உணர்வு பதில்கள் தொகுப்பு
உணர்வு பதில்கள் தொகுப்பு
தமுமுகவின் அமைப்பாளராகவும், உணர்வு இதழின் ஆசிரியராகவும் பீஜே இருந்த போது பீஜே அளித்த பதில்களின் தொகுப்பு.
இப்போது அளிக்கப்படும் பதில்களைப் போல் விரிவாக இல்லாமல் சுருக்கமாக இந்தப் பதில்கள் அமைந்துள்ளன.
1995 முதல் 1998 செப்டம்பர் வரை அளிக்கப்பட்ட பதில்களை ஒரு சகோதரர் அனுப்பியுள்ளார். அன்று இருந்த சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ள உதவும் என்பதால் வரலாற்றுப் பதிவாக இதை வெளியிடுகிறோம்.
அந்தப் பதில்கள் குறித்து இப்போது சுட்டிக்காட்டும் கருத்துக்கள் சிவப்பு வண்ணத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
உணர்வு முதல் ஆண்டு ஜீரோ இதழுக்குப் பின்னர் வெளியான முதல்இதழில் அளிக்கப்பட்ட பதில்கள்
? உள்நாட்டில் நடந்து வரும் ஜனநாயகப் படுகொலைகளைப் பற்றி வாய் திறக்காத அரசியல்வாதிகள்,அண்டை நாட்டில் வரம்பு மீறி செயல்படும் விடுதலைப் புலிகளுக்கு உதவியும், இங்கு பாதுகாப்பும் கொடுத்து வருவதைப் பற்றி?
குபேப் சாபித், பேர்ணாம்பட்டு
! இங்கே ஜனநாயகப் படுகொலைகளின்போது பாதிக்கப்படுவதும், அங்கே விடுதலைப் புலிகளால் அவதிப்படுவதும் முஸ்லிம்களாக இருப்பதுதான் காரணம்.
விடுதலைப் புலிகள் முஸ்லிம்களின் விரோதிகள் என்பது தான் அன்று தமுமுகவின் நிலையாக இருந்தது என்பதையும் இப்போது அதில் இருந்து தடம்மாறி விட்டார்கள் என்பதையும் இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்
? தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கேரளாவில் இயங்கி வரும் பி.டி.பி.யுடன் இணைந்து செயல்பட்டால் இன்னும் வலுவாக இருக்குமல்லவா?
லி ஜீயென், பரங்கிப்பேட்டை
! தேர்தலில் போட்டியிட்டு எந்தப் பதவிகளையும் பெறுவதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கொள்கையை பி.டி.பி. ஏற்றுக் கொள்வதில்லை. பி.டி.பி. தனது நிலையை மாற்றிக் கொண்டால் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கலாம்.
பிடிபியினர் தேர்தலில் போட்டியிடும் முடிவைக் கைவிட்டால் நல்லது என்று நாம் தமுமுக சார்பில் 1995ல் மேற்கண்டவாறு எழுதினோம். ஆனால் தமுமுக தான் தனது தரத்தை கீழே இறக்கிக் கொண்டது என்பதை இதில் இருந்து அறியலாம்.
? பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 69 சதவீத இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கென்று மத்திய அரசு எத்தனை சதவிகிதம் ஒதுக்கியுள்ளது?
அபூ நஹ்வி, பரங்கிப்பேட்டை
! ரேஷன் கடைகளில் அதிக சர்க்கரை பெறுவதற்காகக் குடும்பத்தில் உள்ள சர்க்கரை வியாதிக்காரர்களையும் சேர்த்துக் கணக்கு காட்டுவார்கள். ஆனால் அவருக்குச் சர்க்கரை கொடுக்கமாட்டார்கள். இடஒதுக்கீட்டில் இந்திய முஸ்லிம்களின் நிலை இதுதான்.
? தேசிய லீக் தலைவர் லத்தீப் சாஹிப் கலைஞரின் அனுமதியுடன் புராதனக் கோயில்கள் சம்மந்தமாக ஆய்வு நூல் ஒன்றை எழுதப் போவதாக சட்டசபை பேச்சுத் தொடரில் வந்துள்ளதே இது எதைக் காட்டுகின்றது?
ஜீயென், பரங்கிப்பேட்டை
! தேசிய லீக்கின் அறிவிக்கப்படாத தலைவர் கலைஞர் என்பதையும், லத்தீப் சாஹிபுக்கு சமுதாயத்தின் மீதுள்ள அக்கரையையும் (?) இது காட்டுகின்றது.
? உலகில் குறிப்பாக இந்தியாவில் முஸ்லிம்கள் முன்னேற்றம் அடைவார்களா? எப்போது?
பா. கலீல் அஹ்மத், பரங்கிப்பேட்டை
! அடைவார்கள். இஸ்லாத்தைப் பூரணமாகப் பின்பற்றும்போது.
? சிவசேனா, விடுதலைப் புலிகள் ஒப்பிடுக!
ஜீயென், பரங்கிப்பேட்டை
! எல்லாவற்றிலும் இரண்டும் ஒன்றுதான்.
? தமிழ்நாடு போலீஸை மீண்டும் ஸ்காட்லாண்டு போலீஸ் உடன் ஒப்பிடுகிறார்களே?
மஹேஜபீன், பேர்ணாம்பட்டு
! விருதுநகர் பாண்டியம்மாள், வக்கீல் விஜயன், மீனாட்சியம்மன் கோவில் குண்டு வெடிப்பு ஆகிய வழக்குகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு குற்றாவளிகளைப் பிடித்ததற்காக அவ்வாறு ஒப்பிட்டிருப்பார்கள்.
? இந்தியாவிற்கு முஸ்லிம்கள் செய்தது என்ன? பதிலாக இந்தியா முஸ்லிம்களுக்கு என்ன செய்தது?
அர்ஷத், பேர்ணாம்பட்டு.
! துண்டு துண்டாகச் சிதறிக்கிடந்த நிலப்பரப்புகளை ஒரு நாடாக ஆக்கியதும், நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்ததும், வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற்றுத் தந்ததும், இந்தியாவிற்கு முஸ்லிம்கள் செய்தவை. நாடென்ன செய்தது உனக்கு என்று கேட்காதே என்ற அரிய தத்துவம் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் கிடைத்த பரிசு!
? உலக அழகிப் போட்டி நடத்துவதன் மூலம் பிற நாடுகளுடனான வர்த்தக உறவுகள் வலுப்படும் என்ற கருத்து நிலவுவது பற்றி?
இறைநேசப்பிரியன், சிறைவாச(க)ன், வேலூர்
! இந்தியா மற்றும் முஸ்லிம் நாடுகள் இதுவரை உலக அழகிப் போட்டி நடத்தியதில்லை. ஆனாலும் வர்த்தக உறவுகள் நன்றாகவே உள்ளன. எனவே அழகிப் போட்டி நடத்துவதால் சதை வியாபாரம் அதிகரிப்பதைத்தான் அவ்வாறு கூறுகின்றனர். பெண்களை 95 சதவிகித நிர்வாணக் கோலத்தில் காட்டித்தான் வர்த்தக உறவுகளை வளர்க்க முடியும் என்றால் அவ்வாறு கூறுவோர் "மாமா'க்களாகத்தான் இருப்பார்கள்.
? இஸ்லாத்திற்கு எதிரான வாதங்களை மட்டும் பெரிதுபடுத்தி வெளியிடும் தேசிய இதழ்கள் அந்த வாதங்களை முறியடிக்கும் அறிவுப்பூர்வமான விளக்கங்களை வெளியிடுவது இல்லையே. இந்த அவல நிலையைப் போக்க என்ன வழி?
அபூநஹ்வி, பரங்கிப்பேட்டை
! அதே வேகத்துடன் தேசிய இதழ்களின் முகமுடிகளைக் கிழித்தெறிவதுதான் வழி. வெகு விரைவில் கிழித்துக் காட்டுவோம்.
? காஷ்மீரில் ஜனநாயக அரசு தேர்ந்தெடுக்கப்படுவது எந்த வகையில் தவறு? அரசு சற்று கடுமையாகக் கூட இருக்கட்டுமே!
அ. முஹம்மது அலி, மேல்பட்டாம்பாக்கம்.
! இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லை என்று தெளிவாக அறிவித்துவிட்டு சர்வாதிகார ஆட்டம் போட்டால் ஒரு வகையில் தவறில்லை. தான் வாக்களிக்கவும், வாக்களிக்காதிருக்கவும் உரிமை உண்டு என்று கூறிக் கொண்டு துப்பாக்கி முனையில் மிரட்டுவதுதான் தவறு.
உரிமை 01 ஆண்டில் – 06வது இதழில் இருந்து
? 1936 ல் இராஜாஜி அமைச்சரவையில் யாகூப் ஹஸன் சேட், 1952 ல் காமராஜர் ஆட்சியில் எஸ்.எம்.ஏ. மஜீது, 1967 ல் அண்ணா ஆட்சியிலும், 1969 ல் கருணாநிதி ஆட்சியிலும் சாதிக் பாட்ஷா,எம்.ஜி.ஆர். ஆட்சியில் ராஜா முஹம்மது, ஜெயலலிதா ஆட்சியில் முஹம்மது ஆஸிப், பிறகு நாகூர் மீரான் இப்போது ரகுமான் கான் ஆகியோர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். இவர்களால் சமுதாயம் பெற்ற பலன் என்ன?
மு. யூசுப் ரஹ்மத்துல்லாஹ், நாகூர்
! சமுதாயம் எந்தப் பலனையும் பெற்றதாகக் கூற முடியாது. தறுதலைப் பிள்ளை என்பதால் வாரிசுரிமையை மறுக்கக் கூடாது. நமது நாட்டில் நமக்குள்ள உரிமைக்கு பிரதிநிதித்துவம் கோரப்படுகிறது. இல்லையென்றால் முஸ்லிம்கள் இந்தியக் குடிமக்கள் அல்லர் எனக் கூறிவிடுவார்கள்.
? மூப்பனார் இந்திய தேசியத்திலிருந்து தமிழ் தேசியத்திற்கு வந்தது ஏன்.?
மு. யூசுப் ரஹ்மத்துல்லாஹ், நாகூர்
! இதற்கு முன்பு தேசிய அரசியலிலிருந்து விட்டு அதன் பிறகு காமராஜருடன் சேர்ந்து மாநில அரசியலுக்கு வந்து காமராஜர் மடிந்தவுடன் மீண்டும் தேசியத்துக்குப் போனவர்தான் மூப்பனார். இதற்கெல்லாம் காரணம் கண்டுபிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. எப்போது எந்தச் சரக்குக்கு மார்கெட் உள்ளதோ அதைத்தான் வியாபாரிகள் விற்பார்கள். இது மாநில அரசியல் சீசன். அவ்வளவுதான்.
? மதிமுக கட்சியின் சார்பில் மேலப்பாளையத்தில் மீலாது நபி விழா நடத்தி வை.கோ.வையும்,உலமாக்களையும் அழைத்துள்ளனரே? இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எம்.எஸ்.எம். பாஷா, மேலப்பாளையம்
! தஸ்லிமா நஸரீனைப் புகழ்ந்து தமது சங்கொலியில் எழுதிவிட்டு மீலாது விழா கொண்டாடும்வைகோவின் இரட்டை வேடத்தை சுவரொட்டிகள் மூலம் உள்ளூர் தமுமுக அம்பலப்படுத்தியது. அதுதான் நமது கருத்தும்.
இப்போது சுவடுகள் நிகழ்ச்சியில் தனக்குப் பிடித்த ஒரே தலைவர் வைகோ என்று கூறும் அளவுக்கு முன்னேறி விட்டனர்
? இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராகச் சதி செய்யும் அமெரிக்காவை இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து தட்டிக் கேட்காதது ஏன்?
எஸ்.என்.ஜெ. கோவை
! அமெரிக்கா சதி செய்கிறது என்பதை அவர்கள் உணரவே இல்லை. உணரவிடாமல் அமெரிக்க கலாச்சாரம சாட்டிலைட் வழியாக ஊடுறுவி அவர்களை மயக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மயக்கத்திலிருந்து மீண்டால் உணர்வார்கள்! ஒன்றிணைவார்கள்! தட்டிக் கேட்பார்கள்!
உரிமை 01ஆண்டில் 08 வது இதழில் இருந்து
? பெண்களுக்கும், தலித்துகளுக்கும் தனித் தொகுதிகள் கொடுக்கப்பட்ட பிறகும் அவர்கள் பொதுத் தொகுதிகளிலும் போட்டியிடுவது ஏன்?
மு. யூசுப் ரஹ்மத்துல்லாஹ், நாகூர்
! ஓட்டு பொறுக்குவதற்காக இயற்றப்பட்ட சட்டத்தில் அதற்கு அனுமதி உள்ளதே காரணம்.
? வெடிகுண்டுகள் முஸ்லிம் ஹோட்டல்களில் வெடிப்பது பற்றியும், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் வெடிப்பது பற்றியும் என்ன கருதுகிறீர்கள்? இது ஆர்.எஸ்.எஸ்.ஸின் சதிவேலையா?
ஷ. முஹம்மது, அப்பாஸ், மங்கலம்பேட்டை
! வெள்ளிக்கிழமைகளில் மட்டும் ஒரு நிகழ்ச்சி நடப்பதனாலோ, முஸ்லிம்களின் ஹோட்டல்களில் மட்டும் வெடிகுண்டுகள் வெடிப்பதாலோ இன்னார்தான் குற்றவாளி எனக் கூற முடியாது. நீங்கள் சுட்டிக் காட்டுவதுபோல் முஸ்லிம் எதிரிகளின் சதியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. காவல்துறையினர் கூறுவதுபோல் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள சில தீவிரவாதிகளின் வேலையாகவும் இருக்கலாம். தீர விசாரிக்கும் முன்பாக யார் மீதும் பழி சுமத்துவது நியாயமாகாது.
? இந்திய முஸ்லிம்கள் ஏன் இன்னும் ஒன்றுபடவில்லை?
முஸ்லிம் மாணவர் அமைப்பு, கோவை
! இந்திய அரசியல்வாதிகளின் சுயரூபம் புரியாததுதான் காரணம்.
? பல ஆண்டுகளால ஊழல் செய்தவர்களும், ரவுடித்தனம் செய்தவர்களும் சிறையிலடைக்கப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்படுகிறார்களே! இது என்ன சட்டம்?
பாரூக் பாகவி, பரங்கிப்பேட்டை
! ஜாமீனில் விடுவது சரியான நடவடிக்கைதான். நரசிம்மராவைக் கைது செய்து உடனே ஜாமீனில் விட்டதுபோல், மற்றவர்களையும் உடனே ஜாமீனில் விடாமல் பல மாதங்கள் சிறையிலடைப்பதுதான் நீதிக்குப் புறம்பாகும். ஏனெனில் குற்றம் நிரூபிக்கப்படாமல் எவரையும் தண்டிக்கக் கூடாது என்பதுதான் நீதி.
உரிமை 01ஆண்டில் 09வது இதழிலிருந்து
? மதச் சார்பற்ற இந்தியாவின் பிரதமர் தேவகவுடா தமது அரசு நிலைப்பதற்காக 2250 கிலோ நெய்,தேன் மற்றும் 20 டன் பலா ஆகியவற்றைக் கொண்டு யாகம் நடத்தியுள்ளார். இதற்கான செலவு 50கோடியும் பிரதமருடையதா? அரசுப் பணமா?
மு. யூசுப் ரஹ்மத்துல்லாஹ், நாகூர்
! அரசுப் பணத்தில் செலவு செய்ய மாட்டார்கள். தமது சொந்தப் பணத்திலிருந்தும் செய்ய மாட்டார்கள். யாராவது பெரிய தொழிலதிபர் செலவு செய்வார். இதைவிடப் பல மடங்கு சம்பாதிக்க வசதியை அந்தத் தொழிலதிபர்களுக்கு இவர்கள் ஏற்படுத்திக் கொடுப்பார்கள். இதுதான் வழக்கம்.
? காஷ்மீரில் உள்ள துக்தரானே மில்லத் தலைவி ஆயிஷா அந்தராபியை தீவிரவாதி என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். இது சரிதானா?
ஐ.டி. அன்சாரி, திருநெல்வேலி
! மற்றொரு இதழில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கமே இது. மொழி பெயர்ப்புக் கட்டுரைகளை உள்ளது உள்ளடி வெளியிடுவதுதான் மரபு.
? அஸாருத்தீனை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி தெண்டுல்கரை நியமித்ததில் அரசியல் காரணம் ஏதும் உண்டா? இஸ்லாமியன் தலை தூக்கக் கூடாது என்ற எண்ணமா?
ஹாரூன், அதிரை
! அஸாருத்தீன் சினிமா நடிகையுடன் காதல் களியாட்டத்தில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்துக் கொண்டதுதான் காரணமாக இருக்கும். முஸ்லிம் தலையெடுக்கக் கூடாது என்ற எண்ணம் கிரிக்கெட் போர்டுக்கு இருந்தால் இத்தனை ஆண்டுகள் கேப்டனாக அவர் இருந்திருக்க முடியாது?
? சென்னை மேயர் தேர்தலில் ஜெயலலிதாவின் ஆதரவை சுப்பிரமணியசாமி பெற்றுக் கொண்டது சரியா?
கே.எம்.ஏ. பாக்கர், நாகூர்
! பதவிக்காக எதையும் செய்யக் கூடியவர்களின் செயல்களைப் பற்றி சரியா? தவறா? என்று கேட்கக் கூடாது.
? பாபர் மஸ்ஜித் இடிப்பு, தடா, கலவரத்தால் பாதிப்புகள் இப்படியே போனால் எதிர்காலத்தில் முஸ்லிம்களின் நிலை என்னவாகும்?
மேலூர் அ. சாதிக் பாட்சா, கத்தார்.
! பாதிப்புகள் எல்லை மீறும்போது ஒன்றுபடுவார்கள்! எதிர்ப்புகளை முறியடிக்கும் வழியைக் காண்பார்கள்! இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் ஒழிக்க முடியாது என்பதை நிரூபித்துக் காட்டுவார்கள்.
? உணர்வு வார இதழ்கள் எத்தனை பிரதிகள் விற்பனையாகின்றன?
பி.எஸ். ரஹ்மத்துல்லாஹ், தோப்புத்துறை
! தமிழில் வெளிவரும் முஸ்லிம் பத்திரிகைகளில் உணர்வுதான் விற்பனையில் முன்னணியில் உள்ளது.
? தமிழ்நாட்டில் தற்போது விலைவாசி எவ்வாறு உள்ளது?
ஆ.ஜி. சேகர், சிதம்பரம்
! ஜெயலலிதா ஆட்சியின் கடைசி காலத்தில் இருந்ததைவிட விலைவாசி அதிகரித்துள்ளது. பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்தியதுதான் இதற்குக் காரணம்.
? மதுரை மீனாட்சியம்மன் கோவில் குண்டு வெடிப்பில் மதுரை டி.எஸ்.பி. ராமஜெயம் முன் ஜாமீன் கேட்டுள்ளாரே?
க. அன்ஸாரி, நாகூர்
! முஸ்லிம்கள் மீது அந்தப் பழியைச் சுமத்துவதற்கு முதல் காரணமாக இருந்தவர் ராமஜெயம். கீழ் அதிகாரிகள் மீது அந்தப் பழியைப் போட்டு முன் ஜாமீன் கேட்டுள்ளார். வினை விதைத்தவன் வினையை அறுப்பான். அதற்கு ராமஜெயம் ஓர் உதாரணம்.
உரிமை 01 ஆண்டில் 11வது இதழ்
? அரசுப் பேருந்துகளிலும், அரசு அலுவலகங்களிலும் குறிப்பிட்ட மதக் கடவுளரின் படங்களை மட்டும் வைத்திருப்பதை எதிர்த்து வழக்கு தொடர முடியுமா?
ஹெச். ராசுதீன், திருப்புவனம்
! அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிராக இருப்பதால் தாராளமாக வழக்கு தொடரலாம். ஆனாலும் சிறுபான்மை மக்கள் பெருந்தன்மையின் காரணமாக இதைப் பிரச்சினையாக்குவதில்லை.
? நிர்வாண சாமியார்களுக்கு அனுமதியுள்ள நாட்டில் அழகிப் போட்டிக்கு எதிர்ப்பு காட்டுவது எதனால்?
மு. யூசுப் ரஹ்மத்துல்லாஹ், நாகூர்
! மத உரிமை என்ற போர்வை அழகிப் போட்டிக்கு இல்லாததால்தான் அதை மட்டும் சிலர் எதிர்க்கின்றனர். (நாம் எல்லாவிதமான ஆபாசத்தையும் எதிர்க்கிறோம்.)
? தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளில் (திமுக - அதிமுக) முஸ்லிம்களைப் பெரும்பாலும் ஆதரிக்கும் கட்சி எது?
ஏ. ரசூல் அஹமது, கச்சிராப்பாளையம்
! கள், சாராயம் இரண்டில் எது பரவாயில்லை என்பதுபோல் உங்கள் கேள்வி அமைந்துள்ளது. இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது என்றாலும் முஸ்லிம்களுக்கு இரண்டுமே தேவைப்படாதவைதாம்.
? மார்க்க சம்பந்தமான கேள்விகள் கேட்டால் உணர்வில் பதிலளிக்கப்படுமா?
ஏ. முஹம்மது பைசல், அடியக்கமங்கலம்
! ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் பாதிப்புகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தவே உணர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் சமுதாய விஷயங்கள் குறித்த கேள்விகளுக்கு மட்டுமே இதில் விடையளிக்கப்படும். மார்க்கச் சட்ட திட்டங்களைக் கூற வேறு இதழ்கள் உள்ளன.
? நாகூர் பிரேமானந்தாவின் கொலை முயற்சியில் ஈடுபட்ட நால்வரின் நிலை என்ன?
செய்யது, பொதக்குடி
! திருச்சி மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. அவர்களின் நிலையை அவர்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள்!
? ஜப்பானில் 2.5 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களின் உணர்வுகளையும் ஜப்பானிய அரசு மதிக்கின்றது. இந்தியாவில் 7 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதேன்?
ஷ. முஹம்மது அப்பாஸ், மங்கலம்பேட்டை
! புத்த மதத்தவர்களிடம் உள்ள நியாய உணர்வு இங்குள்ள இந்து அரசியல்வாதிகளிடம் இல்லாததே காரணம். 7 கோடி என்பது தவறாகும். இந்தியாவில் சுமார் 20 கோடி முஸ்லிம்கள் உள்ளனர்.
உரிமை 1-14, (டிசம்பர் 20-26, 1996)
? உலகிலேயே இந்தியாவில்தான் முஸ்லிம்கள் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர் என்பது சரியா?
ஏ. அஹ்மது இப்ராஹிம், சங்கரன்பந்தல்
! உலகிலேயே மிகவும் அதிகமான முஸ்லிம்கள் வாழும் நாடாக இதுவரை இந்தோனேசியா இருந்துவந்தது. இரண்டாவது இடம் இந்தியாவுக்கு இருந்தது. இப்போது இரு நாடுகளிலும் ஏறத்தாழ சமமான அளவுக்கு முஸ்லிம்கள் உள்ளனர். சுமார் 18+18 = 36 கோடி முஸ்லிம்கள் இவ்விரு நாடுகளிலும் உள்ளனர்.
? பெங்களூரில் நடந்த அழகிப் போட்டியில் உலக அழகிகளுடன் விருந்து சாப்பிட்டு கண்டுகளித்த ஆன்மீகவாதி ரஜினியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பேயன், மேலப்பாளையம்
! லஞ்சம், ஊழல், கறுப்புப் பணம், ஆடல், பாடல், மது, சூது, மாது இவையணைத்திலும் ஈடுபட்டுக் கொண்டே சிறுது நேர பூஜை செய்துவிட்டால் ஆன்மீகவாதியாகலாம் என்பதுதான் ரஜினி நம்புகின்ற ஆன்மீகம். அவர் நம்புகின்ற ஆன்மீகப்படி இதில் தவறில்லை.
? ஜான் டேவிட்டுக்கு பதிலாக ஜாஹிர் உசேன் என்று இருந்தால் முஸ்லிம் தீவிரவாதி என்றுதானே பத்திரிகைகள் பிரசுரம் செய்திருக்கும்.
ஏ. அஹ்மது இப்ராஹிம், சங்கரன் பந்தல்
! இதிலென்ன சந்தேகம்?
? காந்தியை விமர்சிப்பதால் அமைதி கெடும் எனக் கூறுவோர், காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிபை தேசத் துரோகி என்று சிலர் திட்டுகிறார்களே அது பற்றி ஏன் வாய் திறப்பதில்லை?
மு. யூசுப் ரஹ்மத்துல்லாஹ், நாகூர்
! காயிதே மில்லத் அவர்கள் உயர்சாதிக்காரர் அல்ல. பெரும்பான்மை வகுப்பைச் சேர்ந்தவரும் அல்ல என்பதுதான் காரணம்.
? திமுக ஆட்சிக்கு வந்தால்தான் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு என்று நினைக்கும் முஸ்லிம்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
பி.யூ. ஜாஹிர் உசேன், ரியாத்
! முஸ்லிம்கள் உரிமைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அறிக்கை விட்டவுடன் முஸ்லிம்கள் திமுகவைத் தெளிவாகப் புரிந்து கொண்டு விட்டனர். முஸ்லிம்களுக்கு இது விஷயமாக அறிவுரை கூறும் அவசியமே இல்லாமலாக்கிவிட்டார் கருணாநிதி.
? எய்ட்ஸ் பற்றிய விளம்பர எச்சரிக்கைகளில் சினிமா நடிகைகள் அறிவுரை கூறுவது முரண்பாடாக இல்லையா?
கே. ஷகனாஸ் ஜவாஹிர், கோவை
! இந்த நாட்டில் எது முரண்பாடாக இல்லாமல் இருக்கிறது? காந்தியைக் கொன்றவர்கள் காந்தியிசம் பேசவில்லையா? அரசியல்வாதிகள் நேர்மை பற்றிப் பேசவில்லையா? இதுபோன்ற ஆயிரக்கணக்கான முரண்பாடுகளில் இதுவும் ஒன்று.
? ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதற்காக சுல்தான் பாய் தீக்குளித்த மர்மம் என்ன? பண ஆசையா? நிர்பந்தமா?
எம். முஹம்மது நூர், தொண்டி
! மூன்று காரணங்களுக்காகத்தான் தீக்குளிப்புகள் நடக்கின்றன. குடும்பத்தின் வறுமை தீர அரசியல்வாதிகள் பெருந்தொகை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை. மரணத்திற்குப் பின் தன் பெயர் நிலைக்க வேண்டும் என்ற கிறுக்குத்தனமான புகழ் வெறி.
மண்டல அறிக்கை அமுல்படுத்தப்படுவதாக வி.பி. சிங் அறிவித்தவுடன் பி.ஜே.பி.யினர் இதற்கு எதிராக நடத்திய போராட்டத்தில் ஒருவனைத் தீயிட்டுக் கொளுத்தியது போன்ற கொடூரக் கொலை. இதில் சுல்தான் பாய் எந்த ரகம் என்று தெரியவில்லை.
டிசம்பர் 6 அன்று நடத்தப்பட்ட போராட்டத்தினால் இவ்வுலகப் பயன் என்ன?
ஏ. அஹ்மது கபீர், சங்கரன் பந்தல்
! இனிமேல் எந்தப் பள்ளிவாசலுக்காவது சேதம் ஏற்படுத்தப்பட்டால் அதை உயிரைக் கொடுத்துக் காக்கும் கூட்டம் உருவாகிவிட்டது என்று மற்றவர்களை உணரச் செய்தது உடனடிப் பயன். இடிக்கப்பட்ட பள்ளிவாசலைத் திரும்ப மீட்டெடுப்பது வருங்காலத்தில் இன்ஷா அல்லாஹ் கிடைக்கக் கூடிய பயன்.
உரிமை 1- 16, ஜனவரி 3-9, 1997
? முஸ்லிம்கள் தம்மைத் தாழ்த்திக் கொள்ளக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. இந்நிலையில் முஸ்லிம்களைப் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று அறிவிக்கப் போராடுவது ஏன்?
கு. நிஜாமுதீன், பரங்கிப்பேட்டை
! அரசியல், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மற்றவர்களால் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற சொல் இந்தக் கருத்திலேயே பயன்படுத்தப்படுகிறது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் நாம் புறக்கணிக்கப்பட்டுள்ளோம் என்று கூறுவதில் எந்த இழிவும் இல்லை.
? திருப்பூர் பள்ளிவாசலைத் தீயிட்டுக் கொளுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், உதவித் தொகை வழங்காமல் இருக்கும் கலைஞர், கோவில்களுக்கு மட்டும் நிதி வழங்கிக் கொண்டும்,புதுப்பித்துக் கொண்டும் இருப்பது ஏன்?
அபூ நஹ்வி, அல்கோபர், கே.எஸ்.ஏ.
! பாழடைந்த கோவில்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசிய லத்தீப்,பள்ளிவாசல் குறித்து எதுவும் பேசாததும், கலைஞரின் எல்லா நடவடிக்கைகளையும் லத்தீப் ஆதரிப்பதும்தான் காரணம்.
? உணர்வு வார இதழ்தான் முஸ்லிம் பத்திரிகைகளில் அதிகம் விற்பனையாகிறது என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகிறீர்கள்?
இ.எம். உசேன், அல்கோபர், கே.எஸ்.ஏ.
! நீங்கள் பணிபுரியும் சவூதியில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான உணர்வு இதழ்கள் விற்பனையாவதை அங்கேயே நீங்கள் விசாரித்து உறுதி செய்து கொள்ளலாம். ஏனைய இதழ்கள் அங்கே நூற்றுக்கணக்கில்தான் விற்பனையாகின்றன.
ஏனைய நாடுகளிலும் இந்தியாவிலும் கூட இதே நிலைதான் 10 ஆயிரத்துக்கும் மேல் விற்பனையாகும் ஒரே முஸ்லிம் பத்திரிகை உணர்வு இதழ்தான். ஒவ்வொரு புதன் கிழமையும் நமது அலுவலகம் வந்தால் எண்ணிப் பார்த்து யாரும் உறுதி செய்யலாம்.
? ஜப்பானில் முஸ்லிம்கள் வளர்ச்சி என்ற கட்டுரையில் நபிகள் நாயகத்தின் உருவத்தைப் பாட புத்தகங்களில் அச்சிட்டதாக எழுதியுள்ளீர்கள். இது எப்படி சாத்தியம்?
செ. மீரான் மைதீன், கடையநல்லூர்
! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவப்படத்தை முழுமையாகத் தடை செய்துவிட்டால் அவர்களின் உருவத்தை யாராலும் இன்று வரைய முடியாது என்பது உண்மைதான். கற்பனையாக ஒரு உருவத்தை வரைந்து நபிகள் நாயகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது என்பதே அதன் பொருள்.
? இந்து ஆலயங்களுக்கு கோடி கோடியாக அள்ளி வழங்கும் கலைஞர் மசூதிகள், சர்ச்சுகளுக்கு எதையும் வழங்காதிருப்பது ஏன்?
மு. யூசுப் ரஹ்மத்துல்லாஹ், நாகூர்
! முஸ்லிம்களைவிட இந்துக்களின் வாக்குகள் அதிகமாக உள்ளது. சோ, ரஜினி போன்றவர்களைத் திருப்திப்படுத்தும் நிர்பந்தமும், ஏன் நெஞ்சத்தில் முஸ்லிம்களுக்கு இடம் என்று கலைஞர் கூறுவதிலேயே முஸ்லிம் சமுதாயம் திருப்தியடைவதும்தான் காரணம்.
? தாலிபான் இயக்கம் அமெரிக்க கைக்கூலியா?
வெற்றி கொண்டான், கோவை
! இத்தகையப் பிரச்சாரம் திட்டமிட்டு நடத்தப்பட்டாலும் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதுவரை அவக்ளின் நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு சாதகமாக இல்லை. அவர்களிடம் முழுமையாக அதிகாரம் வந்தபின் அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்துதான் இது பற்றிக் கூற முடியும்.
? ராஜ்பவன் முற்றுகைப் போராட்டம் மத்திய அரசை எட்டியிருக்குமா?
ஐ.டி. அன்சாரி, மேலப்பாளையம்
! பி.பி.சி., ஸ்டார் பிளஸ் போன்ற சர்வதேச செய்தி ஸ்தாபனங்களை எட்டியது. டெல்லிக்கு எட்டாமல் இருக்காது.
? நாகை காயிதே மில்லத் மாவட்டத்தை அனைத்து பத்திரிகைகளும் சரியாக குறிப்பிடும்போது தினமலர் மட்டும் நாகை மாவட்டம் என்று குறிப்பிடுவது ஏன்?
எம்.ஏ. ஜின்னா, பொறையார்
! அதிகமாக முஸ்லிம்கள் தினமலர் வாசகர்களாக இருப்பதுதான் காரணம்.
? நாயைச் சுடுவதுபோல் நான்கு முஸ்லிம்களைச் சுட்டுத் தள்ளினால்தான் சரியாக வரும் என்று நாகூர் போலீஸ்காரர் கூறினார். இதில் இருந்து என்ன தெரிகிறது?
கே. ஷைகு அப்துல் ரஜாக், நாகூர்
! காவல்துறை இந்துமயமாகி உள்ளது என்று தெரிகிறது. நாயைச் சுடுவதுபோல் சுட்டுத் தள்ளிவிட்டு சுதந்திரமாக நடமாடலாம் என்ற காலம் மலையேறிவிட்டது என்று அவருக்குச் சொல்லுங்கள்.
? விசாரணை என்ற பெயரில் என்னை அழைத்துச் சென்ற சென்னை காவல்துறை ஜட்டியுடன் என்னை நிற்க வைத்து விசாரணை செய்தது. ஜெயலலிதாவையும் அப்படித்தான் விசாரணை செய்ததா?
கே. ஷைகு அப்துல் ரஜாக், நாகூர்
! நீங்களும், ஜெயலலிதாவும் சமமானவர்கள் என்று எப்படி நினைக்கிறீர்கள்? ஒரு வேளை நீங்கள் ஆட்சிக்கு வந்து உங்களை அவமானப்படுத்தியவர்களைப் பழிவாங்குவீர்கள் என்ற அச்சம் இருந்தால் ஜெயலலிதாவைப் போல் உங்களையும் விசாரிப்பார்கள்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற விளையாட்டுக்குச் சொல்லப்படுவதை உண்மை என்று நம்புகிறீர்கள் போலும்.
? தங்கள் உரிமைக்காகப் போராடும் முஸ்லிம்கள் கூட தங்கள் மதக் கடமையைச் சரிவர நிறைவேற்றுவதில்லையே ஏன்?
! இவ்வுலகில் உரிமைகள் சில பறிக்கப்படுவதால் ஏற்படும் சங்கடங்கள் உணர்ந்த அளவுக்கு மறுமையில் ஏற்படும் சங்கடங்களைப் புரியாததே காரணம்.
உரிமை 1-19, ஜனவரி 24-30, 1997
? அக்கரைச் செய்திகள் என்ற பகுதியில் வளைகுடா நாடுகளில் நடக்கும் நல்லவைகளை மட்டும் எழுதுகிறீர்கள். அங்கு நடக்கும் அக்கிரமங்கள், மனித உரிமை மீறல்கள், தொழிலாளிகளைத் துன்புறுத்தல், சித்திரவதைகள் போன்றவற்றை ஏன் எழுதுவதில்லை?
ஆரூர் அம்பி, திருவாரூர்
! உரிய ஆதாரங்களுடன் முழு முகவரியுடனும் அத்தகைய செய்திகளை அனுப்பினால் ஆய்வு செய்து வெளியிட நாம் தயாராக உள்ளோம்.
? "ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு ஐவேளை தொழ வேண்டும். பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்பன போன்ற பழமைவாதக் கருத்துகளைப் புகுத்துகின்றன'' என்று தினமலர் எழுதியுள்ளதே? !(7-1-1997)
காவடி எடுப்பது, அலகு குத்திக் கொள்வது, தீ மிதிப்பது, உடன் கட்டை ஏறுவது, விதவைத் திருமணத்தை மறுப்பது, யாகங்கள் என்ற பெயரால் உணவுப் பொருள்களைத் தீயிலிட்டுப் பொசுக்குவது, பிறப்பால் உயர்வு, தாழ்வு கற்பிப்பது, சாமியார்களின் காலடியில் வீழ்ந்து கிடப்பது,மனிதனைக் கடவுளாக்குவது, கடவுள் பெயரால் மக்களைச் சுரண்டி பிழைப்பது, காணும் பொருளையெல்லாம் வணங்குவது, பக்தியின் பெயரால் உடலைக் கோரப்படுத்துவது, பண்டிகையின் பெயரால் காசைக் கரியாக்குவது இப்படி ஏராளமான புதுமைகளை நடைமுறையாகக் கொண்ட தினமலருக்கு ஒரே இறைவனை வணங்குவது பழமைவாதமாகத் தெரிவதில் வியப்பில்லை.
நடிகைகளின் அந்தரங்கம் பற்றிக் கிசு, கிசு எழுதுதல், நடிகைகளின் அந்தரங்கங்களை அளவெடுத்தல்,முக்கால் நிர்வாண வண்ணப்படங்கள் போன்ற புரட்சிக் (?) கருத்துகளைக் கொண்ட தினமலருக்கு பெண்கள் கண்ணியமான உடையணிவது பழமைவாதமாகத் தெரிவதில் ஆச்சரியமில்லை.
? ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரல் என்கிறீர்கள். ஒடுக்கப்படுவது முஸ்லிம்கள் மட்டும்தானா?கிறிஸ்தவர்கள், இந்துக்கள் ஒடுக்கப்படவில்லையா?
எம். முஹம்மது இல்யாஸ், கம்பம்
! முஸ்லிம்கள் பெருமளவு ஒடுக்கப்பட்டாலும் மற்றவர்களும் ஒடுக்கப்படாமலில்லை. அவர்களுக்காகவும்தான் குரல் கொடுக்கிறோம். தலித் கிறிஸ்தவர்களுக்காக தலையங்கம் எழுதினோம். தாழ்த்தப்பட்டோருக்காகவும் குரல் எழுப்பியுள்ளோம்.
? அதிமுகவினரை இந்து தீவிரவாதிகள் என்று முதல்வர் கூறுவாரா? என்று கேட்டுள்ளீர்கள். அதிமுகவில் இந்துக்கள் மட்டும்தான் உள்ளனர் என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள்?
கார்த்திக், (ரஜினி ரசிகர்) நெல்லை
! செய்தியாளர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் அனைவரும் இந்துக்களே! அந்த அடிப்படையில்தான் அவ்வாறு கூறினோம். அதிமுகவில் சில முஸ்லிம்கள் இருப்பதை நாம் மறுக்கவில்லை.
? தடா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தால் சட்டம் ஒழுங்கு மேலும் சீர்குலையும் என்று சோ கூறியுள்ளாரே?
விருதை ஹுசைன்
! குற்றம் நிரூபிக்கப்படாமல் யாரையும் சிறையில் வைக்கக் கூடாது என்று ஊழல் மந்திரிகளுக்காக வக்காலத்து வாங்கியவர் சோ. தடா கைதிகள் எவர் மீதும் எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்பது தெரிந்திருந்தும் அவர் அவ்வாறு கூறுவது அவர் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதி என்பதைக் காட்டுகிறது.
? தன்னை தெய்வம் என்று சுவரொட்டிகள் ஒட்டியவர்களைக் கண்டித்த கலைஞர் தன் மகனை வணக்கத்திற்குரியவராக்கியது ஏன்?
இ.எம். ஜபலுல்லாஹ், நாகூர்
! நேரடியாகக் கண்டிப்பதைச் சுற்றி வளைத்துச் செய்வது அரசியல்வாதிகளின் வழக்கம். இதுதான் காரணம்.
? பேநஸீர், ஜெயலலிதா ஒப்பிடுக!
ஏ. நிஸார் அஹ்மத், மங்கலம்பேட்டை
! ஊழல் மகாராணிகள்.
? இந்துத்துவா இயக்கங்களின் அச்சுறுத்தல்களினால் எதிர்காலத்தில் இந்திய முஸ்லிம்களின் நிலை எவ்வாறு இருக்கும்?
ஐ.டி. அன்சாரி, மேலப்பாளையம்
! இறை நம்பிக்கையுடனும், ஒற்றுமையுடனும் இருந்தால் எந்த அச்சுறுத்தல்களாலும் பாதிப்பு ஏற்படுத்த முடியாது.
? இந்திய அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து முஸ்லிம் சமுதாயம் என்றைக்கு மீளும்?
ஐ.டி. அன்சாரி, மேலப்பாளையம்
! இந்திய அரசியல்வாதிகள் உருட்டி மிரட்டி முஸ்லிம்களைத் தம் கைப் பிடியில் வைத்திருக்கவில்லை. முஸ்லிம் சமுதாயம் தானாகத்தான் அவர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கின்றது. அரசியல்வாதிகளின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினால் அதை சமுதாயத்தவர்கள் உணர்ந்தால் மீள்வார்கள். இதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.
? இஸ்லாமிய அடிப்படையில் உருவப்படம் தடுக்கப்பட்டிருந்தும் தங்கள் பத்திரிகையில் உருவப்படம் வெளியிடுவது ஏன்?
ஏ. முஹம்மது ரபீக், நாகை
! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவப்படம் வரையப்பட்ட தலையணையைப் பயன்படுத்தியுள்ளார்கள். மரியாதைக்குரிய வகையில் இல்லாமல் உருவப்படங்களைப் பயன்படுத்தத் தடை இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
உரிமை 1 : 23, பிப்ரவரி 14-20, 1997
? தமுமுக நன்கு வளர்ச்சியடைந்த பிறகு தேர்தலில் போட்டியிட்டு பதவிகளைப் பெற முயலும் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. இது உண்மையா?
அக்பர், சென்னை - 14
! ஒரு காலத்திலும் தேர்தலில் போட்டியிடாது. பதவிகளைப் பெற்றுக் கொள்ளாது. இது சட்டவிதியில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பதில் அன்றைய தமுமுக எவ்வளவு உறுதியாக இருந்தது என்பதையும் இப்படி சொல்லித்தான் மக்கள் ஆதரவைப் பெற்றனர் என்பதையும் இன்று நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர் என்பதையும் இதில் இருந்து அறிந்து கொள்க.
? உலகிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவு பொய் வழக்குகள் போடப்படுகின்றன என்று கூறப்படுவது உண்மையா?
மு. யூசுப் ரஹ்மத்துல்லாஹ், நாகூர்
! நூறு சதவீதம் உண்மைதான். தாம்பரத்தில் 17 முஸ்லிம்களைக் கைது செய்து, யாராவது ஐந்து பேர் மட்டும் வாருங்கள்! உங்கள் மீது கொலை வழக்குப் போடப் போகிறோம் என்று காவல்துறையினர் கூறி அவ்வாறே வழக்கும் போட்டுள்ளனர். இந்த அளவுக்குக் கொடுமை உலகில் எங்கும் நடந்திருக்க முடியாது.
? நாட்டையே கொள்ளையடித்தவர்களையெல்லாம் ஜாமீனில் விடுகிறார்களே, இதற்கு முடிவே இல்லையா?
பாரூக் பாகவி, பரங்கிப்பேட்டை
! குற்றம் நிரூபிக்கப்படாமல் தண்டிக்கக் கூடாது என்பதுதான் சரியானது. எனவே இதில் எந்தத் தவறும் இல்லை. கைது செய்யப்பட்டவுடன் தாமதமின்றி ஜாமீனில் விட்டு வழக்கை விரைந்து விசாரித்து குற்றத்தை நிரூபிப்பதும் அதன் பின்னர் தண்டிப்பதும்தான் முறையானது.
? சட்டசபையில் ஒரே ஒரு இடத்தை பெற்றுள்ள பி.ஜே.பி. அந்த சமுதாயத்திற்காக குரல் கொடுக்கிறது. நம்முடைய முஸ்லிம் உறுப்பினர்கள் 11 பேர் இருந்தும் எந்தவித சலுகையும் நமக்குக் கிடைக்காதது ஏன்?
நிஜாமுதீன், மேலப்பாளையம்
! அந்த உறுப்பினர் சொந்த பலத்தில் வெற்றி பெற்றவர். அவரால் குரல் எழுப்ப முடிகிறது. 11உறுப்பினர்கள் பிறரது ஆதரவுடன் வென்றவர்கள். அவர்களால் அழுத்தமாகக் குரல் எழுப்ப முடிவதில்லை. மேலும் அவர்களுக்கு ஒரே ஒரு உறுப்பினர் என்பது தவறாகும். 223 உறுப்பினர்களும் அவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள்தாம்.
உரிமை 1 : 28, மார்ச் 28 - ஏப்ரல் 3, 1997
? தமிழகத்தில் கவர்னராகப் பொறுப்பேற்றுள்ள முஸ்லிம் பெண், பதவி ஏற்ற பிறகு முஸ்லிம்களுக்குச் செய்த நன்மையைக் கூற முடியுமா?
எம்.ஏ. அப்துல் ஹமீது, தோஹா கத்தார்.
! கவர்னர் பதவி என்பது நமது நாட்டைப் பொறுத்தவரை அலங்காரப் பதவிதான். பெரிய அளவுக்கு அதிகாரம் ஏதுமில்லை. அதிகாரமுள்ள பதவியாக இருந்தாலும் எதையும் செய்ய விடமாட்டார்கள். சிலைகளுக்கு மாலை அணிவித்தல், மலர் வளயம் வைத்தல், கோவில்களில் வழிபாடு செய்தல்,அன்னிய ஆண்களுடன் கை குலுக்குதல் போன்ற இஸ்லாத்திற்கு விரோதமான காரியங்களில் ஈடுபட்டு விடுவார்கள். முஸ்லிம் கவர்னர் விஷயத்திலும் அதைத்தான் செய்து வருகின்றனர்.
? இந்து தலித்களுக்குரிய சலுகைகள் கிறிஸ்தவ தலித்களாக இருந்து இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கும் வழங்கப்படுமா?
மு. யூசுப் ரஹ்மத்துல்லாஹ், நாகூர்
! இஸ்லாத்தை ஏற்றபின் யாரும் தலித்களாக இருக்க முடியாது என்பதால் தலித் எனும் சலுகை தேவையில்லை.
? பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமை வாரவிடுமுறை நாளாக இருந்ததை ஞாயிற்றுக்கிழமையாக மாற்றியது சரியா?
எம். முஹம்மது முகைதீன், ஏர்வாடி
! ஜும்ஆவுக்கு பாங்கு சொல்லப்பட்டது முதல் தொழுகை முடியும்வரை வியாபாரத்தை நிறுத்தி விடுமாறு குர்ஆன் கூறுகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட்டாலும் ஜும்ஆ தொழுகை நேரத்தில் மட்டும் விடுமுறை நீடிக்கிறது. எனவே மார்க்க ரீதியில் இதில் தவறில்லை. ஆயினும் ஞாயிறுதான் விடுமுறை நாள் எனும் மேற்கத்தியக் கலாச்சாரத்தை பாகிஸ்தான் ஏற்காமலிருந்திருந்தால் தனித் தன்மையைக் காப்பாற்றியிருக்கலாம்.
? பாபர் மசூதி மீட்புப் போராட்டத்தில் (ராஜ்பவன் தொழுகைப் போராட்டத்தில்) நானும் கலந்து கொண்டேன். "நாமே நேரடியாகப் போரிட்டு பள்ளியை மீட்க வேண்டும். அல்லது நாடு துறக்க வேண்டும்'' என்றும் இந்த வழிமுறை (தொழுகைப் போராட்டம்) சரியில்லை என்றும் ஒரு மார்க்க அறிஞர் கூறுகிறார்.
அபூ அஹ்மத், காரைக்கால்
! அந்த மார்க்க அறிஞர், தான் சரி என நினைக்கும் காரியத்தை ஏன் செய்யாமல் இருக்கிறார்? தங்களின் கோழைத்தனத்தை மறைக்க இப்படி சால்ஜாப்புக் கூறுகிறார்கள் என்பதே உண்மை.
? முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான், சவூதி அரேபியா போன்ற தனி நாடுகள் உள்ளதுபோல் இந்துக்களுக்கான தனி நாடு எது? இந்தியா இந்துக்களுக்கான தனி நாடா?
எஸ்.எம். நாசர், கோவை
! நேபாளம் இந்து நாடாக உள்ளது. ஆயினும் அங்கேயும் மதச்சார்பின்மையில் ஓரளவு நம்பிக்கையுள்ள கம்யூனிஸ்டுகளின் கை ஓங்கியுள்ளது. இந்தியா பல்வேறு மதத்தவர்களுக்கும்,இனத்தவர்களுக்கும் பொதுவான நாடுதானே தவிர எந்த மதத்தவருக்கும் தனிப்பட்ட நாடு அல்ல.
உலகில் உள்ள ஒவ்வொரு மதத்தவருக்கும் தனி நாடு இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. சில மதத்தவர்களுக்கு பல நாடுகள் இருக்கலாம். சில மதத்தவருக்கும் தனி நாடு ஒன்று கூட இல்லாமலிருக்கலாம்.
ஒரு நிறுவனத்திற்கு ஒருவர் உரிமையாளராக இருக்கிறார். வேறு நிறுவனத்தில் நான்கு பங்காளிகள் இருக்கிறார்கள். அவருக்கு மட்டும் தனி நிறுவனம் இருந்தால் பங்காளிகளை விரட்டி விட்டு நிறுவனத்தைத் தனதாக்குவது போன்றதுதான் இத்தகைய வாதம்.
? காவல்துறையினரிடமிருந்து காவிச் சிந்தனை நீங்கி தூய காவலர்களாகத் திகழ என்ன வழி?
எஸ். முஹம்மது, பொறையார்
! காவல்துறையினரும் மனிதர்கள்தாம். மற்றவர்கள் தவறிழைப்பது போலவே அவர்களும் தவறிழைக்கிறார்கள். தவறிழைத்தால் மக்கள் தட்டிக் கேட்பார்கள். சட்டம் தண்டிக்கும் என்பதை அவர்கள் உணர்ந்தால் தம்மைத் திருத்திக் கொள்வார்கள்.
? இந்தியாவில் இஸ்லாமியச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் எப்படி இருக்கும்?
சையது மைதீன், மேலப்பாளையம்
! குற்றங்கள் குறையும். ஒழுக்க கேடுகள் மடியும்.
? கருணாநிதி முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று இந்துத்துவாக்கள் கூறுகின்றனர். அவர் இந்துக்களைத் திருப்திப்படுத்துகிறார் என்று நீங்கள் கூறுகிறீர்கள். எது சரி?
ராமகோபாலன், பெரியபட்டிணம்
! வசதி வாய்ப்புகள் மற்ற சமுதாயத்துக்கும், வெறும் ஆறுதல் வார்த்தை மட்டும் முஸ்லிம்களுக்கும் கிடைக்கின்றன. ஆறுதல் வார்த்தை கூட முஸ்லிம்களுக்கு இதற்கு முன் கிடைக்காததால் முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக இந்துத்துவா சக்திகள் கூறுகின்றன. தமிழகத்தில் 39நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்பதைவிட வேறு எந்த ஆதாரம் வேண்டும்?
? கோவை கலவர பாதிப்புகளைப் பார்வையிட வந்த சிக்கந்தர் பகத் இந்துக்கள் பகுதிக்கு மட்டுமே பார்வையிடச் சென்றது ஏன்?
எஸ்.எச். நஸீர், கோவை
! அவர் முஸ்லிம் இல்லை என்பதை முஸ்லிம்கள் உணர்ந்திருப்பதுபோல் அவரும் உணர்ந்திருப்பதே இதற்குக் காரணம்.
? ஹஸாரே குறித்து உங்கள் கருத்து என்ன?
ஏ. அப்துல் லத்தீப், சங்கரன்பந்தல்
! மகாராஷ்டிர அரசின் ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் நேர்மையாளர் எனப் பெயரெடுத்தவர் என்றாலும் அருண் சோரி போன்றவர்கள் அளவுக்கதிகமாக அவரைப் புகழ்வதால் அவரை நம்ப முடியாது என்பதே நம் கருத்து. முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரியாக இல்லாத ஒருவரை அருண் சோரி பாராட்ட மாட்டார்.
அன்றைக்கே 1997லேயே அன்னா ஹஸாரே பற்றி நாம் சந்தேகப்பட்ட்து இப்போது சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதியாகி விட்டது
? பள்ளிவாசலுக்கு அருகிலேயே அடக்கம் செய்யும் இடம் இருப்பது ஏன்?
எம். ஜெகஜோதி, சாயல்குடி
! அப்படிச் சட்டம் ஏதும் கிடையாது. பல ஊர்களில் பள்ளிவாசலுக்கு அருகிலேயே அடக்கத் தலம் இருந்தாலும் சில ஊர்களில் தொலைவிலும் உள்ளன. அடக்கம் செய்யப்பட்ட உடலை மிருகங்கள் சிதைத்து விடக் கூடாது, அடக்கத் தலம் பிறரால் ஆக்கிரமிக்கப்பட்டு விடக் கூடாது. வாழும் மனிதர்கள் மரணத்தைப் பற்றி அடிக்கடி நினைவு கூர்ந்து தம் வாழ்வைச் சீராக்கிக் கொள்ள வேண்டும் என்பது போன்ற காரணங்கள் இதற்கு இருக்கலாம். அடக்கத் தலத்துக்கு தனியாக இடம் வாங்க வசதியின்மையும் இதற்குக் காரணமாக இருக்கின்றது.
? எல்லா மதக் கடவுள்களுக்கும் உருவம் இருக்கும்போது அல்லாஹ்வுக்கு மட்டுமே உருவம் இல்லாமலிருப்பது ஏன்?
எம். ஜெகஜோதி, சாயல்குடி
! இறை நம்பிக்கை உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இறைவனை எவரும் பார்க்காதபோது கற்பனையாக வடிக்கப்பட்ட உருவம் எப்படி இறைவனின் உருவமாக இருக்க முடியும்?
புதுக்கோட்டை தேர்தலில் திமுகவுக்கு வாக்குகள் குறையக் காரணம் முஸ்லிம்கள் தாம் என்பது பற்றி தங்கள் கருத்து என்ன?
மு. யூசுப் ரஹ்மான்
! புதுக்கோட்டை நகரத் தலைவர் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முஹம்மது அவர்களே இந்த உண்மையை போட்டு உடைத்துள்ளார்.
? கோவையில் முஸ்லிம் பெண்கள் நடத்திய பேரணிபோல் சென்னையிலும் நடக்குமா?
மும்தாஜ், புளியந்தோப்பு, சென்னை
! கோவைப் பெண்களைப்போல் சென்னை பெண்களும் தயாரானால் முக்கியமான கோரிக்கைகளுக்காக பெண்கள் பேரணி நடத்தலாம்.
உரிமை 1 : 30, ஏப்ரல் 11-17, 1997
? சட்டம் ஒழுங்கைச் சீர்படுத்துவதுதான் எங்கள் கூட்டணியின் இலட்சியம் என்று கல்யாண்சிங் கூறியுள்ளாரே?
மு. யூசுப் ரஹ்மத்துல்லாஹ், நாகூர்
! பி.ஜே.பி.யின் அகராதியில் சட்டம் ஒழுங்கைச் சீர்படுத்துவது என்றால் பள்ளிவாசலை இடிப்பது என்று பொருள்.
? இந்திய இராணுவ ரகசியங்களைப் பணத்திற்காக பாகிஸ்தானுக்குக் காட்டிக் கொடுத்தவர்களை தேச விரோதிகள் என்று ஆர்.எஸ்.எஸ். கூறாதது ஏன்?
மு. யூசுப் ரஹ்மத்துல்லாஹ், நாகூர்
! நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? காட்டிக் கொடுத்தவர்கள் இந்துக்களாக இருக்கும்போது அவர்கள் எப்படி தேச விரோதிகளாக முடியும்?
உரிமை 1 : 33, மே 2-8, 1997
? ஜெயலலிதாவைச் சந்திப்பதில் தவறில்லை என்று வை.கோ. கூறியுள்ளாரே!
உணர்வுப் பிரியன், பரங்கிப்பேட்டை
! மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்தபோது இவரைப் பிராமணர் சங்கம் ஆதரித்தது. மயிலாப்பூர் தேர்தலில் சங்கராச்சாரியாரின் ஆசி பெறப்பட்டது. அப்போதே அவர் மீது நமக்குச் சந்தேகம் இருந்தது. அவர் பா.ஜ.க.வுடன் சேர்ந்து கொண்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
நாம் சந்தேகப்பட்டது போல் பாஜகவுடனும் சேர்ந்து வாஜ்பாயின் அன்பையும் பெற்றார்.
? காந்தியின் அறவழியில் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று கூறும் நீங்கள் அறவழிப் போராட்டத்தில் மக்களை ஈடுபடுத்துவதேன்?
இப்னு ஹமீது, மேலப்பாளையம்
! வெள்ளையர்களுக்கு இந்த நாட்டு மக்களின் ஓட்டு தேவையில்லை. எனவே அவர்கள் அறவழிக்கு அஞ்ச வேண்டியதில்லை. இன்றைய ஆட்சியாளர்களுக்கு மக்களின் ஓட்டு தேவை. அது கை நழுவிடக் கூடாது என்பதால் அறவழிப் போராட்டத்துக்கு இவர்கள் அஞ்சுவார்கள் இதுதான் காரணம்.
? இந்தியாவில் நீதித்துறையும், காவல்துறையும் காவிமயமாகி வரும் வேளையில் அறவழிப் போராட்டம் உணர்வுகளை மழுங்கடிக்காதா? உணர்வுள்ள பல இளைஞர்களை உணர்வற்ற ஜடமாக்குவதுதான் உங்கள் எண்ணமா?
இப்னு ஹமீது, மேலப்பாளையம்
! அறவே உணர்வில்லாமல் இருப்பவர்களை ஓரளவு உணர்வுள்ளவர்களாக்குவதே எங்கள் நோக்கம். அந்த உணர்வுகளை ஒன்று திரட்டிப் போராடிப் பார்ப்போம். இதனால் பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம். ஒரு பயனும் கிடைக்காது என்ற நிலை உருவானால் வேறு விதமான போராட்டங்கள் பற்றியும் ஆலோசிக்கத் தயங்க மாட்டோம்.
உரிமை 1 : 35, மே 16-22, 1997
? ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால் வைத்ததும் பாங்கு சத்தம் கேட்டதாகவும், அவர் இப்போது முஸ்லிமாகி விட்டதாகவும் பம்பாயில் இப்போது வசிப்பதாகவும் கூறுகிறார்களே இது உண்மையா?
எச்.எம். யூசுப், நெல்லிக்குப்பம்
! இஸ்லாத்தின் சிறப்பைக் கூறுவதற்காக சிலர் இப்படி பொய்களைப் பரப்புகின்றனர். இது தேவையற்றதாகும். இஸ்லாத்தின் கொள்கைக் கோட்பாடுகளின் சிறப்பைக் கூறியே இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யலாம்.
? ஹஜ் தீ விபத்தில் பலியானவர்களுக்கு சவூதி அரசாங்கத்திடம் இந்தியா நஷ்டஈடு கேட்பது சரிதானா?
ஜமால் பாட்சா, கடையநல்லூர்
! சவூதி அரசாங்கம் அதற்குக் காரணமாக இல்லாவிட்டாலும் அந்த நாட்டில் நடந்த இழப்புக்கு அந்த நாடு நட்ட ஈடு வழங்குவதும் அதை இந்திய அரசு கோருவதும் நியாயமானதுதான்.
? ஐ.கே. குஜ்ரால் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்குமா?
எஸ். அஹ்மது, திருமுல்லைவாயல்
! எந்த ஆட்சியானாலும் நமது உரிமைகளுக்காகப் போராடாமல் நியாயம் கிடைக்காது.
பாகிஸ்தான் கைப்பற்றி வைத்துள்ள ஆசாத் காஷ்மீர் இந்தியாவுக்கு கிடைக்குமா?
எஸ். அஹ்மது தம்பி, திருமுல்லைவாயல்
! பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினையைப் பேசித் தீர்ப்பதில் அக்கரையுள்ள பிரதமர்கள் இரண்டு நாடுகளிலும் உள்ளதால் பல பிரச்சினைகளை தீர வாய்ப்புள்ளது. இரண்டு தரப்பிலும் பிடிவாதப் போக்கை விட்டு, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் பேச்சு நடத்துவதற்கு இரண்டு நாட்டு எதிர்க்கட்சிகளும் தடையாக இல்லாமல் இருந்தால் அது சாத்தியமே.
? ஜெயலலிதா ஆட்சியை விட கருணாநிதி ஆட்சியில் முஸ்லிம்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்களா?
அ.மு.செ. காஜா, நாகூர்
! பாதிக்கப்படுவது உண்மைதான். ஜெயலலிதா ஆட்சியளவுக்கு எந்த ஆட்சியிலும் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதில்லை, பாதிக்கப்படவும் மாட்டார்கள்.
? முஸ்லிம்கள் ஆட்சியையும், அதிகாரத்தையும் பிடிக்கும்வரை மனித உரிமை மீறல்கள் தொடரும் என்பது சரிதானா?
அ.மு.செ. காஜா, நாகூர்
! முஸ்லிம்கள் ஆட்சியைப் பிடித்தாலும் இஸ்லாமியச் சட்டங்கள் அமுல்படுத்தாவிட்டால் அப்போது இதே நிலைதான் தொடரும். யார் ஆள்கிறார்கள் என்பதைவிட எத்தகைய சட்டம் ஆள்கிறது என்பதுதான் முக்கியம். இஸ்லாமியச் சட்டங்கள் ஆட்சி புரிந்தால் மனித உரிமை மீறல்கள் முடிவுக்கு வரும்.
? முஸ்லிம்களின் கைக்கூலி பெற்றுக் கொண்டு தி.க.வினர் இந்து மதத்தை இழிவுபடுத்துவதாக ஆர்.எஸ்.எஸ். கூறுவது சரியா?
அ. முஹம்மது இலியாஸ், பெரிய மணக்குளம்
! யாருக்கும் கைக்கூலி கொடுக்குமளவுக்கு முஸ்லிம் சமுதாயம் செழிப்பாக இல்லை. மற்ற இயக்கங்களை விடவும் திகவுக்குச் சொத்துகள் உள்ளன. இந்து மதத்தை மட்டும் அவர்கள் அதிகம் விமர்சிக்கின்றனர். முஸ்லிம்களையும் சில வேளை விமர்சனம் செய்கின்றனர். இந்து மதத்தில் விமர்சனத்திற்குரியவை அதிகமாக இருப்பதாக திகவினர் கருதுவதும் திகவினரும் சட்டப்படி இந்துக்கள் என்பதும்தான் காரணம்.
? சீக்கியர்களின் குருவான குருநானக் மக்கா சென்று கஃபாவை நோக்கி கால் நீட்டினாராம். அவரை முஸ்லிம்கள் வெளியே அனுப்பினார்கள். வெளியே வந்து அவர் கால் நீட்டியபோது கஃபா அவரது கால் பக்கம் நகர்ந்து வந்ததாம். இவ்வாறு எங்கள் பகுதியில் உள்ள சீக்கியர்கள் கூறுகின்றனர்.
ஏ. முகைதீன் அன்சாரி, பிலாய், மத்தியப் பிரதேசம்
! முஸ்லிமல்லாத ஒருவரும் மக்காவுக்குள் பிரவேசிக்க முடியாது. இது 14 நூற்றாண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இது வடிகட்டிய பச்சைப் பொய்.
உரிமை 1 : 37, மே 30 - ஜூன் 5, 1997
? எங்கள் ஊரைச் சேர்ந்த முஸ்லிம்களில் சிலர் எம்.ஜி.ஆர்.க்கு சிலை வைக்க முயற்சி செய்கின்றனர். அவர்களுக்குத் தங்கள் அறிவுரை என்ன?
இப்னு ஆதம், மங்கலம்பேட்டை
! பொதுவாகச் சிலை வைப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதை அவர்கள் அறியாவிட்டாலும் எம்.ஜி.ஆர். இந்தச் சமுதாயத்திற்கு எதிராக செயல்பட்டவர் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
இந்து முன்னணியைப் பாலூட்டி வளர்த்தவர் எம்.ஜி.ஆர். மீனாட்சிபுரத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாத்தை ஏற்றபோது அரபு நாட்டுப் பணம் விளையாடியது என்றார். தாய் மதம் திரும்புவோருக்கு தையல் மிஷின்களும், கறவை மாடுகளும் வழங்கப்படும் என்று அறிவித்து இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்தார். இஸ்லாத்தை ஏற்ற மக்கள் மீது பொய் வழக்குகள் போட்டு மிரட்டினார்.
அவரையெல்லாம் மதிக்கக் கூடியவர்கள் நாட்டு நடப்பை அறியாதவர்களாக இருக்க வேண்டும். அல்லது சமுதாய உணர்வு அற்றவர்களாக இருக்க வேண்டும். முதல் காரணம் என்றால் இந்த விளக்கத்தின் காரணமாக திருந்திக் கொள்வார்கள். இரண்டாவது காரணம் என்றால் எந்த அறிவுரையும் அவர்களைத் திருத்தாது.
? கலவரத்தில் கொல்லப்பட்ட ஐவர் கும்பத்திற்கு உணர்வு வார இதழ் தவிர வேறு எந்த இஸ்லாமிய இயக்கங்களாவது உதவி செய்கிறதா?
அ. சாதிக் பாட்சா, தோஹா - கத்தார்.
! யாரும் செய்வதாகத் தெரியவில்லை.
? சமீப காலங்களாக நடுநிலையான பத்திரிகைகள் கூட முஸ்லிம்கள் செய்திகளை இருட்டடிப்பு செய்வது ஏன்?
அ. சாதிக் பாட்சா, தோஹா - கத்தார்.
! நடுநிலையான பத்திரிகைகள் தமிழகத்தில் இருப்பதாக நீங்கள் கூறுவது ஆச்சரியமாக உள்ளது.
? "உன் மதமா? என் மதமா? ஆண்டவன் எந்த மதம். நல்லவங்க எம்மதமோ, ஆண்டவன் அந்த மதம்''என்று ராமன் அப்துல்லா என்ற படத்தில் நாகூர் ஹனீபா பாடியுள்ளாரே?
எம்.எஸ். மூசா முஹம்மது மைதீன், மேலப்பாளையம்.
! பைத்தியக்காரர்களின் உளறலைவிட சினிமாக்காரர்களின் உளறல்கள் அபத்தமானவை. நாகூர் ஹனீபாவும் இதில் விதிவிலக்கல்ல.
? முஸ்லிம் விரோதம், பாபர் மசூதி இடிப்பு போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தபின் பா.ஜ.க. எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று இல. கணேசன் கூறுவது முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்துகிறதே?
ஏ.எஸ். அப்பாஸ், வந்தவாசி
! எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத்தான் கூறியுள்ளார். வாக்குகள் கூடியதா? வாக்கு சதவீதம் கூடியதா என்றால் நிச்சயமாக இல்லை. குறைந்து போய் விட்டது என்பதுதான் உண்மை.
காங்கிரஸ் 20, ஜ.தளம் 20, பகுஜன் சமாஜ் 10, சமாஜ்வாடி 10, கம்யூனிஸ்ட் 15 என்று 75 சதவீத வாக்குகள் பலருக்கும் பிரிந்து விடுவதால் 25 பெற்ற பா.ஜ.க. அதிக இடங்களைப் பெற்றுள்ளது. நமது நாட்டில் உள்ள பெரும்பாலான இந்துக்கள் பா.ஜ.க.வை ஆதரிக்கவில்லை. எதிர்ப்பு ஓட்டுகள் சிதறுவது ஓரளவு குறைக்கப்பட்டால் கூட பா.ஜ.க. பழையபடி இரண்டு இடங்களைத்தான் பெறும்.
உரிமை 1 : 38, ஜூன் 6-12, 1997
? அரசியல் கட்சிகளிலிருந்து முஸ்லிம்கள் விலகி இருக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு அதே கட்சிகளிடம் முஸ்லிம்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கோருவது சரியா?
ஆரூர் புதியவன், திருவாரூர்
! உரிமைகளைக் கேட்பதற்காக அடிமைச் சேவகம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களித்தவர்கள் அதே ஆளும் கட்சியிடம் உதவிகளையும் உரிமைகளையும் கோருவது போன்றுதான் இது.
? அமெரிக்க உச்சநீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்ட நபிகள் நாயகத்தின் சிலை அறக்கப்பட்டு விட்டதா?
ஹெச்.எம். யூனுஸ், நெல்லிக்குப்பம்
! உலகில் ஐம்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் இருந்தும் அமெரிக்காவின் எந்த அடாவடித்தனத்தையும் கண்டிக்கத் திராணியற்று உள்ளன. சிலை அகற்றுவது குறித்து கடுமையான எச்சரிக்கையை முஸ்லிம் நாடுகள் வெளியிடுவதன் மூலமே அந்தச் சிலை அகற்றப்படும்.
? தென் மாவட்டங்களில் அமைதி ஏற்பட தாங்கள் கூறும் யோசனை ?
நூர்ஜஹான் கரீம், மேலப்பாளையம்
! அனைத்து சிலைகளையும் அப்புறப்படுத்தி, மாவட்டங்களுக்கு அதன் தலைநகரின் பெயரைச் சூட்டுவதும், போக்குவரத்துக் கழகங்களுக்கு எவரது பெயரையும் சூட்டாதிருப்பதும் தற்காலிகமான பரிகாரம். அனைத்து மக்களும் ஒரே சாதியினர்தான் எனக் கூறும் இஸ்லாத்தை ஏற்பது நிரந்தரமான பரிகாரம்.
? 16 நாடுகளில் ஷரீஅத் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளதாக இராம கோபாலன் கூறியுள்ளாரே?
கே. நிஜாம் மைதீன், ரியாத்
! ஷரீஅத் சட்டத்தை எவராலும் மாற்ற முடியாது. இஸ்லாத்துடன் சம்மந்தமில்லாத எகிப்து போன்ற நாடுகளில் இஸ்லாமியச் சட்டங்களை அமுல்படுத்தவில்லை. இதைத்தான் ஷரீஅத் சட்டம் மாற்றப்பட்டுள்ளதாகப் புரிந்து கொண்டிருக்கிறார்.
? பிரேமானந்தாவை தூக்கில் போடாத நம் நாட்டுச் சட்டம் சரியானதுதானா?
ஆரூர் புதியவன், திருவாரூர்
! குற்றங்களைச் சந்தேகமற நிரூபித்தால்தான் எந்தத் தண்டனையும் அளிக்க வேண்டும். பிரேமானந்தாவின் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை நிரூபிக்காமல் தண்டிப்பது தவறாகும். பிரேமானந்தாவை விட பயங்கரவாதிகள் நாட்டின் பெரிய பதவிகளில் இருக்கின்றனர் என்பதையும் மறந்துவிட வேண்டாம்.
? திராவிடம், ஆரியம் என்பதெல்லாம் பொய் என்று இராமகோபாலன் கூறுகிறாரே?
ஆசியா மர்யம், திருவாரூர்
! ஆரிய பவன்களின் பெயர் பலகைகளை அப்புறப்படுத்திவிட்டு அவர் இவ்வாறு கூறட்டும்!
? திரைப்படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகக் காட்டுகிறார்களே!
எம். ஹாஜா மைதீன், திருக்கோஷ்டியூர்
! பாபர் மசூதியை இடித்து, பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பறித்த பயங்கரவாதிகள் சாந்தசொரூபிகளாகச் சித்தரிக்கப்படும்போது சரித்திரம் காணாத அளவுக்கு பொறுமையை மேற்கொண்டவர்களைத் தீவிரவாதிகள் என்று கூறுவதில் வியப்பு ஏதுமில்லை.
? வீரபாண்டியனின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ராமகோபாலன் மழுப்பியது நடிப்பா?உண்மையான அரைவேக்காட்டுத்தனமா?
ஏ.எம். இஸ்மாயில், எ. செம்மங்குடி
! தங்கள் வாதங்கள் அனைத்தும் முட்டாள்தனமானவை என்பதை சங்பரிவார் அமைப்பினர் நன்றாக உணர்வார்கள். வாதத் திறமையால் நியாயப்படுத்தி விடலாம் என்று நம்பினார்கள். வீரபாண்டியனிடம் அது எடுபடவில்லை.
? தமிழ் பண்பாட்டை ஒட்டி வாழ்வதாகக் கூறும் இராம கோபாலன் அகண்ட பாரதம் அமைக்க முயல்வது ஏன்?
ஏ.எம். இஸ்மாயில், எ.செம்மங்குடி
! முந்தைய பதிலையே இதற்கும் பதிலாக கொள்க!
ஈழத் தமிழர்களாக இருந்த இலங்கைத் தமிழர்கள் இந்துத் தமிழர்களாக போனதன் மர்மம் என்ன?
ஆரூர் புதியவன், திருவாரூர்
! எப்போதுமே அவர்கள் இந்தியத் தமிழர்கள் தாம். தமிழ் முஸ்லிம்களைக் கொன்றொழித்த பயங்கரவாதிகள் தாம். முஸ்லிம்கள் இதை உணர்ந்து இலங்கைத் தமிழர்களை ஆதரிக்க முன் வராததால் இந்துத் தமிழர்கள் என்று தெளிவாகவே அறிவித்த இந்துத்துவாக்களின் ஆதரவைப் பெறவே முயல்கின்றனர்.
உரிமை 1 : 41, ஜூன் 27 - ஜூலை 3, 1997
? பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்தால் பாபர் மசூதி இருந்த இடத்தில் கோவில் கட்டுவார்கள். மதுரா,காசி பள்ளிவாசல்களையும் இடிப்பார்கள் என்று கூறப்படுவது உண்மையா?
