சத்தியப் பாதையில் ஓர் சோதனைப் பயணம்.
சத்தியப் பாதையில் ஓர் சோதனைப் பயணம்.
எத்துனை சோதனைகள் வந்தபோதும் மார்க்கத்தை விட்டு விட மாட்டோம் என்று இந்த இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கைகளுக்காக எந்த கஷ்டம் வந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்ற கொள்கையில் வாழ்ந்தவர்கள் நபியின் தோழர்கள்.
இந்த மார்க்கத்தின் கொள்கையை ஏற்றுக் கொண்டு நபியின் ஒரு கட்டளைக்கு மாறு செய்த காரணத்தினால் சுமார் 50 நாட்கள் ஊரை விட்டு நீக்கப்பட்ட கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களின் தியாக வரலாற்றை இப்போது பார்ப்போம்.
புகாரியில் இடம் பெற்றுள்ள இந்த செய்தியில் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் பட்ட துயரங்களை ஏற்றுக் கொள்ளும் யாரும் இந்த மார்க்கத்தில் இணைந்த பின்னால் இந்த மார்க்கத்தின் கட்டளைகளை விட்டு விலகவும் மாட்டார்கள் விட்டுவிடவும் மாட்டார்கள்.
மதீனாவில் இருந்து மக்காவை நோக்கி ஹஜ்ஜுக்காக வரும் மக்களிடம் சத்தியப் பிரச்சாரம் செய்யும் வேலையில் கருணை நபி (ஸல்) அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலமது.
மினாவில் முதல் (ஜம்ரத்துல்) அகபா என்ற இடத்தில், மதீனத்துத் தோழர்களுடன் அழைப்புப் பணி சந்திப்பு நடைபெற்றது. இதற்கு அகபா (கணவாய்) உடன்படிக்கை என்று பெயர் வழங்கப்படுகின்றது.
நபியவர்கள் நடை நபியாகப் பட்டம் பெற்ற 11, 12, 13வது ஆண்டுகளில் இந்த வரலாற்றுப் புகழ் பெற்ற சந்திப்புகள் மதீனத்து தோழர்களுடன் நடந்தன.
இந்த சந்திப்புக்களில் இரண்டாம் சந்திப்பின் போது இஸ்லாத்தை ஏற்றவர் தான் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள்.
இந்த உடன்படிக்கை போலவே திடீரென்று நடந்த போர்தான் பத்ர் ஆகும்.
சிரியா சென்று விட்டுத் திரும்ப வருகின்ற அபூசுஃப்யானின் வியாபாரப் படையை வழிமறிக்க வந்த நபித்தோழர்கள் மீது அல்லாஹ்வால் வலிய திணிக்கப்பட்ட போர் தான் பத்ருப் போர்!
இந்தப் போரில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களும் பாவங்கள் மண்ணிக்கபட்ட புனிதர்களாக மாறினார்கள்.
(ஹாத்திப் பின் அபீ பல்தஆ என்ற நபித்தோழர், மக்காவாசிகளான இணை வைப்போர் சிலருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கன் இரகசியத் திட்டங்கள் சிலவற்றை முன்கூட்டியே தெரிவித்துக் கடிதம் அனுப்பி, மாட்டிக் கொண்ட போது) உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள்; (சதி வேலைகள் செய்த) இவரது கழுத்தைக் கொய்து விடுகிறேன் என்று சொன்னார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒரு வேளை மாண்பும் மகத்துவமும் வாய்ந்தவனான அல்லாஹ், பத்ருப் போரில் பங்கேற்றவர்கடம் நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள்; உங்களை நான் மன்னித்து விட்டேன் என்று கூறிவிட்டிருக்கலாம் என்று சொன்னார்கள். (நூல்: புகாரி 4890)
அகபா உடன்படிக்கையில் கலந்து கொண்ட கஅப் பின் மாலிக், பத்ருப் போரில் கலந்து கொண்ட முராரா பின் ரபீஃ அல் அம்ரீ, ஹிலால் பின் உமைய்யா அல் வாகிஃபீ ஆகிய மூன்று பேரும் தபூக் போரில் கலந்து கொள்ளாததால் நபி (ஸல்) அவர்களால் 50 நாட்கள் ஊர் விலக்கி வைக்கப்படுகின்றார்கள்; சமூக பகிஷ்காரம் செய்யப் படுகிறார்கள். தியாகிகளான இம்மூவரும் தண்டிக்கப்பட்ட பின்னரும், நாங்கள் தியாகிகள்; எங்களைத் தண்டிக்கலாமா? ஊரை விட்டு ஒதுக்கி வைத்து உறவை விட்டும் துண்டிக்கலாமா? என்று கேட்கவில்லை. கட்டுப்பட்டார்கள்.
அற்ப சொற்ப இலாபங்களுக்காக கொள்கையைத் தூக்கியெறியவில்லை.
இப்போது அந்த மூன்று பேர் தொடர்பான செய்திகளைப் பார்ப்போம்.
அகபா பிரமாணத்தை விட பத்ர் எனக்குப் பெரிதல்ல.
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தபூக் போரைத் தவிர நபி (ஸல்) அவர்கள் புரிந்த எந்தப் போரிலும் நான் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. இது தவிர, நான் பத்ருப் போரிலும் கலந்து கொள்ளவில்லை. பத்ரில் கலந்து கொள்ளாத எவரும் (அல்லாஹ்வால்) கண்டிக்கப்படவுமில்லை. (ஏனெனில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷிகன் வணிகக் குழுவை (வழி மறிக்க) நாடியே (பத்ருக்குப்) போனார்கள். (போன இடத்தில்) போர் செய்யும் திட்டம் இல்லாமலேயே அவர்களையும் எதிரிகளையும் அல்லாஹ் (பத்ருக் களத்தில்) சந்திக்கும்படி செய்து விட்டான்.
இஸ்லாத்தில் நாங்கள் நிலைத்திருப்போம் என (அன்சாரிகளான) நாங்கள் உறுதிமொழி அத்த அகபா இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் இருந்தேன். இதற்குப் பதிலாக பத்ருப் போரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்க வேண்டும் என நான் விரும்பியதில்லை; அல்அகபா பிரமாணத்தை விட பத்ர் மக்கடையே பெயர் பெற்றதாக இருந்தாலும் சரியே!
கடும் வெப்பத்தில் ஓர் சத்தியப் போராட்டம்.
அந்த (தபூக்) போரில் நான் கலந்து கொள்ளாத போது இருந்த உடல் பலமும் பொருள் வசதியும் (என் வாழ் நால்) வேறெப்போதும் எனக்கு இருந்ததில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டகங்கள் ஒரு போதும் என்னிடம் இருந்ததில்லை.
ஆனால், அந்தப் போரின் போது ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டகங்களை நான் வைத்திருந்தேன். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்குச் செல்ல நாடினால் (பெரும்பாலும்) வேறெதற்கோ செல்வது போன்று அதை மறைக்காமல் இருந்ததில்லை. ஆனால், தபூக் போர் (நேரம்) வந்த போது அதற்காகக் கடும் வெயிலில் நபி (ஸல்) அவர்கள் படையெடுத்துச் செல்லவிருந்தார்கள். தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், பெரும் (பாலைவன) வனாந்திரப் பிரதேசத்தைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும் என்றும், அதிக (எண்ணிக்கையிலான) எதிரிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எதிர்பார்த்தார்கள். எனவே, முஸ்லிம்களுக்கு அவர்கள் எதிர்கொள்ள வேண்டியது பற்றி வெப்படையாகவே தெரிவித்து விட்டார்கள். அப்போது தான் அவர்கள் தங்கன் போருக்கான ஆயத்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ள முடியும். தாம் விரும்பிய திசையை (தபூக்கை) அவர்களுக்குத் தெரிவித்தும் விட்டார்கள். எழுதப்படும் எந்தப் பதிவேடும் இத்தனை பேருக்கு இடமக்காது எனும் அளவிற்கு முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள்.
பேரிச்சம் மரங்கள் பழுத்துக் குலுங்கும் அந்த நேரம்.
(போரில் கலந்து கொள்ளாமல்) தலை மறைவாகி விடலாமென நினைக்கும் எந்த மனிதரும், அல்லாஹ்விடமிருந்து இறை அறிவிப்பு வராத வரையில் (தான் போருக்கு வராத) விஷயம் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிய வராது என்று எண்ணவே செய்வார். (அந்த அளவிற்குப் படையினரின் எண்ணிக்கை மிகுந்திருந்தது. பேரீச்சம்) பழங்கள் பழுத்து மர நிழல்கள் அடர்ந்து நின்ற காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போருக்குச் செல்ல ஆயத்தமானார்கள்.
போக வேண்டும் என்பது பொடுபோக்காக மாறியது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவர்களுடன் முஸ்லிம்களும் பயண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர்.
நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு பயண ஏற்பாடுகளைச் செய்யக் காலை நேரத்தில் செல்லுவேன். எனது பயணத்திற்கான எந்த ஏற்பாட்டையும் செய்து முடிக்காமல் திரும்பி வந்து விடுவேன்.
(நினைக்கும் போது) அந்த ஏற்பாடுகளைச் செய்து முடிக்க எனக்குத் தான் சக்தியிருக்கிறதே! (பிறகு, நான் ஏன் அவசரப் படவேண்டும்?) என்று என் மனத்திற்குள் கூறிக் கொண்டேன். என் நிலை இப்படியே நீடித்துக் கொண்டிருந்தது. மக்கள் பெரும்பாடு பட்டனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம்முடன் முஸ்லிம்களை அழைத்துக் கொண்டு காலை நேரத்தில் புறப்பட்டு விட்டார்கள். அப்போதும் நான் எனது பயணத்திற்கு வேண்டிய எந்த ஏற்பாட்டையும் செய்து முடித்திருக்கவில்லை.
நபி (ஸல்) அவர்கள் சென்ற பின் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் பயண ஏற்பாடுகளைச் செய்துகொண்டு அவர்களுடன் போய்ச் சேர்ந்து கொள்வேன் என்று நான் (என் மனதிற்குள்) சொல்லிக் கொண்டேன். அவர்கள் அனைவரும் சென்ற பிறகு மறுநாள் காலை பயண ஏற்பாடுகளைச் செய்ய நினைத்தேன். ஆனால், அன்றைய தினமும் எந்த ஏற்பாட்டையும் செய்து முடிக்காமல் திரும்பி வந்தேன். அதற்கு அடுத்த நாள் காலையிலும் நினைத்தேன். அன்றும் எந்த ஏற்பாடும் செய்து முடிக்கவில்லை. (இன்று நாளை என்று) எனது நிலை இழுபட்டுக் கொண்டே சென்றது. முஸ்லிம்கள் விரைவாகப் புறப்பட்டுச் சென்று விட்டனர். (எனக்கு) அந்தப் போர் கை நழுவிவிட்டது. நான் உடனடியாகப் புறப்பட்டுச் சென்று படையினருடன் சேர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். அப்படி நான் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அது என் விதியில் எழுதப்பட்டிருக்கவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போருக்குச் சென்றதன் பின்னால், மதீனாவில் நான் மக்கடையே சுற்றி வரும் போது எனக்குப் பெரும் வருத்தமே ஏற்பட்டது. நயவஞ்சகர் எனச் சந்தேகிக்கப்பட்ட மனிதர்களையும் இறைவனால் சலுகை வழங்கப்பட்ட (முதியோர், பெண்கள் போன்ற) பலவீனர்களையும் தவிர வேறெவரையும் நான் (மதீனாவிற்குள்) பார்க்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தபூக் சென்றடையும் வரையில் என்னை நினைவு கூரவேயில்லை. தபூக்கில் மக்கடையே அமர்ந்து கொண்டி ருக்கும் போது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கஅப் என்ன ஆனார்? என்று கேட்டார்கள்.
உலக ஆசையும், கஅபின் உண்மை நிலையும்.
பனூ சலிமா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! அவரின் இரு சால்வைகளும் (ஆடை அணி கலன்களும்) அவற்றைத் தம் தோள்கல் போட்டு அவர் (அழகு) பார்த்துக் கொண்டிருப்பதும் தான் அவரை வரவிடாமல் தடுத்து விட்டன என்று கூறினார். உடனே, முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், (அந்த மனிதரை நோக்கி), தீய வார்த்தை சொன்னாய். அல்லாஹ்வின் மேல் ஆணையாக! அவரைக் குறித்து நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை; அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள்.
சாக்குப் போக்கு சொல்ல நினைத்து சத்தியத்தின் பக்கம் திரும்புதல்.
நபி (ஸல்) அவர்கள் (தபூக்கிலிருந்து) திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி எனக்கு எட்டிய போது கவலை என் மனதில் புகுந்தது. (அல்லாஹ்வின் தூதரிடம் சாக்குப் போக்குச் சொல்வதற்காகப்) பொய்யான காரணங்களை நான் யோசிக்கத் தொடங்கினேன்.
நாளை நபியவர்கன் கோபத்திலிருந்து நான் எப்படித் தப்புவேன்? என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். மேலும், அதற்காக நான் என் குடும்பத்தாரில் கருத்துள்ள ஒவ்வொருவரிடமும் உதவி தேடினேன். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நெருங்கி வந்து விட்டார்கள் என்று சொல்லப்பட்ட போது (நான் புனைந்து வைத்திருந்த) பொய்மை என் மனத்தை விட்டு விலகி விட்டது.
பொய்யான காரணம் எதையும் சொல்லி நபி (ஸல்) அவர்கடமிருந்து ஒரு போதும் தப்பித்துக் கொள்ள முடியாது. (அல்லாஹ் தன் தூதருக்கு உண்மை நிலவரத்தைத் தெரிவித்து விடுவான்) என்று உணர்ந்து, நபி (ஸல்) அவர்கடம் உண்மையைச் சொல்லிவிட முடிவு செய்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலை நேரத்தில் (மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். சாக்குச் சொன்ன சந்தர்ப்பவாதிகள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தால் முதலில் பள்வாசலுக்குச் சென்று அங்கு இரண்டு ரக்அத்கள் தொழுத பின் மக்களைச் சந்திப்பதற்காக (அங்கு) அமர்ந்து கொள்வது அவர்கன் வழக்கம். அதை அவர்கள் செய்த போது, (தபூக் போரில் கலந்து கொள்ளச் செல்லாமல்) பின்தங்கி விட்டவர்கள் நபி (ஸல்) அவர்கடம் வந்து, அவர்களுக்கு முன்னால் சத்தியமிட்டு (வராமல் போனதற்கு) சாக்குப் போக்குக் கூறத் தொடங்கினர். அவர்கள் எண்பதுக்கும் மேற்பட்ட நபர்களாக இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்கன் வெப்படையான காரணங்களை ஏற்றுக்கொண்டு அவர்கடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தார்கள். அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள். அவர்கன் அந்தரங்கத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டார்கள்.
சந்திக்கு வந்தாலும் பரவாயில்லை என்று சத்தியம் உரைத்த தோழர்.
அப்போது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கடம் வந்தேன். அவர்களுக்கு நான் சலாம் சொன்ன போது கோபத்திலிருப்பவர் எவ்வாறு புன்னகைப்பாரோ அது போலப் புன்னகைத்தார்கள். பிறகு, வாருங்கள் என்று கூறினார்கள். உடனே, நான் அவர்கடம் நடந்து சென்று அவர்கன் முன்னிலையில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர்கள் என்னிடம், (போரில்) நீங்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை. நீங்கள் (போருக்காக) வாகனம் வாங்கி வைத்துக் கொண்டிருக்கவில்லையா? என்று கேட்டார்கள். நான், ஆம். (வாங்கி வைத்திருந்தேன்.) அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அல்லாத (வேறு எவரேனும் ஓர்) உலகாதாயவாதிக்கு அருகில் நான் அமர்ந்து கொண்டிருந்தால் ஏதாவது (பொய்யான) சாக்குப் போக்குச் சொல்லி கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உடனடியாக வழி கண்டிருப்பேன். வாதத் திறன் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! தங்கடம் ஏதாவது பொய்யைச் சொல்லி இன்று உங்களை நான் என்னைக் குறித்துத் திருப்தியடையச் செய்துவிட்டாலும், அல்லாஹ் வெகுவிரைவில் (உண்மை நிலவரத்தைத் தங்களுக்குத் தெரியப்படுத்தி) என் மீது தங்களைக் கடுங்கோபம் கொள்ளச் செய்து விடுவான் என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன். (அதே சமயம்) தங்கடம் நான் உண்மையைச் சொல்லிவிட்டால் (தற்சமயம்) அது தொடர்பாக என் மீது தாங்கள் வருத்தப்படுவீர்கள். ஆயினும், அது விஷயத்தில் அல்லாஹ்வின் மன்னிப்பை நான் எதிர்பார்க்கிறேன். இல்லை; அல்லாஹ்வின் மீது ஆணையாக! (நான் போரில் கலந்து கொள்ளாததற்கு) என்னிடம் எந்தக் காரணமும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களை விட்டும் நான் பின்தங்கிவிட்ட அந்த நேரத்தில் எனக்கு இருந்த உடல் பலமும் வசதி வாய்ப்பும் அதற்கு முன் ஒரு போதும் எனக்கு இருந்ததில்லை என்று கூறினேன்.
அல்லாஹ்வின் தீர்பை எதிர்பார்து…..
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவர் உண்மை சொல்லி விட்டார் (என்று கூறிவிட்டு என்னை நோக்கி) சரி! எழுந்து செல்லுங்கள். உங்கள் விஷயத்தில் அல்லாஹ்வே தீர்ப்பப்பான் என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து சென்றேன்.
சத்தியத்தை சாகடிக்க அசத்தியத்தின் பக்கம் செல்லலாமா?
பனூ சலிமா குலத்தைச் சேர்ந்த சிலர் என்னைப் பின் தொடர்ந்து ஓடி வந்து, அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு முன்னால் எந்தப் பாவத்தையும் நீங்கள் செய்ததாக நாங்கள் அறிந்ததில்லை. (போரில்) கலந்து கொள்ளாத (மற்ற)வர்கள் சொன்ன அதே (பொய்க்) காரணத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கடம் சொல்வதற்குக் கூட உங்களால் இயலாமற் போய் விட்டதே! நீங்கள் செய்த பாவத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்கும் பாவ மன்னிப்பே உங்களுக்குப் போதுமானதாய் இருந்திருக்குமே! என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! பனூ சலிமா குலத்தினர் என்னைக் கடுமையாக ஏசிக் கொண்டேயிருந்தனர். எந்த அளவிற்கென்றால், நான் (அல்லாஹ்வின் தூதரிடம்) திரும்பிச் சென்று (இதற்கு முன்) நான் சொன்னது பொய் என்று (கூறி, போரில் கலந்து கொள்ளாததற்கு ஏதாவது பொய்க் காரணத்தைச்) சொல்லி விடலாமா என்று நான் நினைத்தேன்.
தன்னுடன் இன்னும் மூவர்.
பிறகு நான் பனூ சலிமா குலத்தாரை நோக்கி, (தீர்ப்பு தள் வைக்கப்பட்ட) இந்த நிலையை என்னுடன் வேறு யாரேனும் சந்தித்திருக்கின்றார்களா? என்று கேட்டேன். அதற்கவர்கள், ஆம். இரண்டு பேர் நீங்கள் சொன்னதைப் போலவே (உண்மையான காரணத்தை நபியவர்கடம்) சொன்னார்கள். உங்களுக்குச் சொல்லப்பட்டது தான் அப்போது அவர்கள் இருவருக்கும் சொல்லப்பட்டது என்று கூறினார்கள்.
உடனே நான், அவர்கள் இருவரும் யார்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், முராரா பின் ரபீஉ அல் அம்ரீ அவர்களும், ஹிலால் பின் உமய்யா அல் வாக்கிஃபீ அவர்களும் என்று பத்ருப் போரில் கலந்து கொண்ட இரண்டு நல்ல மனிதர்கன் பெயர்களை என்னிடம் கூறினர். அவர்கள் இருவராலும் (எனக்கு) ஆறுதல் கிடைத்தது. அவர்கள் இருவரின் பெயர்களையும் பனூ சலிமா குலத்தார் என்னிடம் சொன்னவுடன் நான் (என் இல்லத்திற்குச்) சென்று விட்டேன். பகிஷ்கரிக்கப்பட்ட பத்ரு ஸஹாபாக்கள்.
பேச்சுக்கு வந்த தடை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போரில் கலந்து கொள்ளாதவர்கல் எங்கள் மூவரிடம் மட்டும் (யாரும்) பேசக் கூடாதென முஸ்லிம்களுக்குத் தடை விதித்து விட்டார்கள். எனவே, மக்கள் எங்களைத் தவிர்த்தனர். மேலும், அவர்கள் (முற்றிலும்) எங்கள் விஷயத்தில் மாறிப் போய் விட்டனர். (வெறுத்துப் போனதால்) என் விஷயத்தில் இப்பூமியே மாறிவிட்டது போலவும் அது எனக்கு அன்னியமானது போலவும் நான் கருதினேன். இதே நிலையில் நாங்கள் ஐம்பது நாட்கள் இருந்தோம். எனது இரு சகாக்களும் (முராராவும், ஹிலாலும்) செயலிழந்து போய்த் தம் இல்லங்கலிலேயே அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தனர்.
அழுகையுடன் இருவரும், வெளியுலகில் ஒருவரும்.
நான், மக்களிடையே (உடல்) பலம் மிக்கவனாகவும் (மன) வலிமை படைத்தவனாகவும் இருந்தேன். எனவே, நான் (வீட்டை விட்டு) வெயேறி முஸ்லிம்களுடன் (ஐங்காலத்) தொழுகையில் கலந்து கொண்டும், கடை வீதிகல் சுற்றிக் கொண்டுமிருந்தேன். என்னிடம் எவரும் பேச மாட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கடம் செல்வேன். தொழுகையை முடித்துக் கொண்டு அவர்கள் அமர்ந்திருக்கும் போது சலாம் கூறுவேன். எனக்கு பதில் சலாம் சொல்வதற்காக அவர்கள், தம் உதடுகளை அசைக்கிறார்களா இல்லையா என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன். பிறகு, அவர்களுக்கு அருகிலேயே (கூடுதலான) தொழுகைகளை நிறைவேற்றுவேன். அப்போது என்னை நபி (ஸல்) அவர்கள் பார்க்கிறார்களா என்று ஓரக் கண்ணால் இரகசியமாகப் பார்ப்பேன். நான் என் தொழுகையில் ஈடுபட்டவுடன் அவர்கள் என்னைக் கவனிப்பதும், அவர்கள் பக்கம் நான் திரும்பியதும் அவர்கள் என்னிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்வதுமாக இருந்தார்கள்.
ஸலாத்திற்கு பதிலில்லை.
மக்களின் புறக்கணிப்பு நீடித்துக் கொண்டே சென்ற போது, நான் நடந்து போய் அபூ கத்தாதா (ரலி) அவர்கன் தோட்டத்தின் மதிற் சுவர் மீதேறினேன். அவர் என் தந்தையின் சகோதரர் புதல்வரும், மக்கல் எனக்கு மிகவும் பிரியமானவரும் ஆவார். அவருக்கு நான் சலாம் சொன்னேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் எனக்குப் பதில் சலாம் சொல்லவில்லை.
