காந்தி மட்டும்தான் சுதந்திரத்திற்குப் போராடினாரா?


காந்தி மட்டும்தான் சுதந்திரத்திற்குப் போராடினாரா? 


காந்தி சுதந்திரத்திற்காகப் போராடினார். அவரை விட அதிகமாக மற்ற தலைவர்களும் போராடினார்கள். சுதந்திர இந்தியாவில் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதுதான் காந்தியை மட்டும் முதன்மைப்படுத்த காரணம்.

 ஒரு மனிதன் அநியாயமாகக் கொல்லப்பட்டால் கொல்லப்பட்டவன் அநியாயக்காரனாக இருந்தாலும் அவன் மீது அளவு கடந்த அனுதாபம் ஏற்படும். அவன் செய்த தவறுகள் மறக்கப்படும். அவனது கொலை மாபெரும் தியாகமாகக் கருதப்படும். அதிகமான மக்களிடம் இந்த பலவீனம் காணப்படுகிறது.

  ஒரு தலைவர் கொல்லப்பட்டவுடன் அந்தத் தலைவரின் வாரிசுகள் அமோக வெற்றி பெறுவதற்கு இதுவே காரணம். பண்டார நாயக்க கொல்லப்பட்ட அனுதாபத்தில் ஸ்ரீ மாவோ பண்டார நாயக்கா, புட்டோ தூக்கிலிடப்பட்ட அனுதாபத்தில் அவரது மகள் பெனாசீர் புட்டோ, பெனாசீர் புட்டோ கொல்லப்பட்ட அனுதாபத்தில் அவரது கணவர் சர்தாரி, இந்திரா காந்தி கொல்லப்பட்ட அனுதாப அலையில் ராஜீவ் காந்தியின் சரித்திரம் காணாத வெற்றி எனப் பல உதாரணங்கள் வரலாறு நெடுகிலும் உள்ளன.

  கிறித்தவ மதத்தின் பரவலுக்கும் இயேசு இரத்தம் சிந்தும் பரிதாபமான காட்சியே மையமாக உள்ளது (அவர் கொல்லப்படவில்லை என்பது தனி விஷயம்). மனிதனின் இந்தப் பலவீனம் காரணமாகவே காந்தி கொல்லப்பட்டபின் அவரை அளவு கடந்து துதிபாடும் போக்கு உண்டானது. கொல்லப்பட்டவரை எல்லை கடந்து புகழ்வதுதான் அவரது தியாகத்துக்கு நாம் அளிக்கும் மரியாதை என்ற மனப்பான்மையால் அரசுகள் பாடப்புத்தகங்கள் மூலமும், சரித்திர நூல்கள் மூலமும் அதிகமான பில்டப் கொடுத்து இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாறையே தலை கீழாக மாற்றி விட்டார்கள். அனைத்து தியாகிகளின் வரலாறும் மக்கள் மனங்களில் இருந்து அகற்றப்பட்டு விட்டன.

 காந்தி இன்னும் ஒரு பத்து வருடங்கள் வாழ்ந்திருந்தால் அவரது பெயர் சரித்திர ஏடுகளில் சராசரி அரசியல்வாதிகளில் ஒருவர் என்ற அளவில் நின்று போயிருக்கும்.

இந்தியாவின் சுதந்திரத்துக்குக் காரணம் காந்தியின் அறப்போராட்டம் மட்டுமே என்று சித்தரிப்பது நாட்டின் விடுதலைக்குப் போரிட்டவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்.

 உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்வது, ஜனநாயக நாடுகளில் தான் வெற்றி பெறும். அரசுக்கு எதிராக ஏற்படுத்தப்படும் இது போன்ற செயல்கள் மக்களின் வாக்குகள் கிடைக்கத் தடையாக அமைந்து விடும். ஆனால் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வராமல் படைபலத்தால் ஆட்சியைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் உண்ணாவிரதத்துக்குப் பயந்து நாட்டை விட்டே ஓடி விட்டார்கள் என்று வாதிடுவதில் உண்மையும் இல்லை. அதில் எந்த லாஜிக்கும் இல்லை.

