அபாபீல் பறவைகள் எங்கே போயின?



அபாபீல் பறவைகள் எங்கே போயின?


அல்ஜன்னத் மாத இதழில் பீஜே ஆசிரிய்ராக இருந்த போது பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது ஏன் அபாபீல் பறவைகள் வரவில்லை எண்ற சந்தேகத்துக்கு விளக்கமாக பீஜே எழுதியதை இலங்கை ஹஃபீல் அவர்கள் தேடி எடுத்து அனுப்பியுள்ளார். வரலாற்றுப் பதிவாக இதை வெளியிடுகிறோம்.
பிஜைனுல் ஆபிதீன்.
(முஹம்மதே!) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையாஅவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையாஅவர்களுக்கு எதிராகப் பறவைகளைக் கூட்டம் கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்.
(அல்குர்ஆன் 105:1-5)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் நடந்த அற்புத வரலாற்றை இங்கே இறைவன் குறிப்பிடுகிறான். உலகில் முதன் முதலில் இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட ஆலயம் கஃபாவாகும். அதனைத் தகர்க்கும் எண்ணத்துடன் புறப்பட்டு வந்த யானைப் படையினரை இறைவன் அழித்தொழித்த இந்த வரலாற்றை அறியாத முஸ்லிம்கள் இருக்க முடியாது.
அவர்கள் அந்த வரலாற்றை மட்டும் அறிந்தார்களே தவிர புரிந்து கொள்ள வேண்டிய விதத்தில் புரியவில்லை. இல்லையென்றால் இந்தியாவில் ஒரு இறையில்லம் மதவெறி பிடித்த ரவுடிக் கும்பலால் தரைமட்டமாக்கப்படும் போதும் இவர்கள் அபாபீல் பறவைகளைத் தேடிக் கொண்டிருக்க மாட்டார்கள்.
அபாபீல் பறவைகளை அனுப்பி தனது ஆலயத்தை இறைவன் காத்தது உண்மை. இதில் எள்ளளவும் ஐயமில்லை. உலகில் இருக்கும் எல்லாப் பள்ளிவாசல்களையும் காக்க அபாபீல் பறவைகள் வந்து விடும் என்பது இதன் அர்த்தமா உலகில் எந்தப் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட முடியாது என்று இந்த அத்தியாயம் உத்திரவாதம் தருகின்றதாமுஸ்லிம்கள் இதற்காக எந்தத் தியாகமும் செய்யத் தேவையில்லை என்பது தான் இதன் பொருளாஇல்லை! நிச்சயமாக இல்லை!
கஃபா எனும் ஆலயத்திற்கு மட்டும் இறைவன் வழங்கிய பிரத்தியோகமான சலுகையே இது. முஸ்லிம்கள் முதலில் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.    
பள்ளிவாயில்கள் அனைத்தும் இறைவனது இல்லங்கள்தான் என்றாலும் கஃபாவுக்கு என்று விசேஷமான தகுதிகள் உள்ளன.
முஸ்லிம்கள் தொழும் திசையாகவும்இணைவைப்பவர்கள் அனுமதிக்கப்படாத புனிதத் தலமாகவும்போர் செய்வது விலக்கப்பட்ட இடமாகவும்தவாப் எனும் பிரத்தியோகமான வணக்கம் நடைபெறும் ஆலயமாகவும்உலக முஸ்லிம்கள் குழுமி ஹஜ் எனும் வணக்கம் புரியும் தளமாகவும் அது அமைந்துள்ளது. கஃபாவுக்கு என்று சிப்புத் தகுதிகள் உள்ளன என்பதற்கு இவை சான்றுகள். மேலும் கஃபாவை அபய பூமியாகவும் இறைவன் ஏற்படுத்தியுள்ளான்.
புனிதமான ஆலயமான கஅபாவையும் மனிதர்களுக்கு நிலையானதாகவும் அல்லாஹ் ஆக்கிவிட்டான்
(அல்குர்ஆன் 5:97)
இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?
(அல்குர்ஆன் 29:67)
அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்கு வசிப்படமாக நாம் ஆக்கவில்லையா?
(அல்குர்ஆன் 28:57)
இந்த வசனங்கள் யாவும் கஃபா ஆலயத்துக்கு இறைவன் தனி உத்திரவாதம் வழங்கியிருப்பதைக் குறிப்பிடுகின்றன. ஆரம்பம் முதலே அந்த ஆலயத்தை மானிடாரின் அபய பூமியாகவும்,பாதுகாக்கப்பட்ட புனிதத் தளமாகவும் இறைவன் ஏற்படுத்தியுள்ள காரணத்தினால் அதைக் காக்கும் பொறுப்பை நேரடியாக அவன் ஏற்றுக் கொண்டான். உலகில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்தையும் காக்க அவன் அபாபீல் பறவைகளை அனுப்பி வைப்பான் என்பது இதன் அர்த்தமில்லை.
இன்னொரு முக்கியமான அம்சத்தையும் நாம் கவனிக்க வேண்டும். கஃபாவை அழிக்க யானைப் படையினர் வந்தபோது கஃபா ஒரே இறைவனை மட்டும் வணங்கும் தூய வழிபாட்டுத் தலமாக இருக்கவில்லை. இறைவனுக்கு ஆத்திரமூட்டும் வகையில் ஏராளமான கற்சிலைகள் அங்கே நிறுத்தப்பட்டிருந்தன. அவை கடவுள்களாக நம்பப்பட்டு வணங்கப்பட்டு வந்தன. ஏக இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயமாக அது இருந்தும் மாசுபடுத்தப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் அதை இறைவன் பாதுகாத்தான்.
அல்லாஹ்வின் இல்லமாக இருக்க வேண்டிய விதத்தில் அது இல்லாமலிருந்தும் அதை இறைவன் பாதுகாத்தது அந்த இடம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட புனித பூமி என்பதைக் காட்டுகின்றது. அதில் எவ்வளவு மோசமான காரியங்கள் நிகழ்ந்த போதும் அவன் அதை அழிந்து போக விட மாட்டான். இதைத்தான் அந்த 105- ஆவது அத்தியாயம் விளக்குகின்றது. 
அப்படியானால் மற்ற பள்ளிவாசல்களின் நிலைஅதற்கு எந்த உத்திரவாதத்தையும் இறைவன் வழங்கவில்லை. மனிதர்கள்தான் அதைக் காக்கும் முயற்சியில் இறங்க வேண்டும் எனத் தெளிவாக இறைவன் அறிவித்து விடுகிறான்.
மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும்,ஆலயங்களும்வழிபாட்டுத் தலங்களும்அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப் பட்டிருக்கும்.
(அல்குர்ஆன் 22:40)
ஒவ்வொரு சமயத்தினரும் பிற சமயத்தினாரின் வழிபாட்டுத் தலங்களைத் தகர்க்கும் முயற்சியில் ஈடுபடாதவரை அனைவரின் வழிபாட்டுத் தலங்களும் பாதுகாக்கப்படும். மனிதர்கள் சிலர் மூலம் சிலரை இறைவன் தடுக்காவிட்டால் எந்த ஆலயத்துக்கும் உத்திரவாதம் இல்லை. பள்ளிவாயில் ஒன்றை இடித்தால் தங்கள் கோவில்களுக்கு இருந்த பாதுகாப்பு வளையத்தை அவர்கள் உடைத்து விட்டார்கள் என்பது பொருள். அபாபீல் பறவைகளை எதிர்பார்த்து வாளாவிருக்க முடியாது என்பதை இறைவன் மிகத் தெளிவாக அறிவித்து விட்டான். அப்படியானால் முஸ்லிம்கள் என்ன செய்வதுஇறைவன் மிகத் தெளிவாக அதையும் அறிவிக்கின்றான்.
நம்பிக்கை கொண்டோரை விட்டும் (துரோகத்தை) அல்லாஹ் தடுத்து நிறுத்துகிறான். துரோகம் செய்வோரையும்நன்றி கெட்டவர்களையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
(அல்குர்ஆன் 22:38)
போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர் என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன்.
(அல்குர்ஆன் 22:39)
எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும்ஆலயங்களும்வழிபாட்டுத்தலங்களும்அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்மிகைத்தவன். 
(அல்குர்ஆன் 22:40)
இறைவனது உதவியை முஸ்லிம்கள் பெற வேண்டுமானால் அவர்கள் அல்லாஹ்வுக்கு உதவ வேண்டும். அல்லாஹ்வுக்கு உதவுவது என்றால் தொழுகையை நிலை நாட்டுதல்ஜகாத் கொடுத்தல்நன்மையை ஏவுதல்தீமையைத் தடுத்தல் ஆகிய நான்கு காரியங்கள் என்று இறைவன் தெளிவாக்குகிறான்.
எந்த இறையில்லம் தகர்க்கப்பட்ட போது தங்கள் உயிரைப் பணயம் வைத்து தங்களின் அதிருப்தியைத் தெரிவித்தார்களே அந்த இறையில்லத்திற்குச் சென்று தொழுகையை நிலை நாட்டியவர்கள் மிகச் சிலர். ஸகாத் கொடுத்து வருவோர் அரிதிலும் அரிது. நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில் இறைவனின் உதவியை எப்படி எதிர்பார்க்க முடியும்?
ஈமானிய வலிமை மிக்க இத்தகைய கூட்டம் சிறுபான்மையினராக இருந்தாலும் அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். அபாபீல் பறவைகளை எதிர்பார்ப்பதை விட்டு விட்டு இந்தக் கடமைகளை முஸ்லிம்கள் கடைப்பிக்கும் உறுதியை இன்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
நமக்குத் திட்டமிட்டு அநீதி இழைக்கப்படும் போதுநியாயம் கிடைக்காது என்று உறுதியாகத் தெரியும் போது எதிர்த்துப் போராட திருக்குர்ஆன் நமக்கு அனுமதியளிக்கின்றது என்பதையும் முஸ்லிம்கள் உணர வேண்டும். தங்களை அதற்குத் தயார்படுத்திக் கொள்ளுமாறு 8:59,60வசனங்கள் கூறுகின்றன. 
இறை நம்பிக்கையை வளர்த்து இந்தக் கடமைகளை இனியேனும் முஸ்லிம் சமுதாயம் நிறைவேற்றும் என்று எதிர்பார்ப்போம்.
மேலும் பார்க்க
பீ.ஜைனுல்ஆபிதீன்

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இஸ்லாம் கூறும் மனித நேயம்

பூரியான் பாத்திஹா ஓதுபவர்கள் ஷியாகளையே பின்பற்றுகிறார்கள்