தெய்வீக சுகமளிக்கும் ஜெபக் கூட்டங்கள்


தெய்வீக சுகமளிக்கும் ஜெபக் கூட்டங்கள்

போப் 16 ம் பெனடிக்ட் கை உடைந்த சம்பவத்தையும், அவருக்கு ஏற்பட்ட அந்த துன்பத்தை தெய்வீகத் தன்மை கொண்டவராகக் கருதப்படும் அவராலேயே போக்க முடியவில்லை என்பதையும், ஆசி வழங்கும் அவரது கையே உடைந்து, ஆசி வழங்கும் அவரது கைக்கே அவரால் ஆசி வழங்க முடியவில்லை என்பதையும், அதே நேரத்தில் அவர் களில் மற்றொரு சாரார், "தெய்வீக சுகமளிக்கும் ஜெபக் கூட்டம்' என்ற பெயரில் நடத்தும் நாடகங்கள் பற்றி யும் கண்போம்.

அதைத் தொடர்ந்து அதுபோன்ற "ஜெபக் கூட்டம்' ஒன்றில் நாம் பட்ட அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக மதுரை மாநகரத்தில் முஸ்-ம்கள் பெரு வாரியாக வசிக்கின்ற பகுதி ஒன்றில் முஸ் -ம் வீடுகளுக்கு சென்று முஸ்-ம் பெண் களைச் சந்தித்து, "இயேசுதான் உண்மை யான கடவுள்'' என்று கூறியும், "கிறிஸ்தவ மார்க்கத்தில் இணைவதே பரலோக ராஜ் ஜியம் செல்லும் வழி'' என்றும் வீடு வீடா கச் சென்று ஒரு கிறிஸ்தவப் பெண் பிரச் சாரகர் பிரச்சாரம் செய்வதாக நமக்கு செய்தி கிடைத்தது.


தினந்தோறும் முஸ்-ம் பெண்களை சந்தித்து இவர்கள் மூளைச் சலவை செய் யும் இந்த சம்பவம் நமக்கு பெரும் அதிர்ச் சியளித்தது.

அவர்கள் வைக்கக் கூடிய வெற்று வாதங்களுக்கு விபரமறியாத முஸ்-ம் பெண்கள் ப-யாகிவிடக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில், அந்தப் பெண் பிரச்சார கரை சந்தித்து, உங்களிடத்தில் கிறிஸ்துவ மார்க்கம் குறித்து சில முக்கியமான கேள் விகளுக்கு எங்களுக்கு விடை தெரிய வேண்டியுள்ளது; அந்தக் கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளித்தால் நாங்கள் கிறிஸ் தவ மதத்திற்கு மாறத் தயாராக உள்ளோம். 

எனவே எங்களுக்கு ஏற்பட்டுள்ள அந்த சந்தேகங்களை போக்கி, நாங்கள் கிறிஸ்தவர்களாக மாற நீங்கள் வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை யோடு அவர்களைச் சந்தித்தோம்.

கேட்கப்பட்ட கேள்விகள் :

கையில் பைபிளுடன் சென்று, அவர் களிடத்தில் கீழ்க்கண்ட கேள்விகளை வினவினோம். ஒவ்வொரு கேள்வியைக் கேட்ட பொழுதும் அது குறித்து சொல்லப் படும் பைபிள் வசனங்களை எடுத்துக் காட்டி அந்தந்த கேள்விகளை முன் வைத்தோம்.

1. "பரலோக ராஜ்ஜியத்தில் இருக்கின்ற என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானே அல்லாமல், என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை'' என்று மத்தேயு 7:21 27உள்ள பைபிள் வசனங்களில் இயேசு கூறுவதாக கூறப்பட்டுள்ளது. நீங் கள் இயேசுவின் சித்தப்படி செய்கிற வர்தான் வெற்றி பெறுவார் என்று பிரச்சா ரம் செய்கிறீர்கள். ஆனால் இயேசுவோ "என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று அழைக்கிறவன் பரலோக ராஜ்ஜி யத்தில் பிரவேசிக்க முடியாது...'' என்று கூறுகிறார். அவருடைய பிதாவின் சித்தப் படி நடக்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியும் என்று கூறுகிறார். இந்த பைபிள் வசனப்படி இயேசுவை கர்த்தராகிய நீங்கள் பரலோக ராஜ்ஜியத் தில் பிரவேசிக்க முடியுமா?

2. அதே பைபளில் மத்தேயு 7:21 27 ஆகிய வசனங்களிலேயே இயேசுவை நோக்கி உமது நாமத்தினாலேயே தீர்க்க தரிசனம் உரைத்து, பிசாசுகளை துரத்தி, அநேக அற்புதங்களை செய்தோம் என்று பாதிரிமார்கள் தீர்ப்பு வழங்குவதற்கு விசா ரணை செய்யப்படும் நாளில் கூறும்போது, "அக்கிரமச் செய்கைகாரர்களே! என்னை விட்டு அகன்று போங்கள்...'' என்று அவ் வாறு சொல்பவர்களை இயேசு விரட்டி யடிப்பார் என்று பைபிள் கூறுகிறதே! மேலும் இத்தகைய அற்புதங்கள் செய்வ தாக சொல்லும் இவர்களெல்லாம் நல்ல தீர்க்கதரிசிகள் அல்ல... கள்ள தீர்க்கதரிசி கள் என்று பைபிள் கூறுகிறதே! இதன் விளக்கம் என்ன?

3. ஒரு பெண் இயேசு பீடத்தில் உமது வலது பாரிசத்திலும், இடது பாரிசத்திலும் எனது இரு குமாரர்களை அமர்த்த அருள் செய்ய வேண்டும் என்று கேட்டபோது, அவ்வாறு அருள் செய்வது "என் பிதாவி னால் எவருக்கு ஆயத்தம் பண்ணப்பட் டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல் மற்ற எவருக்கும் அருள்வது என் காரிய மல்ல...'' என்று மத்தேயு 20:20-23 ஆகிய வசனங்களில் இயேசு கூறுவதாக உள் ளதே ஏதும் சக்தி பெறாத இயேசுவை இரட்சகர், உங்களை இரட்சிப்பார் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்?

4. முஸ்-ம்களாகிய நாங்கள் இயே சுவை மிகுந்த கண்ணியத்தோடு, அவர் ஒரு சிறந்த இறைத் தூதர் என்று நம்பி வருகின்றோம். ஆனால் "பைபிள் அவரை விபச்சார சந்ததியில் பிறந்தவர் என்று அவமானப்படுத்துவது ஏன்?' என்று கூறி அதற்குரிய ஆதாரமும் பைபிளில் இருந்து எடுத்து வைக்கப்பட்டது.

5. இயேசுவை சமாதானத்தை பரப்ப வந்தவர் என்று கூறுகிறீர்கள்; ஆனால் அந்த இயேசுவோ "நான் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். சமாதானத்தை அல்ல பட்டயத்தையே அனுப்ப வந்தேன்; மக னைத் தகப்பனுக்கும், மகளைத் தாய்க் கும், மருமகளை மாமிக்கும் விரோதமாய் பிரித்துவிட வந்தேன்...'' என்று மத்தேயு 10:34ல் கூறுகிறாரே! இயேசு சமாதானத்தை பண்ண வந்தாரா? சண்டை மூட்ட வந்தாரா?

இதுபோன்று இயேசு பிறந்தது தொடங்கி உயிர்த்தெழுந்ததுவரை பைபி ளில் உள்ள முரண்பாடுகள் குறித்த நமது சரமாரியான கேள்விகளுக்கு பதில் தர முடியாமல் திணறிய, பல வருடங்களாக கிறிஸ்தவ பிரச்சாகராக இருக்கும் அந்தப் பெண்மணி, "எனது இத்தனை வருட பிரச்சாரத்தில் இதுபோன்ற கேள்விகளை சந்தித்ததேயில்லை. உங்களின் இந்தக் கேள்விகளுக்கு எங்களது தேவாலயத் தில் உள்ள பாதிரியார்களிடத்தில்தான் கேட்க வேண்டும். நீங்கள் கேட்ட கேள் விகளுக்கு பதில் கேட்டு விட்டு வருகி றேன்...'' என்று கூறிச் சென்றவர், நாம் பலமுறை தொடர்பு கொண்டும் தகுந்த பதிலளிக்கவில்லை. 

நாம் கேட்ட கேள்விக்கணைகளின் மூலம் முஸ்-ம் பகுதிகளில் முஸ்-ம் பெண்களை சந்தித்து மூளைச் சலவை செய்யும் அவரது வேலைக்கு அன்று முதல் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

பலமுறை நாம் தொடர்பு கொண்ட போது பதிலளிக்காத அந்தப் பெண் பிரச்சாரகர் 2007 டிசம்பர் 24ம் தேதியன்று தொலைபேசியில் நம்மைத் தொடர்பு கொண்டார். "மதுரையில் முக்கியமான ஒரு பகுதி யில் இன்று ஜெபக் கூட்டம் நடக்கிறது. அந்த ஜெபக் கூட்டத்திற்கு சகோதரர் பால் தினகரன் வருகிறார். அவரிடம் நீங்கள் கேட்ட கேள்விகளை கூறியிருக்கிறேன். ஜெபக் கூட்டம் முடிந்தவுடன் நீங்கள் அவரிடம் உங்கள் கேள்விகளைக் குறித்து சந்தேகங்களைக் கேட்கலாம். அதனால் நீங்கள் இரவு 11 மணிக்கு தேவாலயத்திற்கு வந்துவிடுங்கள். சிறிது நேரத்தில் அந்த தெய்வீக சுகமளிக்கும் ஆராதனை ஜெபக் கூட்டம் முடிந்தவு டன் சகோதரர் பால் தினகரனுடன் உங் கள் கேள்விக்கான நேரம் ஒதுக்கப்படும்...'' என்று கூறி இணைப்பைத் துண்டித்தார். 

நாமும் இரு சகோதரர்களுடன் குர் ஆன், பைபிள் மற்றும் சகோதரர் பீ.ஜே. அவர்களின் இயேசு இறைமகனா? இது தான் பைபிள், பைபிளில் நபிகள் நாயகம் ஆகிய மூன்று புத்தகங்களுடன் அவை பற்றிய குறிப்புகளுடன் தேவாலயத்திற் குச் சென்றோம்.

நாம் தேவாலயத்திற்குச் சென்றபோது ஜெபம் நடந்து கொண்டிருந்தது. "நேரம் 11.30 மணி ஆகிறது. இன்னும் சிறிது நேரத்தில் இந்நிகழ்ச்சி முடிந்துவிடும். நீங்கள் கேள்விகளை கேட்கத் தயாராக இருங்கள்...'' என்று கூறிய அந்தப் பெண் மணி, "கேள்வி கேட்டு விளக்கம் பெற ஏதுவாக நீங்கள் தேவாலயத்தில் மக்கள் அமரும் வரிசையில் அமருங்கள்...'' என்று நம்மை அழைத்துச் சென்று அமர வைத் தார்.

நேரம் இரவு 11.30 மணியி-ருந்து 12.30 மணி ஆனது. நிகழ்ச்சி இன்னும் முடிந்த பாடில்லை. 12.30 மணியி-ருந்து 1.30 மணியானது. அப்போது பால் தினகர னின் மனைவி ஜெபிக்க அழைக்கப்பட் டார். 1.30 மணியி-ருந்து 2.15 மணியா னது. அப்போது பால் தினகரன் ஒரு தெம்மாங்கு பாடலோடு தனது உரை யைத் தொடங்கினார். அவர் பேச ஆரம் பிக்கும்போதே கோரிக்கை ஒன்றை வைத்தார்.

"நான் பேசும்போது நீங்கள் அனைவ ரும் அடிக்கடி கை தட்ட வேண்டும். அப்போதுதான் உங்களில் நடுநிசியில் தூங்கக் கூடிய பாதிக்கும் மேற்பட்டோர் அவ்வப்போது விழித்துக் கொள்வீர்கள்...'' என்று தொடர்ந்தார்.
திடீரென்று, "இதோ! இயேசு உங்கள் முன் வந்துவிட்டார்... அனைவரும் எழுந் திருங்கள்...'' என்றார். அனைவரும் எழுந் திருந்தனர். "இதோ! உங்களை நோக்கி கைகளை நீட்டுகிறார். நீங்கள் உங்கள் கைகளை அவரை நோக்கி உயர்த்துங் கள்...'' என்றார். உடனே அனைவரும் கைகளை உயர்த்தினர். 
"இதோ அவர் உங்களது கைகளைப் பிடிக்கிறார்... நீங்கள் அவரது கைகளைப் பிடியுங்கள்...'' என்றார். எல்லோரும் கை களைப் பிடிப்பது போன்று பாவனை செய்தனர். இறுதியில் 3 மணிக்கு அந்தக் கூட்டம் நிறைவுற்றவுடன் அந்த பிரச் சாரகப் பெண்மணியை அழைத்து பால் தினகரனைப் பார்த்தால் அங்கு அவர் காண வில்லை. "எங்கே விளக்கம ளிப்பதாக சொன்ன பாதிரி யாரைக் காணவில்லை...'' என்று நாம் கேட்டபோது தான், அந்தப் பெண்மணி சொன்ன அனைத்தும் பொய் என்று நமக்குத் தெரிந்தது. இயேசு உங்களை இரட்சிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஜெபக் கூட்டத்தில் உங் களை பங்கெடுக்க வைப்ப தற்காகத்தான் இத்தகைய பொய்யை கூறினேன் என்று அந்தப் பெண்மணி கூறியது நமக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவ்வாறு பொய் சொல் லக் காரணம் என்னவென் றால் அதற்கும் அவர்கள் பைபிளைத்தான் காரணமாக காட்டுகிறார்கள்.
"நம்முடைய அநீதி தேவ னுடைய நீதியை விளங்கப் பண்ணினால், என்னுடைய பொய்யினால் தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமை உண்டாக விங்கினதுண்டா னால் இனி நான் பாவி யென்று தீர்க்கப்படுவேன்...'' (ரோமர் 3:4 7) என்ற வச னத்தை நமக்குக் காட்டினார்.

அதாவது, தேவனுடைய நீதியை விளங்க வைக்க எத் தகைய அநீதியையும் செய்ய லாம். தேவனுக்கு மகிகை உண்டாக்க எத்தகைய பொய் யையும் சொல்லலாம். அவ் வாறு பொய் சொல்பவன் பொய்யனில்லை; அவன் பாவியில்லை. இவ்வாறு நம்ப வைத்து ஏமாற்றுபவன் அநி யாயக்காரன் இல்லை என்று பைபிளில் கூறப்பட்டுள்ள அந்த பொய்யையே மூலதன மாகக் கொண்டு இதுபோன்ற பொய்யான நடவடிக்கைக ளுக்கு இவர்களை தூண்டுகி றது என்பதை விளக்குவ தற்கே இந்த சம்பவத்தை நாம் இங்கே விவரிக்கிறோம்.

"இதோ இயேசு உங்கள் முன் நிற்கிறார்...! இதோ வந்து விட்டார்...!'' என்று சொல்வதா கட்டும், குருடர்கள், செவிடர் கள், பிசாசுகளை ஓட ஓட விரட்டப்படுவது ஆகிய அனைத்தும் இந்த இயேசு வின் பெயரால் சொல்லப்ப டும் பொய்யை மூலதனமாக வைத்துதான் இத்தகைய ஜெபக் கூட்டங்கள் நடைபெறுகின்றன என்பதை ஒவ் வொருவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.


அபூ நஸ் ரீன்.

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை