மன்னிப்புக் கேட்போம் மழை பெறுவோம்


மன்னிப்புக் கேட்போம் மழை பெறுவோம்

என்ன தான் மனிதன் ஆகாயத்தை முட்டுகின்ற அறிவியல் வளர்ச்சி கண்டிருந்தாலும்விண்ணைத்தொடுகின்ற வியக்கத்தக்க விஞ்ஞானப் புரட்சி படைத்தாலும் வானிலிருந்து ஒரு சொட்டு மழையைஅவனால் இறக்க முடியாதுஇதோ அல்லாஹ் தனது திருமறையில் கேட்கிறான்.
நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களாமேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா?அல்லது நாம் இறக்கினோமா?
அல்குர்ஆன் 56:68, 69
இது எக்காலத்துக்கும் பொருந்துகின்ற இறை சவாலாகும்.
மழை என்பது வல்லமை மிகு அல்லாஹ்வின் கையில் இருக்கும் தனி அதிகாரமும் ஆற்றலும் ஆகும்.வானிலிருந்து மழை பெய்யவில்லை எனில் மண்ணில் உயிர் வாழ்க்கை இல்லைஇதையேதிருக்குர்ஆன் கூறுகின்றது.
வானத்தில் உங்கள் உணவும்நீங்கள் வாக்களிக்கப்பட்டதும் உள்ளன.
அல்குர்ஆன் 51:22

ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு பொழியவில்லை.தென்மேற்குப் பருவமழை தான் கர்நாடகாவுக்கு நீர்வளத்தைத் தருகின்றதுஅங்கிருந்து காவிரிக்குநீர்வரத்து கிடைக்கின்றது.
இதுபோல் கேரளாவில் பொழிகின்ற தென்மேற்குப் பருவமழையினால் குமரிநெல்லைதூத்துக்குடி,மதுரை போன்ற மாவட்டங்களுக்கு நீர் ஆதாரம் கிடைக்கின்றது.
இப்போது தென்மேற்குப் பருவமழை பொய்த்து விட்டதால் இந்த மாவட்டங்களுக்குத் தண்ணீர்கிடைக்காமல் குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுதமிழக மக்களின் முதன்மை உணவான அரிசிவிளைச்சல் இல்லைகுறுவை பயிரிட முடியாத அளவுக்கு விவசாயிகள் பாதிப்புக்குள்ளாயினர்.அரிசியைப் போன்றே இதர தானியங்களும் விளைச்சல் இல்லை.
அரிசி விலை இப்போதே வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதுகாய்கறிகளின் விலையும்ஏறியிருக்கின்றதுவறட்சியின் இந்தக் கோரப்பிடி தொடருமானால் ஒட்டுமொத்த இந்தியாவும்கடுமையான பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்படும்.
ஏற்கனவே கோடை வெயிலிலும் மின்வெட்டிலும் தவிக்கின்றதகிக்கின்றதமிழக மக்கள் நீரினால்கிடைக்கும் மின்சாரத்தை இழந்து தற்போது தமிழகம் இருள்மயமாகக் கிடக்கின்றது.
இப்படிப்பட்ட கால கட்டத்தில் மழை ஒன்று தான் மக்களுக்குத் தீர்வுஇது எல்லாம் வல்லஅல்லாஹ்வின் கைவசம் உள்ள ஆற்றலாகும்.
இன்று இந்த நாட்டில் உள்ள மக்கள் தங்கள் போலி தெய்வங்களிடம் மழை கேட்டுப்பிரார்த்திக்கின்றனர்முஸ்லிம்கள் உண்மையானஏகனானதனித்தவனானஒரே ஒருவனானஅல்லாஹ்விடம் மழை வேண்டிப் பிரார்த்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
நபி (ஸல்அவர்கள் மழை தேடுவதற்காக, "ஸலாத் அல்இஸ்திஸ்காஎன்ற மழைத் தொழுகையைநமக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்கள்இதன்படி நமது ஜமாஅத்தினர் மழைத் தொழுகைதொழுவோமாகமழை வேண்டுவதற்காக நபி (ஸல்அவர்கள் சில சிறப்பு துஆக்களையும் நமக்குக்கற்றுத் தந்திருக்கின்றார்கள்அந்தத் தொழுகை மற்றும் துஆக்கள் மூலம் அல்லாஹ்விடம் மழைவேண்டிப் பெறுவோமாக!
அத்துடன் அல்லாஹ்விடம் அதிகமதிகம் பாவ மன்னிப்புத் தேடிக் கொள்வோமாகஏனெனில் நபி நூஹ்(அலைஅவர்கள் மக்களிடம் பிரச்சாரம் செய்கின்ற போதுமழை வேண்டுமானால் பாவ மன்னிப்புத்தேட வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்கள்.
"உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்அவன் மன்னிப்பவனாக இருக்கிறான்உங்களுக்குஅவன் தொடர்ந்து மழையை அனுப்புவான்''
அல்குர்ஆன் 71:10,11
நூஹ் நபியின் இந்த அறிவுரைப்படி அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடிபருவ மழையைப்பெறுவோமாக!
தற்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பல்வேறு கிளைகள் மழைத் தொழுகையை அறிவித்துநிறைவேற்றி வருகின்றனஇதன் எதிரொலியாகத் தமிழகத்தில் மழைக்கான அறிகுறிகள் தென்படத்துவங்கியுள்ளனஇந்நிலை நீடித்துபருவமழை பொய்க்காமல் பொழிவதற்கு வல்ல ரஹ்மானிடம்தொடர்ந்து பாவமன்னிப்புத் தேடுவோம்.
மலை இல்லாமல் மழை இல்லை
காற்று இல்லாமல் மழை இல்லை என்று அடித்துச் சொல்லலாம்காரணம்பஞ்சு மிட்டாய்களைப்போன்று பிய்ந்துபிய்ந்து கிடக்கும் குட்டி மேகங்களை ஒன்று திரட்டுவதற்கும் சில்லறைசில்லறையாகச் சிதறிக் கிடக்கும் மேகத் துண்டுகளை ஒன்று சேர்ப்பதற்கும் உரிய வேலையைக் காற்றுதான் செய்கின்றது.
ஈரத் துளிகளை மேக மூட்டமாய்மேகக் கூட்டமாய் ஒன்று திரட்டி சூல் கொண்ட காற்று இமய மலைஅளவிலான ஒரு கர்ப்பிணிப் பெண்ணாகசெங்குத்தாக வானை நோக்கி எழுகின்றதுஅந்தரத்தில்,ஆகாயத்தை நோக்கி அங்கே இவ்வளவு கனமான உருவத்தில் செல்வது யார்என்று அதைப் புவிஈர்ப்பு விசை சுண்டி இழுக்கின்றதுஅதன் வெளிப்பாடு தான் கொட்டோ கொட்டென்று கொட்டுகின்றமழையின் புறப்பாடுஇதை அல்லாஹ் தனது திருமறையில் அழகாகச் சொல்லிக் காட்டுகின்றான்.
சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம்அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்குஅதைப் புகட்டுகிறோம்அதை (வானில்நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.
அல்குர்ஆன் 15:22
இதன் அடிப்படையில் கருக் கொள்கின்ற காற்றில்லாமல் உருக் கொள்ளும் மழை இல்லை என்றுஅடித்துச் சொல்லலாம்ஆனால் மலை இன்றி மழை இல்லை என்று சொல்ல முடியுமாஆம் என்றுதான் சொல்ல வேண்டும்அது எப்படி?
அல்லாஹ்வின் அற்புதத்தை அறிந்து கொள்ளஅவனது படைப்பின் நுணுக்கத்தைத் தெரிந்து கொள்ளமழையின் உருவாக்கத்தைப் பற்றியும்அதற்கு மலையின் உதவியைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்வது அவசியம்.
இந்தியாவைப் பொறுத்தவரை மலை இன்றி மழை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.இந்தியாவில் இரண்டு பருவ மழைகள் பொழிகின்றனஒன்று தென்மேற்குப் பருவமழைமற்றொன்றுவடகிழக்குப் பருவமழைஇவ்விரண்டும் முறையே தென்மேற்குவடகிழக்குப் பருவக் காற்றுகளால்ஏற்படுகின்றன.
தனது அருளுக்கு முன்னால் நற்செய்தியாக அவனே காற்றை அனுப்புகிறான்அது கனமானமேகத்தைச் சுமக்கும் போது இறந்து போன ஊருக்கு அதை ஓட்டிச் செல்கிறோம்அதிலிருந்துதண்ணீரை இறக்கிஅதன் மூலம் எல்லாப் பலன்களையும் வெளிப்படுத்துகிறோம்இவ்வாறேஇறந்தவர்களையும் வெளிப்படுத்துவோம். (இதன் மூலம்நீங்கள் படிப்பினை பெறக் கூடும்.
அல்குர்ஆன் 7:57
இந்த வசனத்தில் அல்லாஹ் சொல்வது போன்று பருவக் காற்றுகள் மழைக்குக் காரணமாகஅமைகின்றன.
இவ்விரு பருவக் காற்றுகளும் எப்படி உருவாகின்றன?
தென்மேற்குப் பருவக்காற்று
தென்மேற்குப் பருவக் காற்று உருவாக்கத்தைப் பார்ப்பதற்கு முன்னால்கடலிலிருந்துநிலத்திற்குப்பெயர்ச்சியாகும் காற்று பற்றியும் அதற்கான காரணத்தையும் பார்ப்போம்.
கோடை காலத்தில் நிலம் அதிகமாகச் சூடாகிவெப்ப அளவு 45 டிகிரி சென்டிகிரேட் அளவை விடத்தாண்டி விடும்பூமி உள்வாங்கிய இந்த வெப்பம் காற்றையும் சூடுபடுத்துகின்றதுவெப்பமடைந்தகாற்று மேல் நோக்கி உயர்கின்றதுஇதனால் அங்கு குறைந்த அழுத்தம் ஏற்படுகின்றதுஇந்தக் காலகட்டத்தில் கடலின் வெப்பம் 20 டிகிரி என்ற அளவில் இருக்கும்கடலில் உள்ள இந்தக் குளிர் காற்று,குறைந்த அழுத்தத்தை ஈடு செய்வதற்காக நிலத்தை நோக்கிப் பெயர்ச்சி ஆகின்றதுஇந்தவிளக்கத்தைப் பின்னணியாகக் கொண்டு இப்போது பருவக்காற்றுகளைப் பார்ப்போம்.
பூமத்திய ரேகை அல்லது புவி இடைக்கோட்டிற்கு வடக்கே இந்தியா அமைந்திருப்பதை நாம்அறிவோம்மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை சூரியன் வட அரைக் கோளத்தில்பிரகாசிப்பதால் இந்தியாவில் கோடை காலம்இதனால் இம்மாதங்களில் வடமேற்கு இந்தியா மிக மிகஅதிகமாக வெப்பமடைகின்றதுஇவ்வாறு அதிக வெப்பமாகும் போது இங்குள்ள காற்றுவெப்பமடைந்துவிரிவடைந்து உயரே செல்கின்றதுஎனவே இங்கே குறைந்த அழுத்த மையம்உருவாகின்றது.
இதே காலத்தில் தென் அரைக்கோளத்தில் குளிர்காலம் நிலவுகின்றதுஎனவே தென் அரைக்கோளத்தில் உயர் அழுத்த மையம் ஏற்படுகின்றதுவடமேற்கு இந்தியாவில் ஏற்பட்ட குறைந்தஅழுத்தத்தை ஈடுசெய்ய தென் அரைக்கோளத்தில் உள்ள அதிக அழுத்த மையத்திலிருந்து காற்றுவடக்கு நோக்கி வீசுகின்றது.
இதற்கு எடுத்துக்காட்டாகதார் பாலைவனம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இந்தியாவின் வட மற்றும்நடுப்பகுதிகள் சூடாவதால் அங்கு குறைந்த அழுத்த மையம் ஏற்படுகின்றதுஅதாவது காற்று சூடாகி,விரிந்து மேல்நோக்கி எழுகின்றதுஇதனால் ஒரு வெற்றிடம் ஏற்படுகின்றதுஇந்த வெற்றிடத்தைநிரப்பவும் ஈடுகட்டவும் இந்தியப் பெருங்கடலிலிருந்து ஈரப்பதமிக்கமழை நீரைக் கருக் கொண்டகாற்றுக்கள் பெயர்ச்சி செய்து புறப்படுகின்றன.
திசை மாறும் காற்றுக்கள்
வட அரைக்கோளத்தை (அதாவது தார் பாலைவனத்தைநோக்கித் தான் இந்தக் காற்றுக்கள் புறப்பட்டுவருகின்றனஆனால் புவியின் சுழற்சி காரணமாக தென்மேற்காக திசை திருப்பப்படுகின்றன.
இவ்வாறு திசை மாறும் தென்மேற்குப் பருவக்காற்றுக்கள் என்ன செய்கின்றனஇங்கு தான்அல்லாஹ்வின் அழகிய படைப்பின் அதி அற்புத ரகசியமும் ரசனையும் பளிச்சிடுகின்றதுஅவனைநம்புகின்ற அடியார்களைப் பரவசத்திற்கும் பக்தி வசத்திற்கும் ஆட்படுத்துகின்றது.
நாமே நிர்ணயித்தோம்நிர்ணயம் செய்வோரில் நாமே சிறந்தவர்கள்.
அல்குர்ஆன் 77:23
அல்லாஹ் சொல்வது போன்று அவனது சிறப்புமிகு படைப்புத் தன்மை இங்கு புலனாகின்றது.
அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம்இனிமையான நீரையும் உங்களுக்குப் புகட்டினோம்.
அல்குர்ஆன் 77:27
மலைகளைமதுரமான மழை நீருடன் தொடர்புபடுத்திப் பேசுகின்ற அவனது தொழில் நுட்பமும்துலங்குகின்றது.
மேற்குத் தொடர்ச்சி மலையும் மழையும்
மேற்குத் தொடர்ச்சி மலை என்பது அல்லாஹ்வின் அற்புதத்தையும் ஆற்றலையும் பறை சாற்றுகின்றமாபெரும் படைப்பு என்றே கூற வேண்டும்.
இந்த மலைத் தொடர் மராட்டியம்குஜராத் மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்குத்தெற்கே துவங்கிமராட்டியம்கோவாகர்நாடகம்தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள்வழியாகச் சென்று தமிழகத்தின் கன்னியாகுமரியில் முடிவடைகின்றதுஇதன் நீளம் சுமார் 1600 கிலோமீட்டர்கள்இதன் சராசரி உயரம் 900 மீட்டர்கள்இம்மலையின் பரப்பளவு 60,000 சதுர கிலோமீட்டர்கள்.
தமிழகத்தில் இம்மலைத் தொடர் ஆனைமலைநீலகிரி மலைத் தொடர் எனவும்கேரளாவில் மலபார்பகுதிஅகத்திய மலைத்தொடர் எனவும் அழைக்கப்படுகின்றதுஇம்மலைத் தொடரின் உயரமானசிகரம் கேரளாவில் உள்ள ஆனைமுடியாகும்இதன் உயரம் 2695 மீட்டர் ஆகும்.
இதேபோன்று வட இந்தியாவில் அமைந்திருக்கும் ஹிமாலயா மலைத் தொடரும் அல்லாஹ்வின்அளப்பெரும் அரிய ஏற்பாடாகவும்ஆற்றல்மிகு தொழில்நுட்பமாகவும் அமைந்துள்ளது.
பூமி சுழற்சி காரணமாக தென்மேற்காகத் திருப்பப்பட்ட காற்று தென் முனையைத் தொடுகின்ற போதுஇந்தியாவின் தீபகற்ப அமைப்பின் காரணமாக இரண்டு கிளைகளாகப் பிரிந்து செல்கின்றதுஒன்றுஅரபிக் கடல் கிளையாகவும் மற்றொன்று வங்கக் கடல் கிளையாகவும் பிரிந்து செல்கின்றது.
இங்கு தான் மேற்குத் தொடர்ச்சி மலையின் வேலையையும்இமய மலையின் வேலையையும் உணரமுடியும்இவ்விரு மலைகளும் மிகப் பெரிய தடுப்புச் சுவரைப் போன்று செயல்படுகின்றனஇந்த இருமலைகள் மீது பருவக்காற்றுகள் மோதி மேலெழுகின்றதுவேறு வழியில்லாமல் மழையாகப்பொழிகின்றது.
முதன்முதலில் தென்மேற்குப் பருவக்காற்று முட்டுவதும் மோதுவதும் மேற்குத் தொடர்ச்சி மலையில்தான்இந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் பயனாக கேரளாகர்நாடகாமும்பைகுஜராத்கொங்கன்,கோவாடெல்லி போன்ற இடங்கள் அதிகப்பட்சமான மழையைப் பெறுகின்றன.
இவ்வாறு மழையைப் பொழிவித்த காற்று வறண்ட காற்றாக மாறுகின்றதுஇந்த வறண்ட காற்றுமேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியைக் கடந்து அதன் மறு சரிவான கிழக்குப் பகுதியின் வழியே,அதாவது தக்காண பீடபூமியில் இறங்குகின்றதுவறண்ட காற்று மழையைத் தராதுஎனவே இந்தப்பகுதி மட்டும் மழை பெறாதமழை மறைவுப் பகுதியாகும்இதைத் தவிரவுள்ள மற்ற பகுதிகள்அதிகமான மழை பெறும் பகுதிகளாகும்.
வங்கக் கடல் கிளைக் காற்று
இந்த வங்கக்கடல் கிளைக் காற்றுவங்கக் கடலில் உள்ள ஈரப்பதத்தையும் மேலதிகமாக எடுத்துக்கொண்டு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மழை பொழிவிக்கின்றதுமேகலாயாவின்சிரபுஞ்சி எனுமிடத்திலிருந்து 16 கி.மீமேற்கிலுள்ள மாசின்ரம் என்னுமிடம் தான் உலகிலேயேஅதிகமான மழை பெறும் இடமாகும்.
ஏற்கனவே இந்தக் காற்றுதார் பாலைவனத்தில் உள்ள வெப்பத்தை ஈடுகட்ட வந்த காற்று என்பதைநாம் அறிந்தோம்இதுதான் இமயமலை என்ற மாபெரும் இயற்கை மதில் சுவரால் தடுக்கப்பட்டுஇந்தக் காற்று மேற்கு நோக்கித் திருப்பப்பட்டுகங்கைச் சமவெளி முழுவதிலும் மழைபொழிவிக்கின்றது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதிகள் மழை மறைவுப் பகுதிகள் என்பதை அறிந்தோம்.அங்கு மழை இல்லாததால் நீர்வளம் ஏதுமில்லை என்று எண்ண வேண்டியதில்லைமழை பெய்தபகுதிகளிலிருந்து மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடும் ஆறுகள் இந்தப் பகுதிக்குச் சென்றடைந்துஅந்தப் பகுதிகளை வளமாகவும் செழிப்பாகவும் ஆக்குகின்றனஇதுவும் எல்லாம் வல்லஅல்லாஹ்வின் அழகிய அருமையான ஏற்பாடாகும்.
வடகிழக்குப் பருவக்காற்று
இந்தியப் பெருங்கடலிலிருந்து புறப்பட்டுபூமியின் சுழற்சியில் திசை திருப்பப்பட்ட காற்று தான்,அதாவது நீரிலிருந்து நிலத்திற்குப் பெயர்ச்சியாகும் காற்று தான் தென்மேற்குப் பருவக்காற்று என்றால்,வடகிழக்குப் பருவக்காற்றானது நிலத்திலிருந்து நீரை நோக்கி வரும் காற்றாகும்.
அக்டோபர் முதல் மார்ச் வரை சூரியன் தென் அரைக்கோளத்தில் பிரகாசிக்கின்றதுஇதனால் அங்குகோடை காலம் நிலவுகின்றதுஇப்போது தென் அரைக்கோளத்தில் குறைந்த காற்று அழுத்த மையம்உருவாகின்றதுதென் அரைக்கோளத்தில் கோடை காலம் என்றால் வட அரைக்கோளத்தில்குளிர்காலம்இங்குள்ள குளிர் காற்று அதைச் சரிகட்டப் புறப்பட்டுச் செல்லும் போது புவி சுழற்சிகாரணமாக வடகிழக்காகத் திசை திருப்பப்படுகின்றது.
அவ்வாறு திசை திருப்பப்பட்ட இந்தக் காற்று வங்கக் கடல் வழியாக பயணிக்கின்றதுஅப்போதுகிழக்குத் தொடர்ச்சி மலை ஒரு தடுப்புச் சுவர் போல் செயல்படுகின்றதுகிழக்குத் தொடர்ச்சி மலை,மேற்குத் தொடர்ச்சி மலையைப் போன்றது கிடையாதுஇதில் அதிகமான இடைவெளிகள் உள்ளன.இருந்தாலும் அது ஒரு தடுப்புச் சுவராகத் திகழ்கின்றதுஇதுவும் அல்லாஹ்வின் மகத்தானமாபெரும்ஏற்பாடாகும்இதன் விளைவாக இந்தக் காற்றுகள் மூலம் தமிழகம்ஆந்திரம்ராயல்சீமா,பாண்டிச்சேரிஇலங்கையின் கிழக்குப் பகுதிகள் போன்றவை மழையைப் பெறுகின்றன.
தென்மேற்குப் பருவக்காற்று மூலம் மிகக் குறைந்த அளவு மழையைப் பெறும் தமிழகக் கடலோரப்பகுதிகள்வடகிழக்குப் பருவக்காற்றினால் 60% மழையைப் பெறுகின்றனதமிழகத்தின் உட்பகுதிகள்40 முதல் 60% வரை மழையைப் பெறுகின்றன.
தென்மேற்குப் பருவக்காற்றினால் பயனடைந்த கர்நாடகம்கேரளம்லட்சத்தீவுகள் போன்றவைவடகிழக்குப் பருவக்காற்றின் மூலம் 20% மழையைப் பெறுகின்றனதென்மேற்குப் பருவ மழையில்மழை மறைவுப் பகுதியாக இருந்த தக்காண பீடபூமி கூட வடகிழக்குப் பருவமழையைப் பெற்றுவிடுகின்றது.
தமிழகத்தின் தலைவிதியையும் தானிய விதியையும் நிர்ணயிப்பதே வடகிழக்குப் பருவமழை தான்.தமிழகத்திற்கு உணவைத் தரும் உயிர்நாடியாக வடகிழக்குப் பருவமழை அமைந்திருக்கின்றது.
ஆக மொத்தத்தில் தென்மேற்குப் பருவமழைக்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளும்வடகிழக்குப்பருவமழைக்குக் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் காரணிகளாக அமைந்திருக்கின்றன.
மலைத் தடுப்புகளுக்கு ஆங்கிலத்தில் தர்ஞ்ழ்ஹல்ட்ண்ஸ்ரீ இஹழ்ழ்ண்ங்ழ் என்று சொல்லப்படும்.இமயம் போன்ற மலையெனும் இயற்கைத் தடுப்புகள்பாதுகாப்பு மதில் சுவர்கள் இல்லையென்றால்இந்தக் காற்றுக்கள் சீனாவுக்கும்ஆப்கானுக்கும் ரஷ்யாவுக்கும் பறந்து போய்விடும்இந்தியாமழையை மறந்து போய்விட வேண்டும்.
மலைகள் நதிகளின் பிறப்பிடம்
இதுவரை பார்த்த விளக்கங்களிலிருந்து மலையின்றி மழையில்லை என்பது உறுதியாகின்றது.அப்படித் தான் அல்லாஹ் மலைகளை அமைத்திருக்கின்றான்.
அத்துடன் மேற்குத் தொடர்ச்சி மலையானாலும்இமயமலைத் தொடரானாலும் அவை ஆறுகளில்பிறப்பிடமாக அமைந்துள்ளன.
கோதாவரிகிருஷ்ணாகாவிரிதாமிரபரணி எல்லாமே மேற்குத் தொடர்ச்சி மலையின் பிள்ளைகள்தான்இந்த வகையில் மலைகள் அல்லாஹ்வின் அரும்பெரும் அருட்கொடைகள் என்றே கூறவேண்டும்எல்லாவற்றுக்கும் மூல முதற்காரணமாக காற்று அமைந்திருக்கின்றது.
மரம் ஓர் அருட்கொடை
மழை பெறுவதற்கு ஏதுவாக மலைகளை அருட்கொடையாக அல்லாஹ் ஆக்கியிருப்பது போன்றுமரங்களை மற்றொரு காரணியாக ஆக்கியிருக்கின்றான்மரங்கள் தாம் தம் இலைகள் மூலமாகநிலத்தடி நீரை சூரிய ஒளியின் மூலம் உறிஞ்ச வழிவகுக்கின்றன.
பருவக் காற்றைக் கொண்டு வருவதிலும் மரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றனமறு சுழற்சியில் மழைவருவதற்குத் துணை நிற்கின்றனமரங்களின் வேர்கள் மழை நீரைப் பிடித்து வைப்பதன் மூலம்நிலத்தடிக்குக் கீழே உள்ள நீர்ப்படுகைகள் நீரை மறுசேமிப்புசேகரிப்பு செய்வதற்கு உதவுகின்றன.
நன்கு அடர்த்தியான தேக்கு மரக் காடுஆயிரம் மழைத் துளிகள் அடங்கிய பரிமாணங்களைவழங்குகின்றதுவெப்ப மண்டலத்தில் கடல்கள் செயல்படுவதைப் போன்றுவளி மண்டலத்தில் நன்குஅடர்ந்து செறிந்த காடுகள் செயல்படுகின்றன.
அதாவது வளி மண்டலத்தில் நீராவியை வெளியிட்டுப் பின்னர் மழையினால் அதை நிரப்பிக்கொள்கின்றன.
அல்லாஹ் வழங்கிய அருட்கொடையான இந்த மரங்களைகாடுகளிலும் நகரங்களிலும் பெருமளவுஅழித்துமனிதன் தனக்குத் தானே கேடு விளைவித்துக் கொண்டிருக்கின்றான்.
நீர்வளம்
மழை பெறுவதற்கு மலைகளும் மரங்களும் காரணியாகத் திகழ்வது போன்று நீர்வளமும் முக்கியக்காரணியாக அமைந்துள்ளதுஅரபிக்கடல்இந்தியப் பெருங்கடல்வங்கக்கடல் ஆகிய மூன்றுபெருங்கடல்கள் இந்தியத் துணைக் கண்டத்தை வளையமிட்டிருப்பது இங்கு வாழும் மக்களுக்கு ஒருபாக்கியமாகும்.
மழை பொழிவிற்கு அடிப்படைக் காரணமான ஈரப்பதத்தைகாற்றுக்கள் தன்னகப்படுத்துவதற்குஇக்கடல்கள் அற்புத ஆதாரங்களாக அமைந்திருக்கின்றன.
புவியின் சுழற்சி
சுழலும் பூமியும் காற்றைத் திசை திருப்புவதற்கு ஒரு சூத்திரதாரியாகத் திகழ்கின்றதுஇதுதவிரஇந்தியத் துணைக்கண்டம் புவியியல் வரைபடத்தில் வட அரைக்கோளத்தில் அமைந்திருப்பதுஇவைஅத்துணை காரணிகளும் இணைந்து தான் இந்தியத் துணைக்கண்டத்தில் மழையைப்பொழிவிக்கின்றன.
மவ்சிம் - மான்சூன்
இந்தப் பருவக்காற்றுக்களுக்கு அரபியர்கள் மவ்சிம் என்று பெயர் வைத்தனர்மவ்சிம் என்றால் பருவக்காலம் என்று பெயர்.
இந்த மவ்ஸிம் என்ற வார்த்தையிலிருந்து பிறந்தது தான் மான்சூன் - ஙர்ய்ள்ர்ர்ய் என்று அனைவரும்ஒருமித்துக் கூறுகின்றனர்.
அரபியர்கள் முற்காலத்தில் பாய்மரக் கப்பல்கள் மூலம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டனர்.பிறகு வடகிழக்குப் பருவக்காற்றின் போது தங்கள் தாயகம் திரும்புவார்கள்அதனால் இதற்குபழ்ஹக்ங் ரண்ய்க்ள் - வணிகக் காற்றுக்கள் என்று பெயர் வழங்கப்பட்டது.
கப்பல்கள் கடல்களில் நகர்வது அல்லாஹ்வின் மாபெரும் அற்புதமாகும்.
மலைகளைப் போன்று கடலில் செல்லும் கப்பல்களும் அவனது சான்றுகளில் உள்ளவை.
அல்குர்ஆன் 42:32
இந்த அடிப்படையில் இந்தக் காற்றுக்கள் மக்களின் பொருளாதாரத்திற்கு உதவி செய்வதைப்பார்க்கிறோம்இன்றைய கால கட்டத்தில் காற்றுமின் உற்பத்திக்கு ஆதாரமாகத் திகழ்கின்றது.
மழை பொழிவதற்கு அல்லாஹ்வின் பல்வேறு அருட்கொடைகளைப் பார்த்தோம்இந்தஅருட்கொடைகள் அனைத்திற்காகவும் அல்லாஹ்வுக்கு நாம் நன்றிக்கடன் செலுத்தக்கடமைப்பட்டிருக்கின்றோம்.
அதில் குறிப்பாககாற்று ஸ்தம்பித்து விட்டால் கடலில் மட்டுமல்லமண்ணிலும் மனித வாழ்வேஸ்தம்பித்து விடும்.
அவன் நினைத்தால் காற்றை நிறுத்தி விடுகிறான்உடனே அது அதன் (கடலின்மேற்பரப்பில் நின்றுவிடுகின்றதுசகிப்புத் தன்மையும்நன்றியுணர்வும் உள்ள ஒவ்வொருவருக்கும் இதில் பல சான்றுகள்உள்ளன.
அல்குர்ஆன் 42:33
அறிவியல் பேருண்மைகள் மூலம் வெளிச்சத்திற்கு வரும் இந்த அருட்கொடைகளுக்கு என்றென்றும்நன்றி செலுத்துகின்ற நல்லடியார்களாக வாழ்வோமாக!
ஏகத்துவம் 

Comments

Popular posts from this blog

பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை

இந்து மதமும் பெண்களும்

குற்றங்களுக்குத் தீர்வு குர்ஆனிய சட்டமே!