ஷியாயிஸம் என்பது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமானதா?
ஷியாயிஸம் என்பது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமானதா?
ஷியாயிஸம் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கொள்கையாகும். இன்னும் சொல்லப்போனால் அது ஒரு தனி மதம் என்று கூட சொல்லலாம்.
நபி (ஸல்) அவர்களை விட அலீ (ரலி) அவர்களை உயர்வானவர்களாகச் சித்தரிப்பவர்கள் ஷியாக்கள். மேலும் அபூபக்ர், உமர், உஸ்மான் போன்ற கலீஃபாக்களும் நபித்தோழர்களும் காஃபிர்கள் என்பது ஷியாக்களின் நம்பிக்கை.
ஷியாக் கொள்கை இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமானது என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஷியாக்கள் புனிதமாகப் போற்றும் நூல்களிலிருந்து சிலவற்றை இங்கு தருகின்றோம்.
"தொழுகைகளைப் பேணிக் கொள்ளுங்கள்! நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்'' என்பது திருக்குர்ஆன் வசனம். இதற்கு விளக்கம் கூறப் புகுந்த ஷியாக்களின் விரிவுரையாளர்கள் அய்யாஷ்,ஹுவைஸீ ஆகிய இருவரும் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
(ஐந்து) தொழுகைகள் என்பது ரசூல் (ஸல்), அலீ (ரலி), ஃபாத்திமா (ரலி), ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஆகிய ஐவராவர். நடுத் தொழுகை என்று விஷேசமாகக் குறிப்பிட்டது அலீ (ரலி) ஆவார்.
அய்யாஷி தப்ஸீர் பாகம் 1, பக்கம் 128, நூருஸ்ஸகைன் பாகம் 1, பக்கம் 238
ஷியாக்களின் மற்றொரு தப்ஸீரில், நபி (ஸல்) அவர்கள் ருகூவு, ஸஜ்தா செய்ய நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்கள், இறைவா! உன் அடியார் அலீயின் பொருட்டால் அவர்களின் கண்ணியத்தினால் என் உம்மத்தின் பாவிகளை மன்னிப்பாயாக! என்று துஆ செய்தார்கள் என இப்னு மஸ்ஊது (ரலி) கூறினார்களாம்.
நபி (ஸல்) அவர்களை விட அலீ (ரலி) அவர்களை உயர்வானவர்களாகச் சித்தரிப்பவர்கள் ஷியாக்கள். மேலும் அபூபக்ர், உமர், உஸ்மான் போன்ற கலீஃபாக்களும் நபித்தோழர்களும் காஃபிர்கள் என்பது ஷியாக்களின் நம்பிக்கை.
ஷியாக் கொள்கை இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமானது என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஷியாக்கள் புனிதமாகப் போற்றும் நூல்களிலிருந்து சிலவற்றை இங்கு தருகின்றோம்.
"தொழுகைகளைப் பேணிக் கொள்ளுங்கள்! நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்'' என்பது திருக்குர்ஆன் வசனம். இதற்கு விளக்கம் கூறப் புகுந்த ஷியாக்களின் விரிவுரையாளர்கள் அய்யாஷ்,ஹுவைஸீ ஆகிய இருவரும் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
(ஐந்து) தொழுகைகள் என்பது ரசூல் (ஸல்), அலீ (ரலி), ஃபாத்திமா (ரலி), ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஆகிய ஐவராவர். நடுத் தொழுகை என்று விஷேசமாகக் குறிப்பிட்டது அலீ (ரலி) ஆவார்.
அய்யாஷி தப்ஸீர் பாகம் 1, பக்கம் 128, நூருஸ்ஸகைன் பாகம் 1, பக்கம் 238
ஷியாக்களின் மற்றொரு தப்ஸீரில், நபி (ஸல்) அவர்கள் ருகூவு, ஸஜ்தா செய்ய நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்கள், இறைவா! உன் அடியார் அலீயின் பொருட்டால் அவர்களின் கண்ணியத்தினால் என் உம்மத்தின் பாவிகளை மன்னிப்பாயாக! என்று துஆ செய்தார்கள் என இப்னு மஸ்ஊது (ரலி) கூறினார்களாம்.
அல் புர்ஹான் ஃபீ தப்ஸீரில் குர்ஆன் பாகம் 4, பக்கம் 226
"நான் மூஸா (அலை), கிழ்ரு (அலை) ஆகியோர் முன்னிலையில் இருந்திருந்தால் அவ்விருவரை விட நான் மிகவும் அறிந்தவன் என்று பிரகடனம் செய்திருப்பேன்'' என்று அலீ (ரலி) கூறினார்களாம். ஷியாக்களில் புகாரி இமாமைப் போல் மதிக்கப் படும் குலைனீ என்பவர் தமது நூலில் இவ்வாறு கூறுகின்றார்.
அல் உஸுலுல் காபி கிதாபுல் ஹுஜ்ஜத் பாகம் 1, பக்கம் 261
"உம்மைக் கொண்டே இறைவன் ஆதமை மன்னித்தான். உம்மைக் கொண்டே யூசுப் நபியைபாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றினான். உம்மைக் கொண்டே அய்யூப் நபியைச் சோதித்தான்'' என்று அலீ (ரலி) அவர்களை நோக்கி ஸல்மான் பார்ஸீ (ரலி) கூறினார்களாம்.
அல் புர்ஹான் முன்னுரை பக்கம் 27
அல் புர்ஹான் முன்னுரை பக்கம் 27
நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்று இறைவனை நெருங்கிய போது "முஹம்மதே! திரும்பிப் பாரும்'' என்றானாம் இறைவன். திரும்பிப் பார்த்தால் அங்கே அலீ (ரலி) நிற்கின்றார்களாம்.
தஃப்ஸீருல் புர்ஹான் பாகம் 2, பக்கம் 404
எனக்கு முன் நபிமார்கள் உட்பட எவருக்கும் கொடுக்கப் படாத சிறப்புக்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தது எனக்குத் தெரியாமல் நடந்திராது, நடப்பவை என்னை விட்டும் மறையாது என்று அலீ (ரலி) கூறினார்கள்.
அல்உஸுலு மினல் காபி பாகம் 19, பக்கம் 197
அலீ (ரலி) அவர்கள் திரும்பவும் இவ்வுலகுக்கு வருவார்கள் என்பது நமது கொள்கையாகும். இதை நம்பாதவன் நம்மைச் சேர்ந்தவனல்லன் என்று பாகிர் இமாம் கூறினார்களாம்.
காஷானியின் கிதாபுஸ்ஸாயி பாகம் 1 பக்கம் 837
நபி (ஸல்) அவர்களை விட அலீ (ரலி) உயர்ந்தவர்கள் என்பது இவர்களின் கொள்கை என்பதற்கு இவை சான்றுகளாகத் திகழ்கின்றன.
நபி (ஸல்) அவர்களுக்குப் பின் நான்கு நபர்களைத் தவிர எல்லா நபித்தோழர்களும் மதம் மாறி விட்டனர் என்று ஷியாக்களின் கொள்கை பரப்புச் செயலாளர் ஸலிம் இப்னு கைஸ் அல் ஆமிரீ தனது நூலில் பக்கம் 92ல் கூறுகிறார்.
நபி (ஸல்) அவர்களுக்குப் பின் நான்கு நபர்களைத் தவிர எல்லா நபித்தோழர்களும் மதம் மாறி விட்டனர் என்று ஷியாக்களின் கொள்கை பரப்புச் செயலாளர் ஸலிம் இப்னு கைஸ் அல் ஆமிரீ தனது நூலில் பக்கம் 92ல் கூறுகிறார்.
மிக்தாத் இப்னுல் அஸ்வத், அபூதர் அல்கிபாரி, ஸல்மான் பாரிஸீ ஆகிய மூவரைத் தவிர எல்லா நபித்தோழர்களும் காபிர்களாகி விட்டனர்.
கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 8, பக்கம் 245
கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 8, பக்கம் 245
அபூபக்ரும், உமரும், அலீ (ரலி) அவர்களுக்குச் செய்த தீங்குக்கு மன்னிப்பு கேட்காமலேயே மரணித்தனர். அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும், மலக்குகளின் சாபமும், எல்லா மக்களின் சாபமும் உண்டாகட்டும்.
கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 2 பக்கம் 246
(அபூபக்ருக்கு பைஅத் செய்ததன் மூலம்) அனைவரும் அறியாமைக் காலத்துக்குத் திரும்பினார்கள். அன்ஸார்கள் மட்டும் அபூபக்ருக்கு பைஅத் செய்யாமல் ஸஃதுக்கு பைஅத் செய்ததன் மூலம் அந்த அறியாமையிலிருந்து விலகினாலும் மற்றோர் அறியாமையில் அவர்கள் வீழ்ந்தனர்.
கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 296
கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 296
எல்லோரும் பல்வேறு உலக நோக்கம் கருதியே இஸ்லாத்தில் இணைந்தனர். அலீ என்ற ஒரு நபரைத் தவிர, அவர் மட்டுமே உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றார்.
கிதாபுஷ்ஷியா வஸ்ஸுன்னா என்ற சின்ன ஏடு
அல்லாஹ்வும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் புகழ்ந்துரைத்த நபித்தோழர்களைப் பற்றி தரக்குறைவாகவும், காஃபிர்கள் என்றும் திட்டுவது ஷியாக்களின் கொள்கை என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
இவை தவிர ஷியாக்களின் இமாம்கள் எனப்படும் 12 பேரைப் பற்றிய இவர்களின் நம்பிக்கையும் ஷியாக்கள் இஸ்லாத்திற்குத் துளியும் சம்பந்தமில்லாத கொள்கையுடவர்கள் என்பதை நிரூபிக்கின்றன.
ஷியாக்களின் பன்னிரெண்டு இமாம்களும் தாங்கள் எப்போது மரணிப்போம் என்பதை அறிவார்கள். அவர்கள் விரும்பிய நேரத்தில் மரணிப்பார்கள்.
அல் உஸுலு மினல் காபி பக்கம் 258
இவை தவிர ஷியாக்களின் இமாம்கள் எனப்படும் 12 பேரைப் பற்றிய இவர்களின் நம்பிக்கையும் ஷியாக்கள் இஸ்லாத்திற்குத் துளியும் சம்பந்தமில்லாத கொள்கையுடவர்கள் என்பதை நிரூபிக்கின்றன.
ஷியாக்களின் பன்னிரெண்டு இமாம்களும் தாங்கள் எப்போது மரணிப்போம் என்பதை அறிவார்கள். அவர்கள் விரும்பிய நேரத்தில் மரணிப்பார்கள்.
அல் உஸுலு மினல் காபி பக்கம் 258
இந்தப் பனிரெண்டு இமாம்களிடமும் மலக்குகள் வந்து எல்லா விபரங்களையும் கூறிச் செல்வார்களாம்.
அல் உஸுலுமினல் காபி பக்கம் 398
இந்தப் பனிரெண்டு இமாம்களிடமும் விஷேசமான ஞானம் உள்ளதாம், அதை மலக்குகளும் நபியும் கூட அறிய முடியாதாம்.
அல் உஸுலுமினல் காபி பக்கம் 402
எந்த மனிதனின் பேச்சாயினும், பறவைகள் மிருகங்கள் மற்றும் உயிரினங்களின் பேச்சாயினும் அனைத்தையும் பனிரெண்டு இமாம்களும் அறிவர்.
