அதிசயப் பிராணி


அதிசயப் பிராணி
எதைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்எதில் அவர்கள் முரண்பட்டிருக்கிறார்களோ அந்தமகத்தான செய்தியைப் பற்றிஅவ்வாறில்லைஅறிந்து கொள்வார்கள்பின்னரும் அவ்வாறில்லை!அறிந்து கொள்வார்கள்
அல்குர்ஆன் 78:1-5
உலக முடிவு நாள் மிகவும் நெருக்கத்தில் வரும் போது ஏற்படவுள்ள மிகப் பெரிய அடையாளங்கள்சிலவற்றை நபி (ஸல்அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்அவற்றில் புகை மூட்டம்,தஜ்ஜால்ஈஸா நபியின் வருகையஃஜூஜ் மஃஜூஜ் போன்றவற்றைப் பார்த்தோம்.
யுக முடிவு நாளின் நெருக்கத்தில் அதிசயப் பிராணி ஒன்றை இறைவன் படைத்து மக்களிடையே அதைநடமாட விடுவான்அந்தப் பிராணியின் வடிவம் பற்றி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் விபரம்காணப்படாவிட்டாலும் அத்தகைய பிராணி ஒன்று யுக முடிவு நாளின் நெருக்கத்தில் தோன்றும்என்பதற்குத் திருக்குர்ஆனிலும்ஹதீஸ்களிலும் ஆதாரங்கள் கிடைக்கின்றன.

அவர்களுக்கு எதிரான (நமதுகட்டளை நிகழும் போது பூமியிலிருந்து ஓர் உயிரினத்தைவெளிப்படுத்துவோம்நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றிஅவர்களிடம் அது பேசும்.
அல்குர்ஆன் 27:82
இறை வசனங்களை மக்கள் நம்பாத மோசமான காலகட்டத்தில் அந்தப் பிராணி தோன்றும் எனவும்,அது வானிலிருந்து இறக்கப்படாது எனவும்இந்தப் பூமியிலேயே தோன்றும் எனவும்தஜ்ஜால் போன்றுமுன்பே படைக்கப்பட்டு அந்தப் பிராணி மறைத்து வைக்கப்படவில்லைஇனி மேல் தான் அதுதோன்றவிருக்கிறது எனவும் இந்த வசனத்திலிருந்து அறியலாம்.
எத்தனையோ பிராணிகள் உலகில் உள்ளனஅவற்றிலிருந்து இந்தப் பிராணி வித்தியாசப்படுகின்றது.எந்தப் பிராணியும்மனிதர்களுடன் பேசுவதில்லைஇந்த அதிசயப் பிராணியோ மக்களிடம் பேசக்கூடியதாகப் படைக்கப்படும் என்பதையும் இந்த வசனத்திலிருந்து நாம் அறியமுடியும்.
பத்து அடையாளங்களில் ஒன்றாக இந்த அதிசயப்பிராணியும் உள்ளது என்ற ஹதீஸை முன்னரே நாம்குறிப்பிட்டுள்ளோம்.
சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதும்நண்பகல் நேரத்தில் அந்தப் பிராணி மக்களுக்குக் காட்சி தருவதும்ஆரம்ப அடையாளங்களாகும்இவ்விரண்டில் எது முதலில் தோன்றினாலும் அதைத் தொடர்ந்துஅடுத்ததும் தோன்றிவிடும் என்று நபி(ஸல்அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)
நூல்முஸ்லிம் 5234
இவற்றைத் தவிர அப்பிராணி பற்றி மேலதிகமாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் நாம் காணமுடியவில்லை.
மனிதர்களின் கற்பனைக்கு எட்டக் கூடிய வடிவில் முன்பே மனிதர்கள் அறிந்து வைத்திருக்கின்றஏதேனும் மிருகத்தின் வடிவில் அப்பிராணியின் வடிவம் அமைந்திருக்குமென்றால் அதைஅல்லாஹ்வோஅவனது தூதரோ நமக்குக் கூறியிருப்பார்கள்மனிதர்கள் இது வரை கண்டிராத ஒருவடிவில் அது அமைந்திருக்கக் கூடும் என்று நாம் ஊகிக்க முடியும்அதன் வடிவம் தான் நமக்குக்கூறப்படவில்லையே தவிர அது வந்துவிட்டால் சட்டென்று கண்டு கொள்ளக்கூடிய முக்கியமானதன்மையை அல்லாஹ் கூறிவிட்டான்.
"மனிதர்களுடன் பேசக் கூடியதாக அப்பிராணி அமைந்திருக்கும்'' என்பதை விட எந்த அடையாளமும்தேவையில்லைஅப்படி ஒரு பிராணி தோன்றவிருக்கிறது என்று நம்புவதே நமக்குப்போதுமானதாகும் என்பதாலேயே அது பற்றி அதிக விபரம் நமக்குக் கூறப்படவில்லை.
பிஜைனுல் ஆபிதீன்

Comments

Popular posts from this blog

பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை

இந்து மதமும் பெண்களும்

குற்றங்களுக்குத் தீர்வு குர்ஆனிய சட்டமே!