நடுநிலைவாதிகள் பற்றி



நடுநிலைவாதிகள் பற்றி

நாங்கள் எந்த இயக்கத்தையும் சாராதவர்கள் என்று சொல்லும் தவ்ஹீத்வாதிகள் TNTJ  வை மட்டும் மறைமுகமாகவோநேரடியாகவோ வெறுப்பதும்சாடுவதுமாக உள்ளனரே ஏன்இவர்கள் நம்மை தாவா செய்ய அல்லது நல்ல பணிகளுக்காக  அழைத்தால் நாம் என்ன செய்வது?
பதில்:
எந்த இயக்கத்தையும் சாராதவர்கள் என்பது ஒரு போர்வை தான். தவ்ஹீத் ஜமாஅத்தின் பக்கம் மக்கள் நம்பிக்கை வைத்து செல்வதைப் பிடிக்காத சிலர் அவதூறு பரப்பி மக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பார்கள். அதைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்வதால் உரிய முறையில் இதை நாம் எதிர்கொள்ள முடியும்.
தவ்ஹீத் ஜமாஅத் மீது அவதூறு பரப்பினாலும் அதன் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை என்பதைக் காணும் சிலர் தந்திரமான முறையில் மக்களை தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து அப்புறப்படுத்தும் வேலையைச் செய்வார்கள்.
நமக்கு யாரும் வேண்டாம்நாம் எதிலும் சேராமல் இருப்போம்’’ என்று கூறுவது தான் அந்தத் தந்திரம்.
இவர்கள் அவர்களைக் குறை சொல்கிறார்கள். அவர்கள் இவர்களைக் குறை சொல்கிறார்கள். நாம் இவர்களை விட நல்லவர்களாக எதிலும் சேராமல் இருப்போம்’’ எனக் கூறி நடிப்பார்கள்.
ஆனால் இவர்களுக்கும் தோல்வி தான் கிடைத்து வருகிறது. என்ன தான் மறைக்க முயன்றாலும் அவர்களின் கலரை வெளிப்படுத்தும் வகையில் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிரான இயக்கங்களின் நிகழ்ச்சிகளுக்கு ஆள் பிடிக்கும் போதும்அது போன்ற பிரசுரங்களை வெளியிடும் போதும் இவர்கள் முனாஃபிக்குகள் என்பது வெளிச்சமாகி விடுகிறது. மக்களும் இவர்களை அடையாளம் கண்டு கொள்கின்றனர்.
ஒருவன் மோசடி செய்கிறான். இவன் செய்வது மோசடி என்று இன்னொருவன் சொல்கிறான். இதைப் பார்க்கும் இந்த நடுநிலைசந்தர்ப்பவாதிகள் கூட்டம் மோசடி செய்பவனுக்கு எதிராக இருக்காமல்இருவரும் சண்டையிடுவதால் நான் நடுநிலை வகிக்கப் போகிறேன் என்று கூறினால் இவனும் திருடன் தான். மோசடிக்காரன் தான்.
திருட்டில் பங்கு போடுவதற்காக அல்லது நாளை நாம் திருடும் போது மற்றவர்கள் சப்போர்ட் செய்ய வேண்டுமென்பதற்காக நாங்கள் நடுநிலை எனக் கூறிக் கொண்டு தவ்ஹீத் ஜமாஅத்தை மட்டும் எதிர்ப்பதற்குக் காரணம் இது தான்.
நடுநிலை வேசம் போடுவோரில் ஆயிரத்தில் ஒருவர் அனைவரையும் சமதூரத்தில் வைத்து நடந்து கொள்கிறார். அவர் துரோகம் செய்யவில்லை. நடிக்கவில்லை. ஆனாலும் நல்லவர்களையும் கெட்டவர்களையும் சம் தூரத்தில் வைக்கும் குற்றம் செய்தவராக ஆகிறார். ஆனால் அதிகமான நடுநிலைவாதிகள் சந்தர்ப்பவாதிகளாகவும் சத்தியத்துக்கு எதிராக களம் இறங்கியவர்களுக்கு பலம் சேர்ப்பவர்களாகவும் தான் உள்ளனர்
தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் மற்ற இயக்கங்களுக்கும் போராட்ட வழிமுறைகள் உட்பட பல வேறுபாடுகள் உள்ளன.
போராட்டம் நடத்துவது நம்முடைய இருப்பைக் காட்டிக் கொள்வதற்கு அல்ல. கோரிக்கைகளை வென்றெடுக்கத்  தான்  போராட்டம் நடத்த வேண்டும். ஆனால்அதிகமான முஸ்லிம் இயக்கங்களை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு பெரிய கட்சியுடன் கூட்டணி வைக்கிறார்கள். தேர்தலின் போது ஆதரவு அளிப்பதுடன் நிற்காமல் தொடர்ந்து அதில் நீடிக்கிறார்கள்.
இவர்கள் திமுக கூட்டணியில் இருந்தால் அந்தக் கட்சியின் கேடுகளை எதிர்த்துப் போராட மாட்டார்கள். அதிமுக கூட்டணியில் இருந்தால் அதன் தீமைகளை எதிர்த்துப் போராட மாட்டார்கள்.
திமுக ஆட்சி நடக்கும் போது அக்கட்சியுடன் கூட்டணி கண்டவர்கள் இட ஒதுக்கீட்டுக்காகக் கூடபோராடியதில்லை.
அதிமுகவுடன் கூட்டணி கண்டவர்கள் அக்கட்சியின் முஸ்லிம் விரோத நடவடிக்கைக்காகப் போராடியது இல்லை.
இரண்டு கூட்டணிகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டால் மட்டும் தான் போராட்டக்களத்துக்கே வருகிறார்கள்.
அப்படியானால் இவர்களின் நோக்கம் கோரிக்கைகள் அல்ல. தங்கள் கூட்டணிக் கட்சிக்கு ஆதரவாக மக்களை மாற்றுவதும் அதைக் காட்டி அரசியல் ஆதாயம் அடைவதும் தான்.
இப்படி நன்றாகத் தெரியும் போது நாம் எப்படி அவர்களுடன் சேர்ந்து போராட முடியும்நாளைக்கு கோரிக்கைகளைக் கைகழுவி விட்டு நீர்த்துப் போகச் செய்து விட்டால் நடத்திய போராட்டம் அர்த்தமில்லாமல் போய் விடும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் ஒரு நேரத்தில் அதிமுக கூட்டணியை ஆதரித்துள்ளது. இன்னொரு கட்டத்தில் திமுக கூட்டணியை ஆதரித்துள்ளது. ஆனால் தேர்தல் முடிந்த மறுகணமே ஆதரித்த கட்சி தவறு செய்யும் போது எதிர்த்துக் களம் இறங்கத் தயங்கவில்லை.
ஜெயலலிதாவை 2001  சட்டமன்றத் தேர்தலில் தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்தது. தேர்தல் முடிந்தவுடன் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா 64 வகை உணவளித்து விருந்து அளித்த போது உடனே ஜெயலலிதாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடத்தியது. அதிமுக நடத்திய நோன்பு துறக்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தும் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
அது போல் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்தது. ஆனால் அதைத் தொடர்ந்து முதல்வர் வீடு முற்றுகை உள்ளிட்ட பலபோராட்டங்களை தவ்ஹீத் ஜமாஅத் நடத்தத் தயங்கியதில்லை.
இது போல் ஒருபக்கச் சார்பு இல்லாமல் முஸ்லிம் இயக்கங்கள் செயல்படுவதில்லை என்பதால்அவர்களின் சுயநலனுக்கு நாம் உதவக் கூடாது என்பதற்காக நாம் மற்றவர்களின் போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை.
சில லட்டர் பேடு இயக்கங்கள் தங்களை வளர்த்துக் கொள்வதற்காக சார்பற்ற போராட்டங்கள் நடத்தினாலும் அவர்கள் மார்க்கத்தில் சமரசம் செய்கின்றனர். தாரை தப்பட்டை அடித்தும்,தனிநபர்களைத் துதித்தும் இன்னும் பல சமரசங்களைச் செய்வதையும் பார்க்கிறோம்.
முஸ்லிம் அல்லாதவர்களையும் இஸ்லாம் பற்றி அறியாதவர்களையும் அழைத்து கவுரவப்படுத்தும்வகையிலும் அவர்களை சமுதாயத்தின் காவலர்களாகவும் சித்தரிக்க முயல்கின்றனர்.
இவற்றில் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு உடன்பாடு இல்லாததால் மற்றவர்களின் போராட்டங்களில்கலந்து கொள்வதில்லை.உணர்வு 16:35

மறுப்பும் விளக்கமும்

இந்த ஆக்கம் வெளியிடப்பட்ட பின்னர் ஒருவரை முனாபிக் என்று எப்படி சொல்லலாம் என்று வழக்கம் போல் நடுநிலைவாதிகள் கொந்தளித்து எழுந்தனர். இது குறித்து சகோதரர் அபூயூசுப் அவர்கள் மறுப்பை தயார் செய்து நமக்கும் அனுப்பியுள்ளார். அதைக் கீழே தருகிறோம்
முனாபிக் என்ற சொல் உள்ளத்தில் காபிராக இருந்து கொண்டு வெளியில் முஸ்லிமாக நடிப்பவனுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இஸ்லாம் வந்த பின்னர் இந்தச் சொல் இந்தப் பொருளிலும்பயன்படுத்தப்பட்டது.
ஆனால் இஸ்லாம் அறிமுகமாவதற்கு முன்னரும் இச்சொல் வழக்கில் இருந்தது. யாரெல்லாம் நடிக்கிறார்களோ இரட்டை அளவுகோல் கொண்டு அளக்கிறார்களோ அது போல் வேஷம் போடுவோர் முனாபிக் எனப்பட்டனர். 
அந்தச் சொல்லைத் தான் ஈமான் இல்லாமல் முஸ்லிமாக நடிக்கும் நபர்களுக்கும் இஸ்லாம்பயன்படுத்தியது. அந்த அர்த்தத்தில் ஒருவரை முனாபிக் என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. ஏனெனில் ஒருவனது உள்ளத்தில் ஈமான் உள்ளதா என்று யாராலும் அறிய முடியாது.
ஆனால் இதே சொல் நடிப்பவன் என்ற பொருளிலும் ஆளுக்கு ஏற்றவாறு நியாயம் பேசுபவன் என்ற அகராதிப் பொருளிலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஒருவரது இரட்டை வேடம் வெளிச்சத்துக்கு வரும் போதும் அம்பலமாகும் போதும் இந்த அகராதி அர்த்தத்தில் அவனை முனாபிக் என்றுசொல்லலாமா என்றால் தாரளமாகப் பயன்படுத்தலாம்..
صحيح البخاري (2/ 942) ( من يعذرني من رجل بلغني أذاه في أهلي فوالله ما علمت على أهلي إلا خيرا وقد ذكروا رجلا ما علمت عليه إلا خيرا وما كان يدخل على أهلي إلا معي ) . فقام سعد بن معاذ فقال يا رسول الله أنا والله أعذرك منه إن كان من الأوس ضربنا عنقه وإن كان من إخواننا من الخزرج أمرتنا ففعلنا فيه أمرك . فقام سعد ابن عبادة وهو سيد الخزرج وكان قبل ذلك رجلا صالحا ولكن احتملته الحمية فقال كذبت لعمر الله لا تقتله ولا تقدر على ذلك . فقام أسيد بن الحضير فقال كذبت لعمر الله والله لتقتلنه فإنك منافق تجادل عن المنافقين فثار الحيان الأوس والخزرج حتى هموا ورسول الله صلى الله عليه و سلم على المنبر فنزل فخفضهم حتى سكتوا وسك 
ச அத் பின் உபாதா ரலி அவர்களை நோக்கி
 நீர் முனாபிக் ஆவீர். முனாபிக்குகள் சார்பாக பேசுகிறீர் என்று நபிகள் நாயகத்தின் முன்னிலையில் கூறினார். அந்த வாசகத்தைச் சொன்னதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை. இது புகாரியில் நீண்ட ஹதீஸில் ஒரு பகுதியாகும்.

பார்க்க புகாரி 4141, 4750
4274 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் பின் அவ்வாம் அவர்களையும் மிக்தாத் பின் அஸ்வத் அவர்களையும்நீங்கள் ரவ்ளத்து காக்எனும் இடம் வரை செல்லுங்கள். ஏனெனில்அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்என்று கூறி அனுப்பினார்கள்.(அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந் தோடின. இறுதியில்நாங்கள் ரவ்ளாஎனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்)கடிதத்தை வெளியே எடு என்று கூறினோம். அவள்என்னிடம் கடிதம் எதுவுமில்லை என்று சொன்னாள். நாங்கள்ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து) விடு;இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம் என்று சொன்னோம். உடனேஅவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தனது சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் கொண்டு சென்றோம். அதில்ஹாத்திப் பின் அபீ பல்தஆ அவர்கள் மக்கா வாசிகளான இணைவைப்போரிடையேயுள்ள (பிரமுகர்கள்) சிலருக்குஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனேஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,ஹாத்திபே! என்ன இது?என்று கேட்டார்கள். ஹாத்திப் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து)விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாகவே இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும்முஹாஜிர்களுக்கு அவர்களுடைய வீட்டா ரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கின்றார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால், (இணைவைப்பவர்களான) மக்காவாசிகளுக்கு நான் உபகாரம் எதையாவது செய்து அதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் அங்குள்ள என் (பலவீனமான) உறவினர்களைக் காப்பாற்றட்டும் என்று விரும்பினேன். (அதனால்இணைவைப்பவர்கள் கேட்டுக் கொண்டதால் இந்தத் தகவலைத்தெரிவித்தேன்.) நான் என் மார்க்க(மான இஸ்லா)த்தை விட்டு வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ,இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இவர் உங்களிடம் உண்மை பேசினார் என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள். இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகிறேன்! என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும்உங்களுக் கென்ன தெரியும்ஒரு வேளைஅல்லாஹ் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களிடம் நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்என்று கூறி விட்டிருக்கலாம் என்று சொன்னார்கள்.அப்போது அல்லாஹ் பின்வரும் (60வது) அத்தியாயத்தை அருளினான்: இறைநம்பிக்கைகொண்டவர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாக இருப்போரை நண்பர்களாக எடுத்துக் கொண்டுநட்பின் காரணத்தினால் (உங்களின் இரகசியங்களை) அவர்களுடன் (பரிமாறிக் கொண்டு) உறவாட வேண்டாம்! அவர்கள்உங்களிடம் வந்துள்ள சத்திய(வேத)த்தை மறுத்து விட்டவர்கள்......(60:1)
புஹாரி 4274
இந்த ஹதீஸில் ஈமான் உள்ள ஒரு தோழர் தனது சொத்தைப் பாதுகாப்பதற்காக மக்காவின்ரகசியங்களை காபிர்களுக்கு அனுப்பினார். அவர் ஈமான் உள்ளவர் தான். பத்ரு போரில் பங்கெடுத்தவர் தான். ஈமானை இழந்தவர் அல்ல. ஆனாலும் அவரை முனாபிக் (நயவஞ்சகன்) என்று உமர் (ரலி) கூறியது இரண்டு நிலை எடுத்தவர் என்ற பொருளில் தானே தவிர ஈமானே இல்லாதவர் என்ற அர்த்தத்தில் இல்லை.
அவர் செய்த தவறு அல்லாஹ் மன்னிக்கக் கூடிய தவறு தான் என்று நபிகள் நாயகம் விளக்கம்தருகிறார்கள். முனாபிக் என்ற வார்த்தையை எப்படிச் சொல்ல்லாம் என்று கண்டிக்கவில்லை. ஏனெனில் அகராதி பொருளில் சொல்லப்பட்ட வார்த்தை என்பது தான் இதற்குக் காரணம். 
அகராதி நூல்களிலும் இதற்கு ஆதாரம் உள்ளது
உதாரணத்துக்கு அகராதிகளில் முதலிடத்தில் உள்ள நூல்களில் ஒன்றான லிஸானுல் அரப் நூலில் உள்ள விளக்கத்தை எடுத்துக் காட்டுகிறோம்.
ويقال نافَقَ اليربوعُ إذا دخل في نافِقائه وقَصَّع إذا خرج من القاصِعاء وتَنَفَّق خرج قال ذو الرمة إذا أَرادوا دَسْمَهُ تَنَفَّقا أَبو عبيد سمي المنافقُ مُنافقاً للنَّفَق وهو السَّرَب في الأَرض وقيل إنما سمي مُنافقاً لأنه نافَقَ كاليربوع وهو دخوله نافقاءه يقال قد نفق به ونافَقَ وله جحر آخر يقال له القاصِعاء فإذا طلِبَ قَصَّع فخرج من القاصِعاء فهو يدخل في النافِقاء ويخرج من القاصِعاء أو يدخل في القاصِعاء ويخرج من النافِقاء فيقال هكذا يفعل المُنافق يدخل في الإسلام ثم يخرج منه من غير الوجه الذي دخل فيه الجوهري والنافِقاء إحدى جِحَرةَ اليَرْبوع يكتمها ويُظْهر غيرها وهو موضع يرققه فإذا أُتِيَ من قِبَلِ القاصِعاء ضرب النافِقاء برأْسه فانْتَفَق أَي خرج والجمع النَّوَافِقُ
لسان العرب (10/ 357)
منه نَفَّق اليَرْبوع تَنْفيقاً ونافَقَ أَي دخل في نافِقائه ومنه اشتقاق المُنافق في الدين والنِّفاق بالكسر فعل المنافِق والنِّفاقُ الدخول في الإسلام من وَجْه والخروُج عنه من آخر مشتقّ من نَافِقَاء اليربوع إسلامية وقد نافَقَ مُنافَقَةً ونِفاقاً وقد تكرر في الحديث ذكر النِّفاق وما تصرّف منه اسماً وفعلاً وهو اسم إسلاميّ لم تعرفه العرب بالمعنى المخصوص به وهو الذي يَسْترُ كُفْره ويظهر إيمانَه وإن كان أَصله في اللغة معروفاً يقال نافَقَ يُنافِق مُنافقة ونِفاقاً وهو مأْخوذ من النافقاء لا من النَّفَق وهو السَّرَب الذي يستتر فيه لستره كُفْره وفي حديث حنظلة نافَقَ حَنْظَلة أَراد أَنه إذا كان عند النبي صلى الله عليه وسلم أخلص وزهد في الدنيا وإذا خرج عنه ترك ما كان عليه ورغب فيها فكأَنه نوع من الظاهر والباطن ما كان يرضى أَن يسامح به نفسه وفي الحديث أَكثر مُنافِقِي هذه الأُمَّة قُرَّاؤها أَراد بالنِّفاق ههنا الرياء لأَن كليهما إظْهار غير ما في الباطن
لسان العرب (10/ 357)
ويقال نافَقَ اليربوعُ إذا دخل في نافِقائه وقَصَّع إذا خرج من القاصِعاء
فيه الجوهري والنافِقاء إحدى جِحَرةَ اليَرْبوع يكتمها ويُظْهر غيرها وهو موضع يرققه فإذا أُتِيَ من قِبَلِ القاصِعاء ضرب النافِقاء برأْسه
யர்பூ (gerbil) எனும் ஒரு வகை எலி உள்ளது. இது மணல் எலி எனப்படும். இந்த எலி இரண்டு இடங்களில் குழி தோண்டி உள்ளே இரண்டையும் இணைத்து ஒரு வலையாக ஆக்கிக் கொள்ளும். எதிரிகளைக் கண்டால் ஒரு குழியில் நுழைந்து மறு குழி வழியாக தப்பித்து ஓடி விடும். இந்தக் குழியில் ஒரு குழி நாஃபிகா எனவும் மறு குழி காசிஆ எனவும் கூறப்படும். அந்த நாஃபிகா என்ற சொல்லில் இருந்து தான் முனாஃபிக் என்ற சொல் வழக்கு வந்தது.
وهو اسم إسلاميّ لم تعرفه العرب بالمعنى المخصوص به وهو الذي يَسْترُ كُفْره ويظهر إيمانَه وإن كان أَصله في اللغة معروفاً
ஒரு வழியில் இஸ்லாத்தில் நுழைந்து மறு வழியில் வெளியேறும் தன்மைக்கு முனாபிக் தனம் என்று சொல்வது இஸ்லாமியச் சொல் வழக்காகும். இதன் நேரடி அர்த்தம் அகராதியில் அறியப்பட்டதாக இருந்தாலும் உள்ளத்தில் இறை மறுப்பையும் வெளியே விசுவாசத்தையும் காட்டுதல் என்ற இந்தப் பொருளை இஸ்லாத்துக்கு முன் அரபுகள் அறிந்திருக்கவில்லை.
وفي حديث حنظلة نافَقَ حَنْظَلة أَراد أَنه إذا كان عند النبي صلى الله عليه وسلم أخلص وزهد في الدنيا وإذا خرج عنه ترك ما كان عليه ورغب فيها فكأَنه نوع من الظاهر والباطن ما كان يرضى أَن يسامح به نفسه
ஹன்ழலா முனாபிக்காகி விட்டேன் என்று நபியின் முன்னிலையில் ஹன்ழலா சொன்னது உள்ளொன்று வைத்து வெளியே வேறுவிதமாக நடந்து கொள்ளுதல் என்ற பொருளில் தான்.
نفسه وفي الحديث أَكثر مُنافِقِي هذه الأُمَّة قُرَّاؤها أَراد بالنِّفاق ههنا الرياء لأَن كليهما إظْهار غير ما في الباطن
இந்த உம்மத்தின் முனாபிக்குகளில் அதிகமானவர்கள் அறிஞர்கள் தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது பிறர் மெச்சுவதற்காக செயல்படுவதைப் பற்றித்தான். ஏனெனில் இதிலும் உள்ளே ஒரு விதமாகவும் வெளியே வேறு விதமாகவும் இருக்கும் தன்மை அடங்கியுள்ளது.
இது தான் முனாபிக் என்ற சொல் பிறந்த விதம் குறித்து லிஸானுல் அரப் தரும் ஆதாரம்.
மணல் எலி எப்படி ஒரு வலைக்கு இரண்டு பாதைகளைத் தோண்டி எதிரிகளை ஏமாற்றுகிறதோ அது போல் ஏமாற்றுவது முனாபிக் தனம் என்று அரபுகள் அறிந்து வைத்து இருந்தனர். ஆனால் உள்ளே குஃப்ரை வைத்து வெளியே ஈமானைக் காட்டும் இந்த அர்த்தம் அரபுகள் அறிந்திருக்கவில்லை என்று லிஸானுல் அரப் ஆசிரியர் கூறுகிறார்.
மேலும் ஹன்ழலா என்ற நபித்தோழர் நபியின் முன்னால் இருக்கும் போது இறையச்சத்துடன் இருப்பதையும் அவர்களை விட்டு வெளியேறிய உடன் தீய எண்ணங்கள் தோன்றுவதையும் கவனத்தில் கொண்டு தான் முனாபிக் ஆகி விட்டதாகக் கூறியுள்ளார். இது ஹன்ழலா கூற்று தான். நபியின் கூற்று அல்ல என்று மூடர்கள் சிலர் கூறக்கூடாது. நபியின் முன்னால் இப்படி கூறும் போது அதை நபிகள் கண்டிக்கவில்லை. அவர் முனாபிக் என்ற சொல்லைப் பயன்படுத்தியது சாதாரண பொருளில் என்பதால் முனாபிக் என்று நீ எப்படி சொல்லலாம் என்று கண்டிக்காமல் மனிதர்கள் இப்படித்தான் இருக்க முடியும் என்று விளக்கம் அளித்தார்கள் என்று லிஸானுல் அரப் இப்படித்தான் விளக்கம் தருகிறது.
லிஸானுல் அரப் எடுத்துக் காட்டும் அந்த ஹதீஸ் இது தான்.
حدثنا يحيى بن يحيى التيمي وقطن بن نسير واللفظ ليحيى أخبرنا جعفر بن سليمان عن سعيد بن إياس الجريري عن أبي عثمان النهدي عن حنظلة الأسيدي قال وكان من كتاب رسول الله صلى الله عليه وسلمقال لقيني أبو بكر فقال كيف أنت يا حنظلة قال قلت نافق حنظلة قال سبحان الله ما تقول قال قلت نكون عند رسول الله صلى الله عليه وسلم يذكرنا بالنار والجنة حتى كأنا رأي عين فإذا خرجنا من عند رسولالله صلى الله عليه وسلم عافسنا الأزواج والأولاد والضيعات فنسينا كثيرا قال أبو بكر فوالله إنا لنلقى مثل هذا فانطلقت أنا وأبو بكر حتى دخلنا على رسول الله صلى الله عليه وسلم قلت نافق حنظلة يا رسول اللهفقال رسول الله صلى الله عليه وسلم وما ذاك قلت يا رسول الله نكون عندك تذكرنا بالنار والجنة حتى كأنا رأي عين فإذا خرجنا من عندك عافسنا الأزواج والأولاد والضيعات نسينا كثيرا فقال رسول اللهصلى الله عليه وسلم والذي نفسي بيده إن لو تدومون على ما تكونون عندي وفي الذكر لصافحتكم الملائكة على فرشكم وفي طرقكم ولكن يا حنظلة ساعة وساعة ثلاث مرات
5305 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எழுத்தர்களில் ஒருவரான ஹன்ழலா பின் அர்ரபீஉ அல்உசைதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என் னைச் சந்தித்து, "ஹன்ழலாஎப்படி இருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள். நான்"ஹன்ழலா நயவஞ்சகனாகி விட்டான்'' என்று சொன்னேன். அதற்கு "அல்லாஹ் தூயவன்என்ன சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு நான், "நாம் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்கருகில் இருக்கும்போது அவர்கள் சொர்க்கம்நரகம் ஆகியவற்றைப் பற்றி நாம் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் புறப்பட்டு (வீட்டுக்கு) வந்ததும் துணைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னவற்றில்) அதிகமானவற்றை மறந்துவிடுகிறோம்'' என்று சொன்னேன். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! இதே நிலையை நாமும் சந்திக்கிறோம்'' என்று கூறினார்கள். பிறகு நானும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம். நான்"அல்லாஹ்வின் தூதரே! ஹன்ழலா நயவஞ்சனாகிவிட்டான்'' என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்ன அது?'' என்று கேட்டார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் அருகிலிருக்கும்போது தாங்கள் எங்களுக்கு நரகத்தையும் சொர்க்கத்தையும் நாங்கள் நேரடியாகப் பார்ப்ப தைப் போன்று நினைவூட்டுகிறீர்கள். நாங்கள் உங்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றதும் துணைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்பிழைப்புகளில் ஈடு பட்டுவிடுகிறோம். அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்'' என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் என்னிடம் இருக்கும்போதுள்ள நிலையிலும் இறை எண்ணத்திலும் எப்போதும் இருந்தால்,உங்கள் படுக்கைகளிலும் நீங்கள் செல்லும் வழிகளிலும் வானவர்கள் (வந்து) உங்களுடன் கை குலுக்கியிருப்பார்கள். மாறாகஹன்ழலா! (இப்படிச்) சில நேரம் (அப்படிச்) சில நேரம்'' என்று மூன்று முறை கூறினார்கள்.5
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அது போல் லிசானுல் அரப் ஆசிரியர் மற்றொரு ஹதீஸையும் எடுத்துக் காட்டி அங்கேயும் முனாபிக் என்பது நாம் அறிந்து வைத்துள்ள அர்த்தத்தில் பயன்படுத்தவில்லை என்று தெளிவுபடுத்துகிறார். மார்க்க அறிஞர்கள் மக்களிடம் புகழ் பெறும் நோக்கில் பிரச்சாரம் செய்வதைத் தான் நபிகள் நாயகம் முனாபிக் என்ற சொல்லால் குறிப்பிட்டதாகவும் லிஸானுல் அரப் ஆசிரியர் கூறுகிறார். இது உள்ளத்தில் குப்ரை வைத்துக் கொண்டு வெளியே ஈமானை காட்டும் முனாபிக் என்ற அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. முகஸ்துதிக்காக மார்க்கத்தைச் சொல்லும் நிலையைத் தான் குறிப்பிட்டார்கள் என்று லிசானுல் அரப் ஆசிரியர் விளக்கம் தருகிறார்.
இன்னும் நிறைய உள்ளன. இந்த ஆதாரங்கள் போதும் என்று நினைக்கிறோம்.
www.onlinepj.com 

Comments

Popular posts from this blog

பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை

இந்து மதமும் பெண்களும்

குற்றங்களுக்குத் தீர்வு குர்ஆனிய சட்டமே!