குர்புல் இஸ்ஸாத் பக்கம் 146
பன்னிரு இமாம்களில் ஒருவராகிய ஜஃபர் சாதிக் அவர்கள் (பூரியான் பாத்தியா நாயகர்) "வானம் பூமியில் உள்ள அனைத்தையும் நான் அறிவேன், நடந்ததையும் நடக்கவிருப்பதையும் நான் அறிவேன்'' என்றார்களாம்.
அல்உஸுலு மினல் காபி, பாகம் 1, பக்கம் 261
அல்உஸுலு மினல் காபி, பாகம் 1, பக்கம் 261
இறந்தவர்களை உங்களால் உயிர்ப்பிக்க இயலுமா? குஷ்ட ரோகிகளையும், பிறவிக் குருடரையும் உங்களால் குணப்படுத்த முடியுமா? என்று அபூஜஃபர் அவர்களிடம் கேட்ட போது முடியுமே என்றார்களாம்.
கிதாபுல் ஹுஜ்ஜா மினல் காபி, பாகம் 1, பக்கம் 470
கிதாபுல் ஹுஜ்ஜா மினல் காபி, பாகம் 1, பக்கம் 470
"யார் அலீயை அறிந்து கொள்கிறாரோ அவரை நான் நரகில் புகுத்த மாட்டேன். அவர் எனக்கு மாறு செய்திருப்பினும் சரியே, எனக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும் அலீயை அறியாதவர்களை நான் சுவர்க்கத்தில் சேர்க்க மாட்டேன்'' என்று அல்லாஹ் அலீ (ரலி) யைப் பற்றி கூறினானாம்.
பஹ்ரானியின் புர்ஹான் எனும் தப்ஸீர் முன்னுரை பக்கம் 23
பஹ்ரானியின் புர்ஹான் எனும் தப்ஸீர் முன்னுரை பக்கம் 23
அல்லாஹ்வின் பெயராலேயே இப்படிப் பொய் கூறுபவர்களே ஷியாக்கள்.
அல்லாஹ்வின் பெயராலும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் பெயராலும் இது போல் அவர்கள் அரங்கேற்றிய பொய்கள் ஏராளம். இவர்களது வெறி எந்த அளவுக்குச் சென்று விட்டதென்றால் "வரவேண்டியவர்'' என்றொரு கற்பனைப் பாத்திரத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர். அல் காயிம் என்று இவர்களால் குறிப்பிடப்படக் கூடிய ஒருவர் வருவாராம், அவர் செய்யும் காரியங்கள் என்ன தெரியுமா?
காயிம் வந்து ஹுஸைனைக் கொலை செய்தவர்களின் சந்ததிகளை அவர்கள் முன்னோர் செயலுக்காக கொன்று குவிப்பார்.
அல்லாஹ்வின் பெயராலும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் பெயராலும் இது போல் அவர்கள் அரங்கேற்றிய பொய்கள் ஏராளம். இவர்களது வெறி எந்த அளவுக்குச் சென்று விட்டதென்றால் "வரவேண்டியவர்'' என்றொரு கற்பனைப் பாத்திரத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர். அல் காயிம் என்று இவர்களால் குறிப்பிடப்படக் கூடிய ஒருவர் வருவாராம், அவர் செய்யும் காரியங்கள் என்ன தெரியுமா?
காயிம் வந்து ஹுஸைனைக் கொலை செய்தவர்களின் சந்ததிகளை அவர்கள் முன்னோர் செயலுக்காக கொன்று குவிப்பார்.
தப்ஸீர் சாபி பாகம்1, பக்கம் 172
காயிம் வந்து ஆயிஷாவைத் திரும்ப எழுப்பி அவர்களைச் சவுக்கால் அடிப்பார். பாத்திமாவின் தாயார் மீது அவதூறு கூறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுப்பார்.
தப்ஸீர் ஸாபி பாகம் 2, பக்கம் 108
இத்தகைய கேடுகெட்ட கொள்கைக்காரர்களே ஷியாக்கள். ஷியாக்களைப் பற்றி எழுத வேண்டும் என்றால் இங்கு பக்கங்கள் போதாது. அந்த அளவுக்கு இவர்களிடம் மவ்ட்டீகங்களும் மூட நம்பிக்கைகளும் மண்டிக் கிடக்கின்றன. இவர்களுக்கும், இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள இவையே போதுமான ஆதாரங்களாகும்.
ஷியாக் கொள்கையில் பற்றுடையவர் அறிவிப்பின் நிலை
இவரது ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்ற கருத்துடையவர்கள் கூறும் முதல் காரணம், "இவர்ஷியாக் கொள்கையில் தீவிரப் பற்றுள்ளவராக இருந்தார்'' என்பது தான்.
இப்னு ஹிப்பான், இப்னு மயீன் உள்ளிட்ட சில அறிஞர்கள், "இவர் ஷியாக் கொள்கையில் பற்று கொண்டவராக இருந்தார்' என்று கூறியுள்ளனர். எனவே இதன் காரணமாக இவர் அறிவிக்கும் ஹதீஸ் பலவீனமானது என்று சிலர் வாதிக்கின்றனர்.
இந்த வாதம் ஏற்கத்தக்கதல்ல! ஏனெனில் எத்தகைய கொள்கை உடையவர் என்ற அடிப்படையில்ஒருவரது நம்பகத்தன்மையை ஹதீஸ் கலை வல்லுநர்கள் எடை போடுவதில்லை. அவரதுநாணயம், நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் தான் நம்பகத்தன்மையை எடை போடுவார்கள்.
ஹதீஸ் கலை வல்லுனர்களால் நம்பகமானவர் என்று முடிவு செய்யப்பட்டவர்களில் பலர்ஷியாக்களாகவும், கத்ரியாக்களாகவும், முர்ஜியாக்களாகவும் இன்னும் பல தவறானகொள்கையுடையவர்களாகவும் இருப்பதை சர்வ சாதாரணமாகக் காணலாம்.
இதனால் தான் இவரைப் பற்றி இப்னு மயீன் அவர்கள் கூறும் போது, "இவர் பழுதில்லாதவர்;ஆயினும் ஷியாக் கொள்கையுடையவர்'' என்று குறிப்பிடுகிறார்கள்.
"இவர் ஷியாக் கொள்கையுடையவர் என்பதால் இவரைக் குறை கூறியுள்ளனர். ஆனால் இவரதுஅறிவிப்புக்களைப் பொறுத்த வரை இவரை உண்மையாளர் என்று வர்ணித்துள்ளனர்' என்று கதீப் அவர்கள் கூறுகிறார்கள்.
ஹஸன் பின் இத்ரீஸ் அவர்கள் பின்வரும் நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.
அலீ பின் குராப் பற்றி அப்துல்லாஹ் பின் அம்மாரிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், "அவர் ஹதீஸில் ஈடுபாடு உள்ளவராகவும், ஹதீஸ் ஞானமுள்ளவராகவும் இருந்தார்'' என்று விடையளித்தார்கள். "அவர் பலவீனமானவர் இல்லையா?'' என்று நான் கேட்டேன்.
அதற்கவர்கள், "அவர் ஷியாக் கொள்கையுடையவராக இருந்தார். ஹதீஸ் பற்றி ஞானமுள்ள ஒருவர் பொய்யராக இல்லாத போது, ஷியாக் கொள்கை அல்லது கத்ரியாக் கொள்கையுடையவர் என்ற காரணத்துக்காக அவரது ஹதீஸ்களை நான் விட்டு விட மாட்டேன். மூஸிலியை விடச்சிறந்தவராக இருக்கும் ஒருவர் ஹதீஸ் பற்றி ஞானமில்லாதவராக இருந்தால் அவர் வழியாக எதையும் நான் அறிவிக்கவும் மாட்டேன்'' என்று விடையளித்தார்கள்.
இப்னு கானிவு அவர்கள் இவரைப் பற்றிக் கூறும் போது, "இவர் நம்பகமானவர்; ஷியாக் கொள்கை உடையவர்'' என்று குறிப்பிட்டார்கள்.
ஒருவரது கொள்கை எது என்பது ஹதீஸ் துறையில் கவனிக்கப் படுவதில்லை என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
புகாரியில் ஷியாக்கள்
இதை இன்னும் உறுதிப்படுத்திட புகாரியில் இடம் பெற்ற ஷியாக்கள் சிலரை இங்கே சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
புகாரி இமாமின் ஆசிரியரான உபைதுல்லாஹ் பின் மூஸா என்பவர் ஷியாக் கொள்கையுடையவராகஇருந்தார். அத்துடன் மிகவும் நம்பகமானவராகவும் இருந்தார். இதன் காரணமாக புகாரி இமாம் அவர்கள் இவர் வழியாக ஏராளமான ஹதீஸ்களைத் தமது நூலில் பதிவு செய்துள்ளனர்.
அவை வருமாறு: 8, 126, 127, 354, 520, 865, 1139, 1140, 1330, 1915, 2006, 2341, 2518, 2700, 3359, 3632, 4039, 4043, 4053, 4150, 4251, 4512, 4706, 4839, 4904, 4917, 4928, 4979, 4990, 5054, 5152, 5541, 5836, 6154, 6536, 6744, 6864, 6908, 6920, 7063, 7311, 7511.
இது போல் அதீ பின் ஸாபித் அன்ஸாரி என்பவரும் ஷியாக் கொள்கையுடையவராக இருந்தார்;அத்துடன் நம்பகமானவராகவும் இருந்தார். இவரது கொள்கையைக் கவனிக்காமல்நம்பகத்தன்மையை மட்டும் கவனத்தில் கொண்டு இமாம் புகாரி அவர்கள் இவர் வழியாகப் பல ஹதீஸ்களைத் தமது நூலில் பதிவு செய்துள்ளனர். அவை வருமாறு:
55, 769, 964, 989, 1382, 1674, 1884, 2398, 2474, 2727, 3213, 3255, 3282, 3783, 4050, 4124, 4222, 4225, 4414, 5351, 5397, 5516, 5881, 6048, 6115, 6195, 7546.
இவரைப் போலவே அவ்ஃப் பின் அபீஜமீலா என்பவரும் ஷியாக் கொள்கையுடையவராக இருந்தார்.அதே நேரத்தில் நம்பகத்தன்மை உடையவராகவும் இருந்தார். இவர் வழியாகப் பின்வரும் ஹதீஸ்களை இமாம் புகாரி அவர்கள் தமது நூலில் பதிவு செய்துள்ளனர்.
47, 344, 348, 547, 599, 1143, 2225, 3275, 3345, 3404, 3915, 3947, 4425, 4674, 4799, 4849, 5010, 5198, 6075, 6546, 6669, 7047, 7099, 7112
இது போன்று முஹம்மத் பின் ஃபுளைல் பின் கஸ்வான் என்பவரும் நம்பகமானவராகவும், அதே சமயம் ஷியாக் கொள்கையுடையவராகவும் இருந்தார். இவர் வழியாகவும் பல ஹதீஸ்களை புகாரி இமாம் தமது நூலில் பதிவு செய்துள்ளனர். அவை வருமாறு:
38, 595, 1300, 1728, 2041, 2064, 2544, 2963, 3821, 4022, 4170, 4268, 5374, 5483, 6460, 6682, 7079, 7563
இன்னும் இவர்களைப் போன்று வேறு சில ஷியாக்களின் அறிவிப்புகளும் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒருவர் ஷியாக் கொள்கை உடையவர் என்பதற்காக ஒரு ஹதீஸைப் பலவீனமானது என்று கூறுவதாக இருந்தால் மேற்கண்ட ஹதீஸ்கள் அனைத்தைப் பற்றியும் அவ்வாறு கூற வேண்டும்.அப்படி எந்த அறிஞரும் கூறவில்லை.
எனவே அலீ பின் குராப் என்பவர் ஷியாக் கொள்கையுடையவர் என்றாலும் அவர் நம்பகமானவர்;உண்மையாளர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதைக் காரணம் காட்டி இவரது அறிவிப்புகளை நிராகரிக்க முடியாது.
ஷீஆக்களின் மறுபிரவேசம்
அறிஞர் பீஜே அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஜன்னத்தில் நீங்கள் எழுதிய ஷீஆக்களின் மறுபிரவேசம் என்ற ஆய்வுக் கட்டுரை அதன் முக்கியத்துவம் கருதி அண்மையில் ஏகத்துவத்திலும் மீள் பிரசுரிக்கப்பட்டது.
சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் ஷீஆக் கும்பல் தலை காட்டிய போது, இலங்கையில் உள்ள ஜம்இய்யத்து அன்ஸாருஸ் சுன்னா அல்முஹம்மதிய்யா என்ற நிறுவனம் ஷீஆக்களின் மறுபிரவேசம் என்ற உங்கள் ஆய்வுக் கட்டுரையை நுாலாக வெளியிட்டு, இலவசமாக வினியோகித்தது. அதன் ஒரு பிரதி எனக்கு சவுதி அரேபியாவில் கிடைத்தது. அதன் முக்கியப் பகுதியை அனுப்பியுள்ளேன். இதனை இணையத்தில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். வஸ்ஸலாம்.
இவ்வண்ணம்
மவ்லவி கைஸான் அப்துல் ஜப்பார்.
அழைப்பாளர், நஸீம் ஜாலியாத். ரியாத்.
ஷீஆக்களின் மறுபிரவேசம்
தொழுகை தொடர்பாக வரும் அல்குர்ஆனிய வசனங்களுக்கு விளக்கம் கூறப் புகுந்த ஷீஆக்களின் விரிவுரையாளர்கள் அய்யாஷ், ஹுவைஸீ ஆகிய இருவரும் பின்வருமாறு கூறுகிறார்கள்.
'(ஐந்து) தொழுகைகள் என்பது ரஸுல் (ஸல்), அலி (ரழி), பாதிமா (ரழி), ஹஸன் (ரழி), ஹுஸைன் (ரழி) ஆகிய ஐவராவர். நடுத்தொழுகை என்று விஷேசமாகக் குறிப்பிட்டது, அலி (ரழி) ஆவார்.'
(அய்யாஷி தப்ஸீர் பாகம்- 1 பக்கம்:128 நூருஸ்ஸகலைன் பாகம் - 1 பக்கம்: 238)
இதில், நபியை விட அலியை உயர்த்துகின்றனர்.
ஷீஆக்களின் மற்றொரு தப்ஸீரில்
'நபி (ஸல்) அவர்கள், ருகூவு, ஸஜ்தாச் செய்ய நான் பார்த்திருக்கின்றேன். அப்போது, அவர்கள்'இறைவா! உன் அடியார் அலியின் பொருட்டால், அவர்களின் கண்ணியத்தினால் என் உம்மத்தின் பாவிகளை மன்னிப்பாயாக' என்று துஆச் செய்தார்கள் என்று இப்னு மஸ்ஊத் (ரழி) கூறினார்கள் என்று இட்டுக்கட்டியுள்ளனர்.
(அல்புர்ஹான் பீ தப்ஸீரில் குர்ஆன் பக்கம் - 1 பக்கம் : 226)
அலியின் பொருட்டால், நபி (ஸல்) அவர்களே துஆச் செய்தார்கள் என்று இட்டுக்கட்டி வம்பளக்கும் இவர்களின் புரட்சி இஸ்லாமியப் புரட்சியா? இன்னுமுள்ளது இது போன்ற குப்பைகள்.
'நான் முஸா (அலை), ஹிழ்று (அலை) ஆகியோர் முன்னிலையில் இருந்திருந்தால், அவ்விருவரை விட நான் மிகவும் அறிந்தவன் என்று பிரகடனம் செய்திருப்பேன்' என்று அலி (ரலி) கூறினார்களாம். ஷீயாக்களில், புகாரி இமாமைப் போல் மதிக்கப்படும் குலைனீ என்பவர் தமது நூலில் இவ்வாறு கூறுகின்றார்.
அல்உஸுல் காபீ கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம் 1, பக்கம் 261
'உம்மைக் கொண்டே இறைவன் ஆதமை மன்னித்தான். உம்மைக் கொண்டே யூசுப் நபியை பாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றினான். உம்மைக் கொண்டே அய்யூப் நபியைச் சோதித்தான்' என்று அலி (ரலி) அவர்களை நோக்கி ஸல்மான் பார்ஸி (ரலி) கூறினார்களாம்.
அல்புர்ஹான் முன்னுரை, பக்கம் 27
நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்று இறைவனை நெருங்கிய போது 'முஹம்மதே படைப்பினங்களில் நீர் யாரை விரும்புகின்றீர்? ' என்று இறைவன் கேட்டானாம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அலி' என்றார்களாம். 'முஹம்மதே திரும்பிப் பாரும்' என்றானாம் இறைவன். திரும்பிப் பார்த்தால் அங்கே அலி (ரலி) நிற்கிறார்களாம்.
தஃப்ஸீருல் புர்ஹான், பாகம் 2, பக்கம் 404
ஷீயாக்களின் பன்னிரெண்டு இமாம்களும் தாங்கள் எப்போது மரணிப்போம் என்பதை அறிவார்கள். அவர்கள் விரும்பிய நேரத்தில் மரணிப்பார்கள்.
அல் உஸுலுமினல் காபி, பக்கம் 258
இந்தப் பன்னிரெண்டு இமாம்களிடமும் மலக்குகள் வந்து எல்லா விபரங்களையும் கூறிச் செல்வார்களாம்.
அல் உஸுலுமினல் காபி, பக்கம் 393
இந்தப் பன்னிரெண்டு இமாம்களிடமும் விஷேசமான ஞானம் உள்ளதாம். அதை மலக்குகளும் நபியும் கூட அறிய முடியாதாம்.
மேற்படி நூல் பக்கம் 402
எந்த மனிதனின் பேச்சாயினும், பறவைகள் மிருகங்கள் மற்றும் உயிரினங்களின் பேச்சாயினும் அனைத்தையும் பன்னிரெண்டு இமாம்களும் அறிவர்.
குர்புல் இஸ்னாத், பக்கம் 146
எனக்கு முன் நபிமார்கள் உட்பட எவருக்கும் கொடுக்கப்படாத சிறப்புக்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தது எனக்கு தெரியாமல் நடந்திராது. நடப்பவை என்னை விட்டும் மறையாது என்று அலி (ரழி) கூறினார்களாம்.
அல் உஸுலுமினல் காபி, பாகம் 19, பக்கம் 197
பன்னிரு இமாம்களில் ஒருவராகிய ஜஃபர் சாதிக் அவர்கள் (பூரியான் பாத்தியா நாயகர் ) 'வானம் பூமியில் உள்ள அனைத்தையும் நான் அறிவேன். நடந்ததையும் நடக்கவிருப்பதையும் நான் அறிவேன்' என்றார்களாம்.
அல் உஸுலுமினல் காபி, பாகம் 1, பக்கம் 261
இறந்தவர்களை உங்களால் உயிர்ப்பிக்க இயலுமா? குஷ்ட ரோகிகளையும், பிறவிக் குருடரையும் உங்களால் குணப்படுத்த முடியுமா? என்று அபூ ஜஃபர் அவர்களிடம் கேட்ட போது 'முடியுமே'என்றார்களாம்.
கிதாபுல் ஹுஜ்ஜா மினல் காபி, பாகம் 1, பக்கம் 470
அல்லாஹ் அலி (ரழி) அவர்களைப் பற்றிப் பின்வருமாறு கூறினானாம்:
'யார் அலியை அறிந்து கொள்கிறாரோ அவரை நான் நரகில் புகுத்த மாட்டேன். அவர் எனக்கு மாறு செய்திருப்பினும் சரியே. எனக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும் அலியை அறியாதவர்களை நான் சுவர்க்கத்தில் சேர்க்க மாட்டேன்.' அல்லாஹ்வின் பெயராலேயே இப்படிப் பொய் கூறுபவர்களே ஷீயாக்கள்.
பஹ்ரானியின் 'புர்ஹான்' எனும் தப்ஸீர் முன்னுரை பக்கம் 23
'ஷீயாக்களாகிய உங்களில் இருவர் கூட ஏன் ஒருவர் கூட நரகிற்குச் செல்ல மாட்டார்கள்' என்று ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.
அர்ரவ்லா மினல் காபி, பாகம் 8, பக்கம் 78
'ஷீயாவைச் சேர்ந்தவர் எந்த அமலும் செய்யாமல் தன் நன்மையை நிரப்பிக் கொள்வார்.' என்றும் ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.
அர்ரவ்லா மினல் காபி, பாகம் 8, பக்கம் 315
ஷீயாக்களின் எந்தப் பாவமும் பதியப்படுவதில்லை. மழை துளியளவுக்கும், கற்கள், மணல்கள்,மரங்கள், முட்கள் எண்ணிக்கை அளவுக்கு பாவம் செய்தாலும் அவை பதியப்படுவதில்லை என்று ஷீயாக்களின் எட்டாவது இமாம் அபுல் ஹஸன் குறிப்பிட்டாராம்.
உயூனு அக்பாரிர் ரிளா, பாகம் 2, பக்கம் 236
'எல்லா நபிமார்களும் முஹம்மத் (ஸல்) அவர்களின் நுபுவத்தை ஏற்றது போல், எல்லா மலக்குகளும் ஜிப்ரீலும் ஏற்றது போல், என்னையும் அவர்கள் ஏற்றுள்ளனர்' என்று அலி (ரழி) கூறினார்களாம்.
அல்உஸுலுல் காபி, பாகம் 1, பக்கம் 197, 198.
ஷீயாக்களின் அடிப்படை எத்தகையது என்பதற்கு இவை தெளிவான சான்றுகள். புரட்சித் தலைவர் குமைனியின் கொள்கை இதுவே! இதோ குமைனியே வாக்குமூலம் தருகிறார்:
பன்னிரெண்டு இமாம்களுக்கும் இருக்கக் கூடிய ஆத்மீகமான அந்தஸ்தை மலக்குகளும்,நபிமார்களும் கூட அடைய முடியாது என்பது நமது கொள்கையாகும். ஏனெனில், பன்னிரெண்டு இமாம்களும் இவ்வுலகம் படைக்கப்படுவதற்கு முன்பே ஒளியாக அர்ஷுக்கு அடியில் இருந்தார்கள். மேலும், பன்னிரெண்டு இமாம்களும், மலக்குகளும், நபிமார்களும் அடைய முடியாத விஷேச நிலை அல்லாஹ்வுடன் தங்களுக்கு இருப்பதாகக் கூறியுள்ளனர்.இது நமது அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும்.
விலாயதே பகீஹ் தர் குஸுஸே ஹுகூமதே. இஸ்லாமி, தஹ்ரான் வெளியீடு பக்கம் 58
குமைனியே தனது கொள்கையை இவ்வளவு தெளிவாக அறிவித்த பிறகு அடிப்படையிலேயே இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பிறகு அவர் செய்த புரட்சி எப்படி இஸ்லாமிய புரட்சியாகும்?
அலி (ரழி) அவர்கள் திரும்பவும் இவ்வுலகுக்கு வருவார்கள் என்பது நமது கொள்கையாகும். இதை நம்பாதவன் நம்மைச் சேர்ந்தவனல்லன் என்று பாகிர் இமாம் கூறினார்களாம்.
காஷானியின் கிதாபுஸ்ஸாபி, பாகம் 1, பக்கம் 347
நபி (ஸல்) அவர்களுக்குப் பின் நான்கு நபர்களைத் தவிர எல்லா நபித் தோழர்களும் மதம் மாறிவிட்டனர்
ஷீயாக்களின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஸலீம் இப்னு கைஸ் அல் ஆமிரீயின் நூலில் பக்கம்92ல் கூறுகிறார்.
மிக்தாத் இப்னுல் அஸ்வத், அபூதர் அல்கிபாரி, ஸல்மான் பாரிஸீ ஆகிய மூவரைத் தவிர எல்லா நபித் தோழர்களும் காபிர்களாகிவிட்டனர்.
கிதாபுர்ரவ்லா மினல் காபி, பாகம் 8, பக்கம் 245
அபூபக்கரும், உமரும், அலி (ரழி) அவர்களுக்குச் செய்த தீங்குக்கு மன்னிப்புக் கேட்காமலேயே மரணித்தனர். அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும் மலக்குகளின் சாபமும் எல்லா மக்களின் சாபமும் உண்டாகட்டும்.
கிதாபுர்ரவ்லா மினல் காபி, பாகம் 2, பக்கம் 246
(அபூபக்கருக்கு பைஅத் செய்ததன் மூலம்) அனைவரும் அறியாமைக் காலத்துக்குத் திரும்பினார்கள். அன்ஸாரிகள் மட்டும் அபூபக்கருக்கு பைஅத் செய்யாமல் ஸஃதுக்கு பைஅத் செய்ததன் மூலம் அந்த அறியாமையிலிருந்து விலகினாலும் மற்றொரு அறியாமையில் அவர்கள் வீழ்ந்தனர்.
கிதாபுர்ரவ்லா மினல் காபி, பக்கம் 296
எல்லோரும் பல்வேறு உலக நோக்கம் கருதியே இஸ்லாத்தில் இணைந்தனர். அலி என்ற ஒரு நபரைத் தவிர, அவர் மட்டுமே உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றார்.
கிதாபுஷ்ஷியா வஸ்ஸுன்னா என்ற சின்ன ஏடு
இப்படி நபித்தோழர்களைக் கேவலப்படுத்தும் சங்கதிகள் ஏராளம். திருக்குர்ஆனில் யூதர்களும்,கிறிஸ்தவர்களும் கண்டிக்கப்படும் வசனங்கள் யாவும் நபித் தோழர்கள் குறித்தே இறங்கியதாக இவர்களின் தப்ஸீர்கள் கூறுகின்றன. விரிவஞ்சி தவிர்க்கின்றோம்.
இஸ்லாத்துடன் சிறிதும் சம்பந்தமில்லாத இந்த வழிகேடுகளின் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி எனச் சாதிப்போர் சிந்திக்க வேண்டும்.
ஷீயாக்களிடம் 'முத்ஆ' என்றொரு கொள்கை உண்டு. அதாவது, சட்டபூர்வ விபச்சாரம். இதன் மூலம் ஒழுக்க வாழ்க்கையை சீரழித்தவர்கள், சீரழித்துக் கொண்டிருப்பவர்கள் இந்த ஷீயாக்கள்.
ஒரு பெண்ணை சில நாட்களுக்கு மட்டும் வாடகைக்கு பேசிக் கொண்டு அவளுடன் கூடுவதற்குத் தான் 'முத்ஆ' என்பர். இதுபற்றி ஷீயாக்கள் தரும் விளக்கத்தைக் காண்போம்.
ஒரு தடவை மட்டும் உறவு கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு 'முத்ஆ' செய்யலாமா? என்று ஷீயாக்களின் பத்தாவது இமாமிடம் கேட்கப்பட்ட போது 'செய்யலாம்' என்றாராம்.
அல்புரூவு மினல் காபி, பாகம் 5, பக்கம் 460
இந்த முத்ஆவுக்கு நான்கு என்ற வரம்பு உண்டா? என்று அலி (ரழி) அவர்களிடம் கேட்ட போது'ஆயிரம் பெண்களை வேண்டுமானாலும் இவ்வாறு செய்து கொள்! ஏனெனில், இவர்கள் கூலிக்காரர்கள்' என்றார்களாம்.
தஹ்தீபுல் அஹ்காம், பாகம் 7, பக்கம் 259
'ஒரு பெண்ணுடன் ஒப்பந்தம் செய்து கொண்டேன். பிறகு அவளுக்குக் கணவன் இருப்பதாக எனக்கு எண்ணம் தோன்றியது. விசாரித்துப் பார்த்த போது அவளுக்கு கணவன் இருப்பது தெரிய வந்தது'என்று நான் ஜஃபர் சாதிக் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'நீ ஏன் இதுபற்றி அலட்டிக் கொள்கிறாய் அவள் கூறுவதை நீ நம்ப வேண்டியது தான்' என்று பதிலளித்தார்களாம்.
அல்புரூவு மினல் காபி, பாகம் 5, பக்கம் 462
'மஜுஸி எனும் மதத்தவளுடன் இவ்வாறு முத்ஆ செய்யலாம்' என்று ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.
தஹ்தீபுல் அஹ்காம், பாகம் 7, பக்கம் 256
'யூத, கிறிஸ்தவப் பெண்களுடன் இப்படி முத்ஆ செய்யலாம்' என்று அபுல் ஹஸன்
(8வது இமாம் கூறினாராம்! அதே நூல் அதே பக்கம்)
விபச்சாரத்தையே தொழிலாகக் கொண்டவளுடனும் இவ்வாறு வாடகை மனைவியை அமைத்துக் கொள்ளலாம். ஏனெனில், அவளை விபச்சாரத்திலிருந்து தடுக்குமாம்.
(அதே நூல் அதே பக்கம்)
இந்த மூடர்கள் விபச்சாரத்திற்கு என்ன தான் அளவுகோள் வைத்துள்ளார்களோ? இதெல்லாம் குமைனியின் இஸ்லாமிய அரசில் உண்டா? என்று கேட்கக் கூடும். நிச்சியம் உண்டு. அங்கே விபச்சாரத்திற்கு சட்டபூர்வ அனுமதி உண்டு. ஆனால், 'முத்ஆ' என்பதாகப் பெயரை மட்டும் மாற்றிக் கொள்ள வேண்டும். சாட்சாத் புரட்சித் தலைவர் குமைனி கூறுவதைக் கேளுங்கள்!
விபச்சாரிகள் உட்பட எந்தப் பெண்ணையும் இவ்வாறு வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம்.
(குமைனியின் தஹ்ரீருல் வஸீலா பக்கம் 292)
விபச்சாரத்துக்கு சட்டபூர்வ அனுமதி அளிக்கும் ஓர் ஆட்சி தான் இஸ்லாமிய ஆட்சியா?இஸ்லாமிய ஆட்சிக்குப் பாடுபடும் இயக்கங்கள் இதைத் தான் செய்யப் போகின்றனவா? என்பதைச் சிந்திக்கட்டும்!
சமாதி வழிபாட்டுக்கு வழிகாட்டியவர்களும் இந்த ஷீயாக்களே!
'ஹுஸைன் (ரழி) அவர்களை ஸியாரத் செய்வது ஏற்றுக் கொள்ளப்பட்ட நூறு ஹஜ்ஜுகளுக்கும்,ஏற்றுக் கொள்ளப்;பட்ட நூறு உம்றாவுக்கும் சமமானதாகும்.'
அல்இர்ஷாத் (முபீத் என்பவர் எழுதியது) பக்கம் 252
'யார் ஹுஸைன் மரணித்த பின் அவரது கப்ரை ஸியாரத் செய்கிறாரோ அவருக்குச் சொர்க்கம் உண்டு' என்று நபி (ஸல்) கூறினார்களாம்.
அல் இர்ஷாத் பக்கம் 252
அல்லாஹ்வின் தூதர் பெயரால் இது போல் அவர்கள் அரங்கேற்றிய பொய்கள் ஏராளம். இவர்களது வெறி எந்த அளவுக்குச் சென்று விட்டதென்றால் 'வர வேண்டியவர்' என்றோரு கற்பனைப் பாத்திரத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர். 'அல் - காயிம்' என்று இவர்களால் குறிப்பிடப்படக் கூடிய ஒருவர் வருவாராம். அவர் செய்யும் காரியங்கள் என்ன தெரியுமா?
'காயிம்' வந்து ஹுஸைனைக் கொலை செய்தவர்களின் சந்ததிகளை அவர்கள் முன்னோர் செயலுக்காக கொன்று குவிப்பார்.
தப்ஸீர் சாபி, பாகம் 1, பக்கம் 172
காயிம் வந்து ஆயிஷாவைத் திரும்ப எழுப்பி அவர்களைச் சவுக்கால் அடிப்பார். பாத்திமாவின் தாயார் மீது அவதூறு கூறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுப்பார்.
தப்ஸீர் சாபி, பாகம் 2, பக்கம் 108
இத்தகைய கேடுகெட்ட கொள்கைக்காரர்களே ஷீயாக்கள். பொய்களையும், கற்பனைகளையுமே மார்க்கமாகக் கொண்டிருப்பவர்கள் செய்தது இஸ்லாமியப் புரட்சி என்றால் இதை விட வெட்கக் கேடு எதுவுமில்லை. இவர்களின் கற்பனைகள் சிலவற்றையும் காண்போம்.
விபச்சாரம் செய்த ஒரு மன்னன் யானையாக உருமாற்றப்பட்டான். கணவனுக்குத் துரோகம் செய்த பெண்ணொருத்தி முயலாக மாற்றப்பட்டாள். பேரீத்தம் பழங்களைத் திருடிக் கொண்டிருந்தவன் வாத்தாக மாற்றப்பட்டான். யெமன் நாட்டில் சுங்க அதிகாரியாகப் பணியாற்றியவன் நட்சத்திரமாக மாற்றப்பட்டு விட்டான். கோள் சொல்லித் திரிந்தவன் தேளாக மாற்றப்பட்டு விட்டான். இப்படியெல்லாம் ஏராளமான மௌடீகங்களை நபியின் பெயரால் இவர்கள் அரங்கேற்றினார்கள்.
ஷீயாக்களின் இலலுஷ்ஷராயிஃ எனும் நூலில் 485 ஆம் பக்கத்தில் இது இடம் பெற்றுள்ளது.
இது போன்ற மூடத்தனங்களுடன் ஆயத்துல்லாஹ் எனும் ஷீயாத் தலைவருக்கு இவர்கள் அளித்து வரும் மரியாதை இருக்கிறதே: சாயி பாபாவுக்கு அவர் பக்தர்கள் செய்யும் மரியாதையும் மிஞ்சி விடும். இவர்கள் தான் இஸ்லாமிய புரட்சியாளர்களா? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கட்டும்!
Comments