இறைவனை சந்திக்கும் வேளையில் . . .



இறைவனை சந்திக்கும் வேளையில் . . . 
மனிதர்கள் வாழும் தற்போதைய உலகில் பல்வேறு தீமைகள் வேர்விட்டு வளர்ந்திருப்பதை காணமுடிகின்றது. நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இல்லாத பல புதுமையான தீமைகள்தீமைகளை புரிவதற்கான வழிகள் இன்றைய நவீன யுகத்தில் பெருகியிருக்கின்றது. இறைவனுடைய பார்வையில் மிகப் பெரும் தண்டனைக்குரிய பாவத்தை இக்காலத்தில் சில நிமிட பொழுதினில் செய்துவிட முடியும் என்ற அளவில் தீமைகள் அதிகரித்திருக்கின்றது.
சில சந்தர்ப்பங்களில் இவற்றில் ஈடுபட்டாலும் பெரும்பாலும் பல முஸ்லிம்களை (பிறமதத்தவர்களைக் கூட) இந்த தீமைகளில் விழாமல்  தடுத்துக் கொண்டிருக்கும் மிகப் பெரும் கேடயம் மறுமை நம்பிக்கை தான்.
இவ்வுலகம் அழிக்கப்பட்ட பிறகு மறுமை என்றொரு நிரந்தரமான வாழ்க்கைஉலகம் உண்டு. அதில் இவ்வுலகில் செய்த செயல்களுக்காக இறைவன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு நியாயமான கூலி வழங்கப்படுவோம் என்ற நம்பிக்கையே மனிதர்களை பல தீமைகளிலிருந்து காக்கும் அரணாக இருந்து வருகிறது. உண்மையில் மறுமையில் இறைவனை நாம் சந்திக்கவிருக்கிறோம் என்ற நம்பிக்கையே நம்மை மனிதனாகஉண்மையான முஸ்லிமாக வாழச் செய்கின்றது.

கண்ணியத்தோடும்கௌரவத்தோடும் இறைவனை சந்திப்பதையே  அனைத்து முஸ்லிம்களும் விரும்ப வேண்டும். இறைவன் முன்னிலையில் ஒரு குற்றவாளியாக நிற்பதை அஞ்ச வேண்டும்.
தமது இறைவன் முன் நிற்பதை அஞ்சியவருக்கு இரண்டு சொர்க்கச் சோலைகள் உள்ளன.
அல்குர்ஆன் 55 : 46
யார் தமது இறைவன் முன்னே நிற்பது பற்றி அஞ்சிமனோ இச்சையை விட்டும் தன்னை விலக்கிக் கொண்டாரோ சொர்க்கமே (அவரது) தங்குமிடம்.
அல்குர்ஆன் 79 ; 40
எந்த காரியங்களில் ஈடுபட்டால் இறைவனை அவமரியாதையோடு சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை நபிகள் நாயகம் தெரிவிப்பதோடு கண்ணியத்துடன் அவனை சந்திப்பதற்கான வழிமுறைகளையும் கற்றுத் தருகிறார்கள். அவற்றை குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரத்துடன் காண்போம்.
இவற்றை அறிவதின் மூலம் நம்முடைய எஜமானனை சந்திக்கும் வேளையில் இழிவு ஏற்படுவதை விட்டும் நம்மை காத்துக் கொள்ளலாம்.
பாங்கு சொன்னவரின் நிலை
பாங்கு சொல்பவர்கள் மறுமை நாளில் கழுத்து நீண்டவர்களாக இருப்பார்கள் என நபிகள் நாயகம் கூறினார்கள்
அறிவிப்பவர் முஆவியா (ரலி)அஹ்மத் 16258
மறுமையில் அனைத்து மனிதர்களும் எழுப்பப்பட்டு இறைவன் முன்னிலையில் நிறுத்தப்படும் போது தொழுகைக்காக பாங்கு சொல்பவர் தனி அடையளளத்துடன் இருப்பார் என இச்செய்தி தெரிவிக்கின்றது. இது வேறு யாருக்குமில்லாத முஅத்தினுக்கும் மட்டும் உள்ள தனி சிறப்பு. பாங்கு சொல்லும் விஷயத்தில் அக்கறை கொள்வதினால் இந்த அந்தஸ்தை பெற்றுவிடலாம்.
பாங்கு சொல்வதற்கென பொறுப்பாளர்கள் இல்லாத சில மர்கஸ்களில்பள்ளிகளில் பாங்கு சொல்லும் படி ஒருவரிடத்தில் வேண்டினால் நீ போநீ போ என ஒவ்வொரும் மற்றவருக்கு வழிவிடும் காட்சியை காணலாம்.
நன்மையில் போட்டி போடும் மனப்பக்குவம் நம்மிடம் இருக்குமானால் மற்றவரை பின்தள்ளி நாம் முன்னே செல்ல வேண்டும் என்றே விரும்புவோம்.  நீ போ எனும் வார்த்தை பாங்கு சொல்வதின் சிறப்பை அறியாததையும்அதை விரும்பாதததையும் பளிச்சிடுகின்றது.
இஹ்ராம் அணிந்தவராக மரணித்தவரின் நிலை
இப்னு அப்பாஸ் (ரலிலி) அவர்கள் கூறியதாவது:
(இஹ்ராம் கட்டிய) ஒருவர் அரஃபா மைதானத்தில் தமது வாகனத்தின் மீதிருந்தார். திடீரென தனது வாகனத்திலிருந்து அவர் கீழே விழுந்துவிட்டார். அது அவரது கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் “"அவரது உடலை இலந்தை இலை கலந்த நீரால் நீராட்டி இரு ஆடைகளால் பிரேத உடை (கஃபன்) அணிவியுங்கள்;அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம்அவரது தலையை மறைக்கவும் வேண்டாம்ஏனெனில் (இஹ்ராம் கட்டியிருந்த) அவர் மறுமை நாளில் தல்பியா (லப்பைக்...) சொல்லிக்கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்'' எனக் கூறினார்கள்.
புகாரி 1265
இஹ்ராம் அணிந்த ஒருவர் தனது ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவு செய்யும் முன்னரே மரணத்தை அடைந்து விட்டாரெனில் அவர் தல்பியா சொல்லிய வண்ணம் இறைவனை சந்திக்கும் ஒரு அரிய வாய்ப்பை பெறுகிறார் என்பதை இதன் மூலம் அறியலாம்.
இறைமறுப்பாளனின் நிலை
இவ்வுலகில் இறைவனை நிராகரித்துஅவனுக்கு இணை கற்பிப்பவர்கள் மறுமையில் பெரும் இழிவுடன் இறைவனை சந்திப்பார்கள். மற்றவர்கள் யாவரும் கால்களால் நடத்தி இழுத்துச் செல்லப்படும் போது இவர்கள் மட்டும் கால்களுக்கு பதிலாக அவர்களின் முகங்களால் நடத்தி இழுத்துச் செல்லப்படுவார்கள்.
முகம் கவிழச் செய்து நரகத்தை நோக்கிக் கொண்டு செல்லப்படுவோர் கெட்ட இடத்தில் தங்குவோராகவும்வழி கெட்டோராகவும் இருப்பார்கள்.
அல்குர்ஆன் 25 : 34
அனஸ் பின் மா-க் (ர-) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் "அல்லாஹ்வின் தூதரே! (25:34ஆவது இறைவசனத்தின்படி மறுமை நாüல்) இறைமறுப்பாளன் தனது முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவது எப்படி?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் "இம்மையில் அவனை இரு கால்களால் நடக்கச் செய்த (இறை)வனுக்குமறுமைநாüல் அவனை அவனது முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா?'' என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
(இதை அறிவித்த) கத்தாதா பின் திஆமா அவர்கள் "ஆம். (முடியும்). எங்கள் இறைவனின் வ-மையின் மீதாணையாக!''என்று சொன்னார்கள். புகாரி 6523
இறைவனுக்கு இணை கற்பிக்கும் பெரும் பாவத்தினால் அவரது நன்மைகள் அழிந்து விடுகின்றனசொர்க்கம் தடை செய்யப்படுகிறது. மேலும்  பல்வேறு இழப்புகளை அவர் அடைவதை போன்று இறைவனை சந்திக்கும் போது இத்தகைய அவமானத்தையும் சந்திக்க நேரிடுகிறது. ஏகன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்கள் இந்த அவமானத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள இணை வைப்பு எனும் கொடிய விஷத்தை தங்களிடமிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
யாசிப்பவனின் நிலை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவு கூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளன்று வருவான்.
அறிவிப்பவர் : அப்துல்லா பின் உமர் (ரலி)புகாரி 1474,1475
இஸ்லாம் மனிதர்களுக்கு சுயமரியாதையை வலியுறுத்துகின்ற மார்க்கம். பிறரிடத்தில் கையேந்தாமல் சுயமாரியாதையுடன் வாழ வேண்டும் என்பதை அழுத்தமாக அது சொல்கிறது. வேறு வழியில்லை என்ற நிலை ஏற்படும் போது மட்டுமே யாசகம் கேட்பதை அனுமதிக்கின்றது. அவசியத் தேவையின்றி யாசகம் கேட்பதை வன்மையாக கண்டிக்கின்றது.
ஒருவன் சுயமாரியாதை இழந்து தேவையின்றி பிறரிடத்தில் யாசகம் கேட்பான் எனில் மறுமை நாளில்  அதன் அடையாளமாக முகத்தில் துளியும் சதை இல்லாமல் இறைவனிடம் வருவான் என்று இதனால் மறுமையில் ஏற்படும் அவலத்தை நபிகளார் பதிவு செய்கிறார்கள்.
இக்காலத்தில் பிறரை ஏமாற்றி யாசகம் கேட்பதை தொழிலாகவே பலர் கொண்டுள்ளனர். ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் எனது பணம் தொலைந்து விட்டதுஊருக்கு போக பணமில்லை என்ற வாசகத்துடன் சிறுவர்கள்,பெண்கள் உட்பட பலரையும் காணலாம்.
இது மாதிரியான காரியங்களில் முஸ்லிம்களும் இப்போது தலைப்பட்டிருக்கின்றனர். கையில் ஒரு பேப்பருடன் அனைத்து பள்ளிவாசல்களின் நுழைவாயில்களில் அமர்ந்து கொண்டு வருவோர் போவாரிடம் யாசகம் கேட்பதை அதிகமாக காணமுடிகின்றது. இதில் தக்க காரணமின்றி யாசகம் கேட்பவர்கள் பலர்.

தாங்கள் இதில் ஈடுபடுவதோடு நின்று விடாமல் தங்கள் குழந்தைகள்வயது வந்த இளம் பெண்கள்கணவன் மனைவி என குடும்ப சகிதமாக குடும்பத் தொழிலாகவே இதை செய்து வருவதை காணும் போது நமது சமுதயாத்திற்கு ஏற்பட்ட கைசேதமாகவே இதை கருத முடிகின்றது. இதனால் மறுமையில் ஏற்படும் விளைவை இவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
வரதட்சணை ஒரு யாசகமே
பிறரிடத்தில் அம்மாதாயே என்று கெஞ்சி  கேட்பது  மட்டும்  யாசகமன்று.  தக்ககாரணமின்றி அதிகாரத்துடன் பிறரிடம் கையேந்துவதும் யாசகமே. இதிலும் முஸ்லிம் சமுதாயம் கணிசமாக உள்ளனர்.
            பெண்ணை திருமணம் புரிவதாக இருந்தால் மணமகளுக்கு மஹர் தொகையை மணமகன் அளிக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது. அதற்கு நேர்மாறாக இவ்வளவு தொகையை தாருங்கள்இவ்வளவு நகையை போடுங்கள் என்று பெண் வீட்டாரிடம் மணமகனின் பெற்றோர் (தாயார்)  வரதட்சணையாக கேட்டுப் பெறுகிறார்கள். இவ்வாறு கேட்டு பெறும் இந்த வரதட்சணை சந்தேகமற யாசகமே.
பெண்ணுக்கு ஆண்மகன் தான் கொடுக்க கடமைப்பட்டவன். தான் கொடுப்பதை விட்டுவிட்டு பெண் வீட்டாரிடமிருந்து பணம் கறப்பதற்கும்யாசகம் கேட்பதற்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசமில்லை.  இக்காரியத்தில் ஈடுபடுவர்களுக்கும் மேற்கண்ட தண்டனை உறுதி என்பதை எச்சரித்துக் கொள்கிறோம்.
கொள்கையற்ற மார்க்க அறிஞர்கள்
            சில கொள்கையற்ற போலி மார்க்க அறிஞர்கள் எனப்படுவோர் தங்கள் தேவையை பெருக்கிக் கொள்வதற்காக தங்களுக்கு பழக்கமான செல்வந்தர்களிடம் சதா கையேந்திக் கொண்டே இருப்பார்கள். அவர்களாக விரும்பி அன்பளிப்பு வழங்கினால் அதை பெறுவதில் தவறேதுமில்லை. அவ்வாறின்றி மக்களுக்கு சுயமாரியாதையை போதித்து தாமும் சுயமாரிதையுடன் நடக்க வேண்டிய நிலையில் உள்ள மார்க்க அறிஞர்கள் (?)  அவர்களிடம் கையேந்துவது கண்டிக்கத்தக்கது. இத்தண்டனையிலிருந்து இவர்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல.
(சுயமாரியாதையின்றி பிறரிடம் பணம் கறப்பதை குறியாக கொண்டு செயல்படுபவர்களை பற்றியே இங்கு கூறப்படுகிறது. சுயமாரியாதையை இழக்காத வகையில் உதவி கோருவதில் தவறில்லை.)
மார்க்க போதனைகளை புறக்கணித்தவன்
இறைவனுடைய போதனைகளை புறக்கணித்தவர்கள் இறைவன் முன்னிலையில் குருடர்களாக எழுப்பபடுவார்கள்.
எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். "என் இறைவா! நான் பார்வையுடையவனாக இருந்தேனேஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்?''என்று அவன் கேட்பான். "'அப்படித் தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தவாறே இன்று மறக்கப்படுகிறாய்'' என்று (இறைவன்) கூறுவான்.
அல்குர்ஆன் : 124, 125, 126
            சத்திய மார்க்கத்தை அறிந்து கொள்ள மிகப் பெரும் ஆயுதம் சத்திய போதனைகள் நம்மிடம் சொல்லப்படும் போது அதை புறக்கணிக்காது கேட்பதாகும். பின்னர் அதை மறுக்காமல் ஏற்க வேண்டியது நமது கடமை.
            இணை வைப்பு கொள்கையில் உள்ளவர்களை அதிலிருந்து மீட்டெடுத்துஓரிறைக் கொள்கையை ஏற்பதின் பால் அழைக்க வேண்டும் என்ற நன்னோக்கில் பல்வேறு ஊர்களில் பல்வேறு கட்டங்களில் ஏகத்துவப் பிரச்சாரத்தை நமது ஜமாஅத்தின் மூலமாக செய்து வருகிறோம்.
            சில முஸ்லிம்கள் இப்பிரச்சாரத்தை புறக்கணிக்கின்றார்கள். இதை தடுத்து நிறுத்துவதற்காக கயமத்தனமான வேளைகளில் ஈடுபடுகின்றனர்.
            இஸ்லாமியர்களில் அசத்தியக் கொள்கையில் இருப்பவர்களுக்கு அவர்களுடைய கொள்கை தவறானது என்பதற்கான இறைவனுடைய வசனங்களைசான்றுகளை எடுத்துக் காட்டினால் தங்கள் முன்னோர்களின் மீதுள்ள குருட்டு பக்தியினால் இறைவனுடைய சான்றுகளை புறக்கணிக்கின்றனர்.
            முஸ்லிமல்லாதவர்களும் இவ்வாறே தங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கும்தங்களுக்கு எடுத்துக் கூறப்படும் இறைசான்றுகளை புறக்கணித்து தங்கள் வாழ்க்கையை தங்கள் பெற்றோர்கள் அளித்த வாழ்க்கை நெறிகளிலேயே தொடர்கின்றனர்.
இறைவனை மறுப்பவர்களும் இறைவனிருப்பதை நிரூபிக்கும் மெய்யான சான்றுகளை கண்மூடித்தனமாக மறுக்கின்றனர்புறக்கணிக்கின்றனர். இப்படி இறைவனுடைய சான்றுகளை புறக்கணிப்பது எந்த உருவில் இருந்தாலும் அதற்கான தண்டனை இறைவனை குருடர்களாகத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். இத்தகையோர் இப்போதே விழித்துக் கொண்டால் மறுமையிலும் விழிகளுடன் இருக்கலாமே.
ஸகாத்தை நிறைவேற்றாதவன்
ஸகாத் இஸ்லாத்தின் கடமைகளில் தலையாயதொரு கடமை. செல்வந்தர்கள் தங்கள் சம்பாத்தியலிருந்து குறிப்பிட்டதை ஸகாத்தாக ஏழைக்கு வழங்க வேண்டும். ஸகாத் வழங்க தவறியவர்கள் அவமானம் மட்டுமின்றி வேதனையுடனும் இறைவனை சந்திப்பார்கள்.
ஒட்டகம்ஆடுமாடு போன்றவைகளுக்குரிய ஸகாத்தை வழங்காதவர்களை அவைகள் தங்கள் கொம்புகளால் முட்டுவதோடு கால்களால் மிதிக்கும். பொருளாதாரத்திற்கு ஸகாத் வழங்கவில்லையெனில் அவை பாம்பாக உருமாறி அவர்களை கடிக்கும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இவற்றை பின்வரும் செய்தியிலிருந்து விரிவாக அறியலாம். ஸகாத் விவகாரத்தில் உரியவர்கள் அலட்சியம் கொள்வதை தவிர்த்தால் இறைவனை சந்திக்கும் வேளையில் அவமானம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமைகளைச் செய்யாமல் இருந்தால்மறுமை நாளில் அவைமுன்பு ஒருபோதும் இருந்திராத அளவிற்குக் கொழுத்த நிலையில் வரும். அவற்றுக்காக அவர் விசாலமான ஒரு மைதானத்தில்  உட்காருவார். அந்த ஒட்ட கங்கள்  குதித்தோடி வந்து தம் கால்களால் அவரை மிதிக்கும்.
மாடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமைகளைச் செய்யாமல் இருந்தால்மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெருத்த நிலையில் அவரிடம் வரும். அவற்றுக்காக அவர் விசாலமான ஒரு மைதானத்தில் உட்காருவார். அந்த மாடுகள் வந்து அவரைக் கொம்புகளால் முட்டும்கால்களால் மிதிக்கும். அவ்வாறே ஆடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையைச் செய்யாமலிருந்தால்அவை முன்பு இருந்ததைவிடப் பெரியவையாக மறுமை நாளில் வரும். அவற்றுக்காக அவர் விசாலமானதொரு மைதானத்தில் அமர்வார். அவை தம் கொம்புகளால் அவரை முட்டும்கால் குளம்புகளால் மிதிக்கும். அந்த ஆடுகளில் கொம்பற்றவையோ கொம்பு முறிந்தவையோ இருக்காது.
(பொன்வெள்ளி போன்ற) கருவூலச் செல்வங்களை உடையவர் அவற்றுக்கான கடமைகளைச் செய்யாமலிருந்தால்,அவருடைய செல்வங்கள் மறுமை நாளில் கொடிய நஞ்சுடைய பெரிய பாம்பாக மாறிதனது வாயைத் திறந்த நிலையில் அவரைப் பின்தொடரும். அவரிடம் அது வந்ததும் அவர் அங்கிருந்து வெருண்டோடுவார். அப்போது "நீ சேமித்துவைத்த உனது கருவூலத்தை நீயே எடுத்துக் கொள். அது எனக்கு வேண்டாம்'' என்று அது அவரை அழைத்துக் கூறும். அதனிடமிருந்து தம்மால் தப்ப முடியாது என்று அவர் அறியும் போதுதமது கையை அதன் வாய்க்குள் நுழைப்பார். அது அவரது கையை ஒட்டகம்  கடிப்பதைப் போன்று கடிக்கும்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலிலி)முஸ்லிம் 1806
மோசடியாளனின் நிலை
முஸ்லிம்களிடம் மோசடி செய்யும் குணம் ஒரு போதும் இருக்க கூடாது. தன்னை நம்பியவர்களை ஏமாற்றி மோசடி செய்வது நயவஞ்சகர்களின் குணம் என நபிகளார் பழித்து கூறினார்கள்.
"நயவஞ்சகனின் அடையாளம் மூன்று. அவன் பேசினால் பொய்யையே பேசுவான். வாக்களித்தால் மாறு செய்வான். அவனை நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரீ 33
மோசடி செய்யும் குணம் இஸ்லாமியர்களிடம் இருக்கக் கூடாது எனும் போது மோசடியாளன் நபிகள் நாயகத்தின் சமுதயாத்தை சார்ந்தவனாக இருக்க முடியாது. மோசடியாளனை தனது உம்மத்தில் சேர்க்க நபிகளார் மறுத்து விட்டார்கள்.
... ..."மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் (164)
இத்தனை எச்சரிக்கைகளையும் தாண்டி ஒருவன் மோசடி காரியத்தில் ஈடுபட்டால் அவன் மறுமையில் இறைவனை எவ்வாறு சந்திப்பான்?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் மறுமை நாளில் (விசாரணைக்காக மக்களில்) முன்னோர் பின்னோர் அனைவரையும் ஒன்றுதிரட்டும்போது, (உலகில்) மோசடி செய்த ஒவ்வொருவனுக்கும் (அவன் செய்த மோசடிக்கு அடையாளமாகக்) கொடி ஒன்று ஏற்றப்படும். பிறகு "இது இன்ன மனிதருடைய மகன் இன்ன மனிதரின் மோசடி(யைக் குறிக்கும் கொடி)'' என்று கூறப்படும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலிலி)முஸ்லிம் 3572
உலகில் மனிதர்களை ஏமாற்றி மோசடி செய்தவருக்கு அவர் செய்த மோசடியை உணர்த்தும் விதமாக ஒரு கொடி நட்டப்படும் என்று இந்த செய்தியில் கூறப்படுகின்றது. இத்தகைய அவமானத்துடன் தான் மோசடியளன் இறைவனை சந்திப்பான்.
இன்றைய உலகில் மோசடித்தனத்திற்கும் மோசடியாளர்களுக்கும் துளியும் பஞ்சமில்லை எனலாம். எங்கும் மோசடி,எதிலும் மோசடி என நம்பிக்கை மோசடி அனைத்து காரியத்திலும் தலைவிரித்தாடுகின்றது.
கொடுக்கல் வாங்கலை எடுத்துக் கொண்டால் 50 காசு மதிப்புள்ள காய்கறி பொருளிலிருந்து 5 லட்சம் பெறுமானமுள்ள நிலம் வரைக்கும் அனைத்திலும் மோசடியாளர்கள் தங்கள் கைவரிசையை காட்டுகின்றார்கள். இத்தகைய மோசடிக்காரர்களில் இஸ்லாமியர்களும் அடங்கும்.
முக்காலத்தில் இஸ்லாமிய வியாபாரிகள் கடைபிடித்த நேர்மைநியாயம் இவற்றை கண்டு பலரும் தங்களை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்கள் என்பது வரலாறு. இஸ்லாம் தான் இவர்களை நேர்மையோடு வார்த்தெடுத்தது என்பது அவர்களின் எண்ணம். சரியே.
தற்போது மோசடித்தனத்தை இஸ்லாமிய வியாபாரிகளிடமிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற சூழல் நிலவியிருப்பது வேதனை. இஸ்லாமியன் என்றால் நேர்மையை எதிர்பார்க்கலாம் என்ற மக்களின் எதிர்பார்ப்பை சுக்குநூறாக உடைத்தெறிந்துள்ளனர் இந்த இஸ்லாமிய (?) மோசடி வியாபாரிகள். மாற்றுமதத்தவர்களின் நல்லெண்ணத்தையும் இவர்கள் கேள்விக்குறியாக்கி விட்டனர்.
கொடுக்கல் வாங்கலின்றி அன்றாட நடைமுறைகளிலும் ( பண விவகாரம்சொத்துப் பங்கீடு ) மோசடித்தனம் செய்பவர்கள் உண்டு. மோசடியில் ஈடுபடுபவர்கள் மறுமையில் மக்கள் அறியும் வகையில் இறைவன் முன்னிலையில் கேவலப்படுவதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
மனைவியிடத்தில் நீதமற்றவனின் நிலை
யாருக்கு இரண்டு மனைவிகள் இருந்து அவ்விருவரில் ஒருத்தியை விட மற்றொருத்தியிடம் (நீதமின்றி) சாய்ந்து விட்டானோ மறுமை நாளில் இரு தோள்புஜங்களில் ஒரு புறம் சாய்ந்தவனாக வருவான் என நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் அபூஹரைரா (ரலி),நஸாயி 3881
இஸ்லாம் நான்கு மனைவியர் வரை திருமணம் செய்து கொள்வதை அனுமதித்தாலும் அதற்காக இஸ்லாம் சில நிபந்தனைகளை விதிக்கின்றது.
அனைத்து மனைவியரிடத்திலும் நீதமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே அது.
ஒருவர் இரண்டு மனைவியரை வைத்திருந்தால் இரண்டு மனைவிகளிடத்திலும் சமமாகநீதமாக நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் பணிக்கின்றது. ஒரு மனைவிக்கு ஏதேனும் பொருளை வாங்கி கொடுத்தால் அதே போன்று மற்ற மனைவிக்கும் வாங்கி கொடுக்க வேண்டும். இவ்வாறு இல்லறம்செலவினம்சமூகத்தில் மனைவி என்ற அந்தஸ்து போன்ற காரியங்களில் நீதமாக நடந்து கொள்ள வேண்டும். ஒருத்திக்கு அது இதுவென பலதையும் வாங்கி கொடுத்து அன்பை பொழிவதுஇன்னொருத்திக்கு சமூகத்தில் மனைவி என்ற அந்தஸ்தை கொடுப்பதற்கே தயங்குவது போன்றது நீதமற்றதாகும்.
            அவ்வாறு இரண்டு மனைவியர்களுக்கிடையில் நீதம் தவறினால் அவர் மறுமையில் ஒரு புறம் சாய்ந்தவராக இறைவனை சந்திப்பார் என்று மேற்கண்ட செய்தி தெரிவிக்கின்றது.
            ஒருத்தியை திருமணம் செய்து அவளுடன் வாழ்க்கை நடத்துவதை பெரும் சுமையாக கருதுவதினால் இன்னொன்றை பற்றி இஸ்லாமியர்கள் பலரும் சிந்திப்பதில்லை. எனினும் இரண்டு மனைவியரை ஒருவர் பெற்றிருந்தால் இருவரிடத்திலும் நேர்மை தவறாது நீதமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்க.
தீன்குல பெண்மனி

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை