கிழித்தெறியப் பட்ட பரேலவிக் கொள்கையும்,நிலைநாட்டப் பட்ட சத்தியமும்
கிழித்தெறியப் பட்ட பரேலவிக் கொள்கையும்,நிலைநாட்டப் பட்ட சத்தியமும்
கடந்த சனி ஞாயிறு நாட்களில் ஒப்பந்தப்படி நடக்க வேண்டிய விவாதம் மிகவும் பெரிய எதிர்பார்ப்புடன் ஆரம்பமானது.
இமாம்களின் விளக்கம் இன்றி குர்ஆன் ஹதீஸை விளங்க முடியுமா? என்ற தலைப்பில் விவாதம் ஆரம்பமாகியது.
இமாம்களின் விளக்கம் இன்றி மிகத் தெளிவாக குர்ஆனும் ஹதீஸ{ம் விளங்கும் என்றும் இமாம்கள் என்பவர்களின் விளக்கத்தினால் தான் நிறைய சிக்கல்களும் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன என்பதை விவாதிக்க தவ்ஹீத் ஜமாத் தரப்பில் சகோதரர் பி.ஜெயும் இமாம்களின் விளக்கம் இன்றி குர்ஆன் ஹதீஸ்கள் விளங்காது என்று வாதிக்க பரேலவி ஜமாத் சார்பாக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும் கலந்து கொண்டு வாதிக்க ஆரம்பித்தனர்.
ஆரம்பமே அசத்தலான பி.ஜெயின் வாதம் :
தனது தரப்பின் சார்பில் வாதிக்க ஆரம்பித்த பி.ஜெ குர்ஆன் அனைவருக்கும் இமாம்களின் விளக்கம் இன்றி மிகத் தெளிவாக விளங்கும் என்பதற்கான தனது முதல் ஆதாரமாக திருமறைக் குர்ஆன் வசனங்களை முன்வைத்து விவாதத்தை தொடங்கினார்.
ஆனால் இமாம்களின் கருத்துக்கள் இதற்கு மாற்றமாக பல சிக்கல்களைத் தான் உருவாக்கியுள்ளது என்று இமாம்களின் குருட்டுக் கருத்துக்களை எடுத்து வைக்க ஆரம்பித்தார்.
ஒரு இரவை ஒரு வருடமாக மாற்றிய அபூஹனீபா :
அல்லாஹ் திருமறைக் குர்ஆனை லைலதுல் கத்ர் என்ற சிறப்புமிகு இரவில் இறக்கியதாக கூறுகிறான் (97:1-5)ஆனால் அபூஹனீபாவோ லைலதுல் கத்ர் இரவு ரமழானிலும்; வரும் ரமழான் அல்லாத காலங்களிலும் வரும் வருடம் முழுவதும் வரும் என்று லைலதுல் கத்ர் பற்றி விளக்கம் சொல்லியுள்ளார்.
அல்லாஹ் சொன்னது தெளிவாக விளங்குகிறது இமாம்கள் சொன்னதுதான் இவ்வளவு குழப்பம் மிக்கது என்பதை தனக்கே உரிய அழகிய பாணியில் விளக்கினார் பி.ஜெ.
அதே போல் பரேலவிகள் போற்றிப் புகழும் இப்னு அரபி என்பவர் லைலதுல் கத்ர் இரவு ஷஃபான், ரபியுள் அவ்வல், ரபியுள் ஆகிர், ரமழான் ஆகிய மாதங்களில் வரும் என்று 97வது அத்தியாயத்திற்கு விளக்கம் சொல்லியுள்ளார்.
முடிவு தெரிந்த ஜமாலியின் முதல் வாதம் :
பி.ஜெயின் கேள்விகளுக்கு பதில் சொல்லி தனது வாதத்தை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜமாலி அவர்கள் முதல் வாதத்தை ஆரம்பித்தவுடனேயே இமாம்களின் துணையுடன் தான் குர்ஆன் ஹதீஸை விளங்க வேண்டும் என்ற தனது கருத்து தவறானது என்பதை ஒத்துக் கொண்டார்.
