கூட்டு துஆ ஏன் கூடாது.?

கூட்டு துஆ ஏன் கூடாது.?




ஒருவர் சப்தமாக துஆ கேட்க மற்றவர்கள் சப்தமிட்டு ஆமீன் சொல்லும் ஒரு செயலை தான் கூட்டு துஆ எனக் கூறப்படுகிறது.சுருக்கமாக சொல்லப் போனால் கூட்டாக சேர்ந்து கொண்டு அல்லாஹ்விடம் துஆ கேட்பதே கூட்டு துஆ.சிலர் கூட்டு துஆவிர்க்கும் குனூத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அறியாமல் இருப்பார்கள்.குனூத் என்பது தொழுகையிலேயே சப்தமிட்டு கேட்கப் படும் துஆ, ஆனால் கூட்டு துஆ என்பது தொழுகைக்கு பிறகு கேட்கப் படும் துஆ.நாம் கூட்டு துஆ பற்றி மட்டுமே இங்கே விளக்குகிறோம். கூட்டு துஆ , ஜனாஸா நல் அடக்கத்தின் போதும், ஹஜ் பயனம் செல்லும் போதும், ஐவேளைத் தொழுகைகள் மற்றும் ஜும்ஆ, பெருநாள் தொழுகைகளின் பின்பும் குறிப்பாக சமூக, சமய விவகாரங்கள் போன்ற நேரத்திலும் கூட்டாக துஆ கேட்கப்படுகிறது.இந்த ஒரு செயல் முழுக்க முழுக்க வணக்கம் சம்பந்தப் பட்ட விஷயம்.வணக்கம் சம்பந்தமாக நாம் எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் அல்லாஹ்வோ அல்லது அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களோ நமக்கு காட்டி தந்திருக்க வேண்டும்.


நமது மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்


அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி )


நூல்: முஸ்லிம் (3541)


செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்ட லில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு(பித்அத்) ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி )


நூல்: முஸ்லிம் (1573)




அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.’ (அல்குர்ஆன் 33:36)


கூட்டு துஆவுக்கு ஆதாரம் உள்ளதா ?.


உங்கள் இறைவனிடம் பணிவாகவும் இரகசியமாகவும் துஆ செய்யுங்கள் 
வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்கமாட்டன் (அல்குர்ஆன் 7:55)
துஆ என்பது அடுத்தவர்களுக்கு தெயரியாமாலும் இறைவனிடம்
கேட்கிறோம் என்ற பணிவுடனும் தான் கேட்கவேண்டும் அந்த துஆ தான்
இறைவனால் ஏற்றுக்கொள்ளபடும்.
சப்தம் போட்டு கேட்பது வரம்பு மீறிய செயலாகும் வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்கமாட்டன்.


ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது, ‘ தாருல்களா’ என்ற வாசல் வழியாக ஒருவர் பள்ளியினுல் வந்தார். நின்றவாறே நபி (ஸல்) அவர்களை நோக்கி, ‘அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்து விட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தமது கைகளை உயர்த்தி, ‘ இறைவா எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! வானத்தில் திரண்ட மேகத்தையோ, பிரிந்து கிடக்கும் மேகங்களையோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (அதாவது மதீனாவுக்கும்) ஸல்ஃ எனும் மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியாக இருந்தது). அப்போது அம்மலைக் குப் பின்புற மிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக 6 நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்க வில்லை. அடுத்த ஜும்ஆவில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரை நிகழ்த்தும் போது, ஒரு மனிதர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்துவிட்டன, பாதைகள் துண்டிக்கப்பட்டு விட்டன. எனவே, மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார். உடன் நபி(ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, இறைவா! எங்கள் சுற்றுப் புறங் களில் (இம் மழையைப் பொழியச் செய்வா யாக!), எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே. இறைவா! மணற் குன்றுகள், மலைகள், ஓடைகள், விளை நிலங்கள் ஆகிய வற்றின் மீது (இம் மழையைப் பொழியச் செய்வாயாக!) என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.




அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரழி), நூல்:புகாரி ஹதீஸ் எண் 1014


மேற்கண்ட வசனத்தில் மழை வேண்டி தான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டிருக்கிறார்.ஆகவே இந்த நபிமொழி மழை வேண்டி துஆ கேட்பதற்கு மட்டும்தான் பொருந்தும்.ஆனால் சஹாபாக்கள் இந்த துஆவுக்கு ஆமீன் சொன்னதாக எந்த ஆதாரமும் இல்லை. எனவே இது கூட்டு துஆவுக்கு ஆதாரம் ஆகாது.


‘ஒரு கூட்டம் ஒன்று சேரந்து சிலர் பிரார்த்திக்க ஏனையவர்கள் ஆமீன் சொன்னால் அதை அல்லாஹ் நிச்சயமாக ஏற்றுக் கொள்வான்’ என தபரானி, இப்னு அஸாகிர், ஹாகிம் ஆகிய ஹதீஸ் நூல்களில் இடம்பெற்றுள்ளது.ஆனால் இந்த ஹதீஸ் மிகவும் பலவீனமானதாகும்.


உங்கள் இறைவனிடம் பணிவாகவும் இரகசியமாகவும் துஆ செய்யுங்கள் 
வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்கமாட்டன் (அல்குர்ஆன் 7:55)
துஆ என்பது அடுத்தவர்களுக்கு தெயரியாமாலும் இறைவனிடம்
கேட்கிறோம் என்ற பணிவுடனும் தான் கேட்கவேண்டும் அந்த துஆ தான்
இறைவனால் ஏற்றுக்கொள்ளபடும்.
சப்தம் போட்டு கேட்பது வரம்பு மீறிய செயலாகும் வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்கமாட்டன்


முகவை கான்.

Comments

Popular posts from this blog

பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை

இந்து மதமும் பெண்களும்

குற்றங்களுக்குத் தீர்வு குர்ஆனிய சட்டமே!