தர்ஹா வழிபாடு அது வழிகேடு

தர்ஹா வழிபாடு அது வழிகேடு

இஸ்லாத்தின் அடிப்படை
'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை' என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இஸ்லாத்தின் கொள்கை இது தான் என்பதை முஸ்லிமல்லாதவர்களும் கூட அறிந்து வைத்துள்ளனர்.
ஆனாலும் தமிழகத்தில் வாழும் கனிசமான முஸ்லிம்கள் இக்கொள்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களாக உள்ளனர்.
'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை' என்பதில் இரண்டு செய்திகள் அடங்கியுள்ளன.

1. அல்லாஹ்வை வணங்க வேண்டும்.

2. அல்லாஹ்வைத் தவிர எவரையும் வணங்கக் கூடாது.

இதில் முதலாவது செய்தியை ஓரளவு ஏற்று நடக்கும் முஸ்லிம்கள் இரண்டாவது செய்தியை அறியாதவர்களாகவுள்ளனர். இதன் காரணமாகத் தான் ஒரு பக்கம் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டு இன்னொரு பக்கம் இறந்தவர்களையும், அவர்களை அடக்கம் செய்துள்ள சமாதிகளையும், மகான்கள் என்று உலா வரும் போலிகளையும் வணங்கி வருகின்றனர்.
இவ்விரண்டு செய்திகளில் இரண்டாவது தான் முக்கியமானதாகும். இதைச் சொல்வதற்காகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டனர்.
அல்லாஹ்வை வணங்குங்கள் என்று சொல்லித் தருவதற்காகவோ, அல்லாஹ்வின் பண்புகளைச் சொல்லிக் கொடுப்பதற்காகவோ மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்படவில்லை. ஏனெனில் அம்மக்கள் அல்லாஹ்வை நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள். அல்லாஹ்வை வணங்குவதிலும் அவர்களுக்கு ஆட்சேபனை ஏதும் இருந்ததில்லை.
அல்லாஹ்வைத் தவிர எவரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் அவர்களால் எதிர்க்கப்பட்டது.
முன்னைய காலத்தில் வாழ்ந்து மரணித்த நல்லாடியார்களின் கப்ருகளின் மீது ஓரு வழிபாட்டுத்தலத்தை எழுப்பி அதில் மக்கள் தங்களது தேவைகளை கேட்டல், அவர்களுக்காக அறுத்துப்பலியிடல் போன்ற செயல்களை செய்து வருகின்ரனர். இது இஸ்லாத்தின் அடிப்படையோடு பலமாக மோதுகின்ற ஒரு மாபாதகச்செயலாக கருதப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் "ஷிர்க எனும் நிரந்தர நரகத்தில் கொண்டு போய்ச்சேர்த்து விடும்" கொடிய இணைவைத்தலாகும். இதை அறியாத சில மக்கள் இதுதான் சரியானது என்றெண்ணி தமது வாழ்க்கையையே நாசம் செய்து கொண்டிருக்கின்றனர்.

ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுக்கும் உலகத்துக்கும் இடையிலான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிடுகிறது. இறந்த ஒரு மனிதனால் கேட்கவோ, பார்க்கவோ முடியாது!

குருடனும், பார்வையுள்ளவனும் இருள்களும், ஒளியும் நிழலும், வெப்பமும் சமமாகாது. உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச்செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச்செய்பவராக இல்லை. (திருக்குர் ஆன் 35:19-22)

மரணித்தவர்கள் கேட்க மாட்டார்கள் என்று அல்லாஹ் தெளிவாகவே சொல்லிவிட்டான். ஆனால் இன்று மக்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கின்றனர்? அவ்லியாக்கள் இறந்துவிட்டால் அவர்கள் செவியேற்பார்கள். எமது கோரிக்கையை நிவர்த்தி செய்வார்கள் என்று குருட்டுத்தனமாக நம்பி நரகத்தின் கொள்ளிக்கட்டையாகிக்கொண்டிருக்கின்ரனர். இதை விட்டும் அல்லாஹ் நம்மை காப்பாற்ற வேண்டும்

Comments

Popular posts from this blog

பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை

இந்து மதமும் பெண்களும்

குற்றங்களுக்குத் தீர்வு குர்ஆனிய சட்டமே!