கதறி அழுத அந்த நிமிடம்.
உடனே நான், அபூ கத்தாதா! அல்லாஹ்வை முன் வைத்து உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நான் நேசிக்கிறேன் என்று நீ அறிவாயா? என்று கேட்டேன். அதற்கு அவர் (பதில் கூறாமல்) மௌனமாயிருந்தார். பிறகு மீண்டும் அவரிடம் அல்லாஹ்வை முன்வைத்து (முன்பு போலவே) கேட்டேன். அப்போதும் அவர் மௌனமாகவேயிருந்தார். மீண்டும் அவரிடம் நான் அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்டேன். அப்போது அவர், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று (மட்டும்) பதிலத்தார். அப்போது என் இரு கண்களும் (கண்ணீரைப்) பொழிந்தன. பிறகு நான் திரும்பி வந்து அந்தச் சுவரில் ஏறி (வெயேறி)னேன்.
நேரம் பார்த்து வந்த சோதனை.
ஒரு நாள் மதீனாவின் கடைத் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது மதீனாவிற்கு உணவு தானிய விற்பனைக்காக வந்திருந்த ஷாம் நாட்டு விவசாயிகல் ஒருவர், கஅப் பின் மாலிக்கை எனக்கு அறிவித்துத் தருவது யார்? என்று விசாரித்துக் கொண்டிருந்தார். மக்கள் (என்னை நோக்கி) அவரிடம் சைகை செய்யலாயினர். உடனே அவர் என்னிடம் வந்து, ஃகஸ்ஸான் நாட்டின் அரசனிடமிருந்து (எனக்கு எழுதப்பட்டிருந்த) கடிதமொன்றைத் தந்தார்.
அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:
நிற்க! உங்கள் தோழர் (முஹம்மது) உங்களைப் புறக்கணித்து (ஒதுக்கி) விட்டார் என்று எனக்குச் செய்தி எட்டியது. உங்களை இழிவு செய்து (உங்கள் உரிமைகள்) வீணடிக்கப்படும் நாட்டில் நீங்கள் நீடிக்க வேண்டுமென்ற அவசியத்தை உங்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. எனவே, எங்கடம் வந்து விடுங்கள். நாங்கள் உங்கடம் நேசம் காட்டுகிறோம். இதை நான் படித்த போது, இது இன்னொரு சோதனை ஆயிற்றே! என்று (என் மனத்திற்குள்) கூறிக் கொண்டு அதை எடுத்துச் சென்று அடுப்பிலிட்டு எரித்து விட்டேன்.
குடும்ப வாழ்வுக்கு வந்த தடை.
ஐம்பது நாட்களில் நாற்பது நாட்கள் கழிந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய ஒரு தூதர் என்னிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் உங்கள் மனைவியை விட்டும் விலகி விட வேண்டுமென்று உத்தரவிடுகிறார்கள் என்று கூறினார். அதற்கு நான், அவளை நான் விவாகரத்துச் செய்துவிடவா? அல்லது நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டேன். அவர், இல்லை. (விவாகரத்து செய்ய வேண்டாம்.) அவரை விட்டு நீங்கள் விலகிவிட வேண்டும். அவரை நெருங்கக் கூடாது (இதுவே இறைத் தூதர் உத்தரவு) என்று கூறினார். இதைப் போன்றே என் இரு சகாக்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் உத்தரவு அனுப்பியிருந்தார்கள். ஆகவே, நான் என் மனைவியிடம், உன் குடும்பத்தாரிடம் சென்று, இது விஷயத்தில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் அவர்களிடத்திலேயே இருந்து வா! என்று சொன்னேன். ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்கன் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, (என் கணவர்) ஹிலால் பின் உமய்யா செயல்பட முடியாத வயோதிகர். அவரிடம் ஊழியர் யாருமில்லை. நானே (தொடர்ந்து) அவருக்கு ஊழியம் செய்வதைத் தாங்கள் வெறுப்பீர்களா? என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இல்லை. ஆயினும், அவர் உன்னை (உடலுறவு கொள்ள) நெருங்க வேண்டாம் என்று சொன்னார்கள். ஹிலால் அவர்களின் மனைவி, அல்லாஹ்வின் மீதாணையாக! என் கணவரிடம் எந்த இயக்கமும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவருடைய விஷயத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதிலிருந்து இந்த நாள் வரையில் அழுது கொண்டே இருக்கிறார் என்றும் கூறினார்.
என் வீட்டாரில் ஒருவர், தம் கணவருக்குப் பணிவிடை புரிய ஹிலால் பின் உமய்யா அவர்களின் மனைவியை அனுமதித்தது போல், உங்கள் மனைவியை (உங்களுக்குப் பணிவிடை புரிய) அனுமதிக்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டால் (நன்றாயிருக்குமே) என்று கூறினார். அதற்கு நான், அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவி விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் அனுமதி கேட்க மாட்டேன். என் மனைவி விஷயத்தில் நான் அனுமதி கோரும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன (பதில்) சொல்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நானோ இளைஞனாக இருக்கிறேன். (ஹிலால், வயோதிகர். அதனால் அவருக்கு அல்லாஹ்வின் தூதர் சலுகை காட்டியிருக்கலாம்) என்று கூறி விட்டேன். அதற்குப் பின் பத்து நாட்கள் (இவ்வாறே) இருந்தேன்.
அதிகாலையில் நடந்த ஆச்சரியம்.
எங்கடம் பேசக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்த நாலிருந்து ஐம்பது நாட்கள் எங்களுக்குப் பூர்த்தியாயின. நான் ஐம்பதாம் நான் ஃபஜ்ருத் தொழுகையை எங்கள் வீடுகல் ஒன்றின் மாடியில் நிறைவேற்றிவிட்டு அல்லாஹ் (எங்கள் மூவரையும் குறித்து 9:118 ஆவது வசனத்தில்) குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருந்தேன். (அதாவது:) பூமி இத்தனை விரிவாய் இருந்தும் என்னைப் பொறுத்த வரையில் அது குறுகி, நான் உயிர் வாழ்வதே மிகக் கஷ்டமாயிருந்தது. அப்போது, சல்உ மலை மீதேறி பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவர் உரத்த குரலில், கஅப் பின் மாலிக்கே! நற்செய்தி பெற்றுக் கொள்க! என்று கூறினார். உடனே நான் சஜ்தாவில் விழுந்தேன். சந்தோஷம் வந்து விட்டது என்று நான் அறிந்து கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுது கொண்டிருந்த போது (வஹீ அறிவிக்கப்பட்டு) எங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று அறிவித்து விட்டார்கள் என நான் விளங்கிக் கொண்டேன். எங்களுக்கு நல்வாழ்த்துச் சொல்ல மக்கள் வரலாயினர். என் இரு சகாக்களை நோக்கி நற்செய்தி சொல்பவர்கள் சென்றனர். என்னை நோக்கி ஒருவர் குதிரையில் விரைந்து வந்தார்.
செல்லும் இடமெல்லாம் சுபச் செய்தியே!
அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் ஓடிச் சென்று மலை மீது ஏறிக் கொண்டார். (மேலும், உரத்த குரலில் எனக்கு நற்செய்தி சொன்னார்.) மேலும், அந்தக் குரல் அக்குதிரையை விட வேகமாக வந்து சேர்ந்தது. எவரது குரலை (மலை மீதிருந்து) கேட்டேனோ அவர் என்னிடம் நற்செய்தி சொல்ல (நேரடியாக) வந்தபோது நான் என் இரு ஆடைகளையும் கழற்றி அவர் சொன்ன நற்செய்திக்குப் பகரமாக (பரிசாக) அவருக்கு அணிவித்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (ஆடைகளில்) அந்த இரண்டைத் தவிர வேறெதுவும் அப்போது எனக்குச் சொந்தமானதாக இருக்கவில்லை. (வேறு) இரண்டு ஆடைகளை (அபூகத்தாதா அவர்களிடமிருந்து) இரவல் வாங்கி நான் அணிந்து கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தேன். அப்போது (வழியில்) மக்கள் கூட்டங் கூட்டமாக வந்து என்னைச் சந்தித்து, எனக்குப் பாவமன்னிப்புக் கிடைத்ததால், அல்லாஹ் உங்கள் பாவத்தை மன்னித்து விட்டதற்காக உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறோம் என்று கூறலாயினர்.
நபிகளாரின் நல்வாழ்த்து.
நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கு தம்மைச் சுற்றிலும் மக்கருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது என்னை நோக்கி தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் எழுந்தோடி வந்து எனக்குக் கைலாகு கொடுத்து என்னை வாழ்த்தவும் செய்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹாஜிர்கல் அவர்களைத் தவிர வேறெவரும் என்னை நோக்கி (வருவதற்காக) எழவில்லை. தல்ஹா (ரலி) அவர்களின் இந்த அன்பை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்.
நபியின் மண்ணிப்பா அல்லது நாயனின் மண்ணிப்பா?
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்ன போது, சந்தோஷத்தினால் முகம் மின்னிக் கொண்டிருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உன்னை உன் தாய் பெற்றெடுத்தது முதல் உன்னைக் கடந்து சென்ற நாட்களில் மிகச் சிறந்த நாளான இன்று உனக்கு (பாவ மன்னிப்புக் கிடைத்த) நற்செய்தி கூறுகிறேன் என்று கூறினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! (இந்த நற்செய்தியைத்) தாங்களே தங்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கிறீர்களா? அல்லது அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (வந்த வேத அறிவிப்பின் அடிப்படையில்) தெரிவிக்கிறீர்களா? என்று கேட்டேன். அவர்கள், இல்லை. அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (வந்த வேத அறிவிப்பின் அடிப்படையில்) தான் தெரிவிக்கிறேன் என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சந்தோஷம் ஏற்படும் போது அவர்களது முகம் சந்திரனின் ஒரு துண்டு போல் ஆகி பிரகாசிக்கும். அவர்களது முகத்தின் பிரகாசத்தை வைத்து அவர்களது சந்தோஷத்தை நாங்கள் அறிந்து கொள்வோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் நான் அமர்ந்து கொண்டபோது, அல்லாஹ்வின் தூதரே! எனது பாவம் மன்னிக்கப்பட்டதற்காக என் செல்வமனைத்தையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (அவர்கள் விரும்பும் வழியில் செலவிடுவதற்காக) தர்மமாக அத்து விடுகிறேன் என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்கள் செல்வத்தில் சிறிதளவை உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது என்று கூறினார்கள்.
உண்மைக்குக் கிடைத்த உயரிய பரிசு.
கைபர் போரில் எனக்குக் கிடைத்த பங்கை நான் (எனக்காக) வைத்துக் கொள்கிறேன். அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசிய காரணத்தினால் தான் அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான். (உண்மைக்குக் கிடைத்த பரிசாக) என் பாவம் மன்னிக்கப்பட்டதை அடுத்து நான் உயிரோடு வாழும் வரையில் உண்மையைத் தவிர வேறெதையும் பேச மாட்டேன் என்று கூறினேன்.
ஆகவே, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த வார்த்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கடம் கூறிய நாலிருந்து உண்மை பேசியதற்காக எனக்கு அல்லாஹ் அருள் புரிந்தது போன்று வேறெந்த முஸ்லிமுக்கும் அல்லாஹ் அருள் புரிந்ததாக நான் அறியவில்லை. இந்த உறுதி மொழியை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கடம் சொன்ன நாலிருந்து எனது இந்த நாள் வரை நான் பொய்யை நினைத்துப் பார்த்தது கூட இல்லை. நான் (உயிரோடு) எஞ்சியிருக்கும் காலத்திலும் அல்லாஹ் என்னைப் (பொய் சொல்லவிடாமல்) பாதுகாப்பான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
மன்னிப்பை வழங்கிய வசனம்.
மேலும், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ், இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களை மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன். தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான்.) பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க) அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்! எனும் (9:117-119) வசனங்களை அருனான்.
ஆகவே, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு இஸ்லாத்திற்கு வழி காட்டிய பின், தன் தூதர் (ஸல்) அவர்கடம் என்னை உண்மை பேசச் செய்து உபகாரம் புரிந்தது போன்று வேறெந்த உபகாரத்தையும் நான் மிகப் பெரியதாக ஒரு போதும் கருதவில்லை. நான் அவர்கடம் பொய் பேசியிருந்தால், (போருக்குச் செல்லாமல்) பொய் சொன்னவர்(களான நயவஞ்சகர்)கள் அழிந்து போனது போல நானும் அழிந்து விட்டிருப்பேன். ஏனெனில், இறைவன் வேத அறிவிப்பு (வஹீ) அருய போது யாருக்கும் சொல்லாத கடுமையான சொற்களைப் பொய் சொன்னவர்கள் குறித்து அருளினான்.
அவர்களிடம் நீங்கள் திரும்பும் போது அவர்களை நீங்கள் விட்டு விடுவதற்காக உங்களிடம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். அவர்களை விட்டு விடுங்கள்! அவர்கள் அசுத்தமாவர். அவர்களின் தங்குமிடம் நரகம். இது அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கான தண்டனை. நீங்கள் அவர்கள் மீது திருப்தியடைய வேண்டுமென்பதற்காக உங்களிடம் சத்தியம் செய்கின்றனர். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டாலும் குற்றம் புரியும் கூட்டத்தை அல்லாஹ் பொருந்திக் கொள்ள மாட்டான் என்று அல்லாஹ் கூறினான். (9:95, 96)
தியாகத்திற்குக் கிடைத்த சிறந்த பரிசு இதுதான். இது போல் நமது வாழ்வும் நலமாக அல்லாஹ்விடம் இறைஞ்சுவோமாக!.
rasmin
Comments