அதாவது இப்னு அரபி லைலதுல் கத்ர் தொடர்பாக சொன்ன கருத்தில் ஷஃபான் ரபியுள் அல்வல் ரபியுள் ஆகிர் போன்ற மாதங்களிலும் லைலதுல் கத்ர் வரும் என்று கூறியது தவறு ரமழானின் வரும் என்று அவர் சொன்னதை மாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி தான் கொண்டிருக்கும் கொள்கை தவறு என்பதை ஒத்துக் கொண்டார்.
ஸைத்(ரலி)அவர்களின் மனைவியை ஸைத் அவர்கள் தலாக் விட்ட பின் நபியவர்கள் திருமனம் செய்து கொண்டார்கள். அல்லாஹ்வே நபியவர்களுக்கு திருமனம் செய்து வைத்ததாக திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
இந்த சம்பவத்திற்கு விளக்கம் சொல்ல வந்த இமாம்கள் என்பவர்கள் நபியவர்கள் ஸைத் (ரலி)அவர்கள் ஸைனப் (ரலி)அவர்களுடன் குடும்பம் நடத்தும் போதே அவர்களை விரும்பியதாகவும் அவர்களை பார்க்கக் கூடாத தோற்றத்தில் பார்த்து விட்டதாகவும் எழுதி வைத்துள்ளதை சுட்டிக் காட்டி இதுதான் நபிமார்களுக்கு இமாம்கள் கொடுக்கும் கண்ணியமா? என்று கேட்டு கேள்வியை பி.ஜெ அவர்கள் முன்வைத்த போது எந்த இமாமும் இப்படிக் கூறவில்லை என்று மறுத்தார் ஜமாலி.
தப்ஸீர் ஜலாலைன் தபரி பகவி நஸபி கஷ்ஷாப் போன்ற கிதாபுகளை எடுத்துக் காட்டி தனது வாதத்திற்கான ஆதாரத்தை நிறுவினார் பி.ஜெ.
எப்படி இதற்கு முந்தைய விவாதங்களில் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் காலத்தை கடத்தினாரோ அதே பாணியில் இம்முறையும் எந்த பதிலையும் சொல்லாமல் காலத்தை கடத்த ஆரம்பித்தார்.ஆனால் இந்த கேள்விகளுக்கெல்லாம் தன்னிடம் பதில் இல்லை என்பதை சொல்லும் விதமாக இமாம்கள் தவறு செய்திருந்தால் தவரை விடுத்து நல்லதை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். இமாம்கள் தான் சரியாக விளங்குவார்கள் என்று கூறியவர் இறுதியில் இமாம்கள் தவறாக விளங்கியுள்ளதை ஒத்துக் கொண்டார்.
சொத்துப் பங்கீடும் சொதப்பிய ஜமாலியும்.
சொத்துப் பங்கீடு தொடர்பாக ஒரு கேள்வியை பி.ஜெயிடம் கேட்டார் ஜமாலி.அதாவது ஒரு பெண் இறக்கும் போது அவருக்கு தாய் தந்தை பெண்பிள்ளைகள் கணவன் ஆகியோர் இருந்தால் என்ன சட்டம் என்று கேட்டார் ஜமாலி.
திருக்குர்ஆன் மொழியாக்கம் 111வது குறிப்பில் இது தொடர்பாக கூறியுள்ளோம் தவறாக இருந்தால் அது எப்படி தவறு என்பதை வாதமாக முன்வையுங்கள் என்று சொன்னார் பி.ஜெ ஆனால் சமாளிப்பதில் வல்லவரான ஜமாலியோ அரங்கத்தில் இருக்கும் கொஞ்சநஞ்ச கூட்டத்தையாவது தக்க வைத்துக் கொள்ளும் எண்ணத்தில் அதன் பின் எதுவும் பேசவில்லை.
ஜமாலிக்கு இலக்கணம் கற்றுக் கொடுத்த பி.ஜெ :
லா உக்ஸிமு என்பதில் முதலாவது லா வருகிறது லா என்றால் இல்லை என்று அர்த்தம் உக்ஸிமு என்றால் சத்தியம் செய்கிறேன் என்று அர்த்தம் இரண்டையும் சேர்த்தால் சத்தியம் செய்ய மாட்டேன் என்று தானே வரவேண்டும் ஆனால் தாங்கள் மொழியாக்கம் செய்த திருக்குர்ஆனில் (மொழியாக்கங்கள் அனைத்திலும் இப்படித்தான் மொழிபெயர்பு செய்துள்ளார்கள்.) சத்தியம் செய்கிறேன் என்று மொழியாக்கம் செய்துள்ளீர்களே இமாம்களின் துணையின்றி இதனை விளக்குங்கள் என்று கேட்டார் ஜமாலி.
அரபி இலக்கணம் தெரியாததினால் ஏற்பட்ட குறைதான் இது என்பதை புரிந்து கொண்ட பி.ஜெ இலக்கணப் பாடம் நடத்த ஆரம்பித்தார்.
அதாவது சத்தியத்திற்கு முன்பாக லா எனும் சொல் இடம் பெரும் அந்த லா எனும் சொல்லுக்கு அதிகப் படியாக வரும் லா என்று பெயர். இப்படி சத்தியத்திற்கு முன்பு அதிகப் படியாக லா எனும் எழுத்து வரும் போது அதற்கு பொருள் கொள்ளக் கூடாது என்பது அரபி இலக்கண விதி (ஹிதாயா) இது தெரியாததினால் விளைந்ததுதான் இந்தக் கேள்வி என்பதை தெளிவு படுத்தினார்.
சாலிம் (ரலி) விஷயமாக எடுபடாத ஜமாலியின் சமாளிப்புகள் :
இளைஞராக இருந்த சாலிம் (ரலி)அவர்களுக்கு பாலுட்டும் படி நபியவர்கள் அபூஹ{தைபா அவர்களின் மனைவியிடம் கூறியதாக முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸ் தவறானது நபியவர்கள் மீது யாரோ ஒருவர் பொய்யான கதையை இட்டுக் கட்டியிருக்கிறார் நபியவர்கள் இப்படிப்பட்ட ஒழுக்க சீர்கேட்டுக்கு வழி வகுக்க மாட்டார்கள் என்றும் பால் குடிச் சட்டம் என்பது குழந்தை பிறந்து இரண்டு வருடத்திற்குட்பட்டது என்பதாலும் இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி நாம் அந்த ஹதீஸை மறுக்கிறோம்.
ஆனால் குறிப்பிட்ட ஹதீஸ் சரியானது அதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வாதிட வந்த ஜமாலியிடம் அந்த ஹதீஸை ஏற்றுக் கொண்டால் அதற்கு என்ன சட்டம் சொல்வீர்கள் என்று கேட்டார் பி.ஜெ ஆனால் விவாதத்தின் இறுதி வரை சாலிம் விஷயமாக சட்டத்தை ஜமாலி சொல்லவேயில்லை.
ஸாலிம் அவர்கள் வாய் வைத்தா குடித்தார்கள் கறந்து குடித்திருப்பார்கள் என்று சகட்டு மேனிக்கு ஒரு கேள்வியை முன்வைத்தார் ஜமாலி. அப்படியாயின் ஒருவன் ஒரு வீட்டிட்கு அடிக்கடி போய் வரவேண்டி ஏற்பட்டால் அவன் அந்த வீட்டுப் பெண்மணியிடம் பாலைக் கறந்து குடித்தால் சரி என்று சட்டத்தை சொல்வீர்களா? என்று பி.ஜெ அவர்கள் கேட்க வாய் திறக்காமல் இருந்தார் ஜமாலி.
அண்ணியப் பெண்ணிடம் பேன் பார்க்கும் அசிங்கம் :
ஆபாசத்தையும் அசிங்கங்களையும் மாத்திரமே மூலதனமாக கொண்டு இயங்குகின்ற மத்ஹபுவாதிகள் ஹதீஸ்கள் என்ற பெயரால் நபியவர்களைப் பற்றி வரும் ஆபாசங்களுக்கும் முட்டுக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
உம்மு ஹராம் (ரலி)அவர்கள் வீட்டிட்கு நபியவர்கள் சென்று அவர்களின் அருகில் தூங்குவார்கள் உம்மு ஹராம் அவர்கள் நபியவர்களுக்கு பேன் பார்த்து விடுவார்கள் என்று இடம் பெறும் ஹதீஸை குர்ஆனுக்கு முரண்படுவதாக கூறி நாம் மறுத்து வருகிறோம்.
ஆனால் இந்த ஹதீஸ் சரியானது என்று கூற வந்த ஜமாலியிடம் சரி என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தெளிவாக நிரூபித்துக் காட்டுங்கள் என்று பல முறை கேட்டும் அதனை அவர் கண்டு கொள்ளவே இல்லை.
அதே போல் ஒருவன் அண்ணியப் பெண்ணின் மடியில் படுத்து தனது தலையில் பேண் பார்த்துவிடச் சொன்னால் அது சரியென்று நீங்கள் பத்வா கொடுப்பீர்களா? என்றும் பி.ஜெ அவர்கள் கேட்டதற்கு இறுதிவரை ஜமாலி வாய் திறக்கவில்லை.
உடலுறவும் கத்தம் தான் ஜமாலியின் புதிய ஆதாரம் :
மரணித்தவருக்காக குர்ஆன் ஓதி கத்தம் கொடுப்பதென்பது இஸ்லாத்தில் இல்லாத வழிமுறை பித்அத் ஆகும்.நபியவர்கள் உயிருடன் இருக்கும் போதே பல நபித்தோழர்களும் நபியவர்களின் பிள்ளைகளும் பாசமிகு மனைவி கதீஜா அவர்களும் மரணித்துள்ளார்கள்.ஆனால் அவர்களில் யாருக்காகவும் நபியவர்கள் கத்தம் கொடுத்ததில்லை.கொடுக்கச் சொல்லவும் இல்லை.
ஆனால் கத்தம் என்றொன்று மார்க்கத்தில் இருப்பதாகக் கூறி பொது மக்களை ஏமாற்றி வயிற்றுப் பிழைப்பு நடத்துகிறார்கள் இந்த பரேலவிகள்.
அதன் உச்ச கட்டமாக ஒருவன் தனது மனைவியிடம் உடலுறவு கொண்டு விட்டு மரணித்த எனது தந்தைக்கு இது கத்தமாக மாறிவிடும் என்று சொன்னால் அது கத்தம் தான் என்று இலங்கையில் நடந்த விவாதம் ஒன்றில் ஜமாலி பேசியதை திரையில் போட்டுக் காட்டி விளக்கம் கேட்டார் பி.ஜெ வாய்ச் சொல்லில் வீரரான் ஜமாலியோ மதில் மேல் பூனையைப் போல் விழித்துக் கொண்டிருந்தார்.
பட்டியல் போட்டார் பி.ஜெ பதறினார் ஜமாலி.
குர்ஆனையும் ஹதீஸையும் இமாம்களின் துணையின்றி விளங்க முடியாது என்று வாதிட வந்த ஜமாலியிடம் இமாம்கள் குர்ஆனையும் ஹதீஸையும் விளங்கிய லச்சணத்தை பட்டியலிட்டு இதற்கெல்லாம் பதில் என்னவென்று பி.ஜெ கேட்டார்.கிட்டத்தட்ட 98 கேள்விகள் கேட்கப்பட்டதில் ஒன்றிரண்டிட்கு மாத்திரம் சில் சமாளிப்புகளை சொன்ன ஜமாலி மீதமிருந்த சுமார் 95க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு வாய் திறக்கவில்லை.
சகோதரர் பி.ஜெ அவர்கள் முன்வைத்த கேள்விகளில் சில……..
(இவையெல்லாம் விளக்கம் என்ற பெயரில் இமாம்கள்(?)என்பவர்கள் கூறியவைகள்)
1.இறைவன் ஒன்றைப் படைக்க நாடினால் ஆகு என்று சொன்னால் அது ஆகிவிடும் என்பது திருமறைக் குர்ஆன் வசனம்.இந்த வசனத்திற்கு விளக்கம் சொன்ன கஸ்ஸாலி என்பவர் இந்த குர்ஆன் வசனம் தவறானது என்று கூறிய விளக்கத்தை பி.ஜெ சுட்டிக் காட்டி இதுதான் உங்கள் இமாம்கள் திருமறையை விளங்கும் லட்சனமா என்று கேட்டார்.
2.வருடம் முழுவதும் லைலதுல் கத்ர் என்ற ஹனபியின் விளக்கத்திற்கு பதில் என்ன?
3.இப்னு அரபி ஷஃபான் ரபியுள் அல்வல் ரபியுள் ஆகிர் ஆகிய மாதங்களிலும் லைலதுல் கத்ர் வரும் என்று சொன்னதற்கு என்ன பதில்?
4.அடுத்தவர் மனைவி மீது நபியவர்கள் ஆசைப் பட்டார்களா?
5.பிர்அவ்ன் முஸ்லிம் என்று இப்னு அரபி சொன்னதற்கு பதில் என்ன?
6.மழை பெய்யும் முறையை ராஸி என்ற இமாம் மறுத்ததற்கு என்ன பதில்?
7.மழை தொழுகை இல்லை என்ற இமாம்களின் விளக்கத்திற்கு என்ன பதில்?
8.கிரகணத் தொழுகையை மறுத்த இமாம்களின் நிலை என்ன?
9.ஏழு வானம் என்றால் இமாம்கள் சொன்ன விளக்கம் 1வது வானத்தில் சந்திரன் ஒட்டப் பட்டுள்ளது.2வது வானத்தில் மெற்குறியும் 3வது வானத்தில் வீனஸ் 4வது வானத்தில் சூரியன் 5வது வானத்தில் செவ்வாய் 6வது வானத்தில் வியாழன் 7வது வானத்தில் சனி வானத்திற்கே இன்னும் மனிதன் போகாத நிலையில் இந்தக் கண்டுபிடிப்புக்கு என்ன விளக்கம்?
10.உருவப் படமோ நாயோ உள்ள வீட்டிற்கு மலக்குகள் வரமாட்டார்கள் என்ற ஹதீஸிற்கு கஸ்ஸாலி கொடுத்த விளக்கம் சரியானதா? இவர்தான் இமாம் என்று சொல்லப்படுபவரா?
11.இடி பற்றிய வசனங்களுக்;கு மலக்குமார் என்று விளக்கம் சொன்னது சரியா?
12.இப்லீஸ் என்பதற்கு இமாம்கள் கொடுத்த விளக்கம் சரியானதா?
13.ஒரு ரக்அத் வித்ர் தொழ முடியும் என்று நபியவர்கள் சொல்லியிருக்க கூடாது என்று இமாம்கள் சொன்னதை ஏற்றுக் கொள்வது முறையா?
14.மஃரிபுக்கு முன் சுன்னத் இருக்கிறது என்று ஹதீஸ் இருக்க சுன்னத் தொழுகை கூடாது என்று சொன்னது சரியானதா?
15.விபச்சாரம் செய்த யூதனுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று ஹதீஸ் இருக்கிறது.ஆனால் யூதனுக்கு தண்டனை கொடுக்கக் கூடாது என்று அபூஹனீபா சொல்வது சரியானதா?
16.மழைத் தொழுகை ஜமாத்தாக தொழ வேண்டும் என்று ஹதீஸ் இருக்கும் போது ஜமாத்தாக தொழக்கூடாது என்று அபூஹனீபா சொன்னதற்கு விளக்கம் என்ன?
17.நடுத் தொழுகை எது என்பதில் ஏன் இத்தனை தடுமாற்றம்?
18.அத்தீன் என்பதற்கும் ஸைத்தூன் என்பதற்கும் ஏன் இவ்வளவு தடுமாற்றம்?
19.காளை மாட்டை வணங்கலாம் என்று இப்னு அரபி சொன்னதற்கு பதில் என்ன?
இப்படி கிட்டத்தட்ட 98 கேள்விகளை சகோதரர் பி.ஜெ அவர்கள் முன்வைத்தார் ஆனால் அதில் ஒன்றுக்குக் கூட பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கினார் ஜமாலி.
விவாத அரங்கம் சிரிப்பில் மூழ்கிய சில முக்கிய சந்தர்ப்பங்கள் :
இப்லீஸ் என்றால் யார் என்று இமாம்கள் கொடுத்த விளக்கத்தினை சகோதரர் பி.ஜெ எடுத்துக் காட்டியதும் அரங்கமே சிறிப்பில் மூழ்கியது.
அதாவது இப்லீஸ் என்பவன் தனது வாலை தன்னுடைய பின் துவாரத்தில் நுழைப்பானாம். பின்பு ஒரு முட்டை போடுவானாம் அது பல ஷைத்தான்களை உருவாக்குமாம்.அந்த இப்லீஸ் மொத்தம் 30 முட்டைகள் போடுவானாம் 10 முட்டை கிழக்கிலும் 10 முட்டை மேற்கிலும் 10 முட்டை மத்தியிலும் போடுவானாம்.(குர்ஆனை இமாம்கள் விளங்கிய லட்சனம் ?)
சிலை வணக்கத்தினை விட்டும் என்னையும் என் சமுதாயத்தையும் காப்பாற்றி விடு என்று இப்றாஹீம் நபி துஆ கேட்டதற்கு விளக்கம் சொன்ன கஸ்ஸாலி இந்த வசனம் தங்கம் வெள்ளியில் ஆசைப்படக் கூடாது என்றுதான் சொல்கிறது என்று விளக்கம் கூறியுள்ளார்.என்பதை பி.ஜெ அவர்கள் எடுத்துக் காட்ட ஜமாலி தரப்பால் வந்திருந்தவர்களுக்கே சிரிப்பை அடக்க முடியவில்லை.
தலாக் பற்றி இமாம்கள் விளக்கம் சொல்லும் போது ஒருவன் தலாக் சொன்னால் கெட்ட தலாக், அகலத் தலாக், நீளத் தலாக், மார்பு தலாக், தலை தலாக், முடி தலாக், முதுகு தலாக், பெண் குறி தலாக், பெண் குறியில் உள்ள முடியின் அளவுக்கு தலாக், ரத்தம் தலாக் என்றெல்லாம் பகுதி பகுதியாக தலாக் சொல்லலாம் என்று விளக்கம் சொல்லியுள்ளார்கள். இதற்கு பதில் என்ன என்று பி.ஜெ கேட்க ஜமாலி தரப்பினரே முகம் சுழித்து இவ்வளவு அசிங்கமா இமாம்கள் எழுதியுள்ளது என்று நினைக்குமளவு ஆகிவிட்டது.
அதே போல் முடியில்லாத மர்ம உருப்பின் முடியளவுக்கு தலாக் என்று ஒருவன் சொன்னால் அதற்குறிய சட்டம் என்ன என்ற முஹம்மத் பின் ஹஸனிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் தொடர்பாக ஜமாலியிடம் கேட்டதற்கு இறுதி வரை பதிலே இல்லை.
27:52வது வசனத்தில் மறுமையின் அடையாளமாக ஒரு மிருகம் வெளிப்படும் என்று அல்லாஹ் கூறுகிறான் அந்த மிருகத்தைப் பற்றி விளக்கம் சொன்ன இமாம்கள் அந்த மிருகத்தினை வர்ணிக்கிறார்கள் அதாவது அந்த மிருகம் மாட்டுத் தலையையும் பன்றிக் கண்ணையும் சிங்கத்தின் நெஞ்சையும் பூனையின் இடுப்பையும் ஒட்டகத்தின் காலையும் கொண்டிருக்குமாம் மூஸா நபியின் கைத் தடியையும் கையில் வைத்துக் கொண்டிருக்குமாம்.
மூஸா நபியவர்கள் பாம்மைப் போட்டதைப் பார்த்தவுடன் பிர்அவ்னுக்கு பெரும் சப்தத்துடன் காற்று வெளிப்பட்டதாம் அன்றுதான் அவன் முதலாவது காற்று விட்டானாம்.
இனிமேல் விவாதம் என்ற பேச்சையே பரேலவிகள் எடுக்க மாட்டார்கள் என்ற அளவுக்கு சத்தியம் நிலை நாட்டப் பட்டு அசத்தியம் குழி தோண்டிப் புதைக்கப் பட்டது.
விவாத வீடியோக்கள் வெளியிடப் பட்டுள்ளன அதனைப் பார்ப்பவர்கள் இமாம்கள் என்பவர்களின் அசிங்கமான விளக்கங்களையும் ஜமாலியின் சமாலிப்புகளையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
வெற்றியைத் தந்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.
Comments