எம்.பி. முஹம்மது, குளச்சல்
! பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வரும் சாத்தியம் குறைவுதான். முஸ்லிம்கள் ஓரணியில் ஒரு தலைமையின் கீழ் திரண்டு விட்டால், போராடத் தயாராகி விட்டால் எந்தப் பள்ளிவாசலையும் எவரும் இடிக்க முடியாது. இனியும் ஒன்றுபடவும், போராடவும் தயங்கினால் நீங்கள் கூறுவது உண்மையாகி விடக் கூடும்.
? என்னுடன் படிப்பவர் என்னைத் துலுக்கன் என்று கூறிவிட்டார். அவரை என்ன செய்வது?
ஏ. ஷாஹுல் ஹமீது, காரைக்கால்
! முஸ்லிம்கள் இந்தியாவில் பிறந்து இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள். முஸ்லிம்கள் அன்னிய நாட்டிலிருந்து வந்தவர்கள் என்று கூறி சரித்திரத்தைப் புரட்டுவதாக பாரதியார் என்ற பார்ப்பன மூடக் கவிஞன் "துருக்கர்' (அதாவது துருக்கியிலிருந்து வந்தவர்) என்று கவிதை பாடினார். (தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி, திக்கை வணங்கும் துருக்கர் ஆகிய கவிதைகளை உதாரணமாகக் கூறலாம்) முஸ்லிம் நாடுகளின் தலைமைப் பொறுப்பு அன்று துருக்கிக்கு இருந்தது ஒரு காரணம்.
துருக்கர்தான் துலுக்கர் என்று மாறிவிட்டது. இந்திய மக்களை துலுக்கர் எனக் கூறும் மூடர்களைக் கண்டால் ஒதுங்கிக் கொள்ளுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது.
அத்வானியின் வேண்டுகோளை ஏற்று பாஜகவின் முஸ்லிம்கள் இணைவதன் மூலம் பாஜக முஸ்லிம் விரோதப்போக்கை கைவிடும் வாய்ப்பு உள்ளதா?
நேரிய நேசன், கடையநல்லூர்
! முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்த மறுநாள் பாஜகவின் அடிப்படை இந்துத்துவம்தான் என்று பல்டியடித்தார் அத்வானி. பாஜக என்ற நாயின் வாலை ஒருபோதும் நிமிர்த்த முடியாது.
? தஞ்சை பெரிய கோவில் தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது பற்றித் தங்கள் கருத்தென்ன?
ஆர். பெனாசிர், வடக்குமாங்குடி
! எத்தனையோ தீ விபத்துகளில் எத்தனையோ அப்பாவிகள் பலியாகியுள்ளனர். கோவில் திருவிழாவில் இறந்தவர்களுக்கு மட்டும் ஒரு லட்சம் வழங்குவது ஓட்டு பொறுக்குவதற்குத்தான். மேலும் சிறுபான்மை மதத்தவர்கள் இவ்வாறு பலியாகியிருந்தால் நேரிலும் சென்றிருக்க மாட்டார். ஒரு லட்சமும் தந்திருக்க மாட்டார்.
? சாதித் தலைவர்களின் பெயர்களை நீக்க கருணாநிதி பயப்படுவதேன்? அடுத்த தேர்தலில் ஜாதி ஓட்டுகள் குறைந்து விடும் என்பது காரணமா?
எம்.எஸ். அஹ்மது மீரான், நெல்லை
! ஒவ்வொரு சமுதாயமும் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடி அரசாங்கத்தின் மீது அதிருப்தியடைந்திருக்கும்போது அவர்களைத் திருப்திப்படுத்தும் துருப்பு சீட்டுதான் சாதித் தலைவர்களின் பெயர்கள். அம்பேத்கார், முத்துராமலிங்கத் தேவர் பெயர்களை எதற்காவது சூட்டி அடிப்படைப் பிரச்சினைகளை மறக்கச் செய்ய முடியும். இப்போது பெயர்களை நீக்கிவிட்டால் மீண்டும் அதைப் பயன்படுத்தி நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது என்பதுதான் அடிப்படைக் காரணம்.
? தாலிபான் அரசுக்கு இந்தியா அங்கீகாரம் அளிக்க மறுப்பது சரியா?
எம்.ஏ. இஸ்மாயில் ஹுஸைன், கே.எஸ்.ஏ.
! ஆப்கானில் இழுபறி நிலை நீடிப்பதால் தயக்கம் காட்டினால் தவறில்லை. தாலிபானின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் ஆப்கன் வந்தபின் அங்கீகரிக்க மறுத்தால் அது அநீதியாகும்.
? பழனிபாபா படுகொலைக்குப் பின் ஜிஹாத் கமிட்டி செயல்படுகிறதா?
எம். அப்துல்லாஹ், கடடுமாவடி
! இரண்டு அணிகளாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் கமிட்டியிலிருந்து நீக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
? பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு பாஜகவுக்கு சிறுபான்மை மக்களின் ஆதரவு பெருகியுள்ளதாக வாஜ்பாய் கூறியுள்ளாரே!
எஸ்.ஜே. உசேன், நஜ்ரான், கே.எஸ்.ஏ.
! நாட்டின் மிகச் சிறுபான்மையாக மூன்று சதவீதம் உள்ள உயர் சாதியினரைத்தான் வாஜ்பாய் குறிப்பிட்டிருக்கிறார்.
? இஸ்லாத்தை அமுல்படுத்த முயலும் தாலிபான் அரசு ஆப்கானில் பயிரிடப்படும் கஞ்சா செடிகளை அழிப்பதில் அக்கரை காட்டுவதில்லையே ஏன்?
எம். நிஜாமுதீன், திருப்பூண்டி
! இது மேலை நாடுகளின் கட்டுக்கதையாகும். உலக முஸ்லிம்களின் ஆதரவு தாலிபான் அரசுக்குக் கிடைக்கக் கூடாது என்பதற்காக செய்யப்படும் விஷமப் பிரச்சாரம் இது.
? ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் ரசிகர்கள், முஸ்லிம்களை இந்த நடிகர்களைப் போலவே வேட்டி,சட்டை அணிந்து கொண்டு நெற்றியில் பட்டைகளைப் போட்டுக் கொண்டு அவர்கள் நடித்த படங்களைப் பார்க்கச் சொல்கிறார்களே!
எஸ். மதார்ஷா, மரைக்காயர், நாகூர்
! முஸ்லிம்களில் இத்தகைய பைத்தியங்கள் இருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை. அப்படி இருந்தால் அவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது. எம்.ஜி.ஆரின் சுயரூபம் தெரிந்தபின் அவரை முஸ்லிம் சமுதாயம் புரிந்து கொண்டதுபோல் இவர்களையும் விரைவில் புரிந்து கொள்வார்கள்.
உரிமை 1 : 44, ஜூலை 18-24, 1997
? தகுதியின் அடிப்படையில் இடமளிப்பதுதான் முறையானது. இடஒதுக்கீடு தேவைதானா?
எஸ். ஜஹாங்கீர், காரைக்குடி
! தகுதியின் அடிப்படையில் இடமளிப்பதுதான் அறிவுப்பூர்வமானது என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது. ஆயினும் இந்தியாவைப் பொறுத்தவரை இடஒதுக்கீடுதான் சரியானது.
இந்தியா அடிமைப்பட்டு கிடந்த காலத்தில் வெள்ளையர்களை விரட்டுவதற்கான போராட்டத்தில் பல்வேறு சமுதாயத்தினர் பங்கெடுத்தனர். ஆயினும் உயர்சாதியினர் மட்டும் ஆங்கிலம் கற்று வெள்ளையர் அரசாங்கத்தில் பணிபுரிந்தனர். உயர் பதவிகளில் அமர்ந்தனர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் அந்தப் பதவியில் நீடித்தனர். அவர்கள் தங்கள் வாரிசுகளையும் உரிய விதத்தில் தயார்படுத்தி,தலைமுறை தலைமுறையாக வேலைவாய்ப்புகளைப் பறித்துக் கொண்டனர்.
வெள்ளையர்கள் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக ஆங்கிலத்தைப் புறக்கணித்த முஸ்லிம்கள் தம் வாரிசுகளைத் தயார்படுத்த முடியாத நிலை. மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக கற்கும் உரிமை பறிக்கப்பட்டன. அவர்களாலும் தங்கள் வாரிசுகளைத் தயார்படுத்த முடியாது. தகுதியின் அடிப்படையில் இடமளித்தால் காலாகாலமாக உயர் சாதியினர் மட்டுமே அனைத்து வாய்ப்புகளையும் பெற்றுக் கொள்வார்கள். எனவே அனைத்து சமுதாயமும் சமவாய்ப்பைப் பெறும் வரை இடஒதுக்கீடு தவிர்க்க முடியாது.
சிறுபான்மையினரை எதிரிகளாகக் கருதுவோர்தான் வேலைவாய்ப்பு வழங்கும் இடத்தில் அமர்ந்துள்ளனர். தகுதியுள்ள சிறுபான்மையினருக்கும் அவர்கள் இடமளிக்க மாட்டார்கள் என்பது மற்றொரு காரணம்.
? தங்களின் எழுத்துகள் மூலம் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அகன்று விடுமா?
எ.ஜே. அஹ்மது இப்ராஹிம், அதிராம்பட்டிணம்
! அகன்று கொண்டு வருவதை சமுதாயம் கண்கூடாகக் காண்கிறது.
? நாடு சுதந்திரம் பெற்று ஐம்பது ஆண்டுகள் முடிந்தும் ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்,தாழ்த்தப்பட்டோர் என்று இருப்பது ஏன்? இதற்குத் தீர்வு என்ன?
டி. ஹுமாயூன், மாணியம் ஆடூர்
! மனிதர்கள் அனைவரும் சமமே என்று பிரகடணம் செய்து அதை நடைமுறைப்படுத்தியும் காட்டிய திருக்குர்ஆன் அரசியல் சட்டமாக்குவது ஒன்றுதான் இதற்கான ஒரே வழி.
? ஏழைகளாக உள்ள தாழ்த்தப்பட்டோர் இந்து மதத்தை உண்மையில் விரும்பவில்லை. அவர்கள் முஸ்லிம்களாக மதம் மாறினால் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை இழக்க நேரிடுமா?
அ. செல்வராஜ் டி.இ. மாவட்டத் தலைவர் எஸ்.சி. / எஸ்.டி. பிரிவு தமிழ் மாநில காங்கிரஸ், பெரம்பலூர் மாவட்டம்
! இஸ்லாத்தில் இணைந்தவுடன் சாதி ஒழிந்து விடுவதால் அவர்களுக்குத் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்கான அரசு சலுகைகள் கிடைக்காது. இப்போது முடிவு செய்ய வேண்டியது இழிவுடன் கூடிய சலுகையா? இழப்புடன் கூடிய கௌரவமா? என்பது பற்றித்தான்
100 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டாலும் அதைப் பெறுதவற்காக நாங்கள் இழிந்தவர்கள்தான் என்பதை தலித்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். அந்த இழிவை ஒப்புக் கொள்வதற்குத்தான் சலுகைகள்.
"உன்னைச் செருப்பால் அடிக்கிறேன்; அதற்காக 1000 ரூபாய் தருகிறேன்...'' என்று நம்மிடம் கூறப்பட்டால் நாம் ஏற்க மாட்டோம். 1000 ரூபாய் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. சுய மரியாதைதான் முக்கியம் என்று உறுதியாகக் கூறிவிடுவோம். இங்கே தலித்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் இது போன்றவைதாம். மானமா? சலுகையா? என்பதைப் பற்றி தெளிவான முடிவுக்கு வந்துவிட்டால் மதம் மாறத் தயக்கம் காட்ட மாட்டார்கள்.
ஏழ்மையைப் பற்றிக் கவலை வேண்டாம். உதவுவதில் முஸ்லிம் சமுதாயம் யாருக்கும் குறைந்ததல்ல.
? தலித் மக்களை தாங்கள் மிகவும் புகழ்ந்து பேசுகிறீர்கள். ஆனால் அவர்கள் நம்மிடம் ஒற்றுமையாக இல்லையே?
அ. ரபி அஹ்மத், சீத்தா கேம்ப், மும்பை
! அவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதால் அவர்களுக்காக குரல் கொடுக்கிறோம். தமிழகத்தின் பல பகுதிகளில் முஸ்லிம்களுடன் மிகவும் ஒற்றுமையாகத்தான் உள்ளனர். ஒரு சில பகுதிகளில் ஒற்றுமையின்மை நிலவுவது உண்மையே. அவர்களுக்கும் உண்மையைப் புரிய வைப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்.
? எத்தனையோ இஸ்லாமியப் பெயர்கள் இருக்கும்போது ஏன் உணர்வு என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
ஆர். காதர் மீரான், புதுமடம்
! இஸ்லாத்திற்கு முரணில்லாத எல்லாப் பெயர்களும் இஸ்லாமியப் பெயர்கள்தான். மக்களுக்கு உணர்வூட்டுவதற்காகத்தான் இந்தப் பெயரைத் தேர்வு செய்தோம்.
? உணர்வு இதழில் கவிதைகள், சிறுகதைகள் இடம் பெறுமா?
அபிவையான் டி. ரியாஸ் அஹமது, குவைத்
! அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே உரைநடைகளிலேயே எளிமையான நடையைப் பயன்படுத்துகிறோம். எனவே கவிதைகள் வெளியிடுவதில்லை. நேரடியாகச் சொல்ல வேண்டிய செய்திகளுக்கே பக்கம் போதாத நிலையில் சிறுகதைகளையும் வெளியிட முடியாது.
? இந்திய முஸ்லிம்கள் 12.5 கோடி என்று குமுதம் 27-03-1997 ல் எழுதியுள்ளதே சரியா?
எச். காஜா மைதீன், நாகர்கோவில்
! மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில் 12.5 கோடி என்று கூறுவது ஆதாரமற்றது. இந்திய மக்கள் 30 கோடியாக இருந்தபோது முஸ்லிம்கள் ஆறு கோடியாக இருந்தனர். அனைத்து மதத்தவரும் சமவிகிதத்தில் வளர்ச்சியடைந்தால் கூட 20 கோடி முஸ்லிம்கள் இருக்க வேண்டும். மதம் மாறுவோர் மூலமாக இன்னும் சில கோடிகள் அதிகமாகியிருக்க வேண்டும். மற்ற சமுதாயத்தவரைவிட முஸ்லிம்கள் அதிகமாக இனவிருத்தி செய்கிறார்கள் என்பது உண்மையாக இருந்தால் மேலும் சில கோடிகள் அதிகமாகும். எப்படிப்பார்த்தாலும் 20 கோடிக்கு குறைவாக இருக்க முடியாது.
? இந்து முன்னணி அலுவலக குண்டு வெடிப்பில் பலியானவரை அடக்கம் செய்யவிடாமல் எஸ்.எம். பாஷா என்பவர் வழக்குப் போட்டது ஏன்?
ஜே. ரஹ்மான் கான், பல்லாவரம்
! அந்தக் குண்டு வெடிப்பில் பலியானவர் முஸ்லிம்தான் என்று இரண்டு வருடங்களுக்கு முன் ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டது. அதற்கு எதிராக அப்போதே வழக்குப் போட்டவர்தான் எஸ்.எம். பாஷா, முஸ்லிம் யாரும் குண்டு வைக்கவுமில்லை, பலியாகவும் இல்லை என்பதுதான் அப்போதிலிருந்து அவர் நிலைப்பாடு. அந்த அடிப்படையில்தான் இப்போது வழக்கு போட்டிருக்கிறார். முஸ்லிம் மீடியா டிரஸ்ட்களில் ஒருவர் என்ற முறையில் இந்த வழக்கை அவர் தொடரவில்லை. தனிப்பட்ட முறையில்தான் இவ்வழக்கைத் தொடர்ந்துள்ளார். உணர்வுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
(பின்னர் இவர் முஸ்லிம் மீடியா ட்ரஸ்டில் இருந்து ராஜினாமா செய்து விட்டார்.)
? பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கல்லறைகளுக்கும், சிலைகளுக்கும் கோடிக்கணக்கில் செலவிடுகிறார்களே! அது ஏன்?
யூ.ஜே.எஸ். முஹம்மது உவைஸ், கடையநல்லூர்
! எவ்விதக் கட்டுப்பாடுமின்றி தான்தோன்றித்தனமாக நடப்பதுதான் பகுத்தறிவு என்று நினைக்கின்றனர். அறிவுப்பூர்வமானவற்றை மற்றவர்களுக்குக் கூறினால் கேட்க மறுப்பதும், கிறுக்குத்தனமான காரியங்களைக் கூட சுயமாகச் செய்யத் தயாராக இருப்பதும்தான் இவர்களது அகராதியில் பகுத்தறிவு. பகுத்து உணர்வதுதான் பகுத்தறிவு என்பதை உணராததே இதற்குக் காரணம்.
உரிமை 1 : 46, ஆகஸ்ட் 1 - 7, 1997
? முஸ்லிம்களுக்கென்று உள்ள கட்சிகள் ஒன்றுபட்டு தேர்தலைச் சந்தித்தால் வெற்றி பெற முடியாதா?
அ. ரபீ அஹ்மத், சீத்தாகேம்ப், மும்பை
! வெற்றி பெற முடியும். வெற்றி பெற முடியாவிட்டாலும் சமுதாயத்தின் மரியாதையாவது மிஞ்சும். தேர்தலில் போட்டியிடுவதைக் கொள்கையாகக் கொண்ட முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு இதுகுறித்துக் கடிதம் எழுதினோம். யாருமே அக்கரை காட்டவில்லை.
? கே.ஆர். நாரயணன் தாழ்த்தப்பட்டவராக இருந்தும் பாரதீய ஜனதா அவரை ஆதரித்தது ஏன்?
எம். ஹிதயாத்துல்லாஹ், திருப்பூண்டி
! வேறு வழியில்லாததே காரணம் என்பதை துக்ளக்கூட ஒப்புக் கொள்கிறது.
? மராட்டியத்தில் பாஜக, சிவசேனை கூட்டாட்சியால் முஸ்லிம்களுக்கு எந்தத் துரோகமும் நடைபெறவில்லை என்று என நண்பர் கூறுகிறார். சரியா?
கீழை. என். ஹாஜா சாம், சென்னை - 17
! முஸ்லிம்கள் பலரின் ஓட்டுரிமையைப் பறித்தது; கிருஷ்ணா கமிஷன் செயல்பாட்டை முடக்கியது;நபிகள் நாயகத்தை அவமதித்து எழுதியது போன்ற கொடுமைகள் அவருக்குத் தெரியாது போலும்.
? காஷ்மீருக்குத் தனி அந்தஸ்த்து அளிக்கக் கூடாது. அப்படி அளித்தால் இந்தியாவுக்குள் இரண்டு நாடுகளை ஏற்படுத்தியதுபோல் ஆகிவிடும் என்று அத்வானி கூறுகிறாரே?
அ. முஹம்மது இல்யாஸ், பெரிய மணக்குளம்
! காஷ்மீருக்கு தனி அந்தஸ்த்து இருப்பதாக அரசியல் சாசனத்திலேயே கூறப்பட்டுள்ளது. அத்வானி அரசியல் சாசனத்தை அவமதித்த குற்றம் செய்கிறார். அரசியல் சாசனமே பிரிவினையை ஊக்குவிக்கிறது என்கிறார்.
உரிமை 1 : 49, ஆகஸ்ட் 22-28, 1997
? நேதாஜியின் போராட்ட முறையினால் சுதந்திரம் கிடைத்தது எனக் கூறும் நீங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதை ஆதரிப்பதேன்?
ஏ. ஹசன் பசரி, நிரவி
! மக்களின் ஓட்டுகள் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்யும். வழியில்லாத வெள்ளையர்கள் காலத்தில் அமைதியான போராட்டங்கள் பயன் தராது. மக்களாட்சியில் மக்களின் ஓட்டுகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஆட்சியாளர்கள் இத்தகைய போராட்டங்களை அலட்சியப்படுத்த மாட்டார்கள். ஆட்சி முறை மாறும் போது போராட்ட முறைகளையும் மாற்றிக் கொள்வதுதான் அறிவுடமை.
? தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக ஒரு சாராரின் வழிபாட்டுத் தலம் இடம் பெற்றிருப்பது எதைக் காட்டுகிறது?
டி. ஹுமாயுன் கபீர், மானியம் ஆடூர்
! மதச் சார்பின்மை என்பது உலகநாடுகளிடம் நற்பெயர் பெறுவதற்காக மட்டுமே பயன்படுகிறது. நடைமுறையில் மதச்சார்பின்மை கிடையாது என்பதைத்தான் இது உணர்த்துகிறது. இதை மறைப்பதற்கு இந்தியாவின் கலாச்சாரம், புராதனச் சின்னம் என்ற ரெடிமேட் பதில்தான் கிடைக்கும்.
? எப்போதும் இந்துமதப் பிரச்சாரம் செய்து வரும் இந்திய அரசின் தொலைக்காட்சியை எப்படி திருத்துவது?
நசீர், தர்மபுரி.
! இதைத் தட்டிக் கேட்டால் தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தப்படுமோ என்ற அச்சத்தை அகற்றி ஒன்றுபட்டுப் போராடினால் திருத்தலாம்.
? லாலு பிரசாத்தின் கால்நடைத் தீவன ஊழல் 950 கோடி என்று பத்திரிகைகள் எழுதுகின்றன. ஆனால் நீங்கள் 20 லட்சம் என்று எழுதியுள்ளீர்களே எது சரி?
நசீர், தர்மபுரி
! காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எல்லா கட்சியினரும் சம்பந்தப்பட்ட கால்நடைத் தீவன ஊழல் 950கோடிதான். அதில் லாலு பிரசாத் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருப்பது 20 லட்சம் ரூபாய்தான். அத்தனை ஊழல்களையும் லாலு செய்ததாகச் சித்தரிப்பதில் உயர்சாதி பத்திரிகைகள் வெற்றி கண்டு விட்டன.
? சினிமாக்காரர்களையும், நடிகர்களையும் விழா எடுத்து கௌரவிக்கும் மத்திய, மாநில அரசுகள் இந்தியாவைத் தலை நிமிர வைத்துள்ள, தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி அப்துல் கலாமை சிறப்பிக்கவில்லையே ஏன்?
எஸ். ஜஹாங்கீர், காரைக்குடி
! சினிமாக்காரர்களுக்கு விருது கொடுத்தால் அவர்களின் ரசிகர்களின் ஓட்டுகள் கிடைக்கும். விஞ்ஞானிகளுக்கு ஏது ரசிகர்கள்?
? தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களில் எந்த மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்கின்றனர்?
ஏ. சாதிக் பாட்ஷா, தோஹா - கத்தார்.
! மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்தில்தான் முஸ்லிம்கள் அதிகம். சதவீதத்தின் அடிப்படையில் கேரளாவில் அதிகமாக உள்ளனர்.
கேரள மக்கள் தொகை சுமார் மூன்று கோடி. அவர்களில் 22.5 சதவீதம் முஸ்லிம்கள் சுமார் 66 லட்சம். தமிழகத்தில் மக்கள் தொகை சுமார் ஆறு கோடி. அவர்களில் 13 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர். 78லட்சம் முஸ்லிம்கள் தமிழகத்தில் வாழ்கின்றனர்.
? உணர்வில் செய்திகள் மிகைப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு உங்கள் விளக்கம் என்ன?
ஹெச்.எம். ரஹ்மத்துல்லாஹ், துளசியாபட்டிணம்.
! பல ஆண்டுகளாக பத்திரிகை நடத்தியும், உணர்வைப் போல் செய்திகளைத் தர முடியவில்லையே என்ற பொறாமையும், பல்லாயிரக்கணக்கில் உணர்வு மக்களைச் சென்றடைகிறதே என்ற வெறுப்பும் சில பத்திரிகையாளர்களை அவ்வாறு கூறச் செய்துள்ளது. எது மிகை என்று ஆதாரத்துடன் காட்டினால் விளக்கமளிக்க நாம் தயார்.
? போராட்டங்களை நடத்தும்போது ஏழை, எளிய மக்கள் சொந்தக் காசை செலவிட்டு, வேலைகளை விட்டு விட்டு கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு சிரமம் தரக்கூடிய போராட்டங்கள் அவசியம்தானா?
எஸ். இஸ்மாயில், மேலப்பாளையம்
! சிறிய சிரமத்திற்குக்கூட முன் வராவிட்டால் இதைவிடப் பெரிய சிரமத்தைச் சமுதாயம் சந்திக்க நேரிடும் என்பதற்காகவே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
பிறருக்கு உதவுவது, தனது உயிரையும், உடமையையும், மானத்தையும் காத்துக் கொள்வதற்காகச் செலவு செய்வது ஆகியவற்றைச் சிரமம் என்று கருதக் கூடாது. லாப நஷ்டக் கணக்கை பார்க்க இது ஒன்றும் வியாபாரம் இல்லை.
உரிமை 1 : 50, ஆகஸ்ட் 29 - செப்டம்பர் 4, 1997
? பொதுக் கூட்டங்களில் மனுக்களைப் பெற்றுக் கொள்ளும் நீங்கள் அந்தக் குறைகளைத் தீர்க்க போராட்டம் தவிர வேறு எந்த முயற்சியையும் மேற்கொள்வீர்களா?
ஏ. சாகுல் ஹமீது, பனங்காட்டூர்
! அரசின் கவனத்திற்கு பிரச்சினையை எப்படிக் கொண்டு போவது? என்பது பற்றி மக்களுக்கு விளக்கி அதற்கான ஏற்பாடுகள் செய்கிறோம். நாங்களும் உரிய அதிகாரிகளிடம் தொடர்பு கொள்கிறோம். இதன் பிறகுதான் போராட்டத்தில் இறங்குகிறோம்.
? காவல் துறையினர் கைக்கடிகாரம், வைர மோதிரம், பேனா ஆகியவற்றை மக்களிடமிருந்து அபகரித்தால் எந்தக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும்?
பி.யூ. ஜாஹிர் ஹுஸைன், ரியாத்.
! அவர்களின் மேலதிகாரிகளுக்கும், போலீஸ்துறை அமைச்சருக்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் புகாரை அனுப்புவதுடன் மனித உரிமை இயக்கங்கள் ஆகியவற்றிற்கும் அதன் நகலை அனுப்பினால் உரிய ஆலோசனைகளை வழங்கி நடவடிக்கை எடுக்கச் செய்ய முடியும்.
? முஸ்லிம்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தால் அது மதமாற்றத்தை ஊக்குவிக்கும் என்று இராமகோபாலன் கூறுவது சரியா?
அ. முஹம்மது இலியாஸ், பெரிய மணக்குளம்
! இராமகோபாலன் சார்ந்துள்ள மதத்தில் அனைவரும் முற்றாக நம்பிக்கையிழந்து விட்டனர். அந்த மதத்தில் இருப்பதால் கிடைக்கக் கூடிய அரசாங்க சலுகைகளுக்காகத்தான் வேண்டா வெறுப்புடன் நடந்து வருகின்றனர். முஸ்லிம்களாக மாறினாலும் இதே சலுகை கிடைக்கும் என்றால் கூடாரம் காலியாகி விடக் கூடும் என்று சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார். மத மாற்றத்தைத் தடுத்து நிறுத்த தெளிவான கொள்கையோ, தெளிவான சட்டத் திட்டங்களோ உள்ளவர்கள் இப்படி கூற மாட்டார்கள். அவரது கூற்று அவரது மதத்தைத்தான் இழிவுபடுத்துகிறது.
உரிமை 1 : 51, செப்டம்பர் 5-11, 1997
? காவல்துறையின் முஸ்லிம் விரோதப் போக்கை எதிர்த்து எவ்வளவுதான் போராடினாலும் அவர்களின் போக்கில் மாற்றமில்லையே ஏன்?
ஏ. இஹ்ஸானுல்லாஹ், அதிராம்பட்டிணம்
! திருவாரூர் மாவட்ட எஸ்.பி. கோபாலகிருஷ்ணன் போன்றவர்களிடம் முஸ்லிம் விரோதப் போக்கு இருப்பதால் அனைவரையும் நாம் அவ்வாறு கருத முடியாது. நேர்மையான உயரதிகாரிகளை அணுகி இத்தகையோருக்குத் தக்க பாடம் கற்பித்து வருகிறோம். கோபால கிருஷ்ணன், நெல்லை கமிஷனர் தாபா போன்றவர்களுக்கு எதிராக மக்கள் சக்தியைத் திரட்டிப் போராடிக் கொண்டிருந்தால் திருந்துவார்கள்.
? சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை ஆதரிக்கும் சில கட்சிகள் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு எதிர்ப்பது ஏன்?
ஏ. இஹ்ஸனுல்லாஹ், பனங்காட்டூர்
! பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்தால் தமது குடும்பத்துப் பெண்களை நிறுத்தி ஆதாயம் அடையலாம். இந்துப் பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொள்ளலாம், சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அளித்தால் இந்த நாட்டின் இரண்டாந்தரக் குடிமக்கள் அல்லவா பயன் அடைவார்கள். இந்த மனப்பான்மைதான் காரணம்.
? திரையுலகில் முஸ்லிம்கள் குறிப்பாக பெண்கள் பெருமளவு நுழைந்துள்ளனர். இதற்கு காரணம் என்ன? (சமீபத்திய வரவு பாத்திமா பாபு)
அபூ ஃபைசல், அய்யம்பேட்டை
! குஷ்பூ, பாத்திமா பாபு போன்றவர்கள் முஸ்லிம்கள் என்று யார் சொன்னது? முஸ்லிம்களின் குடும்பத்தில் பிறந்த யாரும் முஸ்லிமாக முடியாது. இஸ்லாத்தை நம்புவதால்தான் முஸ்லிம்களாக முடியும். வளர்த்த விதம் சரியாக இல்லாததுதான் இதற்குக் காரணம்.
உரிமை 1 : 52, செப்டம்பர் 12-18, 1997
? தவறு செய்யும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்படி போராடுகிறோம். இடமாற்றம்தான் பெரிய தண்டனையா?
ஏ. சாகுல் ஹமீது, பனங்காட்டூர்
! குழந்தை குட்டிகளுடன் வேறொரு இடத்திற்கு மாற்றம் செய்யப்படுவதும் தண்டனைதான். அரசாங்கத்தினால் இந்தத் தண்டனைதான் வழங்க முடியும். அதன் பிறகு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் இதற்கு ஒத்துழைக்க முன் வருவதில்லை.
? உணர்வு இதழ் பல கட்சியினரையும் தாக்கி எழுதி வருகிறது. இதனால் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் இல்லையா? கடந்த காலத்தில் தாக்கப்பட்ட பத்திரிகையாளர்களைப் பற்றி தெரியாதா?
கே.எம். தவ்லத் பாட்சா, அதிராம்பட்டிணம்
! வாதங்களின் அடிப்படையில்தான் நாம் விமர்சனம் செய்கிறோம். அவர்களின் அந்தரங்க வாழ்க்கையைக் கீழ்த்தரமாக நாம் விமர்சிப்பது இல்லை. எனவே பாதிப்பு வராது என்று நம்புகிறோம். வந்தால் சந்திக்கத் தயாராகவே இருக்கிறோம்.
? முஸ்லிம்களின் கடைகளில் பொருள்கள் வாங்கக் கூடாது என்று இராமகோபாலன் கூறியதுபோல் நாமும் நடவடிக்கை எடுத்தால் என்ன?
எம். ஜபருல்லாஹ், முகவை
! இஸ்லாம் அப்படி நமக்குக் கூறவில்லை. மேலும் இந்து மக்கள் அனைவரும் இராமகோபாலனின் கூற்றை ஆதரிக்கவில்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய சிறு கும்பலின் விஷமத்திற்காக அந்தச் சமுதாயத்தைப் பகைத்துக் கொள்வது விவேகமாகாது.
? உணர்வு இதழ் எல்லோரையும் விமர்சிப்பதிலிருந்து இவர்களின் யோக்கியதையைப் புரிந்து கொள்ளுங்கள் என்று என் நண்பர் கூறுகிறார்.
ஹலீமா மணாளன், தமாம்
! சிலரை விமர்சித்து மற்றும் சிலரை விமர்சிக்காது விட்டால் அவர்களிடம் விலைபோய் விட்டதாக அதே நண்பர் கூறுவார். எல்லாக் கட்சினரும் முஸ்லிம்கள் விஷயத்தில் பாரபட்சமாக நடக்கும்போது சிலரை மட்டும் விமர்சிப்பது என்ன நியாயம்? யாரை விமர்சித்தாலும் அதற்குரிய காரணங்களையும் வாதங்களையும் எடுத்து வைத்தே விமர்சிக்கிறோம்.
? கல்வித் துறையில் முஸ்லிம்கள் பின்தங்கியுள்ள நிலையில் முஸ்லிம்களுக்காகவும் கல்வி நிறுவனங்கள் நிறுவ யோசனை உள்ளதா?
பி.ஜே.எஸ். முஹம்மது உவைஸ், கடையநல்லூர்
! முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் போதுமான அளவு உள்ளன. அவற்றில்கூட முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படும் நிலைதான் உள்ளது. ஒரு சில கல்லூரிகள் மட்டுமே விதிவிலக்காக உள்ளன.
அரசுக் கல்விக் கூடங்களில் சேருவதற்குரிய உயர்ந்த மதிப்பெண்களை முஸ்லிம்கள் பெறுவதற்காக மாணவர்களைப் பயிற்றுவிக்கும் பயிற்சி நிலையங்களை உருவாக்கும் திட்டம் உள்ளது. இன்ஷா அல்லாஹ் அடுத்த ஆண்டுக்குள் சென்னையில் மட்டும் அதை அமுல்படுத்த முயற்சித்து வருகிறோம்.
உணர்வு 2 : 6, அக்டோபர் 24-30, 1997
? தென்நாட்டின் வீரசிங்கம் பழனிபாபாவைப் போல் இன்னொரு வீரசிங்கம் இந்நாட்டில் உருவாகுமா?
ஏ.ஆர். இஸ்மாயில், காயல்பட்டிணம்
! இறை நம்பிக்கையாளர்கள் இப்படியெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. இது இறைவன் தீர்மானிக்க வேண்டிய விவகாரம். அல்லாஹ் நாடினால் பழனிபாபாவைவிட சிறந்தவர்களையும் உருவாக்கித் தரலாம்.
? கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்ட கல்யாண் சிங்குக்கு முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த மத்திய அரசின் பிரதிநிதி ஆளுநர் பற்றி தங்கள் கருத்து என்ன?
ஏ.எம். இஸ்மாயில், காரைக்கால்.
! கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் முதல்வராக முடியாது என்று அரசியல் சட்டத்தில் இல்லை. எனவே கவர்னரைக் குறைகூற முடியாது. தர்மத்தின்படி கல்யாண்சிங் முதல்வர் பதவிக்குத் தகுதியற்றவர். லாலுவைவிட மோசமான குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். ஆயினும் லாலுவுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு குதித்த இந்திரஜித் குப்தா வகையறாக்களையும் நமது நாட்டின் செய்தியாளர்களையும் தான் குறைகூற வேண்டும்.
? இந்தியாவில் இந்துக்கள் 82 சதவீதம், முஸ்லிம்கள் 12.2 சதவீதம் என்று 10-10-1997 தினத்தந்தி தொழில் மலரில் கூறப்பட்டுள்ள விபரம் சரியா?
ஏ. அப்துன்னசீர், சேலம்
! தனி இடஒதுக்கீடு கோரிக்கை வலுப் பெற்று வருவதால் முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காக இவ்வாறு தினத்தந்தி எழுதியிருக்கக் கூடும். முஸ்லிம்கள் 20 சதவிகிதம்,கிறிஸ்தவர்கள் 5 சதவிகிதம் உள்ளனர். யார் முஸ்லிம்கள் இல்லையோ, யார் கிறிஸ்தவர்கள் இல்லையோ அவர்களெல்லாம் இந்துக்கள் என்று நமது நாட்டுச் சட்டம் கூறுகிற அடிப்படையில் இந்துக்கள் 75 சதவிகிதம் எனலாம். (சீக்கியர்கள், பௌத்தர்கள், நாத்திகர்கள், தலித்துகள் மற்றும் சிறிய மதங்களைச் சேர்ந்தவர்களெல்லாம் இந்துக்கள் என்று நமது சட்டம் கூறுகிறது.) இந்து மதத்தில் நம்பிக்கையுள்ளவர்களே இந்துக்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் 10 சதவிகிதம்தான் தேறுவார்கள்.
உரிமை 2 : 7, அக். 31 - நவ. 6, 1997
? பெரியார் உயிரோடு இருந்த காலம்வரை உயர்சாதியினரின் சதிவலையில் சிக்காமல் இந்துக்களைக் காப்பாற்றினார். இன்று அவர்களின் சதிவலையில் சிக்கிக் கொண்ட இந்துக்களைக் காப்பாற்ற இன்னொரு பெரியார் வர வேண்டுமா?
ஆர். பாலு, தோஹா கத்தார்.
! சோர்ந்து கிடக்கும் அவரது தொண்டர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டாலே போதுமானது.
? முஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலர் இந்து ஆலயங்களுக்கும் இந்து பெயர் தாங்கிகள் சிலர் முஸ்லிம் ஆலயங்களுக்கும் சென்று வழிபடுவது ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டா? பக்தியின் குழப்பமா?
பருத்தி இக்பால், மேலப்பாளையம்
! எதையும் கடவுளாக வணங்குவது இந்து மதத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்துக்கள் முஸ்லிம் ஆலயங்களில் வழிபட்டாலும் அவர்கள் இந்துக்கள் தான். ஒரு கடவுளை மட்டுமே வணங்குவதைக் கொள்கையாகக் கொண்ட முஸ்லிம்கள் அதை மீறும்போது முஸ்லிம்களாக இருக்க மாட்டார்கள். இந்துக்கள் தங்கள் கொள்கையில் உறுதியுடன் உள்ளனர். நீங்கள் சுட்டிக்காட்டக்கூடிய முஸ்லிம் பெயர் தாங்கிகள்தான் குழப்பத்தில் உள்ளனர்.
? மருதநாயகம் பரிசுப் போட்டி அறிவித்துள்ள உணர்வு, இப்படியும் சிலர் என்ற தலைப்பில் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டியது சினிமா எனவும் கூறியிருப்பது முரண்பாடாக இல்லையா?
! மருதநாயகம் என்பது சினிமாக்கதை இல்லை. வெள்ளையர்களை எதிர்த்துப் போராடி வீர மரணம் அடைந்த இந்தியாவின் ஈடு இணையற்ற மாவீரன் மருதநாயகம். அவரது வரலாறு சம்மந்தமாகத்தான் கட்டுரைப் போட்டியே தவிர மருதநாயகம் என்ற சினிமாவுக்காக இல்லை.
? வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு கிடைத்தாலும் அதற்குரிய பட்டதாரிகள் சமுதாயத்தில் இல்லை. எனவே இடஒதுக்கீடு கேட்பது தேவையில்லாதது என்று சிலர் கூறுகிறார்களே?
பி.டி. லியாகத் அலி, கோவை
! வேலை வாய்ப்பில் மட்டும் நாம் இடஒதுக்கீடு கோரவில்லை. கல்வியிலும்தான் இடஒதுக்கீடு கேட்கிறோம்.
இந்துக்கள் தீ மிதிப்பது பற்றி எழுதியிருந்தீர்கள். சில முஸ்லிம்களும் தீ மிதிக்கிறார்களே!
எம்.டபிள்யு. ரபி அஹ்மத், மும்பை
! இஸ்லாத்தில் இல்லாத அந்த மூடப்பழக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. சில ஆண்டுகளில் முழுமையாக ஒழிந்து விடும்.
உரிமை 2 : 9, நவம்பர் 14-20, 1997
? அக்பர் சூரிய வழிபாடு செய்பவர் என்று தினத்தந்தி தங்கமலரில் எழுதப்பட்டுள்ளதே உண்மையா?
டி.ஏ. கமாலுத்தீன், காயல்பட்டிணம்
! அக்பர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி தீனே இலாஹி என்ற புது மதத்தை உருவாக்கியவர். பெரும்பாலும் இந்து மத நம்பிக்கைகளைக் கொண்டதே அவரது மதம். எனவே சூரியனை மட்டுமின்றி பசுவின் சாணத்தைக் கூட அவர் விழபட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
? அவர்கள் கொளுத்துகிறார்கள் நூலாசிரியர் சியாம் சுந்தருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு இருந்தது?
அ. அப்துர் ரஜாக், திட்டச்சேரி
! காவல்துறையினர் அவர் மீது தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை அந்தத் தொடரிலேயே குறிப்பிட்டுள்ளோம். போலீசார் பொய்யாக அவர் மீது குற்றம் சுமத்தினார்கள் என்பதுதான் இதன் பொருள்.
? உணர்வில் வெளிவரும் விஷயங்களுக்கு இந்துத்துவப் பத்திரிகைகள் மறுப்போ, எதிர்வாதமோ செய்வதில்லையே ஏன்?
! பதிலளிக்க முடியவில்லை என்பது காரணமா? உணர்வுக்கு விளம்பரமாகி விடக்கூடாது என்பது காரணமா? என்று தெரியவில்லை.
? உணர்வு பத்திரிகை ஆரம்பித்த நேரத்தில் பழனிபாபா உயிருடன் இருந்தார். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இது குறித்து உணர்வில் செய்திகள் வெளியிடாதது ஏன்?
! உணர்வு ஆரம்பித்த காலத்தில் பழனி பாபா அவர்களின் நிகழ்ச்சிகள் குறைந்து விட்டன. நமக்குத் தெரிந்தவரை உணர்வு ஆரம்பித்த பின் இரண்டு அல்லது மூன்று நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டார். அப்படியிருந்தும் அவரைச் சந்தித்து அவரது பேட்டியை உணர்வு வெளியிட்டது. கடைசியாக உணர்வுக்குத்தான் பழனி பாபா பேட்டி கொடுத்தார். மேலும் பழனி பாபாவின் பழைய பேச்சுகளுக்காக திமுக அரசு வழக்கு போட்டதைக் கண்டித்து உணர்வில் எழுதியுள்ளோம்.
உணர்வு 2 : 13, டிசம்பர் 12-18, 1997
? மாதக் கணக்கில் நடைபெற்ற தென்மாவட்டக் கலவரங்களில் இறக்கப்படாத இராணுவம் கோவை கலவரத்தின்போது இறக்கப்படக் காரணம் என்ன? முஸ்லிம்களைக் கூண்டோடு அழிக்கத் திட்டமா?
கே.எஸ். ஹமீது, நாகூர்
! கோவையில் காவல்துறையினரே வன்முறை வெறியாட்டத்தில் இறங்கியிருந்தனர். உயர் அதிகாரிகளுக்கும் அரசுக்கும் கட்டுப்பட மறுத்தனர். மற்றும் சிலர் பணிக்குத் திரும்பவில்லை. இந்த நேரத்தில் கௌரவம் பார்க்காமல் மத்திய ரிசர்வ் போலீஸாரையும், இராணுவத்தையும் தமிழக முதல்வர் அழைத்திருக்காவிட்டால் முஸ்லிம்கள் பூண்டோடு அழிக்கப்பட்டிருப்பார்கள். போலீசாருக்கும் மேலே அவர்களையும் கட்டுப்படுத்தும் உயர் அமைப்புகள் உள்ளன என்பதை உணர்த்த வேண்டிய நேரத்தில் உணர்த்திய முதல்வரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
இரண்டு நாட்கள் தாமதப்படுத்தியதைக் குறை கூறலாமே தவிர இராணுவத்தை வரவழைத்ததைக் குறை கூற முடியாது. ஜெயலலிதாவின் ஆட்சியாக இருந்திருந்தால் பல நூறு முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருப்பார்கள். இராணுவம் வந்த பிறகுதான் காவல்துறையினர் அடங்கினார்கள். இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கலாம்.
? நீதிமன்றத்தில் பாபர் மசூதி குறித்த வழக்கு இருக்கும்போது அதை அடிப்படையாக வைத்துப் போராட்டம் நடத்துவது பைத்தியக்காரத்தனம் என்று அதிமேதாவிகள் சிலர் கூறுகிறார்களே?
ஒய். யாசின், புதுப்பேட்டை
! 1949 முதல் பாபர் மசூதி குறித்த பல்வேறு வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் உள்ளன. இன்றுவரை விசாரணைக்குக் கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை. பாபர் மசூதிக்காக போராட்டங்கள் நடத்தப்பட்டு அரசுக்கு நிர்பந்தம் ஏற்படுத்த தவறியதுதான் இந்தத் தாமதத்துக்குக் காரணம். விரைந்து தீர்ப்பு வழங்கப்படாவிட்டால் ஒரு சமுதாயத்தின் கடும் அதிருப்திக்குள்ளாக நேரிடும் என்று அரசுக்கு உணர்த்துவதன் மூலம் மட்டுமே வழக்கை துரிதமாக விசாரிக்கப்படும் நிலை ஏற்படும்.
எது பைத்தியக்காரத்தனம் என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
உரிமை 2 : 15, டிசம்பர் 26 - ஜனவரி 1, 1997
? இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேர்ந்து ஐ.நா. போல் ஒரு குழு அமைத்தால் நல்லதல்லவா?
என். அப்துன் நாசிர், பேர்ணாம்பட்டு
! அப்படி ஒரு அமைப்பு ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்கூட ஈரானில் இந்தக் கூட்டமைப்பின் மாநாடு நடந்தது. அதில் 55 நாடுகள் கலந்து கொண்டன. இஸ்ரேலின் பயங்கரவாதம்,அமெரிக்காவின் அடாவடித்தனம் பற்றியெல்லாம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
? ரயில் குண்டு வெடிப்பிற்கு சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்ட கருணாநிதி, கோவை படுகொலை சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடாதது ஏன்?
முஹம்மது ரியாஸ், நாகூர்
! கொலையாளிகளான காவலர்களை சி.பி.ஐ. விசாரிப்பதும், அவர்கள் மீது வழக்குத் தொடருவதும் காவலர்களின் மனதைப் புண்படுத்தாதா? இனிமேல் கலைஞரின் ஒவ்வொரு நடவடிக்கையும் காவலர்களின் மனதைப் புண்படுத்துமா என்பதைப் பொறுத்தே அமையும்.
? கோவைக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் 17 பேர் என்று உணர்வில் குறிப்பிட்டீர்கள். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் என்று சிலர் கூறுகிறார்களே?
ஹ. நஜ்முத்தீன், நாகூர்
! கோவையில் கொல்லப்பட்டவர்கள் 19 பேர். இவர்களில் ஒருவரது உடல் இளையான்குடிக்கும்,மற்றொன்று கேரளாவிற்கும் கொண்டு செல்லப்பட்டது. 17 பேர் உடல் ஒரே இடத்தில் கோவையில் அடக்கப்பட்டன. பத்து பேரைக் காணவில்லை. ஒருவேளை போலீசாரோ, பயங்கரவாதிகளோ கொன்றுவிட்டு உடலை எங்கேனும் மறைத்திருக்கக் கூடும். இதையும் சேர்த்தால் 27 பேர் கொல்லப்பட்டிருக்கக் கூடும்.
? முஸ்லிம் தீவிரவாதிகள் ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ளதாக இராமகோபாலன் கூறுகிறாரே?
இஜாஸ் குரூப், கொடுவள்ளி
! கோவை கலவரம் ஆயுதங்கள் பதுக்கி வைத்தவர்கள் யார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. முஸ்லிம்கள் ஆயுதம் வைத்திருந்தால் இழப்பு இந்த அளவுக்கு இருந்திருக்காது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கொடூர மனம் படைத்தவர்களில் முதலிடத்தை இராமகோபாலனுக்கும் இரண்டாவது இடத்தை உயர் சாதிப் பத்திரிகைகளுக்கும் வழங்கலாம்.
? உணர்வுக்கு எழுதும் கடிதங்களை உளவுத் துறையினர் பிரித்துப் பார்ப்பார்களா?
இ. செய்யது அலி, கயத்தாறு
! முஸ்லிம்கள் சம்மந்தப்பட்ட எந்த இயக்கமானாலும் அவற்றின் கடிதங்கள் பிரித்துப் பார்க்கப்படும். தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படும். இதுதான் நம் நாட்டின் மதச் சார்பின்மை.
? பெரியார் வழி வந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் கருணாநிதி, வை.கோ., ராமதாஸ் ஆகியோர் பாஜக தீண்டதகாத கட்சியல்ல என்று கூறிவருவது ஏன்?
வி.எஸ். அப்துல் கையூம், புரைதா
! போடுகின்ற வேடம் ஏதுவனாலும் இவர்கள் அனைவரும் உள்ளத்தால் இந்துக்களாக இருப்பதுதான் காரணம்.
? டிசம்பர் 6 பேரணியை தமிழக அரசு எந்த உள்நோக்கத்தில் தடை செய்திருக்கும்?
ஹஸன் அலி, மேலப்பாளையம்
! ஆரம்பத்தில் எழுத்து மூலமாக அனுமதி கொடுத்திருந்தனர். பத்தாயிரத்திற்கும் குறைவானவர்கள் கூடுவார்கள் என்றுதான் அப்போது எதிர்பார்த்தனர். பல லட்சங்களைத் தாண்டி மக்கள் கூடுவார்கள் என்ற தகவலும், கோவை கலவரத்தின் எதிரொலியாக ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடுமா என்ற அச்சத்தின் காரணம் என்று அரசுத் தரப்பில் நம்மிடம் கூறப்பட்டது. இது வெளிப்படையாகக் கூறப்பட்ட காரணம். முஸ்லிம்கள் ஓரணியில் திரண்டு, எல்லாக் கட்சிகளும் இதுவரை சென்னையில் நடத்திய பேரணிகளை முறியடித்து விடுவார்கள் என்பதை எவராலும் ஜீரணிக்க முடியவில்லை என்பதுதான் உண்மையான காரணமாக இருக்கக் கூடும்.
உரிமை 2 : 17, ஜனவரி 9 - 15, 1998
? முஸ்லிம்களை அவர்களின் சதவிகிதத்திற்கேற்ப வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகளை வற்புறுத்துவீர்களா?
கே.எஸ். இத்ரீஸ், புரைதா
! வலியுறுத்தினால் எந்தக் கட்சியும் கேட்கும் நிலையில் இல்லை. முஸ்லிம்களின் ஒரு ஓட்டு கூட கிடைக்காது என்று அதிமுக கூட்டணி நம்புவதால் அவர்களும் நிறுத்த மாட்டார்கள். பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைந்துள்ளதால் நமக்கு ஒட்டுப் போடுவதைத் தவிர முஸ்லிம்களுக்கு வேறு வழியில்லை என்று திமுக நினைக்கிறது.
எனவே அவர்களும் சதவீதத்தின் அடிப்படையில் ஐந்து பேரை நிறுத்தப் போவதில்லை. மற்ற உதிரிக் கட்சிகள் நிறுத்துவதால் எந்தப் பயனும் இல்லை.
நமது பலத்தையும், ஒற்றுமையையும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துக் காட்டினால் அடுத்த தேர்தலிலாவது முஸ்லிம்களை மதிப்பார்கள். எனவேதான் இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் யாருக்கும் ஓட்டுப் போட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் நமது அதிருப்தியை ஒன்றுபட்டுச் சொல்லலாம். அடுத்த தேர்தலில் இதன் பலன் மிகுதியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
? தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காமல் இருப்பதால் யாருக்கு என்ன நஷ்டம் ஏற்படப்போகிறது?நமக்கு இதனால் என்ன இலாபம் ஏற்படப் போகிறது?
ஏ. ஷாகுல் ஹமீது, பனங்காட்டூர்
! வாக்களித்தால் நமக்கு ஏற்பட்ட இலாபம் ஏதுமில்லை. எவ்வளவு அநீதி இழைக்கப்பட்டாலும்,அலட்சியப்படுத்தப்பட்டாலும், உரிமைகள் பறிக்கப்பட்டாலும் முஸ்லிம்கள் நமக்கு வாக்களிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அரசியல் கட்சிகள் உறுதியாக நம்புகின்றனர். முஸ்லிம் தலைவர்கள் சிலரைக் கைக்குள் போட்டுக் கொண்டால், அற்பமான ஆறுதல் மொழிகளைக் கூறி முஸ்லிம் சமுதாயத்தைக் கைவசப்படுத்தலாம் என்ற எண்ணம் வலுப்பெற்றுள்ளது. வாக்களித்தால் நாம் கண்ட பயன் இதுதான்.
கோவை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒட்டு மொத்த முஸ்லிம்களும் மன்னிக்கத் தயாராக இல்லை என்பதை புறக்கணிப்பின் மூலம் நாம் உணர்த்த முடியும். நியாயம் வழங்காவிட்டால் இந்தச் சமுதாயம் ஏமாறப் போவதில்லை என்பதைத் தெளிவாக அறிவிக்க முடியும். புறக்கணிப்பு முழு அளவுக்கு இருந்தால் அடுத்தடுத்த தேர்தல்களில் நமது ஓட்டுகளைப் பெறுவதற்காகவாவது நமக்கு நியாயங்கள் வழங்குவார்கள். உடனடியாக லாப நட்டக் கணக்குப் பார்க்காமல் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்தால் இதனால் சமுதாயத்திற்கு நிச்சயமாகப் பலன் உண்டு.
? அதிமுக + பாஜக கூட்டணி பற்றி உங்கள் கருத்து என்ன? அதிமுகவில் இன்னமும் இருக்கின்ற முஸ்லிம்களைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
அ. அசினா, காரைக்கால்
! அரசியல் கட்சியினர் அனைவரும் அயோக்கியமானவர்கள் என்பதுதான் ஆரம்பம் முதலே நமது கருத்து. குறிப்பாக அனைவரும் முஸ்லிம்களுக்கு எதிராகத்தான் ஐம்பது ஆண்டுகளாக நடந்து வந்துள்ளனர். பாஜகவுக்கு இன்று அதிமுக பட்டுக்கம்பளம் விரிக்கிறது. நாளை திமுக இதே வேலையைத்தான் செய்யப் போகிறது. ராமதாஸ் போன்றவர்களெல்லாம் தங்கள் சுயரூபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய பிறகும் முஸ்லிம்கள் எந்தக் கட்சியிலும் அங்கம் வகிக்கக் கூடாது. அது அவர்களின் அழிவுக்குத்தான் வழி வகுக்கும். இதைத்தான் அனைத்து முஸ்லிம்களுக்கும் நாம் அறிவுரையாகச் சொல்கிறோம்.
(நாம் சந்தேகப்பட்ட்து போல் கருணாநிதி பாஜவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு நம் சந்தேகத்தை மெய்யாக்கி நெஞ்சில் குத்தினார்)
உரிமை 2 : 20, ஜனவரி 30 - பிப்ரவரி 5, 1998
? முஸ்லிம்கள் எந்தக் கட்சிக்கும் ஓட்டு போடக் கூடாது என்று அறிவிக்கும் நீங்கள் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினீர்களா?
மு. யூசுப் ரஹ்மத்துல்லாஹ், நாகூர்
! கோவையில் இவ்வளவு அராஜகம் நடந்த பின்பும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை நடுநிலையாளர்கள் கூட பிறகு கோவையில் தமிழக அரசு சரியாக நடவடிக்கை எடுத்துள்ளது என்று அறிக்கைவிட்டு விட்டு கருணாநிதியை வலியச் சந்தித்து நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தவர்களை எப்படி சந்திக்க முடியும்?
? தேர்தல் புறக்கணிப்பு முடிவை அனைத்து முஸ்லிம்களும் ஏற்பார்களா?
ஏ.எம். பைஜுர் ரஹ்மான், கொள்ளுமேடு
! எந்த முடிவையும் அனைவரும் ஏற்க மாட்டார்கள். சமுதாயம் அந்த அளவுக்கு பிளவுபட்டுள்ளது. பெரும்பாலான முஸ்லிம்கள் இதை ஏற்பார்கள் என்பது எங்கள் நம்பிக்கை. இந்தச் சமுதாயத்தை எவரும் காப்பாற்ற மாட்டார்கள். அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும் என்ற யதார்த்த நிலையை உணர்ந்தவர்கள் எவ்வளவு பேர்? இதை உணர்த்துவதுதான் எமது நோக்கம்.
? முஸ்லிம்கள் ஓட்டு யாருக்கு என்று சென்னையில் நடத்தப்பட்டது போன்று கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்துவீர்களா?
எஸ்.எம். மீரான் மைதீன் (இமாம்), எஸ். முகம்மது ரபீக், கம்பூர்
! ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதை மக்களிடம் கொண்டு செல்ல எல்லாவித முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
? தேர்தலைப் புறக்கணித்தால் அபராதம் போட வேண்டும் என்று சிலர் கூறுகிறார்களே?
அப்துல் கரீம், நாகர்கோவில்
! சட்டத்தில் அதற்கு இடமில்லை. ஓட்டுப்போட உரிமை உள்ளதைப்போல் போடாமல் இருக்கவும் உரிமை உள்ளது.
? விஞ்ஞானி அப்துல் கலாம் சங்கராச்சாரியாரிடம் ஆசி பெற்றது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஏ.ஜே. சிராஜ், மதுக்கூர்
! விருது வழங்கப்பட்டதே அதற்குத்தான். அவர் உண்மை முஸ்லிமாக வாழ்ந்திருந்தால் அவரது திறமை மறைக்கப்பட்டிருக்கும்.
உரிமை 2 : 22, பிப்ரவரி 13-19, 1998
? பா.ஜ.க.வில் உள்ள முஸ்லிம்களுக்கும், திமுகவில் உள்ள முஸ்லிம்களுக்கும் வேறுபாடு என்ன?
எம். குலாம் தஸ்தகீர், பண்டாரவாடை
! அவர்கள் தமிழ் தெரியாதவர்களை தலைவர்களாக ஏற்றுள்ளனர். இவர்கள் தமிழ் தெரிந்தவர்களை ஏற்றுள்ளனர். மொழியைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் கிடையாது.
? கோவை கலவரத்தில் பாதிக்கப்படாதவரும் பணம் பெற்றுள்ளார்கள் என்று எனது நண்பர் கூறுகிறார். இது உண்மையா?
சுலைமான், கோவை
! ஏராளமான பேர் பாதிக்கப்பட்டிருக்கும்போது ஒன்றிரண்டு பேர் நம்மை ஏமாற்றிப் பணம் பெற்றிருக்கக் கூடும். இறையச்சமுடையவர்களாக இருந்தால் அது அவர்களுக்கு ஹலால் இல்லை.
கடுமையான பரிசீலனை செய்வது பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட உதவி கிடைக்காத நிலையை ஏற்படுத்தி விடும். அவர்கள் புண்படுவதற்கும் காரணமாகிவிடும். அரசாங்கம் போல் ஆயிரம் சான்றிதழ்களைக் கொண்டு வருமாறு சமுதாய அமைப்பு கேட்க முடியாது; கேட்கவும் கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் ஓரிருவர் உதவி பெற்றாலும் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட விடுபடக் கூடாது என்பதில்தான் நாம் கவனம் செலுத்தினோம்.
? திமுக சார்பில் முஸ்லிம்கள் நிறுத்தப்பட்டால் அவரை ஆதரிக்கலாமா?
கே. செய்யது அப்துல் காதிர், ஆனையூர்
! ஒரு கட்சியின் சார்பில் நிறுத்தப்படுபவர் வெற்றி பெற்றால் அது கட்சியின் வெற்றியாகத்தான் கருதப்படுமே தவிர வேட்பாளரின் வெற்றியாகக் கருதப்படுவதில்லை. எனவே எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதுதான் நல்லது.
? முஸ்லிம்கள் ஓட்டு யாருக்கு என்று பீ.ஜே. அவர்கள் பேசிய கேஸட் உளவுத்துறை ஆய்வுக்குப் போயுள்ளது என்று ஜுனியர் விகடன் எழுதியுள்ளதே?
மு. யூசுப் ரஹ்மத்துல்லாஹ், நாகூர்
! சூரத் பிளேக் நோய்க்கு பாகிஸ்தான் எலிகள் காரணம் என்று முன்னர் ஜு.வி. எழுதியது. அது போன்றதுதான் இந்தச் செய்தியும். கோவையில் ரகசியமாக தயாரிக்கப்பட்ட உரை என்று புளுகியுள்ளது ஜு.வி. அந்த ஒலிநாடா சென்னை மண்ணடியில் பல்லாயிரம் மக்களை சாட்சியாக வைத்துக் கொண்டு உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஆற்றப்பட்ட உரைதான்.
? பள்ளிவாசலில் ஓட்டுக் கேட்கக் கூடாது என்று எழுதியுள்ளீர்கள். அவ்வாறு கேட்டால் என்ன செய்யலாம்?
எம். அஹமது ராஜா, மேலப்பாளையம்
! அந்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்து தேர்தல் கமிஷனருக்கு அனுப்புங்கள். அல்லது நமக்கு அனுப்புங்கள். அவர்கள் வெற்றி பெற்றால் அதைச் செல்லாததாக அறிவிக்கும் வகையில் வழக்குத் தொடரலாம்.
உணர்வு 2 : 27, மார்ச் 20-26, 1998
? அல் உம்மா, ஜிஹாத் அமைப்புகளைத் தடை செய்த தமிழக அரசு இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். இயக்கங்களைத் தடை செய்யுமா?
அ. முஹம்மது இலியாஸ், பெரிய மணக்குளம்
! தமிழகத்தில் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வென்றிருந்தால் அதற்கான வாய்ப்பு இருந்தது. மத்தியில் பாஜக அரசு அமைந்துள்ள நிலையில் இந்த இயக்கங்களின் வன்முறைப் பிரச்சாரம் மேலும் தாராளமாக அனுமதிக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.
? பீஹார், உ.பி. போன்ற வடமாநிலங்களில் முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளதாக கூறுகிறார்களே! அது உண்மையா?
பாபு, நாகூர்
! இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பாஜகவுக்கு எதிரான பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட்,காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா ஆகிய கட்சிகள் தனித் தனியாகப் போட்டியிட்டதால்தான் பாஜக இம்மாநிலங்களில் அதிக இடங்களைப் பெற்றது. விரல் விட்டு எண்ணக் கூடிய சிக்கந்தர் பகத் போன்றவர்கள் வாக்களித்திருக்கலாம். முஸ்லிம்கள் பல கட்சிகளுக்கு வாக்குகளைப் பிரித்தளித்ததுதான் இதற்குக் காரணம்.
? தேர்தலுக்கு முன் முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசிய கருணாநிதி தேர்தலுக்குப் பின் முஸ்லிம் தீவிவாதிகள்தான் கோவை குண்டு வெடிப்புக்குக் காரணம் என்று கூறியுள்ளாரே?
ஏ. மீரான், வந்தவாசி
! முஸ்லிம்கள் இதில் சம்மந்தப்பட்டிருந்தால் அவர்களை அவர்கள் சார்ந்துள்ள இயக்கத்தின் பெயரால்தான் அடையாளம் காட்ட வேண்டுமே தவிர இஸ்லாத்தின் பெயரால் அடையாளம் காட்டுவது தவறாகும். முஸ்லிம்களின் புறக்கணிப்புதான் தோல்விக்குக் காரணம் என்பதை விளங்காத கருணாநிதி சங்பரிவாரக் கூட்டத்தைத் திருப்திபடுத்த நினைக்கிறார். இத்தகைய விமர்சனமும் அப்பாவிகளைக் கைது செய்வதும் அதன் வெளிப்பாடுதான்.
? கோகுலகிருஷ்ணன் கமிஷன் அறிக்கை வருவதற்கு முன் கலைஞர் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று குற்றம் சுமத்தியிருப்பது ஏன்?
ஏ. உமர் ஷெரீப், விருதுநகர்
! மத்தியில் பாஜக ஆட்சி அமையப் போகிறது. தமிழக ஆட்சி கலைக்கப்பட்டு விடக்கூடாது என்றால் பாஜகவைத் திருப்திப்படுத்தியதாக வேண்டுமே.
? இந்தியாவில் எங்கு கலவரங்கள் நடந்தாலும் பாகிஸ்தான்தான் காரணம் என்று நமது அரசு கூறுவது ஏன்?
ஏர்வை மு. ஜெசிம் சுல்தான், மண்ணடி, சென்னை
! எங்களின் பாரபட்சமான கையாலாகாத ஆட்சி முறைதான் காரணம் என்று எப்படி ஒப்புக் கொள்ள முடியும்.
உணர்வு 2 : 30, ஏப்ரல் 10-16, 1998
? வாஜ்பாய், அத்வானி ஆகியோரிடம் இப்போது மிச்சமிருக்கும் கொள்கை என்ன?
மு. யூசுப் ரஹ்மத்துல்லாஹ், நாகூர்
! பதவியில் நிலைக்க வேண்டும் என்ற முக்கியமான கொள்கையில் இருவரும் மிக உறுதியாக உள்ளனர். அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.
? இந்த மாதிரி பயங்கரவாதிகள் சிலர் இருப்பதால்தான் சிறுபான்மையினர் என்ற பரிவுடன் இந்த சமுதாயத்தின் மீது நாம் செலுத்துகின்ற அக்கரையைக் கூட இனி நாம் தொடர்ந்து செலுத்த முடியாத அளவுக்கு ஆகிவிடுகிறது என்று தமிழக முதல்வர் திமுக செயற்குழுவில் பேசியிருக்கிறாரே?
கே. அப்துல் லதீஃப், பொறையார்
! இந்தப் பயங்கரவாதிகள் உருவாவதற்கு முன் முஸ்லிம்களுக்கு பரிவுடன் செய்தவை என்ன? வெறும் அனுதாப வார்த்தையைத் தவிர வேறில்லை. கோவையில் சிறுபான்மை மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது பரிவுடன் வழங்கிய நீதி என்ன? ஏற்கெனவே முஸ்லிம்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் இருந்தனர். இன்று முஸ்லிம் சமுதாயத்தையே பயங்கரவாதிகளாகச் சித்தரித்துக் கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதுதான் வித்தியாசம்.
? பாஜக முகமூடி அணிந்து போட்டியிட்ட பல ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வெற்றி பெற்று அமைச்சரவையிலும் இடம் பிடித்துள்ளனரே இனி இந்தியாவில் ஜனநாயகம் காக்கப்படுமா?
என். செய்யது, வாசுதேவநல்லூர்
! பாஜக என்பது ஆர்.எஸ்.எஸ்.ஸின் மறு வடிவம்தான். அவர்களால் ஜனநாயகம் காக்கப்படும் என்பது வீண் கற்பனையே?
? உலகத் தலைவர்களில் தலை சிறந்தவர் யார்?
எஸ். அருமை, இராமேஸ்வரம்
! உலக வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தலை சிறந்த தலைவர்களின் வரலாறுகளை மைக்கேல் ஹார்ட் என்பவர் பல ஆண்டுகள் ஆய்வு செய்தார். அவர்களில் நூறு நபர்களின் வரலாற்றைத் தேர்வு செய்து "தி ஹன்ட்ரட்' என்ற நூல் எழுதியுள்ளார். அவர் முதல் இடத்தை நபிகள் நாயகத்துக்கு வழங்கியுள்ளார். நமது கருத்தும் அதுதான். (இந்த நூல் நூறு பேர் என்ற பெயரில் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.)
உணர்வு 2 : 33, மே 1-7, 1998
? உணர்வு வார இதழ் நாளிதழாக வரக்கூடிய வாய்ப்புள்ளதா?
எம்.ஏ. முஹம்மது இஸ்மாயில், கொல்லாபுரம்
! உணர்வு எப்போதும் போல் வார இதழாக வெளிவந்து கொண்டிருக்கும். நாளிதழ் கொண்டு வரும் முயற்சி தனியாக நடந்து கொண்டிருக்கிறது. நாளிதழின் அவசியத்தை சமுதாயத்தில் பாதிப்பேராவது உணரக் கூடிய தருணத்தில் நாளிதழ் வெளிவரும். அந்த நிலையை மிக விரைவிலேயே நாட்டிலுள்ள பத்திரிகைகள் ஏற்படுத்திவிடும்.
இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 10 சதவீதத்திற்கும் குறைவுதான் என்று முஸ்லிம்களிலேயே சிலர் கூறுகிறார்களே?
- இப்னு ஜமீலா, மதுரை
! மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதில் எந்த அரசும் அக்கரை காட்டுவதில்லை என்பதால் இதுபோன்ற தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். 1991க்குப் பிறகு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எதுவும் நடத்தப்படவில்லை.
1991ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, அதாவது மக்கள் தொகை 80 கோடியாக இருந்தபோது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி முஸ்லிம்கள் பத்து கோடியே பதினைந்து லட்சம் பேர் இருந்தனர். சதவிகிதத்தின் அடிப்படையில் அது 12.12 ஆகும்.
இந்துக்கள் 68 கோடியே 76 லட்சம் (82%), கிறிஸ்தவர் ஒரு கோடியே 96 லட்சம் (2.34%), சீக்கியர் ஒரு கோடியே 62 லட்சம் (1.94%), புத்த மதத்தினர் 63 லட்சத்து 87 ஆயிரம் (0.76%), சமண மதத்தினர் 33லட்சத்து 52 ஆயிரம் (0.40%), ஏனைய சமயத்தினர் 32 லட்சத்து 69 ஆயிரம் (0.39%), மதத்தை குறிப்பிடாதவர்கள் நான்கு லட்சத்து 15 ஆயிரம் (0.05%).
இன்று இந்திய மக்கள் தொகை 100 கோடியைத் தாண்டிவிட்டது. அதிகப்படியான 20 கோடியில் அவரவர் சதவிகிதத்தின்படி இனப்பெருக்கத்தைக் கணக்கிட்டால் 20 கோடியில் இரண்டரைக் கோடி பேர் முஸ்லிம்கள். இந்தக் கணக்கின்படி முஸ்லிம்கள் எண்ணிக்கை 10.15+2=12.15 கோடியைத் தாண்டுகிறது.
இது தவிர கிராமம் கிராமமாக மக்கள் பெருமளவில் இஸ்லாத்தில் இணைவது அதிகரித்து வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இஸ்லாத்தில் இணைவோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
முஸ்லிம்கள் தங்கள் சதவிகிதத்தை விடப் பல மடங்கு இனப்பெருக்கம் செய்கிறார்கள் என்ற சங்பரிவாரத்தின் பிரச்சாரம் உண்மை என வைத்துக் கொண்டால் முஸ்லிம்கள் எண்ணிக்கை 20கோடியைத் தாண்டும். விபரமறியாதவர்களின் உளறல்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
உணர்வு 2 : 34, மே 8-14, 1998
? பாகிஸ்தானில் சிறுபான்மையினரால் இந்துக்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக அந்நாட்டு மனித உரிமை கமிஷன் கூறியதாக பத்திரிகை செய்திகள் கூறுவது உண்மையா?
அ. முஹம்மது இலியாஸ், பெரிய மணக்குளம்
! உலகில் பெரும்பாலான நாடுகளில் உள்ள மனித உரிமைக் கமிஷன்கள் அந்தந்த நாடுகளைக் குறித்து இத்தகைய அபிப்பிராயங்களையே தெரிவிக்கின்றன.
உண்மையைச் சொல்லக்கூடிய நியாய உணர்வும், துணிவும் பாகிஸ்தான் மனித உரிமைக் கமிஷனுக்கு இருக்கிறது. இங்குள்ள மனித உரிமைக் கமிஷன் கோவையில் நவம்பரில் நடத்தப்பட்ட வரலாறு காணாத வன்முறை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே சமயத்தில் அதற்குப் பின் நடந்த காஷ்மீர் படுகொலை விஷயத்தில் உடனடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்தியாவிலும்,பாகிஸ்தானிலும் சிறுபான்மை மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டாலும் அதைச் சுட்டிக் காட்டக் கூடிய நியாய உணர்வாவது பாகிஸ்தான் மனித உரிமைக் கமிஷனுக்கு உள்ளது வரவேற்கத் தக்க அம்சம்தான்.
? கோவையில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு அனுதாபம் தெரிவிக்காத ரஜினிகாந்த் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு மட்டும் அனுதாபம் தெரிவித்தது ஏன்?
ஏ.ஆர். பாசில் சரீப், கரிம்ஷா தைக்கா
! குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவித்ததைக் குறை கூற முடியாது. அந்த நேரத்தில் கூட ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தனிமைப்படுத்தும் முயற்சியை முறியடிக்கும் வகையில் ரஜினிகாந்த் கருத்து கூறியதை மறப்பது நியாயமில்லை. மேலும் கோவையில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட சம்பவம் இங்குள்ள பத்திரிகைகளும், செய்தி ஸ்தாபனங்களும் திட்டமிட்டு மறைத்துவிட்டதால் அந்தக் கொடுமை ரஜினிகாந்த் உள்ளிட்ட இந்துக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை என்பதையும் நாம் மறந்து விட முடியாது.
? அயோத்தி, காசி, மதுரா பிரச்சினைகளில் பேசித் தீர்கலாம் என்று அத்வானி கூறுகிறாரே?
ஏ.ஜெ. சிராஜ், மதுக்கூர்
! பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என்றால் ஏன் பாபர் மசூதியை இடிக்க வேண்டும்?தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் பேசப்படும் பேச்சு இது. யாருடன் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறார்கள்? சிக்கந்தர் பகத்துடனா? அல்லது மக்களின் ஆதரவை அறவே இழந்துவிட்ட தலைவர்களுடனா? இந்த நாட்டில் சட்டமும் நீதிமன்றமும் இருக்கும்போது அதனடிப்படையில்தான் முடிவு காண முடியும்.
உணர்வு 2 : 36, மே 22-28, 1998
? பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் ஒதுக்கீட்டுக்காகப் போராடி வரும் வேளையில் முற்பட்ட சமுதாயத்தினர் எவ்விதப் போராட்டமும் செய்யாமல் அனைத்து துறைகளிலும் பெரும்பான்மை வகிப்பது எதைக் காட்டுகிறது.?
அ. ஹாரூன் ரஷீது, அர்ராஸ், கே.எஸ்.ஏ.
! நடைமுறைப்படுத்தப்படாத அரசியல் சட்டத்தைக் கொண்ட ஒரே நாடு இந்தியா என்பதைத்தான் இது காட்டுகிறது!
? இலவச மின்சாரம் தவிர்க்க வேண்டியது என்று துக்ளக் சோ ராஜ் டி.வி.யில் 7-05-1998ல் கூறியுள்ளாரே?
காதர் பாஷா, கொள்ளிடம்
! மின்சாரக் கட்டணம் செலுத்தி தண்ணீர் பாய்ச்சி விவசாயம் நடத்தினால் அரிசி கிலோ 50 ரூபாய்க்கு மேல் விற்க வேண்டிய நிலை வரும். மேலும் லெவி என்ற பெயரில் குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய அரசுக்கு தார்மீக உரிமையில்லாமல் போகும். ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு அரிசி வழங்குவதே தடைபடும். அரசின் கையிருப்பில் உணவு இல்லாத நிலை ஏற்படும்.
இலவச மின்சாரத்தையும் ரத்து செய்துவிட்டு நெல் விலையை அரசே தீர்மானித்தால் விவசாயத்தையே விவசாயிகள் நிறுத்திவிடுவார்கள். வெளிநாடுகளிலிருந்து தான் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டும். அப்போது அரிசி கிலோ ரூ. 100க்கு விற்றாலும் ஆச்சரியப்பட முடியாது.
விவசாயத்துக்கு இலவசங்கள் வழங்குவது நம் அனைவருக்கும் வழங்கிக் கொள்ளும் இலவசம்தான். வெள்ளைச் சட்டை அறிவாளிகளுக்கு இதெல்லாம் புரியாது.
? நவம்பரில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதற்குப் பதிலடியாகத்தான் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது என்ற வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டது; உண்மைக்கு முரணானது. தீவிரவாதிகளின் செயலை நியாயப்படுத்துவதுபோல் உள்ளது என்று கருணாநிதி ஆலோசனைகள் கூறியுள்ளாரே?
அ. முஹம்மது இலியாஸ், பெரியமணக்குளம்
! நவம்பர் மாதம் கோவையில் எந்தக் கலவரமும் நடக்காத போது, முஸ்லிம்களில் யாரும் கொல்லப்படாதபோது முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக கூறினால் அது உண்மைக்கு மாறானதுதானே?
? மருதநாயகத்தின் பெயரை யூசுப்கான் என்று ராமகோபாலன் மாற்றச் சொல்வது ஏன்? இதன் மூலம் அவர் எதைச் சாதிக்க விரும்புகிறார்?
எம். ஆசாத் அலி, திட்டச்சேரி
! முன்னர் மருதநாயகமாக இருந்தவர் பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்ற உண்மை தெரியவந்தால் இன்னும் பலர் இஸ்லாத்தை ஆராய்வார்கள். இல்லையெனில் யூசுப்கான் என்று இருந்தால் அவர் ஒரு பிறவி முஸ்லிம் என்று நினைத்துக் கொள்வார்கள். மற்றவர்கள் இஸ்லாத்திற்குச் செல்வதை இதனால் தடுக்க முடியும் என்பது அவரது திட்டம். ஆனால் மருதநாயகம் திரைப்படம் வருவதற்கு முன்பிருந்தே இஸ்லாத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக இணைந்து வருகின்றனர். சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நிற்காது என்பதை அவர் உணரவில்லை.
? பாஜக ஆட்சியை ஆர்.எஸ்.எஸ். பின்னாலிருந்து இயக்குகிறது என்று கூறப்படுவது உண்மையா?
நிசாத், வடுகன்பள்ளி பாளையம்
! இராணுவத் தளபதிகள் கூட அழைக்கப்பட்டாமல் நடத்தப்பட்ட அணுகுண்டுச் சோதனை நிகழ்ச்சியை பார்வையிட ஆர்.எஸ்.எஸ். தலைவர் சென்றதைவிட இதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்!
உணர்வு 2 : 36, மே 22-28, 1998
? அணு ஆயுத சோதனைக்கு உண்மையிலேயே அவசியம் ஏற்பட்டுள்ளதா?
ஜபருல்லாஹ், திருவாரூர்
! அவியல் கூட்டணியின் குழப்பங்களை மறக்கச் செய்ய இது அவசியமானதுதான்.
? மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துந் நாசர் மதானியைக் கைது செய்திருப்பதைக் கண்டிக்காததுடன் அது குறித்த செய்தியைக் கூட வெளியிடவில்லையே அது ஏன்?
ஆர்.எம். அப்துன்னசீர், ரியாத்
! அப்துன்னாசர் மதானியை பல ஆண்டுகளுக்கு முன் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கேரள போலீஸார் கைது செய்தனர். தமிழக போலீஸார் முதலில் கைது செய்யவில்லை. கேரளாவில் அவரது இயக்கத்தினர் வலுவாக இதை எதிர்த்துப் போராடாததால் தமிழகப் போலீஸாரும் அவரை வழக்கில் சேர்த்துக் கைது செய்துள்ளனர். ஒரு கால் இழந்து நடக்கவே சிரமப்படுபவர் சிறை அதிகாரியைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட போதுதான் அவர் மீது பொய் வழக்குப் போட்டு பழி வாங்கியுள்ளார்கள் எனத் தெரியவந்தது. ஒருவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்களே போராடத் தயங்கினால் மற்றவர்கள் அதைக் கண்டிப்பதில் என்ன பயன்?
? பாபர் மஸ்ஜிதை இடித்த பகிரங்க குற்றவாளிகள் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் போது பாபர் மசூதி வழக்கின் இன்றைய நிலை என்ன?
ஆர்.எம். அப்துன்னசீர், ரியாத்
! ஐக்கிய முன்னணி ஆட்சியின்போதே அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. பலமுறை சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் அத்வானி உள்ளிட்டோர் ஆஜராக மறுத்து வந்தனர். பிக்பாக்கெட் குற்றாவளிகளுக்கெல்லாம் பிடிவாரண்ட் பிறப்பிக்கும் நீதிமன்றம் அத்வானி வகையறாக்களுக்கு பலமுறை ஆஜராகாத போதும் பிடிவாரண்ட் பிறப்பிக்கவில்லை.
ஐக்கிய முன்னணி ஆட்சியில் நடந்து கொண்டது போல்தான் இப்போதும் நடக்கின்றனர். இந்தியாவில் நீதித்துறை காவிமயமாகி வரும்போது யார் ஆட்சி செய்தாலும் நியாயம் கிடைக்காது.
உணர்வு 2 : 38, ஜூன் 5-11, 1998
? ஐ.நா. சபையில் அமெரிக்காவிற்கு மட்டும் வீட்டோ என்ற ரத்து செய்யும் சிறப்பு அதிகாரம் இருப்பது ஏன்? இதை ஏன் மற்ற நாடுகள் எதிர்ப்பதில்லை?
மலமஞ்சனூர் அ. தஸ்தகீர், புரைதா கே.எஸ்.ஏ.,
! அணுகுண்டு வைத்திருக்கும் நாடு என்பதால் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகள் வீட்டோ அதிகாரத்தை எடுத்துக் கொண்டன. எந்த நாடுகளுக்கும் இதை வலிமையாக எதிர்க்கத் திராணியில்லை. இன்றோ அணுகுண்டு என்பது அனைத்து நாடுகளுக்கும் தெரிந்த பரம ரகசியமாகி விட்டது. எனவே வீட்டோ அதிகாரம் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது.
? ஓவியர் உசேனின் ஓவியங்களைக் குறி வைத்து இந்துத் தீவிரவாதிகள் சூறையாடுவது ஏன்?
பாசில் ஷரீப், கரீப்ஷா தைக்கா
! பெயர்தான் உசேனே தவிர அவரும் இந்துதான். துர்க்கையை வழிபடுபவர்தான். அவர்களுக்குள் நடக்கும் சண்டதான் இது. உசேன் பற்றி விரிவான தகவல்கள் முன்னர் உணர்வில் வெளியாகி உள்ளது.
உணர்வு 2 : 39, ஜூன் 12-18, 1998
? பாபர் மசூதிப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காதது ஏன்?
எம். சையத் இலியாஸ், விருத்தாசலம்
! பாபர் மசூதியை இடித்தவர்கள் பல்வேறு இயக்கங்களாக இருந்தும் ஒரே குரலில் தங்கள் சட்டவிரோதமான கருத்தைக் கூறி வருகின்றனர். ஆனால் பாபர் மசூதியை மீட்பதற்காக ஒரு அணியாக நின்ற முஸ்லிம்களின் பாபர் மசூதி கமிட்டி ஏழு துண்டாக உடைந்து விட்டது. இந்த ஒற்றுமயின்மைதான் பாபர் மசூதி உட்பட அனைத்து கொடுமைகளுக்கும் காரணம்.
? ஒவ்வொரு இடத்திலும் கலவரம் நடக்கப் போவதை முன்கூட்டியே தெரிவிக்கும் ராமகோபாலனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே தள்ள முடியுமா?
எம். அப்துல் குத்தூஸ், இராஜகிரி
! மத்தியில் மட்டுமின்றி மாநிலத்திலும் ராமகோபாலன் ஆட்சி நடப்பதால் அவரை உள்ளே தள்ள மாட்டார்கள்.
? இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகத்தான் இருப்பார்கள் என்று உளவுத்துறையும் முஸ்லிமல்லாத சிலரும் நினைக்க என்ன காரணம்?
ஜபருல்லாஹ், திருவாரூர்.
! அப்படி நினைக்க எந்த முகாந்திரமும் இல்லை. பாகிஸ்தான் பிரிவினையின்போது அதை ஆதரித்தவர்கள் பாகிஸ்தான் சென்று விட்டனர். இங்கே தங்கியவர்கள் எல்லாம் பிரிவினையை விரும்பாமல் தேசத்தை நேசித்தவர்கள்தான். அணுகுண்டு வெடித்தாலும் வேறு சாதனைகள் புரிந்தாலும் இந்து மதத்தின் சாதனை என்று பறைசாற்றிக் கொள்ளும் போக்கு நீடித்தால் இனிமேல் அத்தகைய நிலை தோன்றக் கூடும். அப்படி நடந்தால் அதற்கு முழுப் பொறுப்பும் சங்பரிவாரத்தினர்தான்.
? கிருஷ்ணா கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் பால் தாக்கரேயைக் கைது செய்வார்களா?கோவையைப் போல் விட்டு விடுவார்களா?
டி. ஹக்கீம், ரியாத்
! நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் அறிக்கையை சட்டமன்றத்தில் வைத்திருக்க மாட்டார்களா?நடவடிக்கை எடுக்கப்படும் அறிகுறிகூட தென்படவில்லை என்பதுதான் உண்மை.
உணர்வு 2 : 40, ஜூன் 19-25, 1998
? முரண்பாடான கருத்துகளையும், அறிக்கைகளையும் வெளியிடுவதில் ராமகோபாலன் வெட்கப்படுவதில்லையே அது ஏன்?
அதிரை சாதிக் பரீத், துபை
! தில்லி பல்கலைக் கழக பேராசிரியர்கள், "காக்கிச் சட்டையும், காவிக் கொடியும்' என்ற ஆய்வு நூலை எழுதி ஓரியன்ட் லாங்மேன் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. சங்பரிவார இயக்கத்துக்கு அளிக்கப்பட்ட ஒரே பயிற்சி பொய், முரண்பாடாகக் கூறுதல் ஆகியவற்றுக்காக வெட்கப்படக் கூடாது. திரும்பத் திரும்ப பொய்யைக் கூறிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் இதை அந்த நூல் தக்க ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது. இராமகோபாலன் வகையறாக்கள் முரண்பாடில்லாத வகையில் உண்மை பேசினால்தான் ஆச்சரியப்பட வேண்டும்.
? இந்தியா அணு குண்டு சோதனை நடத்தியதை வெளிநாடுகளில் வாழும் சீக்கியர்கள் எதிர்க்கக் காரணம் என்ன?
பாசில் ஷரீப், கரீம்ஷா தைக்கா
! இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் நடந்தால் மற்ற மாநிலங்களைவிட பஞ்சாப் மக்கள்தான் முதலில் பாதிக்கப்படுவார்கள். பாகிஸ்தானை ஒட்டி பஞ்சாப் அமைந்துள்ளதால் நேரடி பாதிப்புக்கு பஞ்சாப் மக்கள்தான் ஆளாவார்கள்.
? கோவை நிதி திரட்டுவதை நிறுத்தாமல் நிதியைக் கொண்டு தொழில் தொடங்கி அதன் வருவாயை சோதனையான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாமே?
தாசன், புருணை
! எந்தத் திட்டத்துக்கு நிதி திரட்டினாலும் அதைத் தெளிவாகக் கூறித்தான் நிதி திரட்டுவோம். கோவை மக்கள் பெயரைக் கூறி நிதி திரட்டி வேறு பணிகளுக்குப் பயன்படுத்துவதில் நமக்கு உடன்பாடில்லை.
உணர்வு 2 : 41, ஜூன் 26 - ஜூலை 2, 1998
? இலவச மின்சாரம் வழங்குவது குறித்து தங்கள் பதில் சரி அல்ல. இந்தியாவில் இரண்டு மாநிலங்களில்தான் இலவச மின்சாரம் உள்ளது. இலவச மின்சாரம் இல்லாத மற்ற மாநிலங்களில் அரிசி 100 ரூபாய்க்குத்தான் விற்கப்படுகின்றதா?
அ. நெய்னா முஹம்மது, ரியாத்
! வேறு மாநிலங்களில் இலவச மின்சாரம் வழங்கப்படாவிட்டாலும் பல்வேறு மானியங்கள் வழங்கப்படுகின்றன. வட்டியில்லாக் கடன் வழங்கி பின் அது ரத்து செய்யப்படுகிறது. நாடு முழுவதும் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு முழு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இத்தகைய சலுகைகளால்தான் மக்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் உணவுப் பொருள்கள் கிடைக்கின்றன.
இதுபோன்ற சலுகைகளில் ஒன்றுதான் இலவச மின்சாரம். இலவச மின்சாரத்தை ரத்து செய்வது விவசாயத்தை ஏனைய தொழில்களைப்போல் கருதும் மன நிலையை உருவாக்கும். ஒவ்வொரு மாநில அரசும் தான் வழங்கும் ஏதேனும் சலுகைகளை ரத்து செய்யும் நிலை உருவாகும். இந்த நிலை ஏற்படும்போது நிச்சயம் உணவுப் பொருள்களின் விலை தாறுமாறாக உயரும்.
? முஸ்லிம்களுக்கு எல்லா வகையிலும் துரோகமிழைக்கும் கருணாநிதிக்கு ஒரு முஸ்லிமை எம்.பி.யாக்கியதற்காக நன்றி செலுத்தியுள்ளீர்கள். சமுதாய உணர்வில்லாதவர்கள் எம்.பி.யாவதால் யாருக்கு என்ன லாபம்?
எம்.ஹெச். முஸ்தபா கமால், மேலஆத்தூர்.
! கருணாநிதி துரோகம் செய்தால் அந்தத் துரோகத்தை துணிவுடன் நாம் சுட்டிக் காட்டியே வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் எந்த முஸ்லிமுக்கும் இடம் தராவிட்டால் நாம் விமர்சனம் செய்கிறோம். முஸ்லிம்களைப் புறக்கணித்துவிட்டதாகக் கூப்பாடு போடுகிறோம். சொரணையற்ற முஸ்லிம்களுக்கு இடமளிக்காதபோது குறை கூறும் நாம் இடமளிக்கும்போது பாராட்டுவதுதான் நடுநிலைப் போக்காகும்.
234 தொகுதிகளில் ஒரு முஸ்லிமைக் கூட நிறுத்தாவிட்டால் அதை நீங்கள் விமர்சனம் செய்வீர்களா?அல்லது சொரணையற்றவர்களுக்கு இடம் கொடுக்கவில்லை என்று மகிழ்ச்சியடைவீர்களா?கண்டிப்பாக விமர்சனம் செய்வீர்கள். சொரணையற்றவர்களாக இருந்தாலும் எங்களுக்குரிய மரியாதை தரப்பட வேண்டும் என்று விரும்புவதே இந்த விமர்சனத்திற்குக் காரணம்.
இந்த அடிப்படையில்தான் நாம் நன்றி கூறுகிறோம். இதில் தவறு ஏதும் இல்லை. எதிரிகளேயானாலும் அவர்கள் நமது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டால் நன்றி செலுத்துவதுதான் நமது நிலை.
? ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்திற்கு பாகிஸ்தான் அணுகுண்டு சோதனைதான் காரணம் என்று இந்திய விஞ்ஞானிகள் குற்றம் சாட்டியுள்ளனரே?
ஏ.எம். சர்புதீன், பனங்காட்டூர்
! அணுவெடிப்புச் சோதனையை பூமிக்கடியில் நடத்தும்போது பூமிப்பந்துக்குள் ஏற்படும் அதிர்ச்சி அலைகளால் நிலச் சரிவும், நில நடுக்கமும் ஏற்படுவதை மறுக்க முடியாது. பாகிஸ்தானின் அணு வெடிப்புச் சோதனை இதற்குக் காரணம் என்று கூற எவ்வளவு சாத்தியமுள்ளதோ அதே அளவு இந்திய அணுகுண்டுச் சோதனையும் காரணமாக இருக்க வாய்ப்புண்டு.
? இந்துக் கடைகளில் இந்து தயாரிப்புகளையோ வாங்குங்கள் என்று சங்பரிவாரக் கும்பல் செய்யும் பிரச்சாரத்திற்கு அதே முறையில் பதிலடி கொடுத்தால் என்ன?
முஸ்லிம் தயாரிப்பான பெட்ரோலை முஸ்லிம் நாடுகளிலிருந்து வாங்குவதை முதலில் நிறுத்திவிட்டு கட்டை வண்டிகளில் பயணம் செய்து இவ்வாறு பிரச்சாரம் செய்தால் இவர்களின் நேர்மைக்காகப் பாராட்டலாம். இவர்களின் அநாகரீகப் பிரச்சாரத்துக்கு அதே வழியில் நாம் பதிலடி கொடுத்து நம் தரத்தைத் தாழ்த்திக் கொள்ளத் தேவையில்லை. வேண்டுமானால் அந்த சங்பரிவாரத்தினரின் தயாரிப்பான டால்மியா, விஷ்ணு சிமெண்ட், கிரேன் பாக்கு போன்றவற்றைக் கணக்கெடுத்து இவற்றைப் புறக்கணிக்கலாம். அனைத்து இந்து சமுதாயத்தவரையும் புறக்கணிக்க வேண்டியதில்லை.
? பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., என்று இடஒதுக்கீடு இருக்கும்போது ஏன் தனியாக இடஒதுக்கீடு கேட்கிறீர்கள்? என்று முஸ்லிமல்லாத நண்பர் கேட்கிறாரே?
எம். ரஹ்மத்துல்லாஹ், திருச்சி
! ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களான தாழ்த்தப்பட்டவர்களையும், மிகவும் தாழ்த்தப்பட்டவர்களையும் தனியாகப் பிரித்து இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் பிற்பட்டவர்கள் இந்த மக்களின் இடங்களையும் கைப்பற்றிக் கொள்வார்கள். இந்து மதத்தைச் சேர்ந்தவர்களையே பிரித்து தனியாக இடஒதுக்கீடு அளித்திருக்கும்போது முஸ்லிம்களுக்கு தனியாக இடஒதுக்கீடு அளிப்பதுதான் நியாயம். பிற்பட்டவர்களையும் சேர்த்து விட்டனர். முஸ்லிம்களுக்குரிய பங்கை அவர்கள் அபகரித்துக் கொள்வதால் தனியாக இடஒதுக்கீடு கேட்கிறோம்.
? 5 சதவீதமாவது இடஒதுக்கீடு தாருங்கள் என்று லத்தீப் கெஞ்சிக் கேட்டும் முதல்வர் பதில் கூறாமல் மௌனம் சாதித்தது ஏன்?
எம். லுக்மான், நாகப்பட்டிணம்
! முஸ்லிம் சமுதாயத்தை இந்து சாதிகளில் ஒரு சாதியாகச் சேர்த்தவர்தான் தமிழக முதல்வர். சிறுபான்மையினர் என்ற சலுகையைப் பறித்தவரே அவர்தான். அவர் எப்படி இதற்குப் பதில் சொல்ல முடியும்.
? தமிழக அரசால் இயற்றப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் எந்த வகையில் பயனளிக்கும்?
ஏ.எம். ரபிவுதீன், பனங்காட்டூர்
! வேண்டாதவர்களைக் காவல்துறையினர் பழிவாங்கவும், எதிர்க்கட்சியினரை ஒடுக்கவும், பொய் வழக்குப் போட்டுவிடுவோம் என்று பயமுறுத்தி அப்பாவிகளிடம் பணம் பறிக்கவும் பயன்படும். வேறு எந்தப் பயனும் இந்தச் சட்டத்தால் ஏற்படப் போவதில்லை.
உணர்வு 2 : 42, ஜூலை 19-25, 1998
? பா.ஜ.க ஆட்சியை அதிமுக கவிழ்த்தால் அதை வரவேற்பீர்களா?
எம். குலாம் தஸ்தகீர், பண்டாரவாடை
! மதச் சார்பின்மையில் நம்பிக்கை உள்ள அனைவரும் வரவேற்பார்கள். சட்டவிரோதமாக கோவில் கட்டுவதற்கு மறைமுக ஒத்துழைப்பு அளித்து வருவது ஒன்றே பாஜகவைக் கவிழ்க்க நியாயமான காரணமாகும்.
? பாபர் மசூதி இடிப்பு வழக்கு அரசியல் ரீதியானது என்று சொல்லப்படுவதுபோல் கோவை குண்டு வெடிப்பும் அரசியல் ரீதியானது என்று சொல்லலாமா?
மவ்லவி ஆர்.எம். இஸ்மாயில், கொள்ளுமேடு
! கோவை குண்டு வெடிப்பில் பாதிப்புக்குப் பழி வாங்கும் உணர்வுதான் இருந்தது. பாபர் மசூதி இடிப்பதில் இந்தியாவின் மதச்சார்பின்மை, இந்தியாவின் அரசியல் சாசனம், நீதிமன்றங்கள் அனைத்தும் காலில் போட்டு மதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கூட ஒரு உண்மையை நீங்கள் உணர வேண்டும். எந்தப் பயங்கரவாதச் செயலானாலும் அது அரசியலாகக் கருதப்பட வேண்டுமானால் அதில் ஈடுபட்டவர்கள் பெரும்பாண்மைச் சமுதாயமாக இருக்க வேண்டும்.
? பாபர் மசூதி நிலத்தை மீட்க உ.பி. முஸ்லிம்கள் போராடுகிறார்களா? இல்லையா?
இ. தமீம் அன்சாரி, நாகூர்
! சட்ட ரீதியாகப் போராடி வருகின்றனர். நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டியுள்ளனர். தீர்ப்பை விரைவுப் படுத்துவதற்காகக் கூட ஜனநாயக வழியிலான பெரிய போராட்டம் எதையும் நடத்துவதாகத் தெரியவில்லை.
? இராமகோபாலன் கீழக்கரை பற்றி அதிகமாகப் பேசுவதன் மர்மம் என்ன?
இ. அஷ்ரப் அலி, நெல்லிக்குப்பம்
! முஸ்லிம்களின் பொருளாதாரத்தைச் சீரழிப்பதை இலட்சியமாகக் கொண்டவர்களுக்கு, முஸ்லிம்கள் செழிப்புடன் வாழும் ஊர்கள் மீது காழ்ப்புணர்வு ஏற்படுவதில் வியப்பில்லை.
? தீவிரவாதகளின் குடும்பத்துக்கு உதவ வசூல் வேட்டை என்ற தினமலர் பாண்டிச்சேரி பதிப்பு (15-06-1998) செய்தி வெளியிட்டுள்ளதே?
கருணைப்பிரியன், பரங்கிப்பேட்டை
! அப்பாவி முஸ்லிம்களையே கருவறுக்கும் திட்டத்துடன் அதிகார வர்க்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் எந்த வசூல் வேட்டையும் நடக்க வாய்ப்பில்லை என்பது ஆறறிவு படைத்தவர்களுக்குப் புரியும். அது இல்லாதவர்களின் தினப்புழுகுகளைக் கண்டு கொள்ள வேண்டியதில்லை.
? கோவையில் ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக அறிவித்துவிட்டு இரண்டு கோடியுடன் நிதி திரட்டுவதை நிறுத்துவதாக அறிவிப்பது ஏன்? சட்டசபையில் விவாதம் நடந்ததால் பயந்துவிட்டீர்களா?
சிதம்பரம் எஸ்.ஏ. அமீர் அலி, ரியாத்
! தப்புச் செய்வதற்குத்தான் பயப்பட வேண்டும். சட்டப்பூர்வமான காரியத்தைச் செய்ய எவருக்கும் பயப்பட வேண்டியதில்லை. எம்மைப் பயமுறுத்தும் வகையில் எவரும் எதையும் செய்ய முடியாது என்பதை நாங்கள் நன்றாக அறிவோம். ஆயிரம் கோடி பாதிப்பு என்பது உண்மைதான். அவர்களுக்குரிய நிவாரணம் உரிய நேரத்தில் கிடைத்தாக வேண்டும். அந்த பாதிப்புகளை உணர்ந்தவர்கள் தாமதமின்றி அனுப்பி விடுவார்கள்.
தினசரி பல லட்சங்களாக வந்து கொண்டிருந்த நிதி படிப்படியாக குறைந்து சென்ற மாதம் வாரம் இரண்டு மூன்று நாட்கள் மட்டும் நிதி வரக்கூடிய நிலையை அடைந்தது. வரக்கூடிய டிராப்டுகளும் சில ஆயிரம் ரூபாய்களுக்குரியதாகவே வர ஆரம்பித்தன. உணர்வில் 8 பக்கம் பட்டியல் வெளியிடும் அளவை விட குறைந்ததால் இனிமேல் பெரிதாக எதுவும் வராது என்பதை அறிந்து கொண்டோம். இன்னும் பல லட்சங்கள் வரும் என்ற நம்பிக்கை இருந்தால் நிறுத்தியிருக்க மாட்டோம். வாரம் ஐயாயிரம், பத்தாயிரம் வருகிறது என்பதற்காக நிதி திரட்டுவதைத் தொடர்ந்தால் கணக்கை முடிக்க முடியாது. எங்கள் மீது தேவையற்ற சந்தேகம் வரும். இந்தக் காரணங்களால்தான் நிறுத்தப்பட்டது.
? தீண்டாமையை ஒழிக்கும் போராட்டத்துக்கு புதிய தமிழகம் எங்களை அழைத்தால் உதவத் தயார் என்று இராமகோபாலன் அழைப்பு விடுத்த நோக்கம் என்ன?
கோவை அப்துல்லாஹ், தாயீப்
! முஸ்லிம்களைத் தனிமைப்படுத்துவதுதான் ஒரே நோக்கம். இராமகோபாலன் வகையறாக்களுக்கு தீண்டாமை ஒழிப்பில் அக்கரை இருந்தால் இராமகோபாலன் வகையாறக்கள் தங்கள் குடும்பத்துப் பெண்களை எங்கள் சமுதாயத்துக்கு மண முடிக்கத் தயாரா? என்று டாக்டர் கிருஷ்ணசாமி சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.
உணர்வு 2 : 46, ஜூலை 31- ஆகஸ்ட் 6, 1998
? கோவை குண்டு வெடிப்பு கண்டிக்கத்தக்கது என்றாலும் இச்சம்பவம் பிற ஊர்களில் இந்த தீவிரவாதிகள் காவிக் காவல்துறையுடன் கூட்டுச் சேர்ந்து முஸ்லிம்களைத் தாக்குவதை விட்டும் தடுத்திருக்கிறதல்லவா?
மேலப்பாளையம் அஹ்மத் இமாம், குவைத்
! நிச்சயமாக இல்லை. அவர்களின் கூட்டை இன்னும் பலப்படுத்தியிருக்கிறது. சங்பரிவாரக் கும்பல் ஐம்பது ஆண்டுகள் செய்ய வேண்டிய வேலையை ஒரே நாளில் செய்து முடித்துள்ளதுதான் இதனால் ஏற்பட்ட ஒரே பலன்.
? இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். இயக்கங்களில் திமுகவினரும் உறுப்பினர்களாக உள்ளனர் என்று இல. கணேசன் புதுவைக்கு வந்தபோது கூறியுள்ளரே?
தமிழ் மணி, பாண்டிச்சேரி
! இது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பு அல்ல. அனைத்துத் துறையிலும் ஊடுறுவ வேண்டும் என்பதுதான் சங்பரிவாரத்தின் திட்டம். இந்தத் திட்டத்தின்படி இராணுவம், காவல்துறை, அரசியல் கட்சிகள் அனைத்திலும் அவர்கள் ஊடுறுவியுள்ளனர். இதை ஆரம்பம் முதலே நாம் சொல்லி வருகிறோம்.
? உ.பி.யில் காங்கிரஸ் தலைவராக சல்மான் குர்ஷித் தேர்ந்தெடுக்கப்பட்டது எதை மூடி மறைக்க?
எம். குலாம் தஸ்தகீர், பண்டாரவாடை
! சோனியா காந்தி அரசியல்வாதியாக இருப்பதால் அரசியல்வாதியின் அத்தனை குணங்களும் அவரிடம் இருக்கலாம். ஆனால் கிறிஸ்தவ பாரம்பர்யத்தில் வந்தவரிடம் இந்துத்துவா இருக்க முடியாது. பாபர் மசூதி விவகாரத்தில் ராவ் செய்த துரோகத்துக்கு எப்படியாவது பிராயச்சித்தம் தேடவே அவர் நினைக்கிறார். ஆனாலும் பாபர் மசூதியை மீட்காதவரை வேறு எந்த நடவடிக்கையின் மூலமும் முஸ்லிம்கள் திருப்தியடைவது சிரமம்.
உணர்வு 2 : 48, ஆகஸ்ட் 14-20, 1998
? நடிகர்கள் கூட சங்கம் வைத்துப் போராடும்போது, சட்டம் ஒழுங்கைக் காக்கும் காவலர்கள் சங்கம் அமைப்பது தவறா?
முத்துப்பேட்டை கே.எஸ். இத்ரீஸ், புரைதா
! நடிகர்களால் மற்றவர்கள் அடக்குமுறைகளுக்கு ஆளாவதில்லை. ஆனால் அதிகாரம் வழங்கப்பட்டவர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி அடக்குமுறைகளில் ஈடுபட முடியும். ஈடுபட்டும் வருகின்றனர். இத்தகைய அடக்குமுறைகளில் ஈடுபடுவோரில் பத்து சதவிகிதம் பேராவது மனித உரிமைக் கமிஷன்களாலும், அரசின் நேரடி நடவடிக்கையாலும் தண்டிக்கப்படுகின்றனர்.
தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் காரணமாகத்தான் அடக்குமுறை இந்த அளவோடு நிற்கின்றது. சங்கம் அமைத்தால் லஞ்சம் வாங்கியவர் மீதும், காவல்நிலையத்திலேயே கற்பழிப்புகளில் ஈடுபடுவோர் மீதும், லாக்கப் மரணத்தை ஏற்படுத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. நடவடிக்கை எடுத்தால் சங்கத்தின் கட்டுப்பாடு என்ற பெயரில் வேலை நிறுத்தத்திலும் ஈடுபடுவார்கள். கோவையில் ஒருநாள் இவர்கள் நடத்திய வேலை நிறுத்தம் காரணமாக ஏற்பட்ட விளைவுகள் கண்முன்னே நிற்கின்றன.
எனவேதான் இராணுவத்தினர், காவல்துறையினர் ஆகியோர் சங்கம் அமைக்கவோ, வேலை நிறுத்தத்தில் ஈடுபடவோ அனுமதியில்லை. இவர்கள் பெற்றுள்ள அதிகாரத்திற்காக அதன் மூலம் கிடைக்கும் ஆதாயாத்துக்காக சங்கம் அமைக்கும் உரிமைக்கு இவர்கள் ஆசைப்படக் கூடாது. அப்படி அனுமதிக்கப்படுமானால் அது மக்களாட்சியாக இருக்காது. போலீஸ் ராஜ்ஜியமாகத்தான் இருக்கும். அந்த ராஜ்ஜியமும் நிலைக்காது. அரசு நடவடிக்கை எடுக்காது என்ற நிலையில் மக்களே ஆயுதப் புரட்சியில் ஈடுபடும் நிலை ஏற்படும். அந்த வகையில் இது காவல்துறையினருக்கே கூட கேடாக முடியும்.
? நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய யூதப் பெண்ணுக்கு இஸ்ரேல் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. இராமகோபாலனுக்கு தமிழக அரசு தண்டனை வழங்காதது ஏன்?
திருப்பட்டிணம் அப்துர் ரஹ்மான் கான், தம்மாம்
! நபிகள் நாயகம் (ஸல்) இஸ்ரேலில் இழிவுபடுத்தப்பட்டதை இஸ்ரேல் அரசும் மறைக்கத்தான் முயற்சித்தது. ஆனால் இது சர்வதேச விவகாரமாக மாறியபின் வேறு வழியில்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் அரசின் பாரபட்சப்போக்கு தமிழக மக்களையே சென்றடையவில்லை. எனவே சர்வதேச விவகாரமாகி எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை. இதுதான் காரணம்.
? புதுவைக்கு முழு மாநில அந்தஸ்து அளித்தால் முஸ்லிம்களுக்கு எந்த வகையில் அது பயனளிக்கும்?
திருப்பட்டிணம் அப்துர் ரஹ்மான்கான், தம்மாம்
! புதுவை மக்கள் இதை விரும்புகிறார்கள். விரும்புமளவுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர். இதனால் அரசியல்வாதிகளுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும். மத்திய அரசின் பிடி தளரும். மக்களுக்கு நன்மை ஏதும் ஏற்படாது. மத்திய அரசின் செல்லப்பிள்ளையாகக் கருதப்பட்டு அதனால் கிடைத்த சலுகைகள் பறிபோகும். எந்த நலத்திட்டத்திற்கும் புதுவை மக்களே வரி செலுத்தும் நிலை உருவாகும். நாங்களே எங்களை முழுமையாக ஆள்கிறோம் என்று மனநிறைவைத் தவிர மற்றபடி சிரமத்தைத்தான் அவர்கள் எதிர் கொள்வார்கள். சுயமரியாதைக்காக இதை அவர்கள் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.
? சிறந்த சிந்தனையாளரும் எழுத்தாளருமான ஏ.கே. ரிபாயி அவர்களின் மரணச் செய்தியை உணர்வில் வெளியிடாத நோக்கம் என்ன?
இப்னு சையித், இராமேஸ்வரம்
! முக்கியப் பிரமுகர்களின் மரணம் செய்தியை வெளியிட வேண்டும் என்பதற்காக அடியார் அப்துல்லாஹ் அவர்களின் மரணம் செய்தியை வெளியிட்டோம். அதன் பின்னர் மரணச் செய்திகளை அறிவிக்குமாறு ஏராளமான கடிதங்கள் வர ஆரம்பித்தன. மரணச் செய்திகளுக்கு ஒரு பக்கம் அளவுக்கு ஒதுக்க வேண்டிய நிலை. எனவேதான் சமுதாயத்திற்காக பணி செய்பவர்களில் யாருடைய மரணச் செய்தி முஸ்லிம் சமுதாயத்தைச் சென்றடையவில்லையோ அத்தகைய மரணச் செய்திகளைத் தவிர வேறு மரணச் செய்திகளை அறிவிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரிபாயி அவர்களின் மரணச் செய்தி செய்தித்தாள்கள் வழியாக அனைவருக்கும் தெரிந்த செய்தியாக இருந்ததுதான் காரணம். அதே சமயத்தில் இயற்கையான முறையில்லாமல் முஸ்லிம் என்பதற்காக எதிரிகளால் கொல்லப்படுவோர் சாதாரணமானவர்களாக இருந்தாலும் பிரமுகர்களாக இருந்தாலும் வெளியிடப்படும். என் மாமா மரணித்துவிட்டார், என் மைத்துனர் இறந்துவிட்டார் என்றெல்லாம் தகவல்கள் தெரிவிப்பவர்களும் இதையே விளக்கமாக எடுத்துக் கொள்க!
உணர்வு 2 : 49, ஆகஸ்ட் 21-27, 1998
? தஸ்லிமா நஸ் ரீன் முஸ்லிமா? இந்துவா?
பாத்திமா ஜெனீரா, இராமநாதபுரம்
! இஸ்லாமியக் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்தான் முஸ்லிமாக இருக்க முடியும். தஸ்லிமா நஸ் ரீன் தனக்கு இஸ்லாத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார்.
? கிருஷ்ணா கமிஷனுக்கு ஏற்பட்ட கதிதான் கோகுலகிருஷ்ணன் கமிஷனுக்கும் ஏற்படும் என்று பேசப்படுவது குறித்த தங்கள் கருத்தென்ன?
மு. யூசுப் ரஹ்மத்துல்லாஹ், நாகூர்
! ஜெயலலிதா கூட கிருஷ்ணா கமிஷன் அறிக்கையைத் தொடர்ந்து மஹாராஷ்டிர முதல்வர் பதவி விலக வேண்டும் என்று துணிவுடன் கருத்து கூறியுள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதியோ இடிச்ச புளியாக வீற்றிருக்கிறார். கருணாநிதியின் இந்தப் போக்கைப் பார்க்கும்போது கோகுலகிருஷ்ணன் கமிஷனுக்கும் இதே கதிதான் ஏற்படும் என்ற எண்ணத்தை தோற்றுவித்துள்ளது.
நீதிபதி கிருஷ்ணாவின் நேர்மையின் மீது எந்தச் சந்தேகமும் தெரிவிக்கப்பட்டதில்லை. ஆனால் கோகுல கிருஷ்ணன் மீது திமுககாரர் என்ற குற்றச்சாட்டு ஜெயலலிதா உள்ளிட்ட எதிர்க்கட்சியினரால் கூறப்பட்டதுண்டு. எனவே அறிக்கை வெளிவருவது முடிந்தவரை தாமதப்படுத்தப்படலாம்.
அல்லது அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படாத வகையில் அறிக்கை தயார் செய்யப்படலாம். இதையும் மீறி காவல் துறையினர் மீது கமிஷன் குற்றம் சாட்டினால் அறிக்கை கிடப்பில் போடப்படலாம். அவ்வாறு போடப்படும்போது உதய சூரியன் தமிழகத்தில அஸ்தமிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
உணர்வு 2 : 50, ஆகஸ்ட் 28-செப்டம்பர் 3, 1998
? முஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்று மற்றவர்கள் கூறுவதுபோல் நீங்களும் கூறுகிறீர்கள். ஆனால் ஒரு முஸ்லிம் 20 பேருக்கு சமம் என்று குர்ஆன் கூறுகிறதே?
எஸ்.கே. தாவூத், இராமநாதபுரம்
! அப்படி குர்ஆனில் கூறப்படவில்லை. அதர்மத்தை எதிர்த்து களத்திலிறங்கிப் போராடுவதைக் கூறும்போது அனைத்தையும் சகித்துக் கொள்ளக் கூடிய நூறு பேர், இரு நூறு பேரை வெற்றி கொள்ள முடியும் என்றுதான் குர்ஆன் கூறுகிறது.
உணர்வு 2 : 51, செப் 4-10, 1998
? பசு வதைத் தடைச் சட்டம் கொண்டு வரத் துடிக்கும் இராமகோபாலன் உடன்கட்டை ஏறுவதையும் ஆதரிப்பாரா?
சைபுல்லாஹ், அபுதாபி
! உடன்கட்டை சட்டப்படி தடை செய்யப்பட்டு விட்டதால் அதை இன்றைய நிலையில் ஆதரிக்க முடியாது. நாளை தனிப்பெரும்பான்மை கிடைத்து பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால் தடைச் சட்டம் வாபஸ் பெறப்படும். அதன் பின்னர் உடன் கட்டையும் பகிரங்கமாக ஆதரிக்கப்படும். இதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
? வங்க தேச முஸ்லிம்கள் என்று இந்திய முஸ்லிம்களை வெளியேற்றும் திட்டம் என்னவாயிற்று?
ஷேக் மைதீன், கடலூர்
! மும்பையிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் இந்தியாவின் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள். மும்பையில் உள்ள முஸ்லிம்களை ஏற்றிக் கொண்டு பலத்த பாதுகாப்புடன் மேற்கு வங்கத்தை நோக்கி ரயில் புறப்பட்டது. மேற்கு வங்க எல்லையை அடைந்தவுடன் மேற்கு வங்க மக்கள் முஸ்லிம்களை நாடு கடத்தச் சென்ற மும்பை போலீசாருக்கு செமத்தியான உதை கொடுத்து ஓட ஓட விரட்டினர். இதனால் முஸ்லிம்களை நாடு கடத்தும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
? குற்றங்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் போதாது என்று ஒரு புறம் கூறிக் கொண்டு பெண்களைக் கேலி செய்வோருக்கு கடுமையான சட்டம் பாயும் என்று அரசு எச்சரிப்பதையும் எதிர்க்கிறீர்கள். இது ஏன்?
ரஹ்மத்துல்லாஹ், துளசியாப்பட்டிணம்.
! பொடாச் சட்டமானாலும், பெண்களை கேலி செய்வோருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள சட்டமானாலும் அதை நாம் எதிர்ப்பதற்கு தண்டனையின் கடுமை காரணம் அல்ல. இரண்டு காரணங்களுக்காகவே நாம் இத்தகைய சட்டங்களை எதிர்க்கிறோம்.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் செலுத்தும் அக்கறையைவிட அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டப்பட வேண்டும்.
இச்சட்டங்களின் கீழ் கைது செய்யப்படுபவர்களில் 99 சதவிகிதம் அப்பாவிகளாகத்தான் இருப்பார்கள். பொடாச் சட்டத்தை நாம் எதிர்ப்பதற்கும் இதுதான் காரணம்.
மேலும் ஒரு செயலைக் குற்றம் என்று அறிவிப்பதற்கு முன்னால் அச்செயல் நடைபெறுவதற்கான அனைத்து வாசல்களும் அடைக்கப்பட வேண்டும்.
விபச்சாரத்திற்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை அளிக்கப்படுகிறது. அதே சமயத்தில் விபச்சாரத்துக்கு தூண்டக் கூடிய ஆடைகள், பகிரங்கமான ஆபாசக் காட்சிகள், சுவரொட்டிகள், ஆபாசக் கதைகள் ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன. விபச்சாரத்தை தூண்டுவதற்கான அனைத்து வாசல்களையும் அடைத்துவிட்டு அதன் பிறகும் விபச்சாரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிப்பது சரியான நடவடிக்கை எனலாம்.
ஒழுக்கமாக வாழ நினைப்பவர்களும்கூட விபச்சாரத்தில் விழுந்து விடக்கூடிய மோசமான நிலையை அனுமதித்து விட்டு மரண தண்டனையளிக்க நினைத்தால் அதற்கான தகுதி இவர்களுக்கு கிடையாது.
பெண்களைக் கேலி செய்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் சினிமாக்களும், தொலைக்காட்சித் தொடர்களும்தான். இவற்றை முழுமையாகத் தடை செய்ய வக்கற்றவர்கள் குறைந்தபட்சம் பெண்களைக் கேலி செய்யத் தூண்டும் காட்சிகளுக்காவது தடை விதிக்கலாம்.
ஆபாச உடை, சுவரொட்டிகளுக்குத் தடை விதிக்கலாம். இவற்றையெல்லாம் செய்துவிட்டு கடுமையான சட்டம் கொண்டு வந்தால் வரவேற்கலாம். இதுதான் நமது நிலை.
அதாவது ஒரு குற்றம் நடப்பதற்கான வாசல்களை அடைத்து விட்டுத்தான் அதற்குத் தண்டனையளிக்க வேண்டும். அப்பாவிகள் பாதிக்கப்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டும். இந்த இரண்டு அம்சங்களின் அடிப்படையிலேயே நாம் விமர்சனம் செய்கிறோம்.
உணர்வு 2 : 52, செப்டம்பர் 11-17, 1998
? பிள்ளையார் ஊர்வலம் மசூதி வழியாகச் செல்லும்போது முஸ்லிம்கள் வரவேற்பு கொடுக்க வேண்டும். ரம்ஜான் மீலாது ஊர்வலங்கள் கோவில் வழியாகச் செல்லும்போது இந்து மதத் தலைவர்கள் வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கூறியுள்ள யோசனை சரியா?
எம். சிராஜ்தீன், ராயபுரம்
! சிலை வழிபாடு கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. இந்தக் கொள்கையை விட்டுவிட்ட சிலை ஊர்வலத்தை வரவேற்பதும், மாலையிடுவதும் ஏற்க முடியாததாகும். கொள்கைப் பிடிப்பு இல்லாத கோழைகள் சிலர் இவ்வாறு செய்வதால் மத நல்லிணக்கத்துக்குப் பதிலாக பகைமையே வளரும். பெரும்பாலான முஸ்லிம்கள் இவர்களைத் துரோகிகளாகவே கருதுவார்கள்.
அதுபோல் ரம்ஜான் ஊர்வலத்தின்போது (ரம்ஜானுக்கு ஊர்வலம் என்று ஏதுமில்லை) ஒரு சில இந்துக்கள், வரவேற்புக் கொடுத்ததால் அது ஒட்டு மொத்த இந்துக்களின் வரவேற்பாக இருக்க முடியாது.
தங்கள் மீது சிறுபான்மை என்ற காரணத்தினால் பிற மதத்து வழிபாடு திணிக்கப்படுகிறது என்ற எண்ணம் சிறுபான்மை மக்களிடமும், சிறுபான்மைக்கு அடங்கி நடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக பெரும்பான்மை மதத்தவர்களும் எண்ணுவார்கள். இதைத் தவிர வேறு எந்த விளைவும் இதனால் ஏற்படாது.
ஒரு மதத்தின் வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள பகுதியில் மற்ற மதத்தவர்கள் ஊர்வலம் செல்லாமல் இருப்பதுதான் அமைதி ஏற்பட சரியான வழிமுறையாகும்.
? கோவை குண்டு வெடிப்பில் கைதானவர்களில் ஒருவர் கூட மவ்லவி இல்லை என்று எழுதியுள்ளீர்கள். ஆனால் நாசர் மதனி மவ்லவி இல்லையா?
ஹாரூன் ஹசன், அதிரை
! நாசர் மதனி பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக மக்கள் சிவில் உரிமைக் கழகம் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் கண்டுபிடித்து அறிக்கை வெளியிட்டுள்ளன. மேலும் ராம கோபாலன் அரபி மதரசாக்களைச் சோதனையிடக் கோரியது தமிழக மதரசாக்களைத்தான். நாசர் மதனி தமிழகத்து மதரசாவில் பயின்றவர் இல்லை.
? விநாயகருக்கு முஸ்லிம்கள் அளித்த வரவேற்பு இந்து முன்னணிக்கு கிடைத்த வெற்றியாக எடுத்துக் கொள்ளலாமா?
எம். நுக்மான், நாகப்பட்டிணம்
! முஸ்லிம் சமுதாயம் திரண்டு இவ்வாறு வரவேற்புக் கொடுத்திருந்தால் இந்து முன்னணியின் வெற்றி எனக் கூறலாம். இஸ்லாத்திலிருந்து முஸ்லிம்களை அப்புறப்படுத்தி அவர்களைப் போலவே முஸ்லிம்களையும் மாற்றுவதுதான் சங்பரிவாரத்தின் முக்கியமான திட்டம். ஆனால் இந்த உபசரிப்பை வழங்கியவர்கள் பேப்பரில் பெயரும், படமும் வருவதற்காக எதையும் செய்யக் கூடிய மனவியாதியுடையவர்கள்.
சன் டிவியில் பெயர் வாசிக்கப்படும் என்றால் சபரி மலைக்கு மாலை போடுவார்கள். ஏற்கெனவே ஏதாவது மதிப்பு இருந்தால் இச்செயலுக்கு பின் அதையும் இழப்பார்கள் என்பது நிச்சயம். எனவே இந்து முன்னணியின் திட்டம் உணர்வுள்ள முஸ்லிம்களிடம் ஒரு காலத்திலும் வெற்றி பெறப்போவதில்லை.
? பாகிஸ்தான் பிரிவினை நடக்காமல் சுதந்திரம் கிடைத்திருந்தால் முஸ்லிம்களின் நிலை எப்படியிருக்கும்?
மு. யூசுப் ரஹ்மத்துல்லாஹ், நாகூர்
! இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்திருப்போம். சுதந்திரப் போராட்ட காலத்தில் முஸ்லிம்கள் முன்னணியில் இருந்ததுபோல் அரசியல் அதிகாரத்திலும் முன்னிலை வகித்திருப்போம்.
Comments