 காலம் வேகமாக மாறிக் கொண்டிருந்ததையும், இனி உலகை ஆள்வது சாத்தியப்படாது என்பதையும் உணர்ந்து வெள்ளையர்கள் ஒவ்வொரு நாட்டில் இருந்தும் ஓடிக் கொண்டு இருந்தனர். காந்தி என்று ஒருவர் பிறக்காவிட்டாலும் இந்தியாவை விட்டும் வெள்ளையர்கள் நிச்சயம் ஓடி இருப்பார்கள். இந்தியா மட்டுமின்றி சரிபாதி உலகை ஆண்ட வெள்ளையர்கள் அனைத்து நாடுகளை விட்டும் ஓடிவிட்டனர். அங்கெல்லாம் எந்தக் காந்தியும் இருக்கவில்லை.

 வெள்ளையர்கள் நாட்டைக் கைப்பற்றிய காலம் தொட்டு 200 ஆண்டுகள் அவர்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்தன. வெள்ளையர்களுடன் பல யுத்தங்களை எதிர் கொண்டனர். வெள்ளையர்களுக்கு மகத்தான சேதங்களை அந்தப் போராளிகள் ஏற்படுத்திய போதும் வெள்ளையர்கள் தங்கள் பிடியை இறுக்கமாக்கிக் கொண்டார்களே தவிர தளர்த்த முன்வரவில்லை. வெள்ளையர்கள் வெளியேறிய காலகட்டத்தில் வெள்ளையர்களுக்கு எதிராக நேதாஜி போன்றவர்கள் நடத்திய ஆயுதம் தாங்கிய போராட்டமும் அந்தப் போராட்டத்தில் முஸ்லிம்கள் அளித்த அதிகமான பங்கும் வெள்ளை ராணுவத்துக்கு பலத்த சேதங்களை ஏற்படுத்தியதால் அவர்கள் நாட்டை விட்டு ஓடும் மனநிலைக்கு வந்தனர். இவர்கள் ஆட்சி புரிந்த அனைத்து நாடுகளிலும் இது போன்ற போர்களால் வெள்ளையர்களின் கை ஓங்கினாலும் அவர்களுக்கு ஏற்பட்ட சேதத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

 இப்போது அமெரிக்கா தனது வீரர்கள் பலியாவதைக் கண்டு இராக்கிலிருந்து ஓட்டம் எடுத்தது போன்ற நிலைக்கு அன்று பிரிட்டிஷார் தள்ளப்பட்டனர். இதனால்தான் பல நாடுகளில் இருந்தும் அவர்கள் ஓட்டம் பிடித்தனர். இவ்வாறுதான் இந்தியாவை விட்டும் ஓட்டம் பிடித்தனர்.

 இந்தியாவில் அவர்கள் ஓட்டம் பிடிப்பதை தாமதப்படுத்தியது காந்திய வழிமுறை எனலாம். நாம் வெள்ளையர்களை எதிர்த்து ஆயுதம் தூக்க வேண்டாம். நம்மை நாமே வருத்திக் கொள்வோம் என்ற காந்தியின் வழிமுறை ஆயுதப்போராளிகளின் வீரியத்தைக் குறைத்தது. ஆங்கிலேயர்களுக்கு அது பெரிய அளவில் உதவியாகவும் இருந்தது. அதனால்தான் வெள்ளையர்கள் ஓட்டம் எடுக்க முடிவு எடுத்த போது ஆயுதப் போராளிகளை முன்னிலைப்படுத்தாமல் காந்தி, ஜின்னா போன்ற அகிம்சைவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்கள்தான் விடுதலையைப் பெறக் காரணம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்றனர்.

 ஆயுதப் போராளிகளின் வீரியத்தை மழுங்கச் செய்யும் அகிம்சை போராட்டம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் இருபது ஆண்டுகளுக்கு முன்பே நாடு விடுதலை அடைந்திருக்கும். அதன் பெருமை போராளிகளுக்குக் கிடைத்திருக்கும். இது நூறுசதவிகித உண்மையாகும்.

 எல்லா ஆட்சியாளரும் இப்படித்தான் நடப்பார்கள். போராளிகள் அவர்களுக்கு முதல் எதிரிகள் என்பதால் தாங்கள் அந்த எதிரிகளுக்கு பணிந்ததாகக் காட்டாமல் வேறு யாரோ சொன்னதற்காக விட்டுக் கொடுப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்குவார்கள். நாமே இதை சந்தித்து இருக்கிறோம்.

 நாம் பலவருடங்களாக இட ஒதுக்கீட்டுக்காக போராட்டம் நடத்தினோம். இடைவிடாது அயராது உழைத்தோம். திமுக அதிமுக கட்சிகளின் துரோகங்களைச் சொல்லி மக்களை விழிப்படையச் செய்தோம்.  

  முஸ்லிம்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட கருணாநிதி இட ஒதுக்கீடு கொடுக்க முடிவு செய்தார். பொதுவாக இதை அறிவிக்காமல் அவருக்கு குடைச்சல் கொடுத்து வந்த தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தினால் இது கொடுக்கப்படவில்லை என்று காட்ட நினைத்தார். ஒரு ஜால்ரா பிரமுகரை அழைத்து நீங்கள் இந்த நிகழ்ச்சியில் இட ஒதுக்கீட்டை கேட்டுப் பேசுங்கள். நான் அந்த மேடையில் அதை ஏற்பதாக அறிவிக்கிறேன் என்று செட்டப் செய்து அவ்வாறே அறிவித்தார். போராளிகளால் கிடைத்தது என்ற எண்ணம் ஏற்பட்டால் ஒவ்வொரு கோரிக்கைக்கும் போராட்டம் நடத்துவார்கள் என்ற எண்ணம்தான் இதற்குக் காரணம். இது குறித்து உணர்வு இதழில் முன்னரே நாம் எழுதியுள்ளதைப் பார்க்கவும்.

 உணர்வு இதழில் நாம் எழுதியதைக் கீழே தருகின்றோம்.

  கருணாநிதிக்கு ஒரு வழக்கம் உள்ளது. ஒரு கோரிக்கையை ஏற்பதாக இருந்தால் அதன் பலன் தன்னை எதிர்ப்பவர்களுக்குப் போகக் கூடாது என்பதற்காக தனது அடிமைகள் கேட்டுக் கொண்டதால் அதைச் செய்வதாகக் கூறுவார்.

 இட ஒதுக்கீட்டுக்காக களத்தில் நின்று போராட்டம் நடத்தியது தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே என்பது உலகம் அறிந்த உண்மை. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தின் கோரிக்கை என்று கூறினால் தவ்ஹீத் ஜமாஅத்துக்குப் பெயர் கிடைத்து விடும் என்பதற்காக நக்கிப் பிழைக்கும் ஹிதாயதுல்லா போன்றவர்களை விட்டு எதையாவது பேசச் சொல்வார். தம்பி ஹிதாயதுல்லா கேட்ட படி கவிக்கோ அப்துர்ரஹ்மான் கேட்ட படி இட ஒதுக்கீடு அளிக்க முயற்சிப்போம் என்று கருணாநிதி அறிவிப்பார். இவர்கள் எல்லாம் யார் என்று எந்த முஸ்லிம் பொது மக்களுக்கும் தெரியாது. ஹிதாயதுல்லா போன்ற அரசியல் கோமாளிகள் அந்தக் காட்சியை மட்டும் வெட்டி ஒட்டி தொலைக் காட்சிகளில் தினந்தோறும் போட்டுப் பார்த்து மகிழ்ந்து கொள்வார்கள். ஆனால் மக்களோ சரியான காமெடியாக நினைத்து சிரிக்கிறார்கள் என்பது கூட இவர்களுக்குத் தெரியாது.

 அது போல் ரோஸ்ட்டர் என்ற பெயரில் நடக்கும் மோசடியை அம்பலப் படுத்தியது தவ்ஹீத் ஜமாஅத்து தான். ஆனால் அதை கருணாநிதி சரி செய்ய எண்ணிய போது தம்பி ஹைதர் அலி இதைச் சுட்டிக் காட்டினார் என்று கூறினார். ஆனால் இவர்கள் ரோஸ்ட்டரை நியாயப்படுத்தியவர்கள் என்பது உலகத்துகே தெரியும் .

 அது போல் தவ்ஹீத் ஜமாஅத் திமுக அமைச்சர் மூலம் கண்காணிப்பு ஆணையம் குறித்தும் ஐந்து விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்தும் வலியுறுத்தி வரும் நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் அமைச்சர் வழியாக இதைச் சொல்லி அனுப்பியுள்ள நிலையில் அரசியல் கோமாளி ஹிதாயதுல்லா வீட்டு கல்யாணத்தில் அவரை விட்டு ஐந்து சதவிகிதம் பற்றி பேசச் சொல்லி அதைப் பரிசீலிப்பதாக டயலாக் விட்டுள்ளார். தனது மகளின் கல்யாண பரபரப்பில் இது போல் எல்லாம் யாரும் பேசுவதில்லை என்பது உலகுக்கே தெரியும். அதுவும் கருணாநிதியிடம் அனுமதி இல்லாமல் அல்லது கருணாநிதி சொல்லிக் கொடுக்காமல் இப்படி எல்லாம் முதுகெலும்பு உள்ளவர்கள் தான் பேச முடியும். அரசியல் அடிமைகளுக்கு இது இயலாது.

 ஆனாலும் தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொண்டபடி என்று கருணாநிதி கூற மாட்டார். அவருக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்து கூழைக் கும்பிடு போடுவோர் கேட்டுக் கொண்டார்கள் என்றுதான் கூறுவார்.

 கோமாளி ஹிதாயதுல்லா இந்த வீடியோ கிளிப்பை வைத்து ஒரு ஐந்து வருடமாவது திரும்பத் திரும்ப தனியார் தொலைக் காட்சியில் ஒளிபரப்பி ரசித்துக் கொள்வார். ஆனால் மக்களோ உலக மகாக் காமெடியாக கருதி சிரிப்பார்கள்.

 நான் கேட்டதால்தான் இட ஒதுக்கீடு கிடைத்தது என்று அருவருப்பாக ஹிதாயதுல்லா கோமாளித்தனம் செய்து வருவதால் இதைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

 முஸ்லிம்கள் மட்டும் அல்ல. யாருடைய பிரச்சினையையும் கருணாநிதி கையாளும் முறை இதுதான். இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி நெடுமாறன் ஏதாவது பேசி அதை நிறைவேற்ற வேண்டும் என்று கருணாநிதி நினைத்தால் நக்கிப் பிழைக்கும் வீரமணி, சுப.வீரபாண்டியன் போன்றவர்களை விட்டு அதே கோரிக்கையைச் சொல்ல வைத்து அவர்கள் கேட்டுக் கொண்டதால் செய்வதாக சொல்வார். இதில் இருந்து யார் நக்கிப் பிழைப்பவர்கள் என்று நாம் அடையாளம் காணலாம். அவ்வளவுதான்.

 மேற்கண்ட  செய்தியை ஏற்கனவே நாம் உணர்வு இதழில் சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.

  இதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காக கருணாநிதி செய்தது போன்ற மனநிலைதான் ஆட்சியாளர்களின் மனநிலையாக இருக்கும். இந்த ஆட்சியாளர்களின் மனப்போக்கின் காரணமாக இந்தியாவுக்கு காந்தியும் பாகிஸ்தானுக்கு ஜின்னாவும் விடுதலை வாங்கித்தந்ததாக வரலாற்றை மாற்றி எழுதி விட்டு வெள்ளையர்கள் ஓடி விட்டார்கள். இதில் இறுதி வெற்றி வெள்ளையர்களுக்குத் தான் கிடைத்துள்ளதற்கு ஆதாரம்தான் ஆயிரம் ரூபாய் நோட்டில் சிரிக்கும் காந்தியின் படம்.
www.onlinepj.com

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை