ஏகத்துவ கொள்கை ஓர் விளக்கம்!:
கொள்கை விளக்கம்! வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை உறுதியாக நம்புவதும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் திருத்தூதருமாவார் என்பதை உறுதியாக நம்புவதும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும். அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும்: "அல்லாஹ்வை வணங்குங்கள் அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! {அல்குர்ஆன் 4:36} "ஜின்னையும் மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. {அல்குர்ஆன் 51:56} இணை கற்பித்தல் கூடாது: அகில உலகையும் படைத்துää காத்து பராமரிக்கும் ஒரே ஒரு இறைவன் அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை. எதுவும் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும். பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுடைய பண்புகள் ஆற்றல்கள் அவனுக்கு இருப்பது போல் மற்றவர்களுக்கும் இருப்பதாக நம்புவதும் அல்லாஹ்வுக்குச் செய்யும் வழிபாடுகளில் எந்த ஒன்றையும் மற்றவர்களுக்குச் செய்வதும் இணை கற்பித்தல் ஆகும்.