ஜெயா ஆரசை தாக்கும் மின்சாரம்


ஜெயா ஆரசை தாக்கும் மின்சாரம்

இந்தியாவில் அதிக நேரம் மின்வெட்டு செய்யப்படும் மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது. இதுவரை தமிழகம் கண்டிராத மின்வெட்டால் தமிழகம் இருளில் மூழ்கியுள்ளது.
இதுவரை தமிழகம் கண்டிராத மின்வெட்டு வர காரணம் என்ன? இதற்கு பல காரணங்கள் உள்ளன. தமிழகத்தில் இதற்கு முன்னர் மின் தேவை எவ்வளவு இருந்தது என்பதை கவனித்துப் பாருங்கள்: 

1951 லி 1956 லிலி 172 மெகாவாட்
1956 லி 1961 லிலி 301 மெகாவாட்
1961 லி 1969 லிலி 1370 மெகாவாட்
1969 லி 1974 லிலி 1470 மெகாவாட்
1974 லி 1978 லிலி 2254 மெகாவாட்
1978 லி 1980 லிலி 2424 மெகாவாட்
1980 லி 1985 லிலி 2719 மெகாவாட்
1985 லி 1990 லிலி 3344 மெகாவாட்
1990 லி 1991 லிலி 5470 மெகாவாட்
1991 லி 1997 லிலி 6019 மெகாவாட்
1997 லி 2002 லிலி 7924 மெகாவாட்

2002 லி 2007 லிலி 10098 மெகாவாட் என பெருகிக்கொண்டே செல்கிறது.

இப்பட்டியல் 80 களுக்குப் பிறகிலிருந்து, 2000 த்துக்குப் பிறகும் தமிழகத்தின் மின்தேவை பெருமளவு அதிகரித்து, 1990 லி 2010 காலக்கட்டத்தில் 100 சதவீதம் மின்தேவை அதிகரித்துள்ளதை காணமுடிகிறது.
1997 ஆம் ஆண்டே 2010 வாக்கில் 19579 மெகாவாட் மின்சாரத் தேவை ஏற்படுமென மின்வாரியம் அறிக்கை அளித்தது. ஆனால் அதன்படி மின்உற்பத்தி செய்வதற்குரிய எந்த வழியையும் அரசு செய்யவில்லை.

1957 முதல் 1990 வரையிலும் மின்வளர்ச்சி சீராக இருந்தது. தமிழகம் உபரி மின்சக்தியைக் கொண்டிருக்கும் மாநிலமாக திகழ்ந்தது. ஆனால் அதற்கு பிறகு மின் தேவை கடுமையாக அதிகரித்தது. அதை ஈடுகட்டும் வண்ணம் எந்த அரசும் முயற்சி செய்யவில்லை.

மேலும் 1991 இல் நரசிம்மராவ் அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையின் தொடர்ச்சியாக இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் படையெடுக்கத் துவங்கின. இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் பன்னாட்டு நிறுவனங்கள் குவிந்தன. இவர்களுக்கு தாராள மின்சாரம் வழங்கி மகிழ்வித்தது தமிழக அரசு. மேலும் குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. தமிழகத்தின் மின்தேவை, உற்பத்தி, செலவு, அதன் முழுவிவரங்களை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
வருடந்தோறும் சுமார் 8 சதவிகிதம் மின் பயன்பாடு அதிகரித்து கொண்டே செல்கிறது. தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, மக்கள்தொகை பெருக்கம், பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் உயருதல், குளிர்சாதனங்கள் உள்ளிட்ட மின்உபகரணங்களின் பயன்பாடு அதிகரித்தல் ஆகியவை இதற்கு காரணமாகக் கூறப்படுகின்றன. இதனால் அதிக மின் தேவை ஏற்பட்டும் அதை நிர்வத்தி செய்ய எந்த அரசும் கூடுதல் மின்உற்பத்தி நிலையங்களை உருவாக்காததே இப்போது இவ்வளவு பெரிய மின்வெட்டு ஏற்பட காரணமாக அமைந்துள்ளது. 

நம் வசம் உள்ள அனல் மற்றும் புனல் (நீர்) மின்நிலையங்கள் மிக பழைமையானவை. எனவே, பல நேரங்களில் அவை படுத்து உறங்கின்றனர். 

இந்த பழைய மின் நிலையங்களுக்கு நவீன கருவிகள் வாங்கி உற்பத்தி செய்தால் மின் இழப்புகளை ஓரளவு குறைத்திருக்கலாம். ஆனால் தங்களை வளப்படுத்திக் கொள்வதற்கு முயன்ற ஆளும் கட்சிகள் மக்கள் பிரச்சினை தீர்க்கும் விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி பெருவாரியான வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்ததற்கு முந்தைய திமுக ஆட்சியில் இரண்டு மணி நேரம் மின்சாரம் தடைசெய்யப்பட்டதும் ஒரு காரணம். தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா கூட, திமுக ஆட்சி மக்களை மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்க செய்துவிட்டது. இந்த ஆட்சி தேவையா? என்று கேள்வியை எழுப்பித்தான் ஆட்சிக்கு வந்தார். 

அதுமட்டுமல்லாமல் ஆட்சிக்கு வந்து மூன்றே மாதத்தில் மின்வெட்டைப் போக்குவேன் என்று வாக்கு கொடுத்தார். ஆனால் இன்னும் மூன்று மாதம் வரவில்லை போலும்.

போன ஆட்சியிலாவது இரண்டு மணி நேரம் தான் மின்வெட்டு இருந்தது. ஆனால் தற்போது இரண்டு மணிநேரம்தான் மின்சாரமே இருக்கிறது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. மின்வெட்டை குறைக்க முடியாவிட்டாலும் கூட, பழைய நிலையே நீடிக்கக் கூட முயற்சி செய்திருக்கலாம். ஒவ்வொரு நாளும் மின்வெட்டின் நேரம் அதிகரித்துக் கொண்டே போவது பொதுமக்களை கொதிப்படையச் செய்துள்ளது. பகலில் மட்டும் இருந்த மின்வெட்டு, இரவிலும் ஏற்பட்டு, தற்போது நள்ளிலிரவிலும் தொடர்கிறது. எப்போது மின்சாரம் இருக்கும், எப்போது இருக்காது என்று தெரியாத அளவுக்கு மின்வெட்டின் நிலை மோசமாகிக் கொண்டே போகிறது.

இதில் ஏழை, பணக்காரன் என்று பாகுபாடு இல்லாமல் எல்லாரும் பாதிக்கப்படுகிறார்கள். அதிமுக அரசுக்கு பெருவாரியான வாக்குகளைப் பெற்று எல்லா இடத்திலும் வெற்றி பெற்ற மாவட்டமான கோவையில்தான் இன்று அரசுக்கு எதிராக போராட்டத்தை கடுமையாக்கியிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சி தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. போராட்டங்கள் தொடர்ந்தால் மிகப்பெரிய விலை அதிமுக அரசு கொடுக்க வேண்டிய நிலை வரும் என்பதை கவனத்தில் கொண்டு முதல் வேலையாக இந்த மின்வெட்டுக்கு நிரந்த விடை கொடுக்க அனைத்து வழிகளிலும் முயற்சி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எண்ணம்.
தீன்குலபெண்மனி

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை