமது நாட்டில் உள்ள பிரிட்டன் ஜனநாயக தேர்தல் பிரகாரம் நாம் நூறு தொகுதியிலும் போட்டியிட்டால் தொகுதிக்கு நூறு ஓட்டு கிடைக்கும்ஆனால் எல்லா தொகுதிகளிலும் நாம் தோற்றவர்களாக ஆவோம்.ஒரு தொகுதியில் கூட நாம் ஜெயிக்க முடியாதுமுஸ்லிம்களின் அத்தனை ஓட்டுக்களும் வீணாகி விடுகின்றன. எனவே தான் கொள்கையற்ற கூட்டணி வைத்து கேவலப்படும் நிலை ஏற்படுகிறது.
ஆனால் ஜெர்மன் ஜனநாயகம் எனப்படும் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் படி தொகுதிக்கு 100என்ற கணக்குப் படி முஸ்லிம் கட்சி பத்தாயிரம் ஓட்டு வாங்கும். ஆயிரம் ஓட்டுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற கணக்குப்படி முஸ்லிம்களுக்கு பத்து உறுப்பினர் கிடைப்பார்கள். யாருடனும் சந்தர்ப்பவாத கூட்டணி இல்லாமலே நமக்கு உரிய பங்கு இதன் மூலம் கிடைத்து விடும்,.
அது போல் திமுக அதிமுக அல்லாத சிறிய கட்சிகள் இந்த ஜெர்மன் ஜனநாயக முறையில் யாருடனும் கூட்டணி இல்லாமல் தேர்தலைச் சந்தித்தால் அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகள் எதுவும் வீண் போகாமல் வாங்கிய வாக்குகளுக்கு ஏற்ப சட்டமன்றத்துக்குள் நுழைவார்கள்.
இந்த முறையில் தேர்தல் சீர்திருத்தம் செய்தால் தான் நமக்கு அரசியல் அதிகாரம் பெற முடியும். அப்போது தவ்ஹீத் ஜமாஅத் கூட தேர்தலில் போட்டியிடலாம். ஏனெனில் எவருடனும் கூட்டணி வேண்டாம். கூழைக் கும்பிடு வேண்டாம். இஸ்லாமிய வரம்பை மீற வேண்டாம்ஆனாலும் நமக்கு உரிய பங்கு கிடைத்து விடும்,.
முஸ்லிம் சமுதாயத்தில் அதிகக் கட்சிகள் இருந்தால் கூட நமது பங்குக்கு பங்கம் வராது. மேற்கண்ட பத்தாயிரம் வாக்குகளை இரண்டு முஸ்லிம் கட்சிகள் தலா ஐந்தாயிரம் என பிரித்துக் கொண்டால் ஒவ்வொரு கட்சிக்கும் ஐந்து உறுப்பினர்கள் கிடைப்பார்கள். அவ்வளவு தான் வித்தியாசம். நாடு முழுவதும் ஆயிரம் ஓட்டு கூட வாங்காத கட்சிக்குத் தான் பங்கு இருக்காது. அத்தகைய லட்டர் பேடு கட்சிகள் ஒழிவது நல்லது தான். ஓரளவாவது மக்கள் ஆதரவு உள்ளவர்கள் மட்டுமே களத்தில் இருப்பார்கள்.
ஆனால் அந்த நிலையை அடைவதற்கு தேர்தல் முறையை மாற்றம் செய்ய வேண்டும் இதை எல்லா கட்சிகளுக்கும் புரிய வைக்க வேண்டும்எனவேக்ஷ்தான் அதுவரை தலித் மக்களுக்கு இருப்பது போல் தனித்தகுதி முறை தேவை என்கிறோம். 
இது குறித்து சென்ற இதழில் நாம் எழுதியதை நினவு கூறுகிறோம்.
நாம் அரசியல் இட ஒதுக்கீடு கேட்பதன் பொருளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தலித் மக்களுக்கு இருப்பது போன்ற தலித் ரிசர்வ் தொகுதி போல் முஸ்லிம் ரிசர்வ் தொகுதி முறை வேண்டும். அப்படி அமைந்து விட்டால் முஸ்லிம் ரிசர்வ் தொகுதியில் எந்தக் கட்சியும் முஸ்லிமைத்தான் நிறுத்த முடியும். முஸ்லிமல்லாதவர் அந்த தொகுதிகளில் போட்டியிட முடியாது. இப்படி முஸ்லிம் ரிசர்வ் தொகுதி இருந்தால் எல்லா கட்சிகளும் அந்த தொகுதியில் முஸ்லிமை நிறுத்துவதால் முஸ்லிமை தவிர யாரும் வெற்றி பெற முடியாது. இதன்மூலம் நாம் அதிக எண்ணிக்கையில் சட்டசபைக்கும் பாராளுமன்றத்துக்கும் செல்ல முடியும்.  இது தான் நாம் கேட்கும் அரசியல் இட ஒதுக்கீடாகும். பெரிய கட்சிகளின் கால்களைக் கழுவி குடிக்கும் கேடு கெட்ட அரசியல் அதிகாரத்தை நாம் கேட்கவில்லை.
தனித்தொகுதி என்பது சமுதாய இயக்கங்களுக்கும் நன்மை இல்லை. சமுதாயத்துக்கும் நன்மை இல்லை. கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் முஸ்லிம்கள் தான் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் சமுதாயத்துக்கு குரல் கொடுக்காமல் அந்தக் கட்சியின் சார்பில் தான் குரல் கொடுப்பார்கள்.. ஆனால் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் வந்து விட்டால் சமுதாயத்திற்காகக் குரல் கொடுப்பவர்கள் சொந்தப் பலத்தில் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
தனித்தொகுதி முறையை த்தான் நாம் இப்போது கோருகிறோம். ஆனாலும் நமது இலக்கு விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் தான் என்பதில் சந்தேகம் இல்லை. தனித் தொகுதி முறையை விட விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் தான் உண்மையான அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத் தருவதாகும் என்பதிலும் நம்க்கு சந்தேகம் இல்லை.
உணர்வு 16